மினி உலகப் கிண்ணப் போர் - 2009

1998ல் மினி உலகக் கிண்ணம் என்ற பெயரில் வங்கதேசததில் ஆரம்பமான இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் ஒரு நாள் தொடர்போட்டிகள் இம்முறை தென்னாபிரிக்காவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.



எட்டு நாடுகள் பங்குபெறும் இந்தப் போட்டிகள் ஒக்டோபர் 5ந்திகதி வரை நடைபெறவுள்ளது. 20-20 போட்டிகளால் ஒருநாள் போட்டிகளின் சூடு குறைந்திருந்தாலும், எட்டு முன்னணி நாடுகள் பங்கு பெறும் போட்டிகள் என்பதால் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது. அணிகளின் பலம் பலவீனம் போன்றவற்றை அலசுவதே இந்தப் பதிவின் நோக்கம்.

அவுஸ்திரேலியா

நடப்பு உலகக் கிண்ண, சாம்பியன் கிண்ண சாம்பியனான ஆஸ்திரேலியா இங்கிலாந்தில் இங்கிலாந்தை 6 க்கு 1 என்ற கணக்கில் புரட்டிப்போட்ட வேகத்தில் போட்டிகளில் கலந்துகொள்ளப்போகின்றது. அத்துடன் தென்னாபிரிக்கா இந்தியா என இரண்டு அணிகளிடம் இருந்து ஒரு நாள் தொடருக்கான முதலிடத்தை மீண்டும் பறித்துக்கொண்டது. ஆகவே இந்த உசாருடன் ஆஸி அணியானது தன்னுடைய குழுவிலுள்ள இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகளை எதிர்த்தாடப் போகின்றது. ஆஸிக்கு பலத்த போட்டியாக இந்தியாவும் பாகிஸ்தானும் விளங்கும்.

பலம் :

  • இங்கிலாந்து ஒரு நாள் தொடரை வென்றமை.
  • பேர்குசன், பெயின், வட்சன், ஹசி, கிளார்க், பொண்டிங், என நீண்ட பலமா துடுப்பாட்ட வரிசை.
  • பிரட் லீ, ஜோன்சன், வட்சன், ஹொரிட்ஸ், பிராக்கன் என மிரட்டும் வேகங்கள் .
பலவீனம் :
  • பொண்டிங், ஹசி போன்றவர்கள் சிறந்த ஃபார்மில் இல்லை.
  • சில நாட்களாக இவர்களின் களத்தடுப்பு சிறப்பாக இல்லை.
மீண்டும் ஆஸி அணி பலமாக விளையாடினால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

தென்னாபிரிக்கா

1998ல் ஹன்சி குரேஞ்சே தலைமையிலான தென்னாபிரிக்கா அணி முதன் முறை டக்காவில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்த்து மோதி கிண்ணத்தைச் சுவீகரித்தது. இம்முறை கிரேம் ஸ்மித் தலைமையில் இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் உள்ள குழுவில் பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. ஆஸியுடன் ஒரு புள்ளிகளுடன் தரவரிசையைப் பகிர்ந்தாலும் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணி.

இந்த ஆண்டில் ஆஸியுடன் மட்டும் ஆஸியில் நடந்த தொடரிலும் சொந்த மண்ணில் நடந்த தொடரிலும் விளையாடி இரண்டு தொடர்களையும் சுவீகரித்தது குறிப்பிடத்தக்கது.

பலம் :
  • சொந்த மண்ணில் விளையாடுவது மிகப்பெரியபலம்.
  • ஸ்மித், கிப்ஸ், கலீஸ், பவுச்சர், டி வில்லியர்ஸ், டும்மினி, மோர்கல், அம்லா எனப் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசையும் மத்திய தரவரிசையும்.
  • கலீஸ், மோர்கல், போத்தா, மேர்வே, டும்மினி என சகலதுறை வீரர்கள் அதிகம்.
  • நிட்னி, ஸ்ரெயின், போன்ற வேகங்கள், மேர்வே, போத்தா, பீட்டர்சன் என சுழல்கள் ஆதிக்கம் அதிகம்.
பலவீனம் :
  • இறுதிப்போட்டிவரை வந்து தோல்வியடையும் துரதிஷ்டம்.
  • கிப்ஸ் உட்பட ஒரு சில வீரர்கள் ஃபார்மில் இல்லை.
அரையிறுதிக்கு இலகுவாகச் செல்லகூடிய வாய்ப்பு, சிலவேளைகளில் இறுதிப்போட்டிக்கு கூடச் செல்லமுடியும்.

இந்தியா :

இலங்கை முத்தரப்பு போட்டியில் வெற்றி பெற்ற சாதனை, மேற்கிந்திய தீவுகளை கடந்த ஜூலையில் சொந்த மண்ணில் வைத்து தொடர் வென்ற சாதனை என டோணி தலைமையிலான அனுபவம் வாய்ந்த சச்சின், ராவிட் போன்றவர்களுடன் செல்லும் இளமைப் பட்டாள அணி. 2002ல் இலங்கையுடன் சாம்பியன் கிண்ணத்தை பங்குபோட்ட அணி.

பலம் :
  • கம்பீர், சச்சின், ராவிட், டோணி, யுவராஜ், ரெய்னா, யூசுப் பதான் என நீளும் துடுப்பாட்ட வரிசை.
  • பலமான மத்தியதர துடுப்பாட்ட வரிசை.
  • ஆர்பிசிங், நேஹ்ரா, இசாந்த சர்மா, ஹர்பயன் என மிரட்டும் பந்துவீச்சாளர்கள்.
பலவீனம் :
  • சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி இல்லாமை. (சேவாக் இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை).
  • ஐந்தாவது சிறந்த பந்துவீச்சாளர் இல்லாமை.
  • தினேஷ் கார்த்திக் (கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பவர், இவருக்குப் பதிலாக இம்முறை பத்ரிநாத்திற்க்கு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம்).
  • ஹர்பஜன், நேஹ்ரா, இஷாந்த் சர்மா போன்றவர்கள் மைதானத்தில் காட்டும் கோபங்கள்.
  • சச்சின் கூட ஒரு வகையில் பலவீனம் காரணம் இலங்கையில் நடந்த போட்டியில் சதமடித்தவர் அடுத்துவரும் போட்டிகளில் சிலவேளைகளில் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கின்ற துரதிஷ்டம்.
சிறந்த ஆரம்ப துடுப்பாட்டமும் பரம வைரியான( கிரிக்கெட்டில் மட்டும்)பாகிஸ்தானுடனான போட்டியில் வெல்லும் ஆற்றலும் கைகூடினால் அரையிறுதி உறுதி. இருதடவைகள் சாம்பியன் கிண்ண இறுதிப்போட்டிகளில் விளையாடிய இந்திய அணி இம்முறை இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்புகளும் ஓரளவு இருக்கின்றது.

நியூசிலாந்து

2000 ஆண்டில் ஸ்ரிபன் பிளேமிங் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவை கென்யாவில் தோற்கடித்தது. அதன் பின்னர் இவர்களுக்கு சொல்லும் படியான பல நாடுகள் விளையாடிய தொடர் வெற்றிகள் கிடைக்கவில்லை. இந்த வருடம் நடைபெற்ற போட்டிகளில், பெப்ரவரியில் ஆஸியுடனான சாப்பல் ஹட்லி கிண்ணத்தை 2 க்கு 2 என்ற விகிதத்தில் சமன் செய்த நியூசிலாந்து பின்னர் இந்தியாவுடனான போட்டிகளில் அடைந்த தோல்வியும், இலங்கையில் நடந்த முத்தரப்பு போட்டிகள் தோல்வியும் இலங்கை, தென்னாபிரிக்கா அணிகள் உள்ள குழுவில் இருப்பதும் பலவீனமே.

பலம் :
  • பொண்ட், மில்ஸ், ரவ்வி ஆகிய வேகங்களுடன் வெட்டோரியின் சுழல்.
  • ரைடர், ஓரம், வெட்டோரி புரூம் என சகலதுறை வீரர்கள்.
பலவீனம் :
  • மிகவும் பலவீனமான மத்தியதர துடுப்பாட்ட வரிசை.
  • ஓரம், ரோஸ் டைலர், ரைடர் போன்றோர் ஃபார்மில் இல்லை.
  • களத்தடுப்பில் அசிரத்தை.
இலங்கையையும் இங்கிலாந்தையும் வென்றால் அரையிறுதிக்கு வரும் வாய்ப்புகள் உண்டு, ஆனால் வாய்ப்புகள் மிகக் குறைவு.

பாகிஸ்தான்

ஜனவரியில் இலங்கையிடம் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் தொடர் தோல்விகளும் பின்னர் யூஎஈயில் வைத்து ஆஸியை வென்றமை என இரண்டும் கெட்டான் அணியாக பாகிஸ்தான் அணி இந்த வருடம் காணப்பட்டது. பாகிஸ்தான் தலைவர் யூனிஸ் கான் தொடருக்குச் செல்லமுன்னர் எப்பாடுபட்டாவது இந்தக் கிண்ணத்தை வெல்வது தங்கள் நோக்கம் என கூறிச் சென்றுள்ளார்.

பலம் :
  • ஃபாவட் ஆலம், இம்ரான் நசீர், அப்ரிடி, யூனிஸ் கான், செயிப் மாலிக், மிஸ்பா உல் ஹக், முகமட் யூசுப், கம்ரன் அக்மல் என நீண்ட துடுப்பாட்ட வரிசை.
  • மத்திய தரவரிசையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள்
  • ரானா நவீட், உமர் குல், முகமட் ஆசிப், முகமட் ஆமிர் என பலம் வாய்ந்த வேகங்கள்
பலவீனம்
  • களத்தடுப்பில் அசிரத்தை.
  • சில வீரர்கள் ஃபார்மில் இல்லாமை.
ஆஸியை அல்லது இந்தியாவை வென்றால் அரையிறுதி உறுதி. பின்னர் இறுதிப்போட்டிக்கு முதல் முறை செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கலாம். இந்தத் தொடரின் கறுப்பு குதிரையாக பாகிஸ்தான் அணியைக் குறிப்பிடலாம்.

இலங்கை :
சங்ககாரவின் தலைமையில் செல்லும் இளமை சக அனுபவ வீரர்களின் பட்டாளம். 2002ல் இலங்கையில் வைத்து கிண்ணத்தைப் பகிர்ந்துகொண்டமை. இந்த ஆண்டில் பாகிஸ்தானை பாகிஸ்தானிலும் சொந்த மண்ணிலும் வென்றிருந்தாலும் இந்தியாவிடம் சொந்த மண்ணில் தொடர் தோல்விகள் என கஸ்டமான நிலையில் தான் இலங்கை அணியும் இருக்கின்றது.

பலம் :
  • டில்ஷான், ஜெயசூரியா, சங்ககாரா, கண்டம்பி, கப்புகெதர, ஏஞ்சலோ மத்யூஸ், சமரவீர என நீண்ட துடுப்பாட்ட வரிசை.
  • முரளி மீண்டும் அணியில் என்பதால் அவரின் சுழலும் துசாரா, நுவான் குலசேகர, லசித் மாலிங்க, போன்றவர்களின் வேகமும் கைகொடுக்கும்.
  • சிறப்பான களத்தடுப்பு.
பலவீனம்:
  • மஹெல ஜெயவர்த்தனா, சில நாட்களாக இவரின் துடுப்பாட்டம் கேள்விக்குரியதாகியுள்ளது.
  • மெண்டிசின் சுழலும் முன்னைய மாயாஜாலம் இப்போது செய்வதில்லை.
  • ஜெயசூரியாவின் துடுப்பாட்டம் பெரிதாக சிறப்பாக இல்லாவிடினும் பந்துவீச்சிலும் களத்தடுப்பிலும் சிறந்துவிளங்குவது இவருக்கு பலம்.
அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தாலும் நியூசிலாந்துடனான் போட்டிகள் பெரும்பாலும் முடிவை நிர்ணயிக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள்
2004ல் சாம்பிய்னஸ் மூன்று தடவை இறுதிப்போட்டி வரை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இம்முறை அணிக்குள் ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளால் இரண்டாம் தரமான அணியையே அனுப்புகின்றது. இவர்களுக்குப் பதிலாக வங்கதேசத்தை அழைத்திருந்தால் அந்தக் குழுவிற்க்கு ஓரளவு எதிர்ப்புக் கொடுத்திருப்பார்கள்.

பலம்:
  • சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லை.
பலவீனம் :
  • அணியே பலவீனம் தான்.
முதல் சுற்றிலையே வெளியேறப் போகும் பரிதாபமான ஒரு அணி.

இங்கிலாந்து

தற்போது நடைபெற்று முடிந்த ஆஸியுடனான நட்வெஸ்ட் தொடரில் பரிதாபமான தோல்வியுட‌ன் துவண்டபடி பங்குபற்றும் அணி. ஒரே ஒரு முறை இறுதிப்போட்டியில் விளையாடி இறுதிப்போட்டிகளில் தோல்வியடையும் துரதிஷ்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுடன் தோல்வியுற்ற அணி.

பலம் :
  • ஆன்ரூ ஸ்ரோஸ், கொலிங்வூட், மத்யூ பிரையர், ஓவைஸ் ஷா, ரவி போபரா என கொஞ்சம் அனுபவ வீரர்கள்.
  • சைட் பொட்டம், அன்டர்சன், ஸ்ருவர்ட் புரோட், கிரஹம் ஒனியன்ஸ் என வேகப் பந்துவீச்சாளர்கள்.
பலவீனம் :
  • தொடர் தோல்விகள்
  • முன்னணி வீரர்களான பிளின்டோவ்ம் பீட்டர்சன் இல்லாமை.
  • சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமை.
  • சிறந்த சுழல்ப் பந்துவீச்சாளர் இல்லாமை.
பலமான தென்னாபிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து குழுவில் இருப்பாதல் முதல் சுற்றிலையே வெளியேறும் வாய்ப்புள்ள அணி.

என்னுடைய பார்வையில் அரையிறுதிக்குத் தெரிவாகும் அணிகள்
குழு A யில் : இந்தியா, அவுஸ்திரேலியா
குழு B யில் : தென்னாபிரிக்கா , நியூசிலாந்து/இலங்கை (கொஞ்சம் சிக்கலான குழு)

இறுதிப்போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்பதையும் எந்த அணி வெற்றி பெறும் என்பதையும் நண்பர்கள் எதிர்வு கூறுங்கள்.

சுவாரசியமான போட்டிகள் எதிர்பாராத திருப்பங்கள் எனப் பல விடயங்கள் நடைபெறலாம் அதுவரை பொறுத்திருப்போம்.

8 கருத்துக் கூறியவர்கள்:

root சொல்வது:

"ஆர்பிசிங், நேஹ்ரா, இசாந்த சர்மா, ஹர்பயன் என மிரட்டும் பந்துவீச்சாளர்கள்."
comedy panurenga.....

ARV Loshan சொல்வது:

//பொண்டிங், ஹசி போன்றவர்கள் சிறந்த ஃபார்மில் இல்லை.//
வந்தி கொஞ்ச நாளா கிரிக்கெட் பக்கமே திரும்பல போல.. பொண்டிங்கின் கடைசி மூன்று இன்னிங்க்சில் ஒரு சதம் ஒரு அரைச் சதம்.. ஹசி நேற்று 49 அதற்கு முதலும் பெரிய ஓட்ட எண்ணிக்கை..

//சச்சின் கூட ஒரு வகையில் பலவீனம் காரணம் இலங்கையில் நடந்த போட்டியில் சதமடித்தவர் அடுத்துவரும் போட்டிகளில் சிலவேளைகளில் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கின்ற துரதிஷ்டம்.//
accepted..ஒரு நாள் போட்டிகளில் தென் ஆபி ஆடுகளங்கள் சச்சினுக்கு எப்போதும் வாய்ப்பதில்லை.. 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை துவைத்ததைத் தவிர

//மஹெல ஜெயவர்த்தனா, சில நாட்களாக இவரின் துடுப்பாட்டம் கேள்விக்குரியதாகியுள்ளது.
மெண்டிசின் சுழலும் முன்னைய மாயாஜாலம் இப்போது செய்வதில்லை//
உங்கள் வாய் முகூர்த்தம் நேற்று இருவருமே பிரகாசித்துள்ளனர்.. ;) இப்ப என்ன சொல்லுவீங்க?

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

வந்தி,
நல்ல சுகமா?
வந்திட்டமில்ல.....:)

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

//மெண்டிசின் சுழலும் முன்னைய மாயாஜாலம் இப்போது செய்வதில்லை//

இந்த தொடரில் மெண்டிஸ் பேசப்படுவார். பொறுத்திருந்து பாருங்கள்

லோஷனுக்கு போட்டியாக நீங்களும் கிரிக்கட்டை அதிகம் கையிலெடுத்து விட்டீர்களோ?

வந்தியத்தேவன் சொல்வது:

//root said...
"ஆர்பிசிங், நேஹ்ரா, இசாந்த சர்மா, ஹர்பயன் என மிரட்டும் பந்துவீச்சாளர்கள்."
comedy panurenga.....//

பொறுத்திருந்து பார்க்கவும் ஆர்பிசிங் ஐபிஎல்லில் கலக்கியதுபோல் கலக்குவார்,

வந்தியத்தேவன் சொல்வது:

// LOSHAN said...
வந்தி கொஞ்ச நாளா கிரிக்கெட் பக்கமே திரும்பல போல.. பொண்டிங்கின் கடைசி மூன்று இன்னிங்க்சில் ஒரு சதம் ஒரு அரைச் சதம்.. ஹசி நேற்று 49 அதற்கு முதலும் பெரிய ஓட்ட எண்ணிக்கை.. //

அண்ணே அது கடைசி போட்டிகளில் மட்டும் தான் நான் கூறிய எதிர்வுகூறல் ஒரு போட்டியை வைத்தல்ல கடைசியாக அவர்கள் விளையாடிய சில போட்டிகளை வைத்து. ஆனாலும் பொண்டிங் என் நம்பிக்கையைக் காப்பார்.

//accepted..ஒரு நாள் போட்டிகளில் தென் ஆபி ஆடுகளங்கள் சச்சினுக்கு எப்போதும் வாய்ப்பதில்லை.. 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை துவைத்ததைத் தவிர //

அதே தான் சச்சின் எப்படியும் நிதானமாக ஆடவே முனைவார். தன் பழைய அதிரடி ஆட்டம் தென்னாபிரிக்காவில் காட்டுவது அவருக்கு கஸ்டமாகத்தான் இருக்கும்.

//உங்கள் வாய் முகூர்த்தம் நேற்று இருவருமே பிரகாசித்துள்ளனர்.. ;) இப்ப என்ன சொல்லுவீங்க?//

இதுதான் கிரிக்கெட். இன்றைய போட்டியிலும் ஜெயசூரியா என் நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டார் ஆனால் மஹலவும் மெண்டிசும் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

// இறக்குவானை நிர்ஷன் said...
வந்தி,
நல்ல சுகமா?
வந்திட்டமில்ல.....:)//

நலம் நலமறிய ஆவல் வருக வருக‌

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) said...

இந்த தொடரில் மெண்டிஸ் பேசப்படுவார். பொறுத்திருந்து பாருங்கள்//

இண்டைக்கு கட்டாயம் பேசப்படுவார். படுபாவி ஸ்மித் முதல் போலிலையே அவுட்டாகிவிட்டார்.

//லோஷனுக்கு போட்டியாக நீங்களும் கிரிக்கட்டை அதிகம் கையிலெடுத்து விட்டீர்களோ?//

லோஷனுக்கு போட்டியாக இல்லை. நான் என்றைக்கும் கிரிக்கெட்டுக்குத்தான் சினிமாவிற்க்கு அடுத்த இடம் கொடுப்பது ஒரு சோலி சுரட்டும் இல்லாத விடயம். அண்மைக்காலமாக கிரிக்கெட் பதிவுகள் குறைந்தது மட்டும் உண்மை.