நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்வலையுலக நண்பர்கள் அனைவருக்கு என் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்.

சில நாட்களுக்கு வலையுலகில் என் பதிவுகளைக் (இல்லாவிட்டாலும் ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று)காணமுடியாது.

புதுவருடம் பிறந்து சில நாட்களின் பின்னர் புதிய அனுபவங்களுடன் உங்களைச் சந்திக்கின்றேன்.

நன்றி வணக்கம்.

நீச்சல் உடையில் பார்வதி ஓமணக்குட்டன்

இனிய நண்பர் ஒருவர் பார்வதி இந்தியா சார்பாக உலக அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பார்வதி ஓமணக்குட்டனின் புகைப்படம் வலையில் பிரசுரிக்கவில்லை என ஆதங்கப்பட்டிருந்தார். அவரின் வேண்டுகோளிற்கிணங்க இந்தப் படம்.

யாராவது இதனை அகற்றவேண்டும் என்றால் அன்பாகச் சொல்லவும் இடுகை அகற்றப்படும்.

சச்சின் நடந்தது என்ன?

நேற்றைய சென்னை மேட்சில் இந்திய அணி சாதனை படைத்ததும் சச்சின் தனது 41 ஆவது சதத்தை அடித்ததும் பழைய கதைகளாகிவிட்டது. சச்சினின் சாதனைகளையோ திறமையையோ யாரும் குறைத்துமதிப்பிடமுடியாது.

அதே நேரம் நேற்றையபோட்டியில் ஒரு கட்டத்தில் யுவராஜ் 78 ஓட்டங்களும் சச்சின் 84 ஓட்டங்களும் பெற்றிருந்தார்கள். அணிக்கு வெற்றி பெறத் தேவையான‌ ஓட்ட எண்ணிக்கை 40. இருவரும் சதமடிக்க போதுமான ஓட்டங்கள். இருவரின் துரதிஷ்டமோ ஒரு பந்து லெக் பையாக 4 ஓட்டங்களை எடுத்துக்கொடுத்தது. யுவ்ராஜ் தன் பங்கிற்க்கு ஒன்று இரண்டு என ஓட்டங்கள் எடுக்கின்றார். அமைதியாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் திடீரென பனேசரின் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி தன் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டிருக்கின்றார்.

சச்சின் 98 ஓட்டங்கள் எதிர்முனையில் யுவராஜ். சச்சின் யுவராஜிடம் சென்று ஏதோ சொல்கின்றார். அடுத்த 4 பந்துகளை யுவராஜ் மெல்லத் தடுத்து ஆடுகின்றார். அடுத்த ஓவர் முதல் பந்தில் சச்சின் ஒரு ஓட்டம் எடுத்து 99ல் நிற்கின்றார் யுவராஜோ மீண்டும் தடுப்பாட்டம் ஆடுகின்றார். வெற்றிக்குத் தேவையான ஓட்டங்கள் 4. மீண்டும் அடுத்த ஓவர் சச்சின் 4 ஓட்டங்கள் அடித்து தன் சதத்துடனும் இந்திய வெற்றியுடனும் பேருவகை கொள்கின்றார். வழக்கமாக தன் சதத்துக்கோ அல்லது அணியின் வெற்றிக்கோ சச்சின் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஒரு சிரிப்பு சூரியனை மேலே பார்ப்பார் அவ்வளவுதான். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் சச்சின் துள்ளிக் குதித்ததைப் பார்க்கும் போது ஏதோ ஒரு பிளாஸ்பேக் இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகின்றது.

காரணம் சச்சின் ஒருபோதும் தன் சொந்த சாதனைக்காக ஆடியது கிடையாது. அதே நேரம் நேற்று யுவராஜின் காதில் சொன்னது நீ அடித்து ஆடு என்பதா? அல்லது எனக்கு சதமடிக்க சந்தர்ப்பம் கொடு என்பதா? அல்லது வேறு ஏதாவதா? என்பது அந்த இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சச்சினைக் குறைகூறும் நண்பர்கள் கூறிய கருத்துக்களே இவை.

அதே வேளை சச்சின் சதமடிக்காமல் ஆட்டமிழக்காமல் 90களில் இருந்தாலும் யுவராஜைக் குறைசொல்வார்கள். அதே குறைசொல்பவர்கள் இன்றைக்கு சச்சின் தன் சுயனலத்திற்காக ஆடி சதமடித்தார் எனக் குறை சொல்லும்படியாகிவிட்டது.

உண்மையில் நடந்தது என்ன? சச்சினை சதமடிக்கும் படி வீரர்கள் ஓய்வறையில் இருந்து தகவல் வந்ததா? காரணம் வர்ணனையாளர்கள் ஒருதரம் தண்ணீர் கொண்டுசெல்லும் வீரர் ஏதோ ஒரு தகவலுடன் சென்றிருக்கின்றார் அது பெரும்பாலும் சச்சினை சதமடிக்க முயற்சி செய்யவும் என்ற தகவலாக இருக்கும் எனவும் சொன்னார்கள்.

நேற்றிரவு ஹைலைட்ஸ் பார்த்தும் என்ன நடந்தது என்பது புரியாமல் இருக்கின்றது.

வெறும் வாயில் அவல் மெல்பவர்களுக்கு சச்சின் அவலாகிவிட்டார். இதே விடயம் ஆஸி மேட்சில் நடைபெற்றிருந்தால் பாண்டிங்கும் ஏனைய ஆஸி பத்திரிகைகளும் இதற்க்கு முக்கியம் கொடுத்திருப்பார்கள்.

அதிரடி சேவாக், அபார யுவராஜ்,அனுபவ சச்சின், அதிர்ஷ்ட டோணி


சவாலான இலக்கு இறுதி நாள் ஆட்டம் இதுவரை உபகண்டத்தில் நாலாம் இனிங்கிஸ்சில் வெல்லப்படாத ஓட்ட இலக்கு என 387 ஓட்டங்களை நேற்று இங்கிலாந்து அணி இந்தியாவிற்க்கு நிர்ணயித்தது, சேவாக், கம்பீர், யுவராஜ், சச்சின் போன்றவர்களின் சிறப்பான ஆட்டங்களால் புதிய உபகண்ட சாதனை படைத்தது இந்திய அணி.
முதல் இனிங்கிஸில் 241 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்த இந்திய அணி அடுத்த இனிங்கிஸிலும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துவிடும் என்ற பீட்டர்சனின் கனவை முதலில் தவிடுபொடியாக்கியவர் சேவாக். சேவாக்கின் நேற்றைய அதிரடி ஆட்டம் தான் இன்றைய வெற்றிக்கு காரணம் என்றால் மிகையாகாது. முதல் இனிங்கிசில் வெறும் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த சேவாக் இரண்டாம் இனிங்கிஸில் பொறுப்பாகவும் அதே நேரம் அதிரடியாகவும் ஆடி இந்திய அணிக்கு சிறந்த அடித்தளம் இட்டுக்கொடுத்தார். சேவாக்கின் ஆட்டமிழப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியப் பெரும் சுவர் என அழைக்கப்பட்ட ராவிட் மீண்டும் தன் பலவீனத்தைக் காட்டி முதல் இனிங்கிசை விட ஒரு ஓட்டம் கூடுதலாக எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் இருந்து அடுத்து ஓய்வு பெறப்போகும் வீரர் அல்லது நிறுத்தப்படும் வீரர் பட்டியலில் ராவிட்டின் பெயர் முதலாவதாக இருக்கும்.லக்ஸ்மன் கம்பீருடனும் சச்சினுடனும் சில நிமிடங்கள் நின்றாலும் தன் பங்கிற்க்கு இன்னொரு அடித்தளம் இட்டுக்கொடுத்தார் என்றே சொல்லவேண்டும்.

லக்ஸ்மன் ஆட்டமிழந்தவுடன் தன் இருப்பை தக்க வைத்திருக்கவேண்டிய கட்டாயத்துடனும் எப்படியும் ஆட்டத்தை வெல்லவேண்டும் என்ற உறுதியுடனும் ஆரம்பம் முதலே யுவராஜ் சிங் அடித்து ஆடத்தொடங்கினார்.

சச்சினும் தன் 19 வருட அனுபவ ஆட்டத்தை ஆடி 41 ஆவது சதத்தைக் கடந்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். சச்சின் சதமடிப்பதற்க்கு வசதியாக யுவராஜ் இறுதி ஓவர்களில் பெரும் உதவி செய்தார்.

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த ஆட்டத்தாலும் வேகப்பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சாலும் டோனியின் அதிர்ஷ்டத்தாலும் இந்திய ஒரு சாதனை வெற்றியை சென்னை சேப்பாக்கத்தில் ஈட்டியது.

நடந்தது டெஸ்ட் மேட்சா இல்லை ஒரு நாள் ஆட்டமா என மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் திகைக்கவைத்தார்கள். டெஸ்ட் மேட்சுக்கு அவ்வளவு கூட்டம்.

மெஹாலியில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துபார்ப்போம்.

உலக அழகி நான் தான்.இன்று தென் ஆபிரிக்காவின் ஜோகன்ர்ஸ்பேர்க் நகரத்தில் நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டியில் ரஸ்ய அழகி கெஸ்னியா சுக்கினோவா( வாசிக்கும் போது வாய் சுழுக்கினால் நான் பொறுப்பல்ல) தெரிவு செய்யப்பட்டார்.எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அழகி பார்வதி ஓமணக்குட்டனுக்கு இரண்டாவது இடமே கிடைத்து.மூன்றாவது இடம் ரினிடாட் அன்ட் டோபாக்கோவைச் சேர்ந்த அழகி கபரில்லா வோல்ஹொட்டுக்கு கிடைத்துள்ளது.