கொஞ்ச நேரம்... பொன்னான நேரம்...

"அண்ணேய் எப்படி உங்களாலை டெய்லி ஒரு பதிவு போடமுடிகிறது" , புல்லட்.
"ஓமப்பா எனக்கும் இந்தக் கேள்வி அடிக்கடி வரும்", ஆதிரை.
"எப்படி உங்களுக்கு டைம் கிடைக்குது" ட்விட்டரில் கெளபாய்.
"வந்தி, எப்படியப்பா இப்படி போட்டுத்தாக்குகிறீர்கள், எங்களுக்கு நேரம் கிடைக்காமல் கஸ்டப்படுகின்றோம்", போனில் மருதமூரான்.

இப்படிப் பலர் அடிக்கடி என்னைக் கேட்கும் நேரம் பற்றிய கேள்விக்கான விடைதான் இந்தப் பதிவு.



"Do it Now" என்ற பழமொழியும், "If you waste the time now, time will be waste you one day" என்ற எங்கள் பாடசாலை முன்னாள் அதிபர் W.N.S.சாமூவேல் அவர்களின் அந்த வாசகமும் எனக்கு சின்ன வயதில் இருந்து மனதில் பதிந்துவிட்டது. அதற்காக நான் நேரத்தை விரயமாக்கியதில்லை என நினைக்காதீர்கள். கண்ணைத் துயின்று காலத்தைப்போக்கியவன், போக்குகிறவனில் நானும் ஒருவன். ஆனால் சில விடயங்களைத் திட்டமிடல் மூலம் செய்வதால் நேரப் பிரச்சனை எனக்கு அவ்வளவு ஏற்படுவதில்லை.

அண்மையில் சில நாட்களாகத் தான் பெரும்பாலும் தினமும் ஒரு பதிவு வருகின்றது. கூடுதலாக என் பதிவு காலை வேளைகளில் வரும், எப்படியென்றால் இரவே பதிவை ஆறுதலாக எழுதிவிட்டு, காலையில் கொஞ்சம் அடித்தல்கள், திருத்தல்கள் பலவற்றைச் செய்துவிட்டு வெளியிட்டுவிடுவேன். அதே நேரம் காலையில் நேரம் கிடைத்தால் அடுத்த பதிவை எழுதி Draft ல் போட்டுவிடுவேன், நேரம் கிடைக்கும் போது அதனையும் திருத்தி வெளியிடுவது, இப்படி Draft ல் கிடக்கும் பதிவுகள் பல.

பெரும்பாலனவர்கள் போல நானும் 6 மணி வரை இழுத்துப்போர்த்திக்கொண்டு படுக்கிற ஆள்தான். நித்திரையால் எழும்பியபின்னர் ஒரு 8 மணி வரை நெட்டில் மேய்ந்துவிட்டு புதிய பதிவு இருந்தான் அதனை வெளியிட்டோ, அல்லது தட்டச்சு செய்தோ என் நேரத்தைச் செலவிடுவேன். பெரும்பாலும் காலை வேளைகளில் சிந்தனை( அடப்பாவி மொக்கைப் பதிவுகளுக்கு என்ன சிந்தனை எனக் கேட்பது புரிகிறது) களையாமல் எழுதமுடியும்.

பின்னர் வேலை, ஆணி பிடுங்குதல், அலவாங்கு பிடுங்குதல், ட்விட்டரில் கும்மி என பொழுதுபோகும். இந்த வேளையில் காலையில் வந்த பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை வெளிவிடுவது வழக்கம், பெரும்பாலும் அந்தப் பின்னூட்டங்களுக்கு பதிலை அதே நாள் இரவில் அல்லது வேறு நேரத்தில் வெளியிடுவது.

இந்தப் பின்னூட்டங்களுக்கு பதில் போடுவதை பெரும்பாலும் நான் விரும்புகின்றேன், காரணம் பெரும்பாலான பின்னூட்டங்களில் நல்ல கருத்துகளைச் சொல்வார்கள், ஆகவே அவர்களுக்குப் பதில் சொல்வது கடமை.

பின்னர் இரவு 8 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் கமல் 50 பொன்விழா தொகுப்பு பார்ப்பதும் 9 மணிக்கு சூப்பர் சிங்கர் ஜூனியர் பார்ப்பதும் மட்டும் தான் என் தொலைக்காட்சிப் பொழுதுகள், கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் அவற்றையும் அம்மாவிடம் பேச்சுவாங்கிக்கொண்டு பார்ப்பேன். இதனால் 10 மணியில் இருந்து நள்ளிரவு வரை இரு மணித்தியாலங்கள் எனக்கு இணையத்தில் நண்பர்களுடன் அரட்டை, அடுத்த பதிவு பற்றிய எண்ணங்கள் என அடுத்த பதிவைத் தயார் செய்துபோடுவேன்.

படுக்கமுன்னர் எப்படியும் ஒரு அரைமணித்தியாலம் ஏதாவது புத்தகம் வாசித்தபடி அப்படியே நித்திரையாகிவிடுவேன். தினமும் ஏதாவது வாசிக்கவேண்டும் சில நாவல்கள் மெஹா சீரியல் போல் இழுபட்டுக்கொண்டே போகும்.

இதுதான் என் தினசரி நடவடிக்கைகள், சனி, ஞாயிறு தினங்களில் பெரும்பாலும் நான் எழுதுவது குறைவு. நண்பர்கள் தொலைக்காட்சி என பொழுதுபோய்விடும்.

இவை அனைத்தும் என்னுடைய சில நாட்களான திட்டமிடலே ஒழிய வேறு ஒன்றும் இல்லை, சில நாட்களுக்கு முன்னர் ஒரு கிழமைக்கு ஒரு பதிவு என்றே போட்டிருந்தேன்.

இடையில் பதிவு எழுத பஞ்சியாக கிடந்தால் படங்கள் போட்டு படம் காட்டுவதும், பாட்டுப்போடுவது, கமல் பற்றிய பதிவுகளும் கைகொடுக்கும்.

சீரியசாக எழுதினால் பலரால் சீண்டப்படுவதில்லை என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னுடைய திட்டமிடல் போல் நீங்களும் நடந்துகொண்டால் எப்படியும் தினம் ஒரு பதிவு போடலாம்.

16 கருத்துக் கூறியவர்கள்:

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

உங்கள் ஐடியாவை வைத்து நிறைய எழுத ஆசைதான். ஆனாலும் வரனும் இல்ல. வந்த எழுதாமலா போய்டுவோம். வச்சி கி்ட்டா வஞ்சகம் பண்ணுறோம்.

நாங்கள் பேச்சிலர்ஸ், தனியாக வாழ்பவர்கள், மற்றைய எங்களது வேலைகள் அனைத்தயும் இரவு 10-10.30 வரை செய்திட்டால் அந்த களைப்போடு அப்படியே தூங்கி விடுவோம். ஆகவே பகலில் தான் எழுதலாம்.

பார்ப்போம் உங்க ஸ்டைலில் எழுத முயற்சிக்கிறேன்.

வேந்தன் சொல்வது:

//அம்மாவிடம் பேச்சுவாங்கிக்கொண்டு....இணையத்தில் நண்பர்களுடன் அரட்டை....ஏதாவது புத்தகம் வாசித்தபடி....நண்பர்கள் தொலைக்காட்சி என பொழுதுபோய்விடும்.//
வந்தி அண்ணே இதுதான் பேச்சிலர்ஸ் வாழ்க்கை. நல்ல அனுபவிங்க இன்னும் சொஞ்ச காலம்தான் :)
இப்ப நீங்க திடமிட்ட படி நடக்கலாம்! பிறகு, உங்க வீட்டுகாரி திட்டமிட நீங்க அதை கடைப்பிடிக்க வேண்டி வரும். :(

ஆயில்யன் சொல்வது:

//இடையில் பதிவு எழுத பஞ்சியாக கிடந்தால் படங்கள் போட்டு படம் காட்டுவதும், பாட்டுப்போடுவது, கமல் பற்றிய பதிவுகளும் கைகொடுக்கும்.

சீரியசாக எழுதினால் பலரால் சீண்டப்படுவதில்லை என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னுடைய திட்டமிடல் போல் நீங்களும் நடந்துகொண்டால் எப்படியும் தினம் ஒரு பதிவு போடலாம்.//

நல்லா அழகா சொல்லியிருக்கீங்க !

பதிவு எழுத 1மே கிடைக்கவில்லை அல்லது எனக்கு எழுத வரவில்லை என்னும் வருத்தக்குரல்கள் சற்று பதிவு எழுதும் கனவினை தள்ளி வைத்து படிக்க தொடங்கினால் வெகுவிரைவிலேயே மிக அருமையான பதிவுகள் எழுதுவதில் வல்லவர்கள் ஆகிவிடுவார்கள் - சரிதானே வந்தி?

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) said...
உங்கள் ஐடியாவை வைத்து நிறைய எழுத ஆசைதான். ஆனாலும் வரனும் இல்ல. வந்த எழுதாமலா போய்டுவோம். வச்சி கி்ட்டா வஞ்சகம் பண்ணுறோம். //

சரி சரி நீங்களும் போர்முக்கு வந்துவிட்டீர்கள் என உங்கள் பதிவுகள் சொல்கிறது.

//நாங்கள் பேச்சிலர்ஸ், தனியாக வாழ்பவர்கள், மற்றைய எங்களது வேலைகள் அனைத்தயும் இரவு 10-10.30 வரை செய்திட்டால் அந்த களைப்போடு அப்படியே தூங்கி விடுவோம். ஆகவே பகலில் தான் எழுதலாம். //

நான் என்ன குடும்பஸ்தனா? நானும் பேச்சிலர் தான், என்ன அம்மா அப்பாவுடன் இருக்கின்றேன், அதனால் சில வேலைகள் என்மேல் விழாது ஆகவே நேரம் கிடைக்கிறது. உங்கள் கஸ்டங்கள் புரிகிறது.

//பார்ப்போம் உங்க ஸ்டைலில் எழுத முயற்சிக்கிறேன்.//

என் ஸ்டைலில் எழுதாமல் உங்கள் ஸ்டைலில் எழுதுங்கள், ஹிஹிஹி. நீங்கள் என்ன சொல்லவந்தீர்கள் என்பது புரிகிறது, என்னுடைய திட்டமிடல் படி எழுதப்போகீன்றீர்கள் அதுதானே.

வந்தியத்தேவன் சொல்வது:

//வேந்தன் said...
வந்தி அண்ணே இதுதான் பேச்சிலர்ஸ் வாழ்க்கை. நல்ல அனுபவிங்க இன்னும் சொஞ்ச காலம்தான் :)
இப்ப நீங்க திடமிட்ட படி நடக்கலாம்! பிறகு, உங்க வீட்டுகாரி திட்டமிட நீங்க அதை கடைப்பிடிக்க வேண்டி வரும். :(///

அனுபவமோ, கொஞ்சநாளில் என் உளறல்களை, என் புலம்பல்கள் என மாற்றும் படி நண்பன் கீத் ஆலோசனை சொன்னார்.

வந்தியத்தேவன் சொல்வது:

// ஆயில்யன் said...

பதிவு எழுத 1மே கிடைக்கவில்லை அல்லது எனக்கு எழுத வரவில்லை என்னும் வருத்தக்குரல்கள் சற்று பதிவு எழுதும் கனவினை தள்ளி வைத்து படிக்க தொடங்கினால் வெகுவிரைவிலேயே மிக அருமையான பதிவுகள் எழுதுவதில் வல்லவர்கள் ஆகிவிடுவார்கள் - சரிதானே வந்தி?//

ஆமாம் அதே தான். நானும் சில நாட்கள் வலையில் பதிவுகள் படித்துதான் எழுதத்தொடங்கினேன். எழுதத் தெரிந்த பலருக்கு எப்படி தங்கள் நேரத்தை திட்டமிடுவது என்பது தெரியாமல் இருக்கிறது, அதற்காகத் தான் இந்த இடுகை.

Unknown சொல்வது:

ஒரு நாளைக்கு 24 மணித்தியாலம் என்பது மிக மிக அதிகம்... யோசித்துப் பார்த்தால் கனடாவில் இரண்டு முழு நேர வேலை செய்தால்கூட வாரத்துக்கு 88 மணித்தியாலம் தூங்க, போக்குவரத்து மற்றும் இதர ஆணிபுடுங்கலுக்கு இருக்கிறது. நித்திரைக்கு வாரம் 42 மணித்தியாலம் என்றும், பிரயாணத்துக்கு வாரத்துக்கு 30 மணித்தியாலம் என்றும் (வேலைகளுக்குப் போய்வர).. மற்ற வேலைகள் செய்ய எப்படியாவது நாளைக்கு 2-3 மணித்தியாலம் இருக்கிறது... அதில் பதிவிடுகிறேன் நான்... ஆக நாளுக்கு ஒரு பதிவு கஷ்டமே இல்லை.

Unknown சொல்வது:

மேல சொன்னதுக்கு மேலதிகமா..
எதையுமே பிளான் பண்ணிச் செய்யணும்.. இல்லையா வந்தி அண்ணா???

சினேகிதி சொல்வது:

உண்மையா கிழமைக்கொரு பதிவு போடணும் என்ற ஆசையிருக்கு ஆனால் நேரமும் மூட் ம் தான் வராதாம். பார்ப்பம் ஒருநாள் விடிய எழும்பி எழுதிப்பார்ப்பம்.

யாழினி சொல்வது:

//நாங்கள் பேச்சிலர்ஸ், தனியாக வாழ்பவர்கள், மற்றைய எங்களது வேலைகள் அனைத்தயும் இரவு 10-10.30 வரை செய்திட்டால் அந்த களைப்போடு அப்படியே தூங்கி விடுவோம். ஆகவே பகலில் தான் எழுதலாம். //

நான் என்ன குடும்பஸ்தனா? நானும் பேச்சிலர் தான், என்ன அம்மா அப்பாவுடன் இருக்கின்றேன், அதனால் சில வேலைகள் என்மேல் விழாது ஆகவே நேரம் கிடைக்கிறது. உங்கள் கஸ்டங்கள் புரிகிறது.//


அது ஒன்றுமில்ல வந்தி அண்ணா அவங்க உங்கட வயச கேட்ட உடனே நீங்க இன்னும் பேச்சிலர்ஸ் தான் என்டத நம்ப மறுக்கிறாங்க! :)(LOL)

பால்குடி சொல்வது:

வந்தியண்ணா சொன்ன மாதிரி முயற்சிக்கிறேன். எனக்கெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு பதிவு கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் ஒரு சீரான இடைவெளியில் பதிவிடலாம் என்றே நம்புகிறேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Kiruthikan Kumarasamy said...
மேல சொன்னதுக்கு மேலதிகமா..
எதையுமே பிளான் பண்ணிச் செய்யணும்.. இல்லையா வந்தி அண்ணா???///

ஓம் கீத் நீங்கள் மேலே சொன்னது அனைத்தும் உண்மை. தூங்குகின்ற நேரத்தில் ஒரு மணித்தியாலத்தை எழுதப் பயன்படுத்தினால் என்ன நட்டம்? தமன்னாவோ சுனைனாவோ கனவில் வருகின்ற நேரம் கொஞ்சம் குறையும்.

பிளான் பண்ணிச் செய்யாவிட்டால் ஸ்ருதி அடிப்பார். அஜக் பஜக் டொடக்.

வந்தியத்தேவன் சொல்வது:

//சினேகிதி said...
உண்மையா கிழமைக்கொரு பதிவு போடணும் என்ற ஆசையிருக்கு ஆனால் நேரமும் மூட் ம் தான் வராதாம். பார்ப்பம் ஒருநாள் விடிய எழும்பி எழுதிப்பார்ப்பம்.//

விடியப்புறத்திலை சாட் செய்யும் நேரத்தைப் பிரயோசனப்படுத்தலாமே, ஆனால் நீங்கள் எனக்கு சீனியர் உங்களுக்கு நான் ஆலோசனை சொல்வதா? என்ன கொடுமை இது.

வந்தியத்தேவன் சொல்வது:

//யாழினி said...
அது ஒன்றுமில்ல வந்தி அண்ணா அவங்க உங்கட வயச கேட்ட உடனே நீங்க இன்னும் பேச்சிலர்ஸ் தான் என்டத நம்ப மறுக்கிறாங்க! :)(ளோள்)//

சரி நாளைக்கு என்ரை பிறப்புச் சான்றிதழுடன் என்ரை வயதைப் பதிவாக போடுகின்றேன். அதுசரி அக்கா நீங்களும் என்னைக் கலாய்க்கிறியளா?

வந்தியத்தேவன் சொல்வது:

//பால்குடி said...
வந்தியண்ணா சொன்ன மாதிரி முயற்சிக்கிறேன். எனக்கெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு பதிவு கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் ஒரு சீரான இடைவெளியில் பதிவிடலாம் என்றே நம்புகிறேன்.//

அப்படியே செய்யக்கடவீர்கள். எழுதுங்கள் அடுத்த மாதத்தில் இருந்து சிறந்த எழுத்துகளுக்கு பரிசளிக்கப்போவதாக ஒரு பிரபல பதிவர் சொன்னார். உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு.

Subankan சொல்வது:

//ஓம் கீத் நீங்கள் மேலே சொன்னது அனைத்தும் உண்மை. தூங்குகின்ற நேரத்தில் ஒரு மணித்தியாலத்தை எழுதப் பயன்படுத்தினால் என்ன நட்டம்? தமன்னாவோ சுனைனாவோ கனவில் வருகின்ற நேரம் கொஞ்சம் குறையும். //

ஏன்ணா வயித்தெரிச்சலைக் கிளப்பிட்டு, எவ்வளவு ட்ரை பண்ணாலும் ஆச்சி மனோரமாவைக்கூடக் காணோம். எழுதறதுக்கும் ஒரு மூடு வரணுமப்பா.