கடலேறியும் யாழ்தேவியும்

வலைப்பதிவர் சந்திப்பு வேளையில் ஒரு நாள் ஆதிரை எனக்கு விரைவில் ஆப்படிக்க போவதாகச் சொன்னார். நானும் எதோ நான் பூனை பிடித்த அல்லது எலி படித்த கதை என கற்பனைக் கதை எழுதப்போகின்றார் என நினைத்து அதை மறந்தே போனேன். சென்ற வாரம் எனக்கு இவற்றிற்குப் பதில் எழுதித்தாருங்கள் என மின்னஞ்சலில் 10 கேள்விகள் அனுப்பியிருந்தார்.

கேள்விகேட்கத்தான் தெரியும் பதில் சொல்றது எவ்வளவு கஸ்டம் என கமல் நாகேஸிடம் பஞ்சதந்திரத்தில் சொல்லும் வசனம் மனதில் வந்துபோனது. அவ்வளவு கஸ்டமான கேள்விகள் கேட்டிருந்தார். சில பல ஆராய்ச்சிகள் செய்து பல பழைய பதிவுகளை(என்னுடையதும் ஏனைய நண்பர்கள் சிலருடையதும்) தேடிக் கண்டுபிடித்து ஒரு மாதிரி பதில்கள் எழுதி அனுப்பினேன்.

அதனை மிகவும் அழகாக வலையேற்றியிருக்கிறார். என்னுடைய மிகவும் அழகான படங்கள்(?) சில அனுப்பியும் ஏனோ ஆதிரை அவற்றைப் பிரசுரிக்கவில்லை. என்னுடன் மட்டும் நில்லாமல் ஏனைய பலரையும் பல்துறை சார்ந்து ஆதிரை பேட்டி எடுக்கவருகின்றார் ஆயத்தமாக இருக்கவும்.

ஆதிரை கேட்ட கேள்விகள் அனைத்தும் பயிற்சி பெற்ற ஊடகவியலாளர் போல் மிகவும் சிறப்பான கேள்விகள். சில ஊடகவியலாளர்களுக்கு எப்படிக் கேள்வி கேட்பது என்பதே தெரியாது.

ஆதிரையின் கேள்விகளுக்கும் அவரது அணுகுமுறைக்கும் வாழ்த்துகள். என்னுடைய பதில்களும் எந்தவிதமான மழுப்பல்களும் இன்றி மிகவும் நேர்மையாக முறையில் கூறியிருக்கின்றேன் என நினைக்கின்றேன். இதனைப் பற்றி நீங்கள் தான் கூறவேண்டும்.

என் பேட்டி இணைப்புகள்

பகுதி 1

பகுதி 2


யாழ்தேவி நட்சத்திர வாரம்.

சென்றவாரம் இலங்கையில் இருந்து இயங்கிக்கொண்டிருக்கும் யாழ்தேவி திரட்டியில் நட்சத்திரமாகும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதற்காக யாழ்தேவிக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.

யாழ்தேவிக்கு சில ஆலோசனைகள்.

உங்கள் திரட்டியில் இணைக்க முகவரி தொலைபேசி போன்றவற்றைத் தருமாறு பதிவர்களைக் கேட்கின்றீர்கள், இது வேண்டாமே. காரணம் தொலைபேசி, முகவரி என்பனவற்றைக் கொடுக்க பலர் பின்னடிப்பார்கள். இதுவரை எந்த திரட்டியும் இப்படி தனிப்பட்ட விவரங்கள் கேட்பதில்லை. இதனை மறுபரிசீலனை செய்யவும்.

நட்சத்திரப் பதிவராக இருப்பவருக்குரிய அழைப்பை இரு வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு அறியத் தந்தால் அவர்கள் தங்களை அதற்கேற்றவாறு தயார்படுத்திக்கொள்ளமுடியும்.

உங்களின் திரட்டி பற்றிய விளம்பரம் போதாது. ஏனைய திரட்டிகள் செய்வதுபோல் புதிய பதிவுகளில் உங்கள் திரட்டியில் இணைக்க வேண்டுகோள் விடுக்கவும்.

நட்சத்திரப் பதிவராக இருந்த காலத்தில் யாழ்தேவியூடான வாசகர் வருகை என் பதிவுகளில் அதிகரித்திருந்தது.

மீண்டும் யாழ்தேவிக்கு என் இனிய நன்றிகள்.

12 கருத்துக் கூறியவர்கள்:

கார்த்தி சொல்வது:

வாழ்த்துக்கள் தலைவா!!

// என்னுடைய மிகவும் அழகான படங்கள்(?) சில அனுப்பியும் ஏனோ ஆதிரை அவற்றைப் பிரசுரிக்கவில்லை.

அதைப்போட்டா எல்லாம் உங்களுக்கு பின்னாலேயே வந்திருமே. ஆதிரைக்கு பின்னாலேயும் கொஞ்சம் போக வேண்டாமே? அதுதான்

Admin சொல்வது:

ஆதிரையின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டும்...

அவரின் கேள்விகளை பார்த்தாவது அந்த தலைவிரி கோலங்கள் திருந்தினால்சரிதான். (திருந்துமா???????????????)//என்னுடைய மிகவும் அழகான படங்கள்//


படங்கள் அழகுதான் ஆனால் நீங்கள்தான்...........

ARV Loshan சொல்வது:

//என்னுடைய மிகவும் அழகான படங்கள்(?) சில அனுப்பியும் ஏனோ ஆதிரை அவற்றைப் பிரசுரிக்கவில்லை.//

அந்த ஆப்பு தான் உங்கள் படமோ? ;)

ஆனாலும் ஆதிரையின் முயற்சி வாழ்த்துக்குரியதே.. நல்ல படியா தொடர்ந்தும் நல்லவர்களிடம் கேட்கவும்(என் பக்கம் வரக்கூடாது சொல்லிப் போட்டேன்)

யாழ்தேவி பெயர் மாற்றம் குறித்து ஒன்றும் சொல்லவில்லையோ? இதுவரை நண்பர்கள் முடிவு எடுக்கவில்லையோ?

பால்குடி சொல்வது:

//என்னுடைய மிகவும் அழகான படங்கள்(?) சில அனுப்பியும் ஏனோ ஆதிரை அவற்றைப் பிரசுரிக்கவில்லை

வந்தியண்ணே, அந்தப் படம் அழகா இருந்ததோ இல்லையோ எண்டு ஆதிரையண்ணா சொல்லணும் நீங்கள் சொல்லப்படாது... (ஹி.. ஹீ..)

Unknown சொல்வது:

//என்னுடைய மிகவும் அழகான படங்கள்(?) சில அனுப்பியும் ஏனோ ஆதிரை அவற்றைப் பிரசுரிக்கவில்லை//

அண்ணா...
வீட்ட கண்ணாடி இல்லயா? ;)

உங்கட முதலாவது பேட்டி வாசிச்சன்...
இனித் தான் இரண்டாவது வாசிக்கோணும்...

அழகாகவே பதில் சொல்லியிருந்தீர்கள் முதல் பாதியில்...

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தி

ஆமாம் சில விஷயங்களில் அவர் கிங்.. ஹீ ஹீ என லோஷன் உங்களை கூறியிருக்கிறாரே! அப்படி எந்த விஷயங்களில் நீங்க கிங்?

வந்தியத்தேவன் சொல்வது:

//கார்த்தி சொல்வது:
வாழ்த்துக்கள் தலைவா!!//

நன்றிகள் கார்த்தி.

//அதைப்போட்டா எல்லாம் உங்களுக்கு பின்னாலேயே வந்திருமே. ஆதிரைக்கு பின்னாலேயும் கொஞ்சம் போக வேண்டாமே? அதுதான்//

உண்மையைச் சொன்னதற்க்கு நன்றிகள் பல.

வந்தியத்தேவன் சொல்வது:

//சந்ரு சொல்வது:
ஆதிரையின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டும்...//

ஆதிரை இதனைக் குறித்துக்கொள்ளவும்.

//அவரின் கேள்விகளை பார்த்தாவது அந்த தலைவிரி கோலங்கள் திருந்தினால்சரிதான். (திருந்துமா???????????????) //

ஆஹா ஆஹா நாய் வாலை நிமிர்த்தமுடியாது.

//படங்கள் அழகுதான் ஆனால் நீங்கள்தான்...........//

உங்களைப் பெண்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்களாம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//LOSHAN சொல்வது:

அந்த ஆப்பு தான் உங்கள் படமோ? ;)//

ம்ம்ம் எனக்கு ஆப்படிக்க என ஒரு கூட்டமே அலையுது.

//ஆனாலும் ஆதிரையின் முயற்சி வாழ்த்துக்குரியதே.. நல்ல படியா தொடர்ந்தும் நல்லவர்களிடம் கேட்கவும்(என் பக்கம் வரக்கூடாது சொல்லிப் போட்டேன்)//

நிச்சயமாக நல்ல முயற்சி. உங்களிடம் ஆதிரை வரமாட்டார், அவர் சீரியஸ் பதிவர்களிடம் மட்டும் தான் பேட்டி எடுப்பாராம். புல்லட் ஜாலியான பதிவர்களிடம் பேட்டி எடுத்து அவர்களின் வேட்டியை உருவத் தயாராகின்றார் என காற்றுவாக்கில் செய்தி வந்தது முதல் குறி நீங்கள் தானாம் கவனமாக இருங்கள்.

//யாழ்தேவி பெயர் மாற்றம் குறித்து ஒன்றும் சொல்லவில்லையோ? இதுவரை நண்பர்கள் முடிவு எடுக்கவில்லையோ//

இதனை யாழ்தேவி நிர்வாகத்திடம் தான் கேட்கவேண்டும்.

வந்தியத்தேவன் சொல்வது:

//பால்குடி சொல்வது:

வந்தியண்ணே, அந்தப் படம் அழகா இருந்ததோ இல்லையோ எண்டு ஆதிரையண்ணா சொல்லணும் நீங்கள் சொல்லப்படாது... (ஹி.. ஹீ..)//

அடப்பாவி பால்குடி ஆதிரை அந்தப் படங்களை வெளியிட்டுவிட்டு பின்னர் மாற்றிவிட்டார். சொல்கின்றார் அந்தப் படங்கள் அழகாக இருக்காம் கண்ணூறு பட்டுவிடுமாம் அதனால் தான் போடவில்லையாம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி சொல்வது:
அண்ணா...
வீட்ட கண்ணாடி இல்லயா? ;)//

இல்லை இல்லை இல்லை

//அழகாகவே பதில் சொல்லியிருந்தீர்கள் முதல் பாதியில்...//

நன்றிகள், இரண்டாம் பாதியிலும் அப்படித்தான் சொல்லியிருக்கின்றேன் என நினைக்கின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) சொல்வது:
வாழ்த்துக்கள் வந்தி //

நன்றிகள் யோ

//ஆமாம் சில விஷயங்களில் அவர் கிங்.. ஹீ ஹீ என லோஷன் உங்களை கூறியிருக்கிறாரே! அப்படி எந்த விஷயங்களில் நீங்க கிங்?//

அதெல்லாம் பொது இடத்தில் கூறமுடியாது. ஹாஹா.