ப்ரியங்கா சோப்ரா + நான் + டேட்டிங்

காலையில் எழுந்திருக்கின்றேன் நல்ல மழை, இதமான குளிர் அப்படியே கொஞ்ச நேரம் படுக்கலாம் என்றால் நிறைய வேலைகள் இருப்பதாக மூளை சொல்லியது, மனமோ படு படு என்றது. இறுதியாக மூளை மனத்தை வென்று ஒருமாதிரி நித்திரையால் மன்னிக்கவும் கட்டிலால் எழும்பிவிட்டேன்.

காலையில் வீதியில் இறங்கவே நல்ல மழை குடை இருந்தாலும் ஓரளவு நனைந்துவிட்டேன். டுப்ளிகேசன் வீதியில் வெள்ளமோ வெள்ளம், சப்பாத்து முதல் கொண்டு அனைத்தும் நனைந்துவிட்டது.நான் செல்லவேண்டிய அலுவலகத்திற்க்கு நனைந்து கஸ்டப்பட்டுப் போனால் எனக்கு வரவேண்டியவை வரவில்லை. என் விதியை நொந்துகொண்டு மீண்டும் மழைக்குள் இறங்கித் வந்த வழியே திரும்பினேன்.

மதியம் கணிணியை திறந்தால் மருமகன் சதீஸ் நடந்தகதையை அப்படியே திரித்து ஒரு பதிவு எழுதியிருந்தார். அவருடை வெளிமாவட்டத்தில் இருந்து வந்த அந்தப் பெண்ணைக் காட்டுகின்றேன் என எனக்கும் ஆதிரைக்கு கொடுத்த வாக்கை சதீஸ் மறந்துபோய் எங்களை கலாய்த்துவிட்டார். ஆனால் நானும் ஆதிரையும் மிகவும் நல்லவர்கள் என்ற உண்மை வலையுலகப் பெருமக்களுக்கு தெரியும். அதனால் அந்தப் பதிவு பாதகமில்லை என்று இருவரும் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்காமல் விட்டுவிட்டோம்.

மூஞ்சிப்புத்தகத்தைத் (FaceBook) திறந்தால் நம்ம மருமகன் சதீஸ் ப்ரியங்கா கோதாரி என்ற யாரோ ஒரு கோதாரியுடன் டேட்டிங் போவதாக செய்தி இருந்தது. இந்த மூஞ்சிப் புத்தகத்தில் இன்றைய நண்பன் யார்? இன்றைய எதிரி யார்? என பல விடயங்கள் வந்துவிட்டன. அதைப்போல் யாரோ ஒரு புண்ணியவான் யாருடன் இன்றைய டேட்டிங் என்ற விடயத்தையும் எழுதிவிட்டான்.இன்னும் எத்தனை எத்தனை விடயங்கள் வரப்போகின்றதோ. இவர்களை மூஞ்சிப் புத்தக முருகன் தான் காப்பாற்றவேண்டும்.

அட நம்ம மருமகனே ஒரு கோதாரியோடை டேட்டிங் போகும் போது அவரின் மாமானாகிய நான் யாருடன் போவது என சோதித்துப்பார்த்தால் அதிர்ச்சியடைந்துபோனேன் எனக்கு முன்னால் பிரபஞ்ச‌ அழகி ப்ரியங்கா சோப்ரா என்னுடன் டேட்டிங் வர சம்மதம் தெரிவித்திருந்தார்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என நானும் அந்த தகவலை மூஞ்சிப் புத்தகத்தில் வெளியிட நண்பர் ஒருவர் டேட்டிங்க்கு நல்ல காலநிலை நிலவுகின்றது உடனே போங்கள் என எனக்கு தகவல் அனுப்பியிருந்தார்.

பிறகென்ன எழுத வந்த பதிவையும் மறந்துபோய் ப்ரியங்காவுடன் டேட்டிங் போக ரெடியாகிவிட்டேன். ஆகவே இன்றைக்கு பதிவுலகத்திற்க்கு லீவு நான். அப்போ வரட்டா.

டிஸ்கி: இது ஒரு மொக்கை. உன்னைப்போல் ஒருவன் சிலரின் பதிவுகள் வாசித்து கடுப்பாகி இந்த மொக்கையில் இறங்கினேன். மற்றும் படி எனக்கு டேட்டிங், காதல், கண்றாவி எல்லாத்திலையும் நம்பிக்கையில்லை.

8 கருத்துக் கூறியவர்கள்:

சுபானு சொல்வது:

//மற்றும் படி எனக்கு டேட்டிங், காதல், கண்றாவி எல்லாத்திலையும் நம்பிக்கையில்லை.

இதெல்லாம் சொல்லியா தெரியவேண்டியது.. எல்லோருக்கும் ஏற்கனேவே தெரியுமே..

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

இந்த பதிவில் நீங்கள் சொல்ல வருவது. இன்று பிரியங்கா சோப்ரா என நீங்கள் கூறி வேறு யாருடனோ டேட்டிங் போக போறீர்கள்.

வாழ்த்துக்கள் நல்லா.. அனுபவியுங்க

maruthamooran சொல்வது:

என்ன வந்தி….

அப்பா அம்மா இன்னும் சரியான ஆளைப்பிடிக்கேல்லயோ? அதுதான் உங்கடை ஆளை? ரொம்ப அவசரப்பற்றியள் போல கிடக்குது. எது எப்படியோ…. சீக்கிரத்தில எங்களுக்கு கல்யாணச் சாப்பாடு போட்டால் சரி.

வேந்தன் சொல்வது:

//எனக்கு டேட்டிங், காதல், கண்றாவி எல்லாத்திலையும் நம்பிக்கையில்லை. //
நம்பிட்டோம் :)))))))))

thiyaa சொல்வது:

அனுபவி ராசா அனுபவி

SShathiesh-சதீஷ். சொல்வது:

அவருடை வெளிமாவட்டத்தில் இருந்து வந்த அந்தப் பெண்ணைக் காட்டுகின்றேன் என எனக்கும் ஆதிரைக்கு கொடுத்த வாக்கை சதீஸ் மறந்துபோய் எங்களை கலாய்த்துவிட்டார். ஆனால் நானும் ஆதிரையும் மிகவும் நல்லவர்கள் என்ற உண்மை வலையுலகப் பெருமக்களுக்கு தெரியும். அதனால் அந்தப் பதிவு பாதகமில்லை என்று இருவரும் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்காமல் விட்டுவிட்டோம்.

=>>மாமா என்ன மாமா இப்பிடி பண்ணிப்புட்டிங்க. நீங்க காட்டி இருந்தால் ஆவது அந்த பொண்ணை பார்த்திருப்பேன். இப்படி போக விட்டிட்டு சொல்லிறிங்களே.

SShathiesh-சதீஷ். சொல்வது:

மூஞ்சிப்புத்தகத்தைத் (FaceBook) திறந்தால் நம்ம மருமகன் சதீஸ் ப்ரியங்கா கோதாரி என்ற யாரோ ஒரு கோதாரியுடன் டேட்டிங் போவதாக செய்தி இருந்தது

=>>
ஏன் மாமோய் எரிதா? பரவாயில்லை அந்த கோதாரியோட டேடிங் போன முழு விஷயமும் ஒரு பதிவா போடலாம் என நினைக்கிறான். நேரம் கிடைத்தல் விரைவில் வரும்.

SShathiesh-சதீஷ். சொல்வது:

அட நம்ம மருமகனே ஒரு கோதாரியோடை டேட்டிங் போகும் போது அவரின் மாமானாகிய நான் யாருடன் போவது என சோதித்துப்பார்த்தால் அதிர்ச்சியடைந்துபோனேன் எனக்கு முன்னால் பிரபஞ்ச‌ அழகி ப்ரியங்கா சோப்ரா என்னுடன் டேட்டிங் வர சம்மதம் தெரிவித்திருந்தா

=??
வாழ்த்துக்கள் மாமோய். சோப்பு மாமி என்ன சொன்னா டேடின்க் எப்புடி?