Showing posts with label பம்பல். Show all posts
Showing posts with label பம்பல். Show all posts

அதிரடி ட்விட்டர்ஸ்


கமல் : நிறுத்தனும்… நிறுத்தனும்… எல்லாத்தையும் நிறுத்தனும்.

சூர்யா : எதை சார் நிறுத்தனும்? எங்க கொண்டு போய் நிறுத்தனும்?

கமல் : நான் காரைச் சொல்லல. ட்ரைலரைச் சொன்னேன். விஸ்வரூபம் ட்ரைலர் வெளியாகி 100 நாள் வெற்றிவிழா என்று நக்கலடிக்கிறத நிறுத்தனும். படத்துக்கு பெயர் வைச்சவுடனே இது அந்தப் படத்தின் காப்பி, இது இந்தப் படத்தின் காப்பி என்று ஆராய்ச்சி செய்றத நிறுத்தனும்.

விக்ரம் : எஸ், யூ ஆர் ரைட் சார். நான் கஸ்டப்பட்டு நடிச்ச தெய்வத்திருமகளை, 'அங்கிள் சாம்', 'ஆண்டி மாம்' என்று கத விடுறாங்க.

விஜய் : ..ண்ணா….! யார்ண்ணா இத எல்லாம் செய்றது?

சூர்யா: அடப்பாவி! நீ நெட் பக்கமே வாறதில்லையா?

விஜய்: எனக்குத் தெரிஞ்சது, மீன் பிடிக்கிற நெட்தான் சரவணா!

சிம்பு : அண்ணா! மீன், நெட் எல்லாம் தடை செஞ்சாச்சுண்ணா.

சூர்யா : இன்டெர்னெட் கனெக்சனும், பிசியும் இருந்தாப் போதும், ட்விட்டர், பேஸ்புக் பப்ளாக் என்று நம்மைக் கலாய்க்க ஆரம்பிக்கிறாங்க. இப்ப அவங்களாலதான் நமக்கு பெரிய தலையிடி.

விஜய் : ஓ….! அவங்களா! யூ மீன் ட்விட்டர்ஸ், புளொக்கர்ஸ். ஐ நோ! ஐ நோ! அவங்க என்னோட எல்லாப் படத்தையும் கிழிச்சுத் தொங்கவிட்டுத் தோரணம் கட்றாங்களே!. அதில ஒருத்தன் படத்தோட வசனத்தை வரிக்கு வரி மாறாமல் எழுதுறான்.

அஜித் : நான் பேஸ்மாட்டேன்!

சிம்பு : வாங்கோ நடைராஜா.

அஜித் : நான் எவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிச்சாலும். 'அஜித் நடையைக் கொஞ்சம் குறைக்கலாம்' என்று கடைசி வரியில பஞ்ச் அடிப்பாங்க. ஷாலீனி வாசிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.

கமல் : இவங்கள நிறுத்த நாம என்ன செய்யலாம். அத சொல்லுங்க?

சிம்பு: ஒவ்வொருவருக்கும் கையில கவர் கொடுத்துடுவோமா?

விஜய் : ஒருத்தனா, ரெண்டு பேரா கவர் கொடுக்கிறதுக்கு. அவங்கதான் லட்சக்கணக்கில் இருக்காங்களே! எப்படிப்பா கவர் பண்றது?

விஜய்காந்த் : அங்…! பேஸ்புக்கில் 4 கோடியே 20 லட்சத்து 20 ஆயிரத்து 38, ட்விட்டரில் 2 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரத்து 112, ப்ளாக்கில் 3 லட்சத்து முன்னூற்று முப்பது. இதில் இந்தியத் தமிழர்கள்…….

தனுஷ் : தலைவா! போதும் தலைவா! நீங்கள் இன்னும் ரமணா எஃபெக்ட்டிலதான் இருக்கீங்க. முருகதாஸ் சார் இப்போ துப்பாக்கி தூக்கப் போய்ட்டார்.

விஜய் : யா..! யா..! "சாதாரணத் துப்பாக்கியால, ஒருவனை ஒரு தடவைதான் சுடலாம். ஆனால், என் துப்பாக்கியால, தியேட்டர்ல இருக்கிற எல்லாரையும் அட் எ டைம் சுட்றலாம்" என்று எஸ்எம்எஸ் அனுப்புறாங்க.

சூர்யா : இத எல்லாம் நிறுத்த, நாமளும் சமூக வலைத்தளங்கள்ல இணையிறதுதான் ஒரே வழி.

ஜீவா : மச்சி! நான் எப்பவோ தொடங்கிட்டேன் மச்சி. ஆனால இவங்கள் ஒருத்தனும் என்னையக் கலாய்க்கிறதே இல்ல.

ஆர்யா : அவங்க எப்பிடி உன்னக் கலாய்ப்பாங்க? 'ஒரு குவார்ட்டர் சொல்லு மச்சி! என்று நீயே அவங்களோட மிங்கில் ஆயிடுறாய்.

அஜித்: ட்விட்டரில் இணையிறதுக்கு என்ன செய்யனும் ?

ஜீவா : அஜித் சார்! உங்களுக்குத் தமிழ் தெரியுமா?அஜித் : ஓ! நல்லாத் தெரியுமே!

ஜீவா : அப்போ, நீங்கள் இங்லீஷ், ஹிந்திலதான் ட்விட்ட வேண்டூம்.

அஜித் : ஏன்?

ஜீவா : அப்படீன்னாத்தான் நீங்க அண்டார்ட்டிகாவில இருக்கிற அல்பி, ஆபிரிக்காவில இருக்கிற குக், மொசப்பதோமியாவில இருக்கிற கெயில்
இவங்களோடவெல்லாம் ஃபொலோயேர்ஸ் என்று பேசிக் கொள்ளலாம்.

விஜய் : ராஜதந்திரங்கள் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கிறே நீ.

கமல்: இதை நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன். ஒரு வீட்டில எத்தன ஜன்னல்கள் இருந்தாலும், வாசல் கதவுதான் முக்கியம். அதப்போலதான் எத்தன மொழிகள் தெரிஞ்சிருந்தாலும் தாய் மொழிய மறக்கக்கூடாது.

அஜித் : சூப்பர் பஞ்ச் சார்.

விக்ரம் : அதைவிட நமக்கு ஜிங்சாக் அடிக்கும் 4 பேர நாம கூடவே வச்சிருக்கவேணும்.

ஜீவா : அவங்க காவேரித் தண்ணி குடிச்சிருந்தால், இன்னும் பொருத்தமாக இருக்கும்.

கமல் : மீன் டைம், இப்போ ஹாட் என்ன விசயம் என்று பார்த்து அதப் பத்தியும் ஒருவரி சொல்லிடனும், இடையிடையே பெண்ணடிமை, ஈழம், டொசோ, தமிழன், கிரிக்கெட், இறையாண்மை எல்லாம் சேர்த்துக்கணும்.

சிம்பு : யாரையாவது போகிற போக்கில் வம்புக்கு இழுத்தா இன்னும் ஸ்பெசலா இருக்கும்.

ஜீவா : ஆளைவிடு சாமி. கேஸ் போட்டுடுங்கள்.

அஜித் : என்னய நடைராஜா, வோக்கிங் கிங், கோட்டு கழட்டாதவன் என்று எவன் இனிமேல் சொன்னாலும், அவன் மேல் சட்டம் பாயும்.

விஜய்: என்னை எப்படி நக்கலடிச்சாலும் தாங்குவேன் ஆனா எனக்கு நடிக்கத் தெரியாது என்று கலாய்க்கிறத்தான் தாங்க முடியல. அவங்க மேல் சகல இபிகோவிலும் வழக்கு போடனும்.

சூர்யா : அடப்பாவி! எப்படிடா இப்படி? வெட்கமே இல்லாம கதைக்கிறாய், நீ நடிச்ச சாரி வந்துபோன சுறாவை ஜட்ஜ் பார்த்தால், அவரே தற்கொலை செய்திடுவார்.

விஜய் : அவ்வ்வ்…! சொந்தச் செலவில் சூனியம் வச்சிட்டனோ?

கமல் : கலைஞர் ஆட்சி என்றால், ஃபேஸ்புக் தலைவருக்கு ஒரு லைக் என பாராட்டுவிழா நடத்தி நம்ம பிரச்சனையச் சொல்லலாம்.

விஜய் : சார்! அப்பாவை அனுப்பி அம்மாவிடம் கோரிக்கை வைப்போமா?

விக்ரம் : யூ மீன் சோபா ஆண்டி?

விஜய் : இல்லங்ண்ணா முதல்வர் அம்மா.

விக்ரம் : அவங்ககிட்ட என்னால குனிஞ்சு நிமிர தொப்பை விடாது. நான் வரல.
இவர்கள் பேஎசிக்கொண்டிருந்த போது, அங்கே திடீரென ஒரு குரல் கேட்கிறது.

குரல்: ட்விட்டர் எனக்கு சுவெட்டர். ஃபேஸ்புக் என் பாஸ்புக். வலை என்னோட தலை.

விஜய் டீ.ராஜேந்தர் உள்ளே நுழைய எல்லோரும் ஜேர்க் ஆகிறார்கள்.
டீ ஆர் : நண்பர்களே! யூட்யூப்பிலிருந்து வால்ட்யூப் வரை என்னை கிண்டலடிக்கிறார்கள். இத எல்லாம் நான் பொறுத்துக் கொண்டது போல நீங்களும் பொறுக்க வேண்டும். ஏய் டண்டனக்கா டணக்கு டக்கா.


அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களிலும், வலைப்பூக்களிலும் பிரபலங்களின் மீதான நக்கல் நையாண்டிகள் அதிகரித்திருப்பதால் நம்ம சில கதாநாயகர்கள் இதனை எப்படி எதிர்கொள்வது என தமக்குள் பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டவை.

குக்கைத் திணறடித்த குஞ்சு

"நோ மணி நோ ஹனி" என என் செல் என் அதிகாலை இனிமையான தூக்கத்தை கெடுத்தது, யார்டா இந்த நேரத்திலை என நம்பரைப் பார்த்தால் 009477... என ஒரு இலங்கை நம்பரைக் காட்டியது.

தூக்க கலக்கத்துடன் "ஹலோ"

"ஹாய் மாம்ஸ் நான் தான் பவன்"

"சொல்றா குஞ்சு என்னடா விடியக்காலையிலை "

"மாம்ஸ் இங்கே விடிஞ்சுடுத்து"

"அடப்பாவி காலையிலையே உன் கடியா என்ன விசயம்டா"

"மாம்ஸ் உங்கே ஒரு கிழமைக்கு கிரிக்கெட் பயிற்சி எடுக்க என்னை அனுப்புறாங்கள்"

"டேய் உலகச் சாம்பியன் எங்கடை பக்கத்து நாடு, நாங்களோ ரன்னர்ஸ் இவங்களோ அயர்லாந்தட்டை அடிவாங்கியவங்கள், இவங்களெட்டை என்ன பயிற்சியடா"

"இல்லை மாம்ஸ் இது ஜஸ்ட் போர் எக்ஸ்சேஞ் ட்ரெயினிங்"

பவனின் ஆங்கிலத்திலையே பொடியன் ரெடியாகிவிட்டான் என்பது தெரிந்துவிட்டது.

"சரிடா எப்ப வாறாய்? பிளைட் விபரம் எல்லாத்தையும் மெயில் பண்ணு நான் உன்னை பிக்கப் பண்ண வாறன்"

"எல்லாம் உங்களுக்கு இரவே மெயில் பண்ணிட்டன், இப்போ சுபாங்கன் அண்ணாவுடன் கட்டுநாயக்காவில் நிற்கின்றேன்"

"ஓக்கே மாம்ஸ் சீ யூ அட் ஹீத்ரூ"

மெயிலைத் திறந்து பார்த்தால் பவனின் கல்வி நிறுவனத்தில் சிறந்த பந்துவீச்சாளரான இவனை லோர்ட்ஸில் நடக்கும் 5 நாள் கோச்சிங் கேம்பில் கலந்துகொள்ள அனுப்பிய அழைப்பிதழும் பிளைட் விபரங்களும் அனுப்பியிருந்தான்.


நானும் என்னுடைய பகல் நேர ஆணி பிடுங்கல்களை முடித்துவிட்டு பிக்காடிலி லைனை அல்பேர்ட்டனில் பிடிச்சு ஒருமாதிரி ஹீத்ரு டெர்மினல் 4 க்கு சென்றுவிட்டேன்.

ஒரு 8 மணியளவில் தலைமுடி எல்லாம் டை அடித்து மாலிங்காவையும் ஸ்ரீசாந்தையும் மிக்ஸ் பண்ணிய சிகை அலங்காரத்தில் ஓரேஞ்ச் கலர் கூலிங்கிளாசுடன் டீசல் டெனிமுடன் அசல் கிரிக்கெட்டர் போலவே "ஹாய் மாம்ஸ்" என்றபடி எனக்கு கை தந்தான்.

பவனுடன் பயணக் கதைகளைக் கேட்டபடி நிற்க ஒரு அழகான வெள்ளைக்கார பெண் பவனுக்கு அருகில் வந்து "OK Bavan have a nice Holiday, pls drop me a mail and catch u later bye" என்ற படி பவனைக் கட்டிப்பிடித்து கன்னத்துடன் கன்னம் வைத்து ஒரு மெல்லிய முத்தம் கொடுத்தபடி "Bye Young man" என எனக்கும் ஒரு பாய் சொல்லிவிட்டு மின்னல் என மறைந்துவிட்டாள்.

"டேய் யாரடா இவள் எங்கே பிடிச்சாய்?"

"ஹிஹிஹி இவள் மலேயில் ட்ரான்சிட்டில் என் பக்கத்து சீட்டில் ஏறியவள் என்னை ஸ்ரீலங்கன் கிரிக்கெட்டர் என நினைத்து ஒரே கிரிக்கெட் கதைதான், நானும் யா யா எனச் சொல்லி பிக்கப் பண்ணிட்டேன்"

"என்னடா?"

"இல்லை மாம்ஸ் உவங்கடை இங்கிலீசைத் தான் பிக்கப் பண்ணிட்டேன் என்றேன், அவளின் பெயர் சாரா எட்வேர்ட்ஸ் பேர்மிங்ஹாமில் தானாம் இருக்கின்றாள் ஒரு நாளைக்கு தன்னுடன் டின்னர் சாப்பிட என்னை இன்வைட் பண்ணினாள் "

ஏற்கனவே அவள் பவனுக்கு முத்தமிட்டு என்னைக் கடுப்படித்துவிட்டாள் இதுக்குள்ளை அவளுடன் டின்னரோ என்ற ஆத்திரத்தில் "மவனே லேட்டாகுது வா" என்றபடி அவனின் லக்கேஜையும் இழுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.

என் ரூமில் லக்கேஜின் சிப்பைத் திறந்து எனக்கு நண்பர்கள் கொடுத்துவிட்ட சாமான்களை தந்தான்.


"ஆதிரை அண்ணாவுக்கு நெல்லியடி கொமர்ஷியல் வங்கியில் முக்கிய அலுவல் இருப்பதால் அவர் யாழ் சென்றுவிட்டார் அதனால் அவர் தன் சார்பாக இந்த நீலக் கலர் ரீசேர்ட்டை உங்களுக்கு கொடுக்கச் சொன்னார், அடுத்தமுறை நான் வரும் போது நளபாகம் ஸ்பெசல் வாய்ப்பான் தந்துவிடுவதாகச் சொன்னார்".

"ம்ம்"

"லோஷன் அண்ணா கொஞ்சம் கர்னாடக சங்கீத சீடிக்கள் தந்துவிட்டவர்,அந்த சீடித் தொகுப்பில் அவருக்குப் பிடித்த நித்யஸ்ரீயின் கீரவாணி வர்ணமும் இருக்காம், உங்களையும் ஒருக்கால் கேட்கட்டாம். உவன் கோபி தான் வாங்கி வைத்த பருத்தித்துறை வடையை பசிக்குது என்று எயார்போட்டுக்கு வாறவழியிலையே சாப்பிட்டுவிட்டான். வதீஸ் அண்ணா அரசியல் கூட்டம் என்று மன்னாருக்கோ மட்டக்களப்புக்கோ போய்விட்டார் சந்திக்க கிடைக்கவில்லை, மற்றது எல்லாம் அனுவும் சுபாங்கன் அண்ணாவும் தந்தவை தான் என்றபடி முறுக்கு, ஊறுகாய், என ஊர்ச் சாப்பாடுகளை எடுத்து வெளியே வைத்தான். நீருஜா அக்கா தனக்கு பிடிச்ச சாமன் உங்கே தானாம் இருக்கு வரேக்கை வாங்கியரச் சொன்னவர்.

"ஓகேடா விடிய உனக்கு பிரெக்டிக்ஸ் இருக்கு நேரத்துக்கு படு"

அடுத்த நாள் காலையே லோர்ட்சில் பயிற்சிக்கு அவனை அழைத்துக்கொண்டு போனால் அங்கே இங்கிலாந்து டீமும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

"அடப்பாவி உனக்கு நல்ல அதிர்ஷ்டம்டா இண்டைக்கு"

"எனக்கு மலேயிலையே அதிர்ஷ்டம் தொடங்கிவிட்டது" பவன்

சில நிமிடங்களிலையே பயிற்சி தொடங்கியது, பவனின் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் அதிசயமாகப் பார்த்தார்கள். அதிவேகமாக ஓடிவந்து மெதுவாக ஸ்பின் போல வீசியதைப் பார்த்து அன்ரு பிளவர் தொடக்கம் அன்ரு ஸ்ரோஸ் வரை ஸ்தம்பித்துப்போனார்கள்.

இங்கிலாந்தின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜிம்மி அண்டர்சனோ பவனின் பந்துவீச்சில் மயங்கி பவனிடம் அவன் வீசும் பந்துவீச்சு என்ன வகை எனக் கேட்டார். பவனோ உடனடியாகவே இதன் பெயர் "பப்சர்" எனக் கப்சா விட்டான். "பப்சர் மீன் மிக்சர் ஒவ் ஸ்பின் அன்ட் சீம் சோ இஸ்ட் கோல்ட் பப்சர்" என விளக்கம் கொடுத்ததை கேட்டு இங்கிலாந்து வீரர்கள் ஸ்டாண்டிங் ஒவேசன் கொடுத்தார்கள்.

இந்த அலும்புகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சனியும் வியாழனும் டவுள் டெக்கர் போட்டு பவனின் தலையில் அமர்ந்துகொண்டதுபோல தெரிந்தது. பின்னை இவன் செய்வது கப்சா என்றால் என்னையும் சேர்த்து அடுத்த பிளைட்டில் டிப்போர்ட் செய்துவிடுவார்கள்.

ஆனால் பவனின் முகராசியோ என்னவோ புரோட் தொடக்கம் பீட்டர்சன் வரை பவனின் தோளில் கைபோட்டு அன்னியோன்னமாகிவிட்டார்கள்.

சில நிமிடங்களில் 20 ஓவர்கள் கொண்ட ஒரு பயிற்சிப்போட்டி இங்கிலாந்து அணிக்கும் பயிற்சிக்காக வந்த ஏனைய நாட்டு மாணவர்கள் அணிக்கும் தொடங்கியது,

இங்கிலாந்தின் ஒருநாள் அணித்தலைவர் அலிஸ்டர் குக் ஓப்பனராக ஸ்ரோசுடன் களமிறங்க மறுபக்கமோ நம்ம பவன் பந்துவீச நேர்சரி என்ட் பவுண்டரி லைனில் இருந்து ஓடிவரத் தயாராக நின்றான்.

பவனின் பந்துவீச்சுகள் குக்கை திணறடித்தன. பவனின் வேகத்தைப் பார்த்து பந்து புல்டோசாக வரப்போகுது என குக் பேட்டை ஓங்க பந்தோ லெப்டில் பவுன்ஸ் பண்ணி யூடேர்ன் எடுத்து குக்கை குழப்பியது. கடைசியாக பவனின் ஆறாவது பந்து நேராகவே குக்கின் விக்கெட்டை தகர்க்க குக் பேட்டையும் களத்தே போட்டு விட்டு வெறும் கையோடு பவிலியன் திரும்பினார்.

பவனின் விளையாட்டைப் பார்க்கும் போது அடுத்த ஐபிஎல்லுக்கு ப்ரீத்தி சிந்தாவோ ஷில்பா ஷெட்டியோ பவனை ஏலத்துக்கு எடுக்கும் அபாயம் என் மனசுக்குள் மணி அடித்தது.

பயிற்சி முடிந்ததும் பவனும் நானும் வீடு திரும்பும்போது

" மாம்ஸ் எசெக்ஸ், சசெக்ஸ், மிடில்செக்ஸ் மனேஜர்கள் தங்கள் அணிக்கு விளையாடும் படி கேட்டார்கள் ஆனால் உந்தப் பெயர் உள்ள டீம்களில் விளையாட மது அண்ணா தான் பொருத்தமானவர் என்பதால் நான் மாட்டேன் என்றுவிட்டேன், சொர்க்கமே என்றாலும் கூரேப் பார்க் போல வருமா ?"

தீடிரென்று பவன் என் காலில் விழுவது போல் இருந்தது
"டேய் ஏன்டா இதெல்லாம் நீ என் நண்பேன்டா எனச் சொல்ல "
"மாம்ஸ் நான் கழண்ட என் லேசைக் கட்டுறன் " வழக்கம் போல என்னைக் கலாய்த்தான்.

இரவு படுக்கும் போது
"மாம்ஸ் எனக்கு இன்னொரு ஆசை இருக்கு நிறைவேற்றுவியளா?"
"என்னாடா ?"
"மரியா ஷரபோவாவுடன் விம்பிள்டனில் சென்டர் கோர்ட்டில் கலப்பு இரட்டையரில் விளையாடவேண்டும்"
எனக்கு வந்த கோபத்தில் காலால் உதைக்க கால் சுவருடன் மோதியவுடன் தான் தெரிந்தது நான் கண்டது கனவு என்று.

காலையில் எழுந்து பார்க்கின்றேன் பவனின் பேஸ்புக்கில்

என்ற மெசேஜ் இருக்கின்றது.

டிஸ்கி: இந்தப் பதிவுக்கு ஆக இருந்தது கிரேசி மோகனின் ஒரு கதை. அந்தக் கதையும் அதனுடன் எனக்கு நடந்த சம்பவமும் விரைவில் பதிவாக வரும்(எப்போ இன்னும் 2 மாதத்தின் பின்னரா என ஆதிரை கேட்பது போல பிரமை).

கன்னியின் செல்வன் - வரலாற்று மொக்கை

முற்குறிப்பு : இது ஒரு மொக்கைப் பதிவு சீரியசான பதிவு வாசிப்பவர்கள், என்னுடைய அடுத்த பதிவு வரை காத்திருக்கவும். இல்லை மொக்கையை வாசிக்கத்தான் போறீர்கள் என்றால் பின்விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பல்ல.

அமரர் கல்கியின் ஆவி மணிரத்தினத்தை மன்னித்ததுபோல் என்னையும் மன்னிக்கட்டும். இந்த விடயத்துக்கு எழுத்துவடிவம் கொடுக்க ஊக்கவும் ஆக்கவும் சில தரவுகளை ட்விட்டியும் உதவிய முன்னாள் பதிவர் இன்னாள் ட்விட்டர் டொன்லீக்கு நன்றிகள்.

மிகவும் அழகான ஒரு பெளர்ணமி பின்னேரம் வெள்ளவத்தை கடற்கரையில் சில பதிவர்கள் கானா பிரபா தலைமையில் மந்திராலோஷனை நடத்திகொண்டிருக்கின்றார்கள். கோபியும், வதீஸும் நடக்கும் விடயங்களை ஆலோசனைக் கூட்டத்திற்க்கு வராதவர்களுக்கு ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் உடனக்குடன் அப்டேட் செய்துகொண்டிருந்தார்கள்.

கானா : வணக்கம் நண்பர்களே, எங்கடை சிங்கப்பூர் மாதவனின் கடும் தொந்தரவினால் இந்த மந்திராலோஷனைக்கூட்டத்தை நிகழ்த்தவேண்டியிருக்கின்றது. நாம் ஏன் கூடியிருக்கின்றோம் என்பதை சிங்கை மாதவன் டொன்லீயே சொல்லுவார்.

டொன்லீ : இங்கே இருப்பவர்களில் எத்தனைபேர் பொன்னியின் செல்வன் வாசித்திருக்கின்றீர்கள் ?

பெரும்பாலனவர்கள் கையை உடனேயே தூக்கினார்கள், பவன் மட்டும் உயர்த்தாமல் பக்கத்தில் இருந்த சுபாங்கிடம் "அது ரவிகிருஷ்ணா நடிச்ச படம் தானா?" எனக்கேட்டு திட்டுவாங்கிக்கொண்டிருந்தான்.

டொன்லீ : விரைவில் அந்தக் கதையை மணிரத்தினம் படமாக எடுக்கபோகின்றார், அவருக்கு முன்னால் நாங்கள் பதிவர்கள் இதனை ஏன் படமாக்க முடியாது, மணிரத்தினத்தையே மன்னித்த கல்கியின் ஆவி எம்மைப்போன்ற சிறுவர்களையும் மன்னிக்கும் தானே. தலைப்பு மட்டும் கன்னியின் செல்வன்

லோஷன் : நல்ல முயற்சி ஆனால் இதற்க்கு யார் செலவு செய்வது?

வந்தி : அங்கிள் ஒரு பிரபல நிறுவனம் ஸ்பொன்சர் செய்கின்றார்களாம்

லோஷன் : ஓஓஓ அப்படியென்டால் நான் ரெடி.



கானா : சரி பொடியள் யார் யாருக்கு எந்த பாத்திரம் என்பதை இனித்தான் முடிவு செய்யவேண்டும், உவர் வந்தியர் வந்தியத்தேவன் என்ற பெயரையே வைத்திருப்பதால் அவரே வந்தியதேவனாக நடிக்கட்டும்.

டொன்லீ : அருள்மொழிவர்மனாக‌ லோஷனைப் போடலாம் ஆனால் அவரின் உடல்வாகு அதிகம் என்பதால் அவர் சில நாட்களில் தன்னுடம்பைக் குறைத்தால் அருண்மொழிவர்மன் இல்லையென்றால் இலங்கை தண்டநாயக்கர்களில் ஒருவராகத் தான் நடிக்கவேண்டும்.

வந்தி : பெரிய பழுவேட்டரையராக கானா தான் சரியான ஆள், சின்னப் பழுவேட்டரையராக எங்கடை தலை நிரூஜாவைப் போடவேண்டியதுதான்.

கானா : யோவ் மாம்ஸ் நான் ஒரு அப்பாவி என்னைப்போய் வில்லனாக்குகின்றீர்களே?

வந்தி : பெரியப்பு கதையின் நாயகியே நந்தினி தான், நீங்கள் தான் நந்தினியின் கணவர், நந்தினியாக வித்யாபாலனை டொன்லீ கேட்கப்போறாராம்,

வந்தி சொல்லி முடிக்கமுன்னரே கானா விழுந்தடித்து

கானா : வித்தியா நந்தினி என்றால் நான் பெரிய, சின்ன என இரண்டு பழுவேட்டரையராகவும் டவுள் ஆக்டிங்கே செய்கின்றேன்.

லோஷன் : ஐயா நீங்கள் கமல் ரசிகராக இருக்கலாம் அதற்காக எல்லாப் பாத்திரமும் உங்களுக்குத் தரேலாது, சின்ன பழுவேட்டரையருக்கு நிரூஜா தான் பொருத்தம்,

ஆதிரை : ஓமோம் சின்னப் பழுவேட்டரையர் தான் பழையாறை அரண்மைனையின் தலைமைக் காவலர், நம்ம நிரூஜாவும் நிஜவாழ்க்கையில் காவலன் தானே சரியான பொருத்தமாக இருக்கும்.

நிரூஜா ; கோதாரியில் போறவங்கள் இனித் தொடங்கிவிட்டார்கள்.

வந்தி : ஆழ்வார்க்கடியனாக கோபிதான் சரி, கோபிக்குத் தான் பெரிய பெரிய தொந்தியும் உடம்பும்.

கோபி : அடக்கடவுளே நாடகத்திலும் எனக்குச் சோடி இல்லையா?

டொன்லீ : சேந்தன் அமுதனாக நடிப்பவர் கொஞ்சம் விடலையாக இருக்கவேண்டும் பவன் தான் சரி என நினைக்கின்றேன்.

அனுதினன் : நானும் சின்னப் பொடியன் தான்.

வதீஸ் : ஓமோம் பத்து வருடத்திக்கு முன்னர் நீயும் பொடிதான்.

தன்னுடைய ட்விட்டரில் நடக்கின்றவையை அப்டேட் செய்துகொண்டிருந்த கோபி திடீரென

கோபி : குரு எங்கடை சேது ஐயா தான் சுந்தரச்சோழனுக்கு வாறாராம். ஆனால் கோப்பெரும் தேவியாக சரோஜாதேவிதான் வேணுமாம்.

வந்தி ; அவர் பொருத்தமானவர் தான் ஆனால் நடிகைகளை பிறகு பார்ப்போம்.

கானா : அமைச்சர் அநிருத்தராக மருதமூரான் தான் சரி, அவர் தான் அடிக்கடி நடுநிலைமை பற்றி எல்லாம் கதைக்கின்றவர்.

மருதமூரான் : சரி சரி என்ரை குணத்திற்க்கு ஏற்ற பாத்திரம்.

வந்தி : இனி ஆதித்த கரிகாலன், மதுராந்தகர், கந்தமாறன், பார்த்திபேந்திரன் தான் மிச்சம்.

கானா : சுபாங்கன் மதுராந்தகராக நடிக்கலாம், ஆதிரையை ஆதித்த கரிகாலனாக்கலாம், கந்தமாறனாக வதீஸும் பார்த்திபேந்திரனாக மதுவும் சரியாக இருக்கும்.

மது : அண்ணே பார்த்திபேந்திரனுக்கு என ஏதாவது இசம் இருக்கா?

லோஷன் : ஒரு இசமும் இல்லை அவர் சும்மா ரசம் மட்டும் தான் குடிப்பார். விட்டால் இவன் எஸ்,ஜே.சூர்யா தான் படத்தை இயக்கவேண்டும் என்பான்.

கானா : சரியப்பா இனி முக்கிய விஷயத்துக்கு வாங்கோ, கதாநாயகிகள் யார் யார்? எவரை டொன்லீ ஒப்பந்தம் செய்யப்போறார்?

டொன்லீ ; குஞ்சியப்பு உங்களுக்கு வித்தியா பாலன் அதாவது நந்தினியா வித்தியா பாலன்.

கானா : உது காணும் எனக்கு. என்ன வந்தியரின் காதுக்குள்ளை புகையது போல.

வந்தி : பெரியப்புக்கு கதை தெரியாதுபோல நந்தினி மேலும் வந்தியதேவனுக்கு ஒரு லவ் வருது அந்த நேரம் நானும் வித்தியா பாலனும் டூயட் பாடுவதுபோல ஒரு காட்சி வைக்க எங்கடை டொன்னுக்குத் தெரியாதோ.

லோஷன் : ஹன்சிகா மேத்வானி வானதியாக நடித்தால் என் கால்சீட் நாலு மாதத்துக்கு தருவேன் இல்லையென்றால் ஐபிஎல், ஐசிஎல் என நான் பாட்டுக்கு கிரிக்கெட் தம்பியாகிவிடுவேன்.

வந்தி : குந்தவைக்கு பொருத்தமானவர் என்றால் தமன்னா தான்.

ஆதிரை : உந்தாளுக்கு அந்த வெள்ளைக் கரப்பானை விட்டால் வேறை ஒன்றும் கண்ணுக்குத் தெரிவதில்லை. என்ரை விசாப் பிள்ளையாரே உவருக்கு தமன்னா கிடைக்ககூடாது, உனக்கு நான் 100 தேங்காய் அடிச்சு சிரட்டைகளை வந்திக்கே கொடுக்கின்றேன்.

கோபி ; சித்தப்பூ சும்மா குருவை நக்கலடியாதேங்கோ, ரசனை ஆளுக்கால் மாறுபடும்தானே.

லோஷன் : பூங்குழலியாக புதுமுகமாக பூனம் பாண்டேயே ஏன் போடாக்கூடாது.

டொன்லீ : ஷப்பா இந்த மனிசன் மும்பை பைனல் பார்த்ததில் இருந்து பூனம் பைத்தியமாகவே மாறிவிட்டது.

நிரூஜா : ஓமோம் மேட்ச் முடிஞ்ச பின்னரும் உவர் பூனம் ஓடுமென நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்தவராம்.

லோஷன் ; யோவ் அடங்குங்கோ பூங்குழலி கட்டுமரம் ஓட்டுகின்றவர் பூனத்தை போட்டால் தான் பொருத்தமாக இருக்கும் அடுத்தது இரண்டு பேர் பெயரும் பூவிலை தொடங்குது.

கானா : அப்படியெண்டால் பூர்ணிமா பாக்கியராஜும் ஓக்கேதானே.

வதீஸ் : பெரியப்பு அடிக்கடி பழைய நடிகைகளைச் சொல்லி தன்ரை வயதைக் காட்டுகின்றார்.

வந்தி : மணிமேகலையாக அமலா பாலைப் போடவும்

லோஷன் : நீ கொடுத்து வைத்தவன் மணிமேகலை, குந்தவை, நந்தினி, பூங்குழலி என சகல பெண் பாத்திரங்களுடனும் ஜமாய்க்கலாம்.

பவன் : பல்லிருக்கின்றவன் பக்கோடா சாப்பிடுகின்றான் அங்கிள்.

லோஷன் : அது பல்லிருக்கின்றவனுக்குச் சரி

கோபி : இல்லை அண்ணை குரு எந்தப் பிரச்சனை என்றாலும் சமாளிப்பார்.

மது : ஓமோம் உன்னையே சமாளிக்கின்றவருக்கு உதெல்லாம் சிம்பிள்

லோஷன் : மது இதிலை உள்வெளி குத்துகள் இல்லைத்தானே.

டொன்லீ : அப்போ விரைவில் திரைக்கதையை, வந்தி எழுதினால் சூட்டிங் போகவேண்டியதுதான்.

கானா : தண்டநாயக்கர்கள், தேவராளன், குடந்தைச் சோதிடர் இதெற்கெல்லாம் விரைவில் ஆட்களை எடுக்கவேண்டும்.

டொன்லீ ; அதை அந்த நேரம் பார்ப்போம். அப்போ கிளம்புவோம்.

கோபி : பொறுங்கோ லோஷன் அண்ணை சைனீஸில் டின்னர் தாறாராம் போய் ஒரு கட்டு கட்டிவிட்டு போகலாம்.

ஆதிரை : ஏனப்பா உந்தாள் டின்னர் கொடுக்குது ஏதும் விசேடமோ?

வந்தி : பாவமப்பா அந்தாள் வேர்ல்ட் கப் நேரம் பிட்ஷா வாங்கிகொடுத்தே அரைவாசி சொத்தை அழித்துவிட்டாராம்.

லோஷன் : பொறுங்கடா ஐபிஎல்லில் கொச்சி கப் தூக்கும் அப்ப பாருங்கள் நான் யார் என.

எல்லோரும் ஒட்டுமொத்தமாக : அப்போ ஐபிஎல்லில் கொச்சி தோற்கும் என்கின்றீர்கள் விக்ரமாதித்தன் வாழ்க .

சன் பிக்சர்சின் காமன் வெல்த்

கோபாலபுரத்தில் ஒரு காலைப்பொழுதில் கருணாநிதி தன் நாட்குறிப்பில் சினிமா இசை வெளியீடு, மானாடா மயிலாட சீசன் 5 இறுதிப்போட்டி, அடுத்த பாராட்டு விழா, போன்ற முக்கியமான விடயங்களை ஆராய்ந்துகொண்டிருக்கும் போது தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.

சிங் : வணக்கம் கலைஞர்ஜி

கலைஞர் : உங்களுக்கு கடிதம் எழுத நினைத்தேன் அழைத்துவிட்டீர்கள்ஜீ, இதுவல்லவோ பண்பாடு.

சிங் :(மனதில்) சப்பா இந்த மனிசன் இனிப் பண்பாடு கலாச்சாரம் என அறுக்கபோகின்றது.
கலைஞர் : அழைத்த காரணம் என்னவோ. பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதவேண்டுமா? இல்லை எனக்கு தலைநகரில் ஏதும் பாராட்டு விழாவா?

சிங் : (அவசரமாக) இல்லை இல்லை காமன்வெல்த் போட்டிகளை சீனாவைப் பார்த்து ஏதோ ஒரு உசாரில் நடத்துவோம் என தொடங்கினால் பாபர் மசூதி பிரச்சனையை விட இது பெரிய்ய பிரச்சனையாகிவிட்டது. அதுதான் உங்களிடம் ஒரு உதவி.

கலைஞர் : உங்களுக்கு இல்லாத உதவியா சொல்லுங்கள் ஜீ.

சிங் : நம்ம அரசால் காமன்வெல்த் நடத்து அளவிற்க்கு பணம் இல்லை, இருந்த பணத்தையும் ஊழல் செய்துவிட்டார்கள், பத்திரிகைகள் எல்லாம் இது காமன் வெல்த்தா இல்லை காங்கிரஸ் வெல்த் கேமா என கிண்டல் செய்கின்றது. உங்கள் பேரன் கலாநிதியை காமன் வெல்த்தை ஸ்பொன்சர் செய்யச் சொல்லுவீர்களா?

கலைஞர் : இது சின்ன விடயம் இதனை நீங்களே செய்யலாமே? இடையில் நான் ஏன்?
சிங் : இல்லை ஜீ நீங்கள் அழைத்தால் அவர்கள் இதயம் இனிக்கும்.

இதனை மன்மோகன் சிங் கூறீயவுடன் கலைஞரின் கண்கள் உடனே பனித்தன.

கலைஞர் : உங்களுக்காக இல்லாவிடிலும் என் நண்பர் இந்திராகாந்தியின் மருமகள் சோனியாஜிக்காக நான் இதனைச் செய்கின்றேன் என்றபடி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

காமன் வெல்த் கேமை தாமே நடத்தும் சந்தோஷத்தில் எந்திரன் பரபரப்புடன் சன் குழும அலுவலகம் அதகளப்பட்டத்து. கலாநிதி, தயாநிதி, ஷங்கர்,வைரமுத்து, ஷக்சேனா என பலர் எப்படி காமன் வெல்த்தை எப்படி சிறப்பாக செய்வது என தீவிர டிஸ்கசனில் இருந்தார்கள்.

தயாநிதி : எந்திரன் இசை வெளியீட்டை எப்படி மலேசியாவில் நடத்தினமோ அதேபோல் காமன் வெல்த் போட்டி தொடக்க விழாவை சந்திரனில் நடத்துவோம்.

வைரமுத்து : பூமாலையில் தொடங்கிய உங்கள் பயணம் சந்திரன் வரை செல்லும் என்பது நான் அறிவேன் ஒரு தமிழனாக எமக்கு இது பெருமை.

ஷங்கர் : ரகுமானின் தீம் பாடல் ஏற்கனவே பிரபலமானதால் அதனை நாம் நடிகர்களை வைத்து படம் எடுத்து காமன் வெல்த்தில் அடிக்கடி ஒளிபரப்பலாம்.

கலாநிதி : இல்லை ஷங்கர் இது விளையாட்டுப்போட்டி அதனாலை நடிகர்களை வைத்து எடுத்தால் மூளையுள்ளவர்கள் கேள்வி கேட்பார்கள். சோ டோணி, சச்சின், சானியா போன்றவர்களை நடிகர்களுடன் இணைத்து நடிக்க வைத்துவிடலாம்,

ஷக்சேனா : சூப்பர் ஐடியா நான் இப்பவே அனைவருக்கும் கோல் போடுகின்றேன்.
நீங்கள் கால் போடமுன்னரே நான் வந்திட்டேன் எனக் கூறியபடி நடிகர் கருணாசும் டிஸ்கசனில் நுழைகின்றார்.

கலாநிதி : ஸ்ரேடியம் முழுவதும் எந்திரன், மற்றும் சன் பிக்சர்ஸின் மெஹா சீரியல்கள் விளம்பரப் பதாதைகள் வைக்கவேண்டும்,

ஷங்கர் : ஸ்ரேடியத்தை நம்ம தோட்டாதரணி செட்டாகவே போட்டுவிடுவார் , ஸ்ரேடியம் புதிதாக கட்டுவதை விட செலவு கொஞ்சம் அதிகமாகும்.

தயாநிதி: வீரர்கள் தங்கும் விடுதிகளிலுள்ள டிவிக்களில் எல்லாம் சன் டிவி, கேடிவி, சன் மியூசிக் மட்டும் தான் தெரியவேண்டும்.

கருணாஸ் : என்னுடயை திண்டுக்கல் சாரதியை உலகத்திலுள்ள அத்தனைபேரும் அப்போ பார்ப்பார்கள்.

ஷக்சேனா : ஒவ்வொரு போட்டியின் ஆரம்பத்தின் போதும் உலகத் தொலைகாட்சிகளில் முதன் முறையாக சன் பிக்சர்ஸ் வழங்கும் 100 மீற்றர் ஓட்டம், குத்துச் சண்டை என விளம்பரப்படுத்தவேண்டும்.

ஷங்கர் :சியர் லீடர்சாக நம்ம நமீதா, அசின், திரிஷா என அனைவரையும் ஆடவிடலாம்.

கலாநிதி : உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக என்ற வரிகள் இந்த நிகழ்வில் தான் நிஜமாகும்.

கலாநிதி : மைதானத்தைச் சுற்றி உள்ள விளம்பரப் பலகைகள் அனைத்திலும் எங்கள் தயாரிப்புகளான திண்டுக்கல் சாரதி, காதலில் விழுந்தேன் போன்ற மொக்கைக்ப் படங்களின் போஸ்டர்களை வைக்கவேண்டும்.

வைரமுத்து : வாவ் இதுதான் வியாபார யுக்தி, அப்படியே அந்தப் படங்களை ஆங்கிலத்தில் டப் செய்தால் இன்னமும் விளம்பரம் பெருகும்.

ஷக்சேனா : (மனதில்) அந்த மொக்கைகளை ஓட்ட நாம் பட்ட கஸ்டம் இவருக்கு எங்கே தெரியப்போகின்றது.

தயாநிதி : அப்படியென்றால் தங்கம் எல்லாம் நமக்குத் தான்.

ஷங்கர் : எனக்குப் புரியவில்லை.

தயாநிதி : அந்தப் படங்களைப் பார்க்கும் வெளிநாட்டினர் போட்டியும் வேண்டாம் ஒரு பதக்கமும் வேண்டாம் என தங்கள் நாட்டுக்கு ஓடிவிடுவார்கள்.

அனைவரும் அவரை கொல்லுவது போல் பார்த்தார்கள்.

இந்த விடயம் இப்படியே ரெட் ஜெயின்ட், கிளவுட் நைன் போன்ற தமிழ்ப் பட நிறுவனங்களுக்குப் பரவ அவர்களும் பரபரப்பாக தமக்குத் தான் போட்டிகளை நடத்தும் உரிமை வேண்டும் என கலைஞருக்கு போன் போடுகின்றார்கள்.

கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 2

இவ்வளவு ராகத்துடன் அழகாக ஆனால் பட்டுவேட்டிக்கு பொருத்தமில்லாமல் கூலிங் கிளாசுடன் வழிபாடு செய்பவர் யார் எனப் பார்த்த்தால் அது அதிரடிப் பதிவர் புல்லட். புல்லட்டும் இவர்கள் இருவரையும் கண்ட அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு சகஜமாக கதைக்கத் தொடங்கினார். மூத்த அனுபவம் உடையவர் என்றபடியால் கங்கோனின் பிரச்சனைக்கு புல்லட்டிடம் ஐடியா கேட்டார்கள் இருவரும்.


புல்லட்டும் தன்னுடைய சில சொந்த அனுபவங்களை நண்பர்களின் கதை போல் சொல்லிவிட்டு, கங்கோனிற்க்கு வலிகாமத்தை விட வடமராட்சியில் கங்கோனிற்க்கு பொருத்தமானவர் கிடைப்பார், ஆகவே வந்தி அல்லது ஆதிரையைத் தொடர்பு கொள்ளச் சொன்னார். அத்துடன் ஆதிரையைத் தொடர்புகொண்டால் அவர் விடயத்தை வெளியில் கசிய விட்டுவிடுவார் வந்திதான் ரகசியம் காப்பதில் வல்லவர் நல்லவர் ஆகவே வந்திக்கு உடனடியாக கோல் பண்ணவும் வந்தி உதவுவார் என வந்தியை வலையில் மாட்டிய சந்தோஷத்தில் தான் உடனடியாக நெடுந்தீவுக்கு போகவேண்டும் ஆகவே உங்களைப் பின்னர் சந்திக்கின்றேன் என விடைபெற்றார்.



புல்லட் விடைபெற்ற மறுகணமே கங்கோன் வந்திக்கு கோல் எடுத்தார். வந்தியும் அப்பாவியாக வெள்ளிக்கிழமைகளில் தொண்டைமனாறு சந்நிதி கோயிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் வல்லிபுர ஆழ்வார் கோயிலும் வழிபாட்டிற்க்கு பெயர் போனவை என கங்கோன் கோயிலுக்கு வழிபடச் செல்வதாக நினைத்து தன்னுடைய கருத்தை உளறிவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை வல்லிபுர ஆழ்வாருக்கு தன்னுடன் வர பாலாவையும் கேட்டால் பாலா கொஞ்சம் பின்னடித்தார். பாலா பின்னடிப்பதைப் பார்த்த கோபி பாலாவிற்க்கு ஒரு சின்னப் பார்ட்டி கொடுத்தால் தன்னுடன் வருவார் என நினைத்து ரியோ கூல் பாருக்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கே ஒரு தூண் மறைவில் புல்லட் நீலச் சுடிதார் பெண்ணுடன் இரண்டு சர்பத்தும் இரண்டு ஸ்பெசல் ஐஸ்கிறீமுடன் உருகி வழிந்துகொண்டிருந்தார். இவர்களைக் கண்டதும் புல்லட் என்ன செய்வது எனத் தெரியாமல் ஒருமாதிரி சமாளித்துக் கொண்டு இவ‌ என்ரை பட்ச் மேட் கண்ட இடத்திலை ஐஸ்கிறீம் குடிக்க வந்தோம் சமாளிக்க கங்கோனும் பாலாவும் நண்பனுக்கு ஏன் சங்கடம் கொடுப்பான் என விலகிவிட்டார்கள். அதே நேரம் புல்லட் போல் பலபேர் ஜோடிகளாக ரியோவில் இருப்பதைப் பார்த்த கங்கோன் தான் நிற்பது யாழ்ப்பாணத்திலா? இல்லை எம்சியிலா என தன்னைத் தானே கிள்ளிப் பார்த்தார்.

ஞாயிற்றுக்கிழமை கங்கோனும் பாலாவும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வல்லிபுர ஆழ்வார் நோக்கி வல்லை வெளியூடாக பயணத்தைத் தொடங்கினார்கள். வல்லை எதிர்க் காற்றில் பாலா பறந்துவிடாமல் இருக்க கங்கோனை இறுக்க பிடித்தபடி படபடக்கும் இதயத்துடன் வல்லிபுர ஆழ்வார் கோயிலைச் சென்றடைந்தார். கோயில் வாசலில் அதே கச்சான் விற்க்கும் ஆச்சி மனசுக்குள் "குறுக்கால போவான் இங்கேயும் வந்துவிட்டான்" என புறுபுறுத்தாலும் கங்கோனைக் "கண்டதும் அப்பு ராசா உனக்கு தோதாக இங்கேயும் ஒண்டையும் காணவில்லையடி செவ்வாய்க் கிழமை தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு வாடி என்ரை குஞ்செல்லோ" என செல்லம் பொழிந்தார். ஆச்சியைக் கண்ட அதிர்ச்சியிலும் இங்கேயும் ஒன்றும் சரிவராது என்ற விரக்தியிலும் கங்கோனும் பாலாவும் நாமத்தை பட்டையாக நெற்றியில் இட்டபடி வீடு திரும்பினார்கள்.

அதே நேரம் ஃபேஸ்புக்கில் புல்லட் நெடுந்தீவில் வெங்காயம் உரித்து கதறிக் கதறி அழுத கதையும் குதிரையில் ஏறி விழுந்த கதையும் பரபரப்பாக நண்பர்கள் வட்டாரத்தில் அடிபட்டது. புல்லட் குதிரை மேல் இருந்ததைப் பார்த்து ஒருவர் குதிரை மேல் கழுதை போகின்றது என நக்கலடித்தார்.



கங்கோனும் தன்னுடைய கமேராவில் யாழ்ப்பாணத்தின் அழகையும் அழகானவர்களையும் படம் பிடித்தபடி நேற்று கொழுபுக்கிற்க்கு வெறும் கையுடன் வந்து சேர்ந்தார். வந்தவர் சும்மா இருக்காமல் தன்னுடைய அனுபவங்களை ட்விட்டரில் ட்விட்ட அவரின் பயணம் ஏன் வெற்றி அளிக்கவில்லை என ஆதிரை காரணம் கண்டுபிடித்துவிட்டார்.




கங்கோன் யாழ் செல்லும் போது விசாப் பிள்ளையாரை வணங்காமல் சென்றதுதான் காரணமாம். அதனால் விசாப் பிள்ளையாரை வணங்கிவிட்டு மீண்டும் பொங்கல் நேரத்தில் யாழ்ப்பாணம் சென்றால் நல்ல பலன் கிடைக்கும் எனவும் அத்துடன் தானும் அவருடன் வருவதாகவும் கங்கோனிற்க்கு உறுதி மொழி அளித்தார்.

அதே நேரம் கங்கோனிற்க்கு ஆப்பு சுபாங்கன் ரூபத்தில் வந்தது. சுபாங்கன் மீண்டும் தன்னுடைய தலைமுடி ஸ்டைலை மாற்றி கங்கோனுக்கு யாழ்ப்பாணத்தை சுற்றிக் காட்ட தயார் எனவும் ஏற்கனவே தான் பல தடவை யாழ் சென்றபடியால் அந்த விடயங்களில் நிறைய அனுபவம் இருக்கின்றது எனவும் கூற சுபாங்கன் வந்தால் தன்னுடைய டிமாண்ட் குறைந்துவிடும் எனப் பயந்து கங்கோன் அடுத்த சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்திருப்பதாகவும் யாழ்ப்பாணத்தில் தனக்குரிய தேவதை இல்லையென்றால் வந்தி வழியில் சிங்கைக்குப் பறக்க இருப்பதாகவும் ட்விட்டரில் செய்திகள் கசிகின்றன. எது எப்படியோ கங்கோன் 2010ல் காதல் வலையில் எப்படியும் விழவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார்.

பின்குறிப்பு : இந்த மொக்கைக்கு தங்களால் ஆன பங்களிப்பை ட்விட்டரில் தந்த சுபாங்கன், பாலவாசகன், பவன் ஆகியோருக்கு நன்றிகள். மீண்டும் ஒரு முறை சொல்கின்றேன் யாவும் கற்பனை அல்ல.


பகுதி 1 : கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1

கங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1

கிறிஸ்துமஸுக்கு இரு நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் கங்கோனின் செய்தி " நான் யாழ்ப்பாணம் போகப்போகின்றேன்" இதன் பின்னர் அவர் தனது பயண விபரங்களை இடையிடையே அனுப்பிக்கொண்டிருந்தார். கங்கோனின் யாழ்ப்பாணத்திற்கான தீடிர் விஜயம் பற்றி ட்விட்டரில் பல வதந்திகள் வந்துகொண்டிருந்தன. ஒரு பிரபலத்திற்க்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய என ஒருவர், அது இல்லை கங்கோன் ட்விட்டர், புளொக், பேஸ்புக் போன்றவற்றில் 24 மணித்தியாலத்தில் 25 மணித்தியாலங்களைச் செலவிடுவதாகவும் இதனால் அவரது தாயர் சில நாட்கள் ஓய்வுக்காக யாழ்ப்பாணம் அனுப்பியதாகவும், இவை எதுவும் இல்லை கங்கோனின் ராசிக்கு இந்த வருடம் காதல் கைகூடும் என்பதால் அவர் தனது காதலியைத் தேடி யாழ் செல்வதாகவும் பரபரப்பான செய்திகள் அவரது நண்பர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டன.



கொழும்பு கோட்டையில் பஸ்சில் ஏறி கங்கோன் அனுப்பிய ட்விட்டர் செய்தியில் இருந்து கங்கோன் பெண் பார்க்கத் தான் போகின்றார் என்ற விடயம் புலனாகியது. அந்தச் செய்தி இதுதான் " பஸ்சினுள் ஏறிவிட்டேன் பஸ் மிகவும் வரட்சியாக இருக்கின்றது எப்படித்தான் பொழுது போகப்போகின்றதோ". சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டுவிட்டதாகவும் பஸ் புறப்படும் தருவாயில் 2 அழகான பெண்கள் பஸ்சினுள் ஏறிவிட்டார்கள் எனவும் கங்கோனின் செய்தி ட்விட்டரில் வெளியானது.

சரியாக பின்னேரம் 4.15 அளவில் கோட்டையில் இருந்து கங்கோனின் பஸ் யாழ் நகர் நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அந்தப் பெண்களிடம் கங்கோன் கொஞ்சம் கதை கொடுத்தார். அவர்கள் இருவரும் வலைப்பூக்கள் வாசிப்பவர்கள் என்ற உண்மையை அறிந்த கங்கோன் தன்னை அறிமுகம் செய்ய ஒரு துடுக்கான பெண் அப்போ நீங்கள் தான் அந்த சமூக விலங்கோ என கங்கோனுக்கே அதிர்ச்சி அளித்தார். அவரைப் பழிவாங்க எண்ணிய கங்கோன் நிலவில் இருந்து பிரிண்ட் எடுத்து வந்த சில பின்நவீனத்துவ கட்டுரைகளை அவர்களீடம் வாசிக்க கொடுக்க, அந்தக் கட்டுரைகளின் தாக்கத்தில் அதனை வாசித்த அந்த இரு பெண்களைத் தவிர ஏனையவர்கள் நன்றாக நித்திரைகொண்டார்கள். பின்னர் வவுனியாவில் பஸ்சில் இருந்து அவர்கள் இறங்கும்போது கங்கோனைப் பார்த்த பார்வையில் மலையே சரிந்துவிழுந்துவிட்டது.

ஒருமாதிரி வவுனியாவில் கால் கடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த கங்கோனிற்க்கு யாழ் செல்ல அனுமதி கிடைத்துவிட்டது. பொடியன் அந்த மகிழ்ச்சியான செய்தியையும் மொபைல் வெப் மூலம் ட்விட்டரில் அனைவருக்கும் அறிவிக்க விரும்பினால் அந்த இடத்தில் நெட்வேர்க் டவுணாகி இருந்தது. தன்னுடைய மொபைல்காரர்களைத் திட்டிக்கொண்டே கங்கோன் கண்டி வீதியுனூடாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார்.

கங்கோன் ஒரு சமூக அக்கறை உடையவர் என்பதால் அந்த வீதீயூடாக பயணிக்கும் போது கண்ட காட்சிகள் அவரது நெஞ்சையே கலங்கச் செய்தது. அந்தக் காட்சிகளைத் தன்னுடைய கமேராவில் சுட்ட கங்கோன் அதனை வைத்து ஒரு பதிவு போட எண்ணிக்கொண்டார். ஆடி அசைந்து கங்கோன் சென்ற பஸ் யாழை அடைந்தது.

யாழ் மண்ணில் நீண்ட நாட்களின் பின்னர் காலை வைக்கும் போது கங்கோன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். கொழும்பு நரக மன்னிக்கவும் நகர வாகனப் புகையும், குப்பையுமாக இருந்த வீதிகளுடன் ஒப்பிடும் போது யாழ் வீதிகள் அழகாகவும் சுத்தமாகவும் இருந்தன. அந்த உணர்ச்சிப் பெருக்கில் கங்கோன் "சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?" என இசைஞானியின் குரலில் பாடத் தொடங்கிவிட்டார்.

பயண அலுப்பில் அன்றைக்கு தன்னுடைய பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கமுடியாது அடுத்த நாள் வெள்ளிக்கிழமை நல்ல நாள் ஆகவே வெள்ளியே தன்னுடைய கடமையைச் செய்வோம் என எண்ணியபடி காதல் பாடல்களை கேட்டபடி கங்கோன் நித்திரைக்குச் சென்றுவிட்டார்.

வெள்ளி அதிகாலையில் வழக்கமாக நாலு சட்டி தண்ணியில் குளிக்கும் கங்கோன் கிணற்றில் 40 வாளி தண்ணியில் 2 லக்ஸ் சோப் போட்டுக் குளித்துவிட்டு, நல்லூர் கந்தனைத் தரிசிக்கச் சென்றார். நல்லூரில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

கச்சான் விற்கின்ற ஆச்சியிடம் தன்னுடைய சாதகக் குறிப்பைக் கங்கோன் கொடுக்கும் போது பாலவாசகன் கண்டுவிட்டார். கங்கோன் கையும் குறிப்புமாக அவரிடம் பிடிபட்ட பின்னர் என்ன செய்வது எனத் தெரியாமல் பாலவாசகனிடம் உண்மையை ஒத்துக்கொண்டுவிட்டார். ஆச்சி பல இடங்களுக்கும் வியாபாரம் செய்ய செல்பவர் ஆகவே அவருக்கு பலரின் தொடர்புகள் இருக்கும் அதுதான் அவரிடம் சாதகத்தைக் கொடுத்தேன் எனக்குத் தோதான ஒரு பெண்ணைப் பார்ப்பதாகச் சொன்னார். ஆனால் என்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் பயப்படுகின்றார் போல் தெரிகின்றது என கங்கோன் உண்மையச் சொல்லிவிட்டார்.

ஒரு பதிவரின் கஸ்டம் இன்னொரு பதிவருக்குத் தான் தெரியும் என்பதுபோல் பாலாவும் இதெற்கெல்லாம் கவலைப் படாதே வா கோயிலுக்குள் சென்று முருகனிடம் ஒரு விண்ணப்பம் கொடுப்போம் என உள்ளே சென்றார்கள். உள்ளே போனால் பட்டுவேட்டியில் வெயில் இல்லாத மழை நாளில் கூலிங் கிளாசுடன் "ஏறுமயில் ஏறு விளையாடு " என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.

பின்குறிப்பு : சில பல ஆணிகள் இருப்பதால் பகுதி 2 மதியம் அல்லது மாலையில் வெளியாகும்.

முக்கியமான பின்குறிப்பு : உண்மையான சம்பவங்களைத் தழுவியதே இந்தப் பதிவு யாவும் கற்பனை அல்ல.

புதிய வேலை கிடைத்த பதிவர்கள்.

அண்மைக்காலமாக நான் உட்பட சில இலங்கைப் பதிவர்கள் அடிக்கடி பதிவு எழுதாமல் ஓய்வில் இருக்கின்றார்கள். இதற்கான காரணம் என்ன என அறிய அவர்களை ரகசியமாக கண்காணித்ததில் அனைவரும் புதிய கால்பந்தாட்ட அணி ஒன்றிற்கு பயிற்சியாளராகச் செல்ல விண்ணப்பித்திருக்கின்றார்களாம்.

கால்ப்பந்தில் எத்தனை சிக்ஸ் அடிப்பார்கள் எத்தனை விக்கெட் என கால்பந்தை அக்குவேறு ஆணி வேறாக அறிந்த கனககோபி சில நாட்களாக கூரே பார்க்கில் உடற்பயிற்சியுடன் ஓட்டப் பயிற்சியும் செய்வதால் அந்தப் பகுதியே அதிர்வதாக செய்திகள் கசிகின்றன.

அதே நேரம் இந்தப் பயிற்சியாளருக்கான சகல தகுதிகளும் தனக்குத் தான் இருக்கின்றது என சுபாங்கன் தொடை தட்டி சுகததாச ஸ்டேடியத்தில் அதிதீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். ஸ்டேடியம் தனக்குப் பக்கத்தில் இருப்பதால் தனக்குத் தான் வாய்ப்புகள் அதிகம் என சுபாங்கன் நினைத்துவிட்டார்.

பாடசாலைக் காலங்களில் பாடசாலை அணிக்காக விளையாடிய ஆதிரை ரூபியுடன் பிசியாக இருப்பதால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கமுடியாமல் வருந்தினாலும் தன் பங்குக்கு ஒரு நீலக் கலர் விண்ணப்பத்தை அனுப்பியிருப்பதாகவும் தனக்கு உதவியாளராக புல்லட்டை இணைக்கும் படி வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் புல்லட்டிற்க்கு எந்த விளையாட்டும் தெரியாது என கெளபாய் தன் பாணியில் அறிக்கை விட்டுள்ளார்.

கண்டியில் உள்ள மலைகளில் நன்கு ஓடி ஆடிப் பயிற்சி செய்த யோகா இந்த வேலைக்காக தான் எந்த நாட்டிற்கும் செல்லத் தயார் என்றும் அத்துடன் இந்தப் பயிற்சிகளுக்காக தான் பல காலம் நூடுல்ஸ் சாப்பிடவில்லை என்றும் கூறியிருப்பதுடன் இந்தப் பதவிற்காக தான் எத்தனை காலமும் இருக்கிறதற்க்கு தயார் என அறிவித்துள்ளார்.

வரும் 18ந்திகதி இளைய தளபதியின் வேட்டைக்காரன் வெளிவருவதால் தன்னால் இந்தப் பதவிற்க்கு விண்ணப்பிக்கமுடியாது என்றும் தனக்காக தன்னுடைய ரசிகர் மருதமூரானை தான் சிபாரிசு செய்வதாக சதீஷ் அறிக்கைவிட்டிருந்தாலும் இந்த அணியில் சில தமிழ்ப் பெண்கள் இருப்பது தனக்கு ஒத்துவராது என்பதால் மருதமூரான் விண்ணப்பிக்க மறுத்துவிட்டார்.

இதே நேரம் கலாச்சார ஆடைகளுடன் இவர்கள் பயிற்சி எடுக்க தயார் என்றால் தான் பயிற்சி கொடுக்கத் தயார் என சந்ரு அறிவித்திருந்தாலும் சந்ருவின் முடிவு அவரின் ரசிகர்களின் கைகளில் தான் உள்ளது.

இதே நேரம் இந்த விடயத்தைக் கேள்விப்பட்ட லோஷன் இதற்கெல்லாம் நான் தான் பொருத்தமானவர் என நினைத்தபடி கனககோபியுடன் கூரே பார்க்கில் ஓடுகின்றாராம். ஒரே நேரத்தில் இரண்டு பூகம்பம் என வெள்ளவத்தைவாசிகள் தெரிவிக்கின்றார்கள்.

இவர்களை விட இன்னும் பலர் விண்ணப்பிக்க‌ முயன்றுகொண்டிருந்தாலும் வந்திக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதால் போட்டியில் இருந்து விலகிவிட்டதாக கடுகதிச் செய்திகள் தெரிவித்தாலும் வந்தி விசாப் பிள்ளையாருக்கு விசேட பூசை செய்யப்போகின்றாராம்.

இவர்கள் எல்லாம் போட்டி போட்டு விண்ணப்பிக்கும் பதவி எதற்க்குத் தெரியுமா? கீழே உள்ள படத்தில் இருக்கும் பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளர் தேவையாம். விரும்பினால் நீங்களும் விண்ணப்பிக்கலாம்.



டிஸ்கி: அண்மைக் காலமாக எங்கள் பதிவுலகம் அமைதியாக இருப்பதால் அவர்களை உசாராக்கவே இந்தப் பதிவு. எவரையும் புண்படுத்தவல்லை.இந்தப் பதிவு நகைச்சுவைக்காகவே ஒழிய வேறில்லை. 18+ பின்னூட்டங்கள் வந்தால் நான் பொறுப்பில்லை.

பம்பலான பண்பலைப் பெயர்கள்

இன்று காலை விடியலில் லோஷன் வருங்காலத்தில் வானொலிகளின் பெயர்கள் எப்படி இருக்கும் என ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி செய்தார். அவரின் எண்ணக்கருவில் இருந்து உதித்த மொக்கைப் பதிவுதான் இது. எந்த வானொலிகளையும் கிண்டல் செய்யாமல் சும்மா பம்பலுக்கு கற்பனையைத் தட்டிவிட்டதில் வந்த பதிவு தான் இது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல பெயர்கள் ட்விட்டரில் நடந்த கும்மியில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தக் கும்மியில் கும்மிய‌ லோஷன், கனககோபி, யோகா, சுபாங்கன், ஆதிரை மற்றும் பவன் ஆகியோருக்கும் நன்றிகள்.

தவறணை FM :

குடிமகன்களுக்கு மட்டும் சொந்தமான வானொலி. "தண்ணித் தொட்டி தேடிவந்த", "ஒரு ஜீவன் தான் (சோகம்)", "ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்" போன்ற போதை தரும் பாடல்கள் மட்டும் ஒலிபரப்பாகும்.

இதுவே தமிழ்நாட்டில் ஆரம்பித்தால் "டாஸ்மார்க்" FM.

அனானி FM :

நிகழ்ச்சி செய்பவரின் பெயர் தெரியக்கூடாது. நேயர்களின் பெயர் தெரியக்கூடாது. யாரும் யாரையும் பாராட்டலாம்/திட்டலாம் ஒருவர் பல பெயரில் வந்து கருத்துச் சொல்லமுடியும். முக்கியமாக இன்னொருவரின் நம்பரில் இருந்து அல்லது ஐபியில் இருந்து கருத்துச் சொல்லி அறிவுப்புச் செய்பவர்களை குழப்பவேண்டும்.

கும்மி FM:

இங்கே கும்மி மட்டுமே அடிக்கலாம். சகலவிதமான கும்மிகளும் பேசப்படும். பாடல்கள் கூட கும்மிப் பாடல்களாக இருந்தால் சிறப்பு.

குத்து FM:

தனியே குத்துப்பாடல்கள் மட்டும் ஒலிபரப்பப்ப‌டும். நிகழ்ச்சிகளில் வித்தியாசம் காட்டுவதற்க்கு ஸ்ரீகாந்த் தேவா குத்து, விஜய் ஆண்டனி குத்து, தேவா குத்து எனப் பல வகைப்பட்ட குத்துப் பாடல்கள் ஒலிபரப்பலாம். நேயர்கள் உணர்ச்சிவசப்பட்டு குத்தினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. பாடல்களுக்கு பஞ்சமில்லை என்பதால் 24 மணி நேர வானொலியாக இயங்கலாம்.

பக்தி FM:

பக்த கோடிகளுக்கான வானொலி. சகல மதங்களின் பக்திப் பாடல்கள் மட்டும் ஒலிபரப்படும், ஆடியில் நேயர்களுக்கு இலவசமாக கூழ் ஊத்தப்படும். மார்கழியில் சிறப்பு பஜனை செய்யப்படும். ஆத்திகர்களுக்கும் மட்டுமே அனுமதி.

தேவதாஸ் FM:

காதல் தோல்வி பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பபடும். காதலில் தோல்வியுற்றவர்கள் தங்கள் கவலைகளை மறக்கச் செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் அமையவேண்டும். சிலவேளைகளில் தவறணை FM க்கும் இதற்க்கும் இடையில் ஒப்பந்தம் செய்து அங்கு ஒலிக்கும் சில பாடல்களை இங்கேயும் ஒலிக்கச் செய்யலாம்.

தவறணை FM ம் தேவதாஸ் FM ம் பெரும்பாலும் ஆண்களாம் மட்டுமே கேட்கப்படும்.

பபா FM: (பச்சிளம் பாலகர் FM)

பச்சிளம் பாலகர்களுக்கான வானொலி. 10வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான பாடல்கள் ஒலிபரப்படும். பாடசாலையில் நடந்த சண்டைகள் சச்சரவுகள் பற்றி உரையாடலாம். இடையில் குழப்படியான பபா FM அறிவிப்பாளர்களால் ஒலிபரப்பு தடங்கல் ஏற்படலாம் காரணம் அவர்கள் ஓடிவிளையாடி வயர்களை அறுத்துபோடுவார்கள்..

DM FM : (Double Meaning FM)

வயது வந்தவர்களுக்கான வானொலி. தற்போதைய காலத்தில் பெரும்பாலான பாடல்கள் இரட்டை அர்த்த வசனத்தில் வருவதால் 24 மணி நேர சேவையாக நடத்தலாம். வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன், எஸ்.ஜே. சூர்யா போன்றவர்கள் சிறப்பு அறிவிப்பாளர்கள்.

பல்டி FM :

ஹிஹிஹி பெயரிலையே யாருக்கு என்பது புரிந்திருக்கும். மருத்துவர் இராமதாஸ் சிறப்பு அறிவிப்பாளர்.

சொசெசூ FM:

சொந்த செலவில் சூனியம் . சொந்த செலவில் சூனியம் வைக்கும் என்னைப் போன்றவர்களுக்கான வானொலி. நீங்கள் சூனியம் வைத்து மாட்டிக்கொண்ட சமபவங்களை கலகலப்பாக பேசலாம்.

காதல் FM:

காதலிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதியுள்ள வானொலி. காதல் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்படும்.

சனி FM:

காதல் FM ற்க்கும் இதற்க்கு இடையில் ஒரு சின்னத் தொடர்புண்டு. காதல் FM கேட்பவர்களுக்கு கட்டாயம் இந்த FM பிடிக்கும்.

பின்நவீனத்துவ FM :

இதில் பின்நவீனத்துவ கருத்துகள் அடங்கிய பாடல்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும். இடையிடையே சாரு, ஞாநி, போன்றவர்களின் கருத்துக்கள் இடம் பெறும்.

கடுகதி FM :

மானாட மயிலாட சஞ்சீவ் போல் யாருக்கும் விளங்காமல் மிக வேகமாக பேசவேண்டும், பாடல்கள் கூட வேகமாக ரீமிக்ஸ் செய்து ஒலிபரப்பபடும்.

Zoo FM :

இந்த FM ல் மிருகங்கள் சம்பந்தப்பட்ட பாடல்கள் மட்டும் ஒலிபரப்பாகும். உதாரணமாக சிங்கம் ஒன்று புறப்பட்டதே, புலி வருது. அறிவிப்பு செய்பவர்களும் தங்கள் பெயர்களுக்கு முன்னால் ஒரு மிருகத்தின் அல்லது பறவையின் பெயரைச் சேர்க்க வேண்டும். காகா கிருஷ்ணன், கவரிமான் ரகுமான், எதிர்வீரசிங்கம்,

உங்களுக்குத் தெரிந்த ஏனைய நையாண்டியான பெயர்களைப் பின்னூட்டி விடுங்கள்.

இலங்கையில் மட்டுமே இவை சாத்தியம் - நகைச்சுவை


தலைவரின் வாகனம் மட்டும் நிறுத்தலாம்


இரண்டு வாகனத்தின் இலக்கங்களும் ஒன்று


இருபக்கமும் வாகனம் நிறுத்துவது தடை


தேனிலவிற்க்கு உதிரியாக இன்னொருவரா


அம்மா தங்கம் என்றால் அப்பா பித்தளையா?


மிகவும் தேவையான வாசகம்


புல்லட்டும் இப்படித்தான்


தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி


இன்னொரு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி


விளக்கம் தேவையா

பின்குறிப்பு : இந்தப் படங்களை மின்னஞ்சல் மூலமாக எனக்கு அனுப்பிய நண்பருக்கு நன்றிகள்.

மெஹா ஹிட் ஆதவனும் நானும் நண்பர்களும்

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் செந்தூரனிடம் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்திருந்தது மாலை 5.30 மணிக்கு இந்துக் கல்லூரி மாண்வர்கள் ஒழுங்கு செய்த ஆதவன் விசேட காட்சிக்கு ரிக்கெட் இருக்கின்றது, கரனையும் பாலாவையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் நான் ஏனைய நண்பர்களுடன் வருகின்றேன்.

நான் உடனடியாக பாலாவையும் கரனையும் தொடர்புகொள்ள இருவரும் வாறன் என்றார்கள். சில நிமிடத்தில் பாலாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு "மச்சான் நான் இன்னொரு செட்டுடன் நைட் லிபேர்ட்டியில் நடக்கும் காட்சிப்போகப்போகின்றேன் உங்களுடன் போகப்போகின்றேன் எனச் சொல்ல என் நண்பர்கள் போனில் திட்டயதில் என் காதினூடாக இரத்தம் வடிகின்றது" என அழுதபடி சொல்ல நாங்களும் எல்லாம் நன்மைக்கே என அவரை அவர்களுடன் போகவிட்டுவிட்டோம். அவர் வந்திருந்தால் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும் என்பது பின்னர் தெரிந்தது.

ஏற்கனவே எங்கள் குழாம் வெள்ளிக்கிழமை வெள்ளவத்தை காலி வீதியை அளக்கமுடிவு செய்திருந்தோம் நீண்ட நாள் அந்தப் பக்கம் போகவில்லை என்பதாலும் அத்துடன் தீபாவளிக்கு முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதாலும் காலி வீதியை ரணகளப் படுத்துவது என தீர்மானித்தோம். பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு ஆதவனுக்கு செல்வது முடிவாகிவிட்டது.



சுமார் 4.30 மணியளவில் வெள்ளவத்தைச் சந்தியில் எனக்காக காத்துக்கொண்டிருந்த கரனைச் சந்தித்தேன். இருவரும் செநதூரனின் வரவிற்காக காத்திருக்க சரியாக 5 மணியளவில் செந்தூரனின் வாகனம் இன்னும் 3 நண்பர்களுடன் வந்து சேர்ந்தது. உள்ளே நிமல், ராஜ், ஹரி என ஏனைய நண்பர்கள் மொத்தமாக 6 பேரும் கொன்கோர்ட்டை நோக்கிப் படை எடுத்தோம்.

வாசலில் ஒழுங்கு செய்த இந்துக் கல்லூரி மாணவர்கள் எம்மை அடையாளம் கண்டு உடனடியாக உள்ளே செல்ல அனுமதித்துவிட்டார்கள். ஒரு மாதிரி வாகனத்தை தகுந்த இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே செல்லும் போதுதான் செந்தூரன் தன்னிடம் இருப்பது பொக்ஸ் ஆசனங்களுக்கு உரிய அனுமதிச் சீட்டு என்று, அடப்பாவி ஏன் இந்தக் கொலை வெறி எனக்கேட்டால். தானும் மனைவியும் ஏனைய இரு நண்பர்கள் ஜோடிகளாக வரத் தானாம் திட்டம் போட்டார்கள் ஆனால் செந்தூரனின் மனைவியில் புத்திசாலித் தனத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஏனென்றால் அவருக்குத் தெரியும் முதல் நாள் முதல் காட்சியில் விசிலடிச்சான் குஞ்சுகள் செய்யும் அட்டகாசங்கள். இதனால் பெரும்பாலான பெண்கள் முதல் நாள் காட்சிகளைத் தவிர்ப்பார்கள். இதனால் இதுவரை ஜோடிகளின் அரவணைப்பில் இருந்த பொக்ஸ்கள் ஆண்களை மட்டும் அனுமதித்தது.

உள்ளே சென்றால் தியேட்டர் நிரம்பி வழிந்தது. இளம் மாணவர்களை விட பச்சிளம் பாலக மாணவர்கள் அதிகமாக காண்ப்பட்டார்கள். அதில் சிலர் மட்டும் பெற்றோர்களுடன் வந்திருந்தார்கள். சரி இருவர் இருவராக 3 பொக்ஸ்குள் அமருவம் என நினைக்க அங்கே ரசிகர்களை ஒழுங்குபடுத்திக்கொண்ட மாணவர் ஒருவர் " அண்ணே குறை நினைக்கவேண்டாம் கூட்டம் அதிகம் என்பதால் ஒரு பொக்ஸ்க்குள் 3 பேர் அமருங்கள்" என்றான். அடப்பாவியளா? 2 பேர் இருக்கும் இடத்தில் 3 பேரா என மனதில் அவர்களைத் திட்டிக்கொண்டு நான், செந்தூரான், கரன் மூவர் ஒரு பொக்ஸினுள்ளும், நிமல், ஹரி, ராஜ் மூவரும் அடுத்த பொக்ஸினுள்ளும் அமர்ந்துவிட்டோம். .

அந்த சீட் சீரிபி பஸ் சீட்டை விட வசதி குறைவாகவே இருந்தது. எனக்கும் கரனுக்கும் பொக்ஸ் இதுதான் முதன் முறை( நம்புங்கள்) செந்தூரான் ஏற்கனவே வந்திருந்தபடியால் அந்த சீட்டின் அருமை பெருமைகளை எமக்குச் சொன்னார். என்ன செய்வது எங்கள் விதி இப்படி என நினைத்துக் கொண்டு மூன்று ஆண்களும் ஒரு மாதிரி அஜெஸ்ட் செய்தபடி இருந்து படம் பார்க்கத் தொடங்கினோம்.

ஒரு சில மாணவிகள் அரங்கினுள் நுழையும் போது மாணவர்கள் கூக்குரல் இட்டார்கள். சிலர் ஆண் பெயர்களைச் சொல்லி அழைத்தார்கள். பின்னர் நயன் திரையில் வர பிரபுதேவா எனக் கத்தும்போதுதான் அந்த மாணவிகளின் ஆண் பெயர்கள் அவை என்ற உண்மை எனக்கருகில் இருந்த சிறுவன் கரனுக்கு புரிந்தது.

இத்தனை அலப்பறைகளுக்கு மத்தியில் படம் ஆரம்பமாகியது. சூர்யாவின் சிறுவயதுப் படம் காட்டியதில் இருந்து அவரின் பெயர்வரும் வரைக்கும் விசிலில் மழை பொழிந்தார்கள். சூரியாவிற்க்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அப்போதுதான் புரிந்தது.

பின்னர் நயனின் பெயர் வரவும் விசில் மழை. சூரியாவின் முதல் காட்சிக்கும் விசிலடித்த ரசிகர்கள் அதன் பின்னர் ஒரு மாதிரி படத்துன் ஐக்கியமாகியபடியால் இடையில் விசில் அடிக்கவில்லை. பின்னர் நயனின் முதல் காட்சிக்கு சூரியாவின் வருகையை விட விசில் அதிகம். எனக்கு இருபுறமும் அமர்ந்திருந்த நயன் ரசிகர்கள் இருவரும் அவரின் காலில் இருந்து முகம் வரை கமெரா செல்லும் வரை விசில் அடித்தபடியே இருந்தார்கள். ஆனால் நயனின் முகத்தைப் பார்த்தவுடன் இருவரும் என்ன கொடுமை இது எப்படி எண்ணெயாக முகம் இருக்கின்றதே என நயனுக்காக கவலைப்பட்டார்கள்.

இப்படியே விசில் கைத‌ட்டுகள், சிரிப்புகள் எனப் படம் போய்க்கொண்டிருந்தது. இடையில் என்னுடைய இன்னொரு நண்பர் சஞ்சீவ் இரண்டுதரம் போன் பண்ணினார், அவர் சூர்யாவின் தீவிர ரசிகர் அடுத்த காட்சிக்கு தன் பாடசாலை நண்பர்களுடன் டிக்கெட் எடுத்து வைத்திருந்தவர் அடிக்கடி படம் எப்படி என என்னைக் கேட்டுக்கொண்டிருந்தார். இடைவேளையும் வந்தது.

இடைவேளையின் போது நானும் கரனும் போய் 6 பேருக்கும் குளிர்பானங்கள் வேண்டிவந்தால் எமக்கு அடுத்த பொக்ஸில் இருந்த நண்பர்கள் நாம் குளிர்பானம் குடிப்பதில்லை சூடான பானம் தான் அருந்துவோம் என ஆர்ப்பாட்டம் செய்தார்கள். திரும்ப உடைத்த குளிர்பானத்தைக் கொடுக்கமுடியாது என்பதாலும் எங்கள் எஞ்சின்கள் எத்தனை லீற்றரையும் தாங்கும் என்பதாலும் நாம் இரண்டு இரண்டு குடிப்பது என முடிவு செய்தாயிற்று, பின்னர் செந்தூரன் மிக்சரும் வாங்கிவந்தார். இடைவேளை முடிந்து படம் மீண்டும் தொடங்கியபின்னர் இடையில் என் நண்பி ஒருவர் போன் பண்ணினார், அவர் என்னை எங்கே இருக்கின்றீர்கள் எனக் கேட்க நான் படம் பார்க்கின்றேன் எனச் சொன்னேன். அதற்க்கு அவர் பக்கத்தில் இருக்கும் நிமலுக்கு ஒரு ஹாய் சொல்லிவிடுங்கள் என்றார். நான் அவரை நிமல் என்னுடன் இருப்பது எப்படித் தெரியும் எனக் கேட்க நிமல் பேஸ்புக்கில் ஆதவன் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என ஸ்டேடஸ் மெசேஜ் அடித்திருக்கின்றார் என்ற உண்மையைச் சொன்னார். எப்படியெல்லாம் பேஸ்புக்கை உபயோகிக்கின்றார்கள்.

கடைசியில் கே,எஸ்,ஆர் கிளைமாக்ஸில் சொதப்பியதால் நாம் மனம் நொந்து தியேட்டரை விட்டு வெளியே சென்றால். அடுத்த காட்சிக்கு மக்கள் கூட்டம் வழிந்தது, நாம் சென்ற வாகனத்தின் முன்னால் இன்னொரு வாகனம் நின்றது. அந்த வாகனம் எடுக்கும் வரை நாம் காத்திருக்கவேண்டும் என்பதால் அந்த கூட்டத்தில் தெரிந்த முகம் யாராவது நிற்கின்றார்களா? எனப் பார்த்தால் வலைப் பதிவர் ஒருவர் நின்றார். அவருக்கு யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற எங்கள் கொள்கைக்காக படம் சூப்பர் கலக்கல் என நல்ல கருத்துகளைத் தெரிவித்தோம்.

இது நேரம் லிபேர்ட்டியில் இருந்து பாலா தொலைபேசியில் படம் எப்படி எனக் கேட்டான் அவனுக்கும் எங்கள் கொள்கைப் படி நல்ல கருத்துக்களைச் சொன்னோம். படம் முடிந்தபின்னர் சாமத்தில் அவன் எங்களை தொலைபேசியில் திட்டியது இன்னும் காதினுள் நிற்கின்றது.

இதே நேரம் என் நண்பன் சஞ்சீவ் இருவராக வந்துகொண்டிருந்தான், அவனும் அவன் நண்பர்களும் பக்கத்தில் இருந்த தாகசாந்தி நிலையத்தில் தாகம் தீர்த்துவிட்டு வந்திருக்கின்றார்கள் எனபது தெரிந்தது. அவனுக்கும் படம் நல்லது எனச் சொல்லிவிட்டோம்.

ஒருமாதிரி வாகனத்தை எடுத்துக் கொண்டு அவரவர் வீடுகளிற்க்குத் திரும்பிவிட்டோம். வீட்டிற்க்கு வந்து கிரிக்கெட் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு ஆதவன் விமர்சனம் எழுதிக்கொண்டிருக்க, நண்பன் சஞ்சீவ் தொலைபேசியில் பிரபல பெண்பதிவர்கள் இருவர்கள் தியேட்டரில் இருக்கின்றார்கள். அத்துடன் இன்னும் இரண்டு ஆண் பதிவர்களும்(தனித் தனியாக) இருக்கின்றார்கள் என்ற தகவலைத் தந்தான்.

11.15 அளவில் என்னுடய விமர்சனத்தை வலையேற்றிவிட்டு மூஞ்சிப்புத்தகத்தில் தோட்டம் செய்துகொண்டிருக்க நண்பன் லோஷன் தானும் படம் பார்த்து விமர்சனம் எழுதியிருப்பதாகவும் அதனைப் பார்க்கவும் என தகவல் அனுப்பினார். அவரது விமர்சனத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது அடுத்த காட்சி முடிந்து சஞ்சீவ் எனக்கு தொலைபேசியில் ஒரே கிழியல் அவன் சொன்னதில் ஹைலைட்டான விடயம் " 500 ரூபா ரிக்கெட் வாங்கியதற்க்குப் பதில் இன்னும் 3 போத்தல் வாங்கியிருக்கலாம்" என்றான்.

அதே நேரத்தில் இன்னொரு பதிவரான புருஷ் "இரண்டு பிரபல பெண் பதிவர்கள் படம் பார்த்துவிட்டு பேயறைந்தமாதிரி இருக்கின்றார்கள். ஆதவன் படம் பெரிதாக நல்லாயில்லை ரிஸ்க் எடுக்கவேண்டாம்" என எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தார். பின்னர் அவருக்கு நான் முதல் காட்சியில் ரிஸ்க் எடுத்த கதையைச் சொல்ல மனிதன் சிரித்த சிரிப்பு கொழும்பு முழுக்க கேட்டிருக்கும்.

எது எப்படியோ ஆதவன் படம் பார்த்த அனுபவம் என்றைக்கும் மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிட்டது. ஏற்கனவே படையப்பா, குஷி இரண்டு படங்களும் இதைப்போல தான் ஆனால் வித்தியாசமான அனுபவங்கள் கொடுத்த படங்கள்.

டிஸ்கி : மெஹா ஹிட் ஆதவன் எனத் தலைப்பிட்டிருக்க காரணம் என் ஆதவன் பதிவிற்க்கு இதுவரை 3000 மேற்பட்ட ஹிட்ஸ் வந்திருக்கிறது. அத்துடன் கடந்த சனிக்கிழமை மட்டும் 2500 ஹிட்ஸ். என் பதிவுகளில் ஆதவன் மெஹா ஹிட் தான்.

பதிவர்களின் சனிப் பெயர்ச்சி பலன்கள் - பகுதி 2

முன்னைய ராசிகள்- பகுதி 1

துலாம் :

நினைத்ததைச் சாதிக்கும் குணமுள்ள துலா ராசிக்காரர்களே ஏழரைச் சனி தற்போது உங்களுக்கு தொடங்குகின்றது, கவனமாக இருக்கவும்.

பதிவர்களின் பலன் :

மருதமூரான் : புதிய முயற்சிகள் சர்ச்சரவைக் கொடுத்தாலும் உங்கள் மனோபலத்தாலும் பேஸ்புக் நண்பர்களாலும் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். உங்கள் பாடசாலை மாணவர்களை அதிகம் நம்பவேண்டாம். தலைமுடியின் ஸ்டைலை மாத்தினால் காலிவீதியில் பலரைக் கவரலாம். கோட்டடிப் பிள்ளையாரை வணங்கவும்.

ஜாக்கி சேகர் : திரையிலகில் புதிய எதிர்பார்புகள் நிகழும். அதிகமாக 18+ ஆங்கிலப் படங்களைப் பார்த்து மனதைக் கெடுக்கவேண்டாம். நீங்களும் கோடம்பாக்கம் அம்மனை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

சினேகிதி : உண்மைகளை எழுதிப் பலரிடம் நீங்கள் யார் என அறியப்படுவீர்கள். பெண்களுக்காக அடிக்கடி குரல்கொடுக்கவேண்டிவரும். ஒரே ஊரைச் சேர்ந்தவர்களால் அடிக்கடி கலாய்க்கப்பட்டாலும் நல்ல நட்பு நிலவும். குமிழடிப் பிள்ளையாரை அடிக்கடி நினைக்கவும் நல்ல பலன்களைத் தருவார்.

விருச்சிகம் :

மனித நேயமுள்ள விருச்சிக ராசி அன்பர்களே இதுவரை 10 வீட்டில் நின்ற சனிபகவான் இனி லாப ஸ்தானமாகிய 11 ஆம் வீட்டில் வந்து அமர்ந்து உங்களை ஆளப்போகின்றார்.

பதிவர்களின் பலன் :

கிருத்திகன் (கீத்) : மெய் சொல்லுகின்றேன் என பொய் சொன்ன நீங்கள் இனி மெய்யே சொல்வீர்கள், அரசியலில் நுழையக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. பாடசாலை சக மாணவர்களிடம் கவனமாக இருக்கவும். மூத்த விநாயகரை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும்.

பனையூரான் : தோற்றத்தில் அமைதியாக இருக்கும் நீங்கள், புதிய முயற்சிகள் சிலவற்றினால் நல்ல பலன் கிடைக்கும். ட்விட்டரில் நேரத்தை அதிகம் செலவிடவேண்டாம். தெகிவளை விஷ்ணுகோவிலுக்கு ஒவ்வொரு ஞாயிறும் தவறாது செல்லவும்.

சுபானு : அடிக்கடி ஊஞ்சலாடி விழுந்தாலும், நீங்கள் செய்யும் தொழிலால் நல்ல பெயர் கிடைக்கும். காதல் வெற்றியில் முடியும், உங்கள் காதல் கவிதைகளை காதலிக்கு காட்டினால் பாரதூரமான பின்விளைவுகள் ஏற்படும். 10 பதிவர்களுக்கு இலவசமாக சேவை செய்தால் பரிகாரம் கிடைக்கும்.

தனுசு :

நல்லதைச் செய்யும் மனமுடைய தனுசு ராசி நண்பர்களே, 9 ஆம் வீட்டில் இருந்துகொண்டு உங்கள் திறமைகளை மழுங்கடித்த சனி பகவான் இனி 10 வீட்டில் இருந்துகொண்டு நல்ல பலன்களைத் தருவார்.

பதிவர்களின் பலன் :

சந்ரு : அனானிகளினால் பட்ட துன்பங்கள் விலகும், மொழியினை நேசிக்கும் உங்கள் குணத்தால் பல நண்பர்கள் கிட்டுவார்கள். தொலைகாட்சி நண்பர்களுக்கு கடுப்பை ஏற்படுத்துவீர்கள், புதிய முயற்சிகள் வெற்றிதரும்.

நிமல் : தொலைந்துபோன தொலைபேசிக் காதலி மீண்டும் கிடைப்பார். உங்கள் தொழில்நுடப் அறிவால் நண்பர்களைக் கவர்ந்தாலும் காதல் கதைகளினால் அவர்கள் காண்டாவார்கள்.

சிகே.மயூரன் : விளையாட்டுத் திறமையுடைய நீங்கள், சில நாட்களாக வெறுப்பாக இருந்தாலும் மீண்டும் வெற்றிக்கனியைப் பறிப்பீர்கள். தலைப்பாகை கட்டியவர்களை வம்புக்கு இழுக்கவேண்டாம், வேண்டாத விபரீதம் ஏற்பட்டு உலகப் புகழ் அடையலாம். கெத்தாராமா சிவனை வழிபடுங்கள்.

மகரம் :

எந்தச் செயலையும் திறமையாகச் செய்யும் மகர ராசி அன்பர்களே இதுவரை காலமும் அட்டமத்தில் உங்களை ஆட்டிப்படைத்த சனிபகவான், 9 ஆம் வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களைத் தருவார்.

பதிவர்களின் பலன் :

குசும்பன் : மற்றவர்களைச் சந்தோச‌ப்படுத்தி இன்பம் காணும் உங்களுக்கு, தளபதிகள், தலைகள் மூலம் மீண்டும் மீண்டும் சந்தோசப்படுத்தும் வாய்ப்புகள் கூடுகின்றன. திரையுலகினரின் கண்டனத்திற்க்கு உள்ளானாலும் கோடம்பாக்கம் அம்மன் அருளால் சகலதும் நல்லபடியாகவே நடக்கும்.

கனக கோபி : நக்கல், நையாண்டிக்கு பெயர் போன நீங்கள் உங்கள் எழுத்துகளில் இடையிடையே ஆட்சி செய்பவர்களை சீண்டுவதால் தொல்லைகள் நேரலாம். மற்றவர்களின் மனைவிமாரைப் பற்றிய ஆராய்ச்சிகள் பிரச்சனை கொடுத்தாலும் நீங்கள் சிறுவன் என்பதால் அவ்வளவு கண்டுகொள்ளமாட்டார்கள். பம்பலப்பிட்டி மாணிக்கபிள்ளையாரை அடிக்கடி வணங்குங்கள், கோவிலில் உங்கள் எதிர்காலம் தென்படலாம்.

வந்தி : கலாய்ப்பதையும் கலாய்க்கப்படுவதையும் அதிகம் விரும்பும் நீங்கள் அடிக்கடி சொந்தச் செலவில் சூனியம் வைத்து மாட்டுப்படுவீர்கள். நண்பர்களே காதல் விவகாரங்களில் எதிரியாகும் சூழ்நிலை ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி தரலாம். மகிழ்ச்சியான செய்திகள் விரைவில் வரக்கூடும். பேஸ்புக் கிருஷ்ணனும் ட்விட்டர் முருகனும் உங்களுக்கு சகல செளபாக்கியங்களையும் இரட்டிப்பாகத் தருவார்கள்

கும்பம் :

எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செயல்படும் கும்ப ராசி நண்பர்களே இதுவரை 7 ஆம் வீட்டில் இருந்துவந்த சனிபகவான் இனி அட்டமத்துச் சனியாக உங்களைத் தொல்லை பண்ணப்போகின்றார்.

பதிவர்களின் பலன் :

கரவைக் குரல் : பல்திறமையுடைய நீங்கள் பலராலும் பாராட்டப்படுவீர்கள், கூடிய விரைவில் பழைய நண்பர்களைச் சந்திக்கலாம். ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கும்மியைக் குறைக்கவும். சந்நிதி முருகன் உங்களுக்கு சகல செளபாக்கியங்களையும் தருவார்.

உண்மைத் தமிழன் : உங்கள் குணத்தாலும் எழுத்தாலும் பதிவுகளின் நீளத்தாலும் பலரிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்கள் திரை விமர்சனங்களினால் திரையுலகத்தினரின் எதிர்ப்பைப் பெறுவீர்கள். கோடம்பாக்கம் அம்மனை ஒரு தடவை தரிசியுங்கள் முடியவில்லை என்றால் ஸ்ரேயாவை ஒரு தடவை நேரில் தரிசியுங்கள்.

சாயினி : உங்கள் எழுத்தாற்றலுக்கு கிடைத்துவந்த மரியாதை அண்மையில் நீங்கள் பெற்ற பட்டம் மூலம் மேலும் கிடைக்கும். நண்பர்கள் தொல்லை தந்தாலும் பரீட்சைகளில் கொடி நாட்டுவீர்கள். சாமத்தில் பின்னூட்டங்கள் இடுவதைத் தவிர்க்கவும். கோட்டடி அம்மன் உங்களுக்கும் அருள் புரிவார்.

மீனம் :

உழைப்பின் மதிப்புத் தெரிந்த மீன ராசி நண்பர்களே இதுவரையும் 6 ஆவது வீட்டில் இருந்த சனீஸ்வரர் இனி உங்கள் 7 ஆம் வீட்டில் நுழைந்து அருட்காடட்சம் கொடுப்பார்.

நையாண்டி நைனா : நக்கல், நையாண்டியில் பெயர் பெற்ற நீங்கள் இன்னும் பெயர் அடைவீர்கள். சீரியஸ் பதிவுகள் எழுதி பெயரைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம்.

அருண்மொழிவர்மன் : காணாமல் போன பழைய நண்பர்களை பதிவுலகின் மூலம் கண்டுபிடித்திருப்பீர்கள். அவர்களுடன் தொடர்புகளை அளவாக வைத்துக்கொள்ளவும், சிலவேளை பதிவுகளின் உங்கள் காலை வாரி டவுசரையும் அவிழ்த்துவிடுவார்கள். ரொரண்டோ முருகனை வழிபடவும்.

கதியால் : நகர வாழ்க்கையில் பழைய கிடுகுவேலியத் தொலைக்கவேண்டாம், இலங்கையில் இருந்து சிங்கை வரும் சிங்கங்களின் சந்திப்பைத் தவிர்க்கவும். சிங்கை முருகனுக்கு அடுத்த தைப்பூசத்திற்க்கு பால்காவடி எடுக்கவும்.

முக்கிய குறிப்பு : நண்பர்கள் இதனை ஜாலியாக எடுப்பார்கள் என்ற எண்ணத்தில் எழுதிய பலன்கள் தான் இவை. அத்துடன் இந்த ராசிகள் அவர்களின் நிஜமான ராசிகள் அல்ல. ஒவ்வொருவரைப் பற்றிய ரகசியங்களை அறியத்தந்த அவர்களின் நண்பர்களுக்கு நன்றிகள்.

பதிவர்களின் சனிப் பெயர்ச்சி பலன்கள் - பகுதி 1

எதிரிவரும் 26ந்திகதி சிங்க ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் சனீஸ்வரன் நுழைகின்றார். இந்தப் பெயர்ச்சியினால் நம்ம பதிவர்கள் சிலருக்கு என்ன பலாபலன்கள் ஏற்படும் என குசும்பன் ஸ்டைல் பதிவு.

மேடம் :

என்றைக்கும் எதற்க்கும் துணிந்து செல்லும் மேட ராசி அன்பர்களே, இதுவரை 5 ஆம் வீட்டில் இருந்த‌ சனிபகவான் 6ஆம் வீட்டில் நுழைகின்றார்.

பதிவர்களின் பலன்:

கேபிள் சங்கர் : திரையுலகினரின் எதிர்ப்பைச் சம்பாதித்தாலும், கோடம்பாக்கம் அம்மன் அருளால் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல விலகும்.

டொன்லீ : இணையத்தில் பெண் தேடும் விபரீத முயற்சிகளை நிறுத்தவேண்டும். டிவிட்டர் முருகன் அருளால் நல்ல வரன் கிடைக்கும்.

ஆதிரை : இரு நாட்கள் முன்னரே காகம் எச்சம் மூலம் உங்கள் சனி அகன்றுவிட்டது, வெள்ளவத்தை வீதிகளில் தனித்து திரிவதை தவிர்க்கவும். விசாப் பிள்ளையாரை வணங்கிவந்தால் சகல செளபாக்கியமும் கிட்டும்.

இடபம் :

கற்பனைக் கனவுகளில் மிதக்கும் இடப ராசி அன்பர்களே 4 ஆம் வீட்டில் அமர்ந்து உங்களை படாத பாடு படுத்திய சனிபகவான் இனி 5 ஆம் வீட்டில் அமர்ந்து நற்பலன்களைக் கொடுப்பார்.

பதிவர்களின் பலன்:

கானா பிரபா : வெளிநாட்டு யோகம் உண்டு, உங்கள் பாட்டுப் பாடும் திறன் மேலும் வளரும், நேரடி ஒளிபரப்புகள் மூலம் நண்பர்களின் எதிர்ப்பைப் பெற்றாலும் ட்விட்டர் முருகன் அருளால் அவை விலகிவிடும்.

பால்குடி : விருந்துபசாரம் செய்வதில் பேருவகை கொள்ளும் நீங்கள், பழைய நண்பர்கள் சிலரின் கூட்டினால் பீர்குடி என பேரெடுக்க நேரலாம், புட்டளை பிள்ளையாரின் அருளினால் பிரச்சனைகள் நீங்கிவிடும்.

யோகா : நீங்கள் எழுதும் கவிதைகளினால் அரசியல் சிக்கல்களில் சிக்கும் ஆபத்திருந்தாலும் இரம்பொடை ஆஞ்சநேயர் அருளால் நல்லவையே நடக்கும்.

மிதுனம் :

மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றிப் பேசும் மிதுன ராசி நண்பர்களே இதுவரை 3ஆம் வீட்டில் அமர்ந்து தைரியத்தை கொடுத்த சனிபகவான் இனி 4ஆம் வீட்டில் அமர்ந்து கொஞ்சம் அல்லல்படுத்துவார்.

பதிவர்களின் பலன்:

புல்லட் : சிறுவர்களினால் தொல்லை, மரண பயம் ஏற்படும், சிரிப்பாக பேசினாலும் சீரியசானவர் நீங்கள் என பலர் உணர்வார்கள். இரவில் பஸ் பயணத்தைத் தவிர்க்கவும். பேஸ்புக் விநாயகரின் அருள் இருப்பதால் இளம் பெண்களின் நட்பு கிடைக்கும்.

கெளபாய் மது : பஸ் பயணங்களில் பெண்களால் தொல்லை ஏற்படும். கூகுள் குழுமங்களில் அரட்டை அடிப்பதை குறைக்கவும், அந்நியன் கெட்டப்பில் இருந்து அம்பி கெட்டப்புக்கு மாறினால் காதல் கைகூடும்.

டயானா: சில நாட்கள் காணாமல் போயிருந்த உங்களுக்கு, இனி சந்தோசமான நாட்கள் கெமிஸ்ரி கைகொடுக்கும், பேஸ்புக்கில் நண்பர்களின் எண்ணிக்கையால் கின்னஸ் சாதனை புரியும் வாய்ப்பிருக்கிறது.

கடகம் :

அடக்கத்திற்க்குப் பெயர் போன கடகராசி நண்பர்களே இதுவரை பாதச் சனியாக உங்களை அலைக்கழித்த சனிபகவான் இனி 3 ஆம் வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களைக் கொடுப்பார்.

பதிவர்களின் பலன்:

ஆயில்யன் : புதிய நண்பர்கள் ட்விட்டர் மூலமும் , பிந்தொடர்பவர்கள் மூலமும் கிடைக்கலாம். எதிர்பார்த்திருக்கும் விடயங்கள் விரைவில் நடக்கும்.

மு.மயூரன் : இளைஞர் என்ற நினைப்பு நீங்கி திருமண யோகம் கிட்டிவிட்டது, விசைப்பலகைகளால் தொல்லை ஏற்பட்டாலும், லினக்ஸ் சிவன் அருளால் அனைத்தும் விலகுவிடும்.

மாயா : இதுவரை உங்களை விட்டுப் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். புதுப் பொலிவுடன் உங்கள் ஆக்கங்களை மீண்டும் தொடர்வீர்கள். வெம்பிளி முருகனை வழிபட்டு வந்தால் சகல யோகமும் கிட்டும்.

சிங்கம் :

எதற்கும் அஞ்சாத சிங்க ராசி அன்பர்களே இதுவரை உங்களை ஜென்மச் சனியாக ஆட்டிப் படைத்த சனிபகவான் 2 ஆம் வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களைக் கொடுப்பார்.

பதிவர்களின் பலன்:

சதீஸ் : அனானிகளின் அடிவாங்கிய நீங்கள் இனி அனைவரிடமும் ஒற்றுமையாக இருப்பீர்கள். நவா, நியூ ஒலிம்பியா தியேட்டர்கள் பக்கம் அடிக்கடி செல்லவேண்டாம். விரைவில் அரசியல் வெற்றிச் செய்தி வந்துசேரும்.

தூயா : இதுவரை காலமும் பதிவுகளில் ஏற்பட்ட தேக்கம் நீங்கி புதிய புதிய சமையல் குறிப்புகளுடன் நண்பர்களுக்கு மீண்டும் விசப் பரீட்சை வைப்பீர்கள். பதிவுலகின் பங்காளிகள் உங்களைக் கலாய்ப்பார்கள், அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

சயந்தன் : யூடுயூப்பில் உங்கள் நடனங்களை வெளியிட்டு விசப் பரீட்சைகளில் ஈடுபட வேண்டாம். வலைகளில் உங்கள் படங்கள் வெளியாவதால் சினிமா வாய்ப்புகள் வரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. ட்விட்டர் கும்மிகளைக் குறைத்தால் சிறந்த எதிர்காலம் இருக்கின்றது.


கன்னி :
பெண்களின் மனதைக் கவர்ந்த கன்னி ராசி நண்பர்களே இதுவரை 12 ஆம்வீட்டில் இருந்தபடி உங்களை ஆட்டிப் படைத்த சனி பகவான் இனி ஜென்மச் சனியாக நல்ல பலன்களைத் தருவார்.

பதிவர்களின் பலன்:

லோஷன் : இளம் பெண்களின் கதாநாயகனாக இருந்துவந்த நீங்கள் உங்கள் உடல் அமைப்பின் மூலம் அந்த இடத்தில் இருந்து இறங்கிவிடுவீர்கள். உடற்பயிற்சி செய்யவும், புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். கிரிக்கெட் முடிவுகள் கடுப்பைக் கொடுக்கும், கெத்தாராமா சிவனை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

லக்கி லுக் : மடிப்பாக்கத்தின் முடிசூடான மன்னனாகிய நீங்கள் காண்டு கஜேந்திரன் போன்ற நட்புகளினால் கெட்ட பெயர் பெறக்கூடும். பரங்கிமலை ஜோதியைத் தவிர்க்கவும், தண்ணியில் உங்களுக்கு கண்டம். தளபதி அருளினால் அரசியல் எதிர்காலம் உண்டு.

சேரன் : வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கவும், அது முடியாவிட்டால் கேலாங்க் பக்கம் செல்லவேண்டாம். உடற்பயிற்சி செய்துவரவும். பெயர் குழப்பம் ஏற்பட்டாலும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

டிஸ்கி: இது சும்மா நகைச்சுவைக்காக எழுதிய பலனே ஒழிய உண்மையான பலன்கள் இல்லை. திரு.சுப்பையா வாத்தியாரும், நண்பர்களும் பொறுத்தருள்க.


உங்கள் பெயர் இல்லை எனச் சந்தோசப் படவேண்டாம், அடுத்த 6 ராசிக்காரர்களினதும் பலன் சில மணித்தியாலத்தில்.