Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

இணைய அடிமைகள்

"தம்பி இந்தா டீ", அம்மா

"இஞ்சை கொண்டுவந்து தாங்கோ" என்றான் ஜீடோக்கில் நண்பனுடன் நமீதா பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கும் மகன்.

"பிள்ளை ஆரோ பெல் அடிக்கினும் ஒருக்கால் ஆரெண்டு பார்" அம்மா

"சும்மா போணை இப்பதான் பேஸ்புக்கிலை அஜிதா வந்திருக்கிறாள்" என்றாள் பேஸ்புக்கில் தொடர்ந்து 3 மணிநேரம் அரட்டை அடிக்கும் மகள்.

இவைகள் அன்றாடம் நம் வீடுகளில் நடக்கும் காட்சிகள். பெற்றோர்கள் ஒருபுறம் மெஹா சீரியல்கள், கிரிக்கெட் போட்டிகள், ரியாலிட்டி ஷோக்கள் என தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க பிள்ளைகளோ பேஸ் புக், மெசேஞ்சர்கள், கேம்ஸ், ஸ்கைப், புளொக் என இணையத்தில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பார்கள்



90களின் இறுதிகளில் சட் எனப்படும் அரட்டைக் கச்சேரி இணையங்களின் வரவுகள் அந்தக் கால இளசுகள் முதல் பெரிசுகள் வரை அனைவரையும் ஆக்கிரமித்திருந்தது. ஒரு அரட்டை இணையத்தில் நண்பர்களுடனோ, இல்லை உறவினர்களுடனோ தகவல்களைப் பரிமாறிக் கொள்ளகூடியதாக இருந்தது.

பின்னர் யாஹூ, ஹாட்மெயில், ஜீமெயில் என அனைத்து மின்னஞ்சல் சேவைகளின் மெசேஞ்சர்கள் வருகையால் சாட்டில் தனிமை பேணப்பட்டது. மற்றும் வெப் காம் போன்றவற்றின் அசுர வளர்ச்சி, நண்பர்கள், உறவினர்களிடம் இருந்த நெருக்கத்தை இன்னும் கூட்டியது. நேரம் காலம் தெரியாமல் அனைவரும் இணையத்தில் குடும்ப விபரங்கள் தொடக்கம் ப்ரியாமணி ப்ரிதிவிராஜ் காதல் வரை அலசி ஆராய்ந்தார்கள்.

மெசேஞ்சர்களினால் நன்மைகள் பல இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமுதம் நஞ்சு என்பது போல் நண்பர்களுடன் தொடர் அரட்டைகள் கூட்டு அரட்டைகள் எந்த நேரமும் இணையத்துடனான தொடர்பை நீட்டித்தது.

மெசேஞ்சர்களில் ஒருபுறம் அரட்டைக் கச்சேரி நடத்தினால் இன்னொரு புறம் பேஸ்புக், ஆர்குட், Hi5 என பொழுதுபோக்கு இணையத்தளங்கள் மக்களின் நேரத்தை விழுங்குகின்றது. இவைகளினால் காணாமல் இன்னொரு நாட்டில் இருக்கும் நண்பர்களின் உறவினர்களின் தொடர்புகள் கிடைத்த்தாலும், இவற்றில் உள்ள அரட்டை குழுமங்கள் ஊடான சில விடயங்கள் போதை தரும் விடயமாக மாறிவிட்டது. சிலருக்கு பேஸ்புக்கில் தோட்டம்(Farm ville) செய்வது ஒரு கலை, இன்னொரு சாராருக்கு மாஃபியா வோர்ஸ்(Mafia Wars) போன்ற விளையாட்டுகளில் நேரம் கழித்தல் என பலரும் கணிணித் திரையின் முன்னர் தங்கள் நேரத்தைப் போக்குகின்றார்கள்.



இந்தப் பொழுது போக்கு இணையங்கள் இணையத்தில் மட்டுமல்லாமல் அலைபேசிகளிலும் புகுந்து பலரின் அலைபேசி பில்லை ஏத்துகிறது. என் நண்பர் ஒருவர் அடிக்கடி அலைபேசியினூடு ஸ்டேடஸ் மெசேஜ் மாத்துவான். பின்னர் அதற்க்கு யாராவது கொமெண்ட் அடித்திருக்கின்றார்களா எனப் பார்க்க மீண்டும் இணைப்பு கொடுப்பான்.

அடுத்ததாக நம்ம பதிவர்கள் ப‌ற்றி சில நாட்களுக்கு முன்னர் யாழினி போட்டிருந்த ஒரு பதிவு. ஒரு பதிவரிடம் (Blogger) காணப்படும் 12 விசேட / பிரத்தியேக‌ அம்சங்கள்.

அந்த பதிவில் சில விடயங்கள் கொஞ்சம் மிகைப் படுத்தல் என்றாலும் சில அப்பட்டமான உண்மைகள்.

பதிவர்கள் கூட அதிகமாக இணையத்தில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கின்றார்கள். பதிவு எழுதுவதுடன் இவர்களது இணைய பாவனை நின்றுவிடுவதில்லை. பின்னர் வந்த பின்னூட்டங்களை வெளியிடுதல். அதற்குப் பதில் போடுதல், மீண்டும் அடுத்த பதிவு என ஒரு சங்கிலித் தொடராக இவர்களது வாழ்க்கை கழிகின்றது.

பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் இடுதல் என்பது மிகவும் கடினமான வேலை. சிலவேளை ஒரு பின்னூட்டமே ஒரு பதிவின் அளவிற்க்கு பெருத்துவிடும்.

அண்மையில் இது பற்றி நண்பர் ஒருவருடன் உரையாடியபோது நேரடி உரையாடல்களை விட இப்போ பலர் இணையத்தின் மூலமான உரையாடல்களையே விரும்புகின்றார்கள் என்றார். அதற்க்கு அவர் கூறிய காரணம் இணையத்தில் இருந்தபடி ஒரே நேரத்தில் பலருடன் உரையாடலாம், அத்துடன் இன்னொரு வேலைபார்க்கலாம், பாடல் கேட்கலாம் என பல விடயங்களை ஒரே நேரத்தில் செய்யலாம் என்றார்.

இவற்றை விட Forum என அழைக்கப்படும் களங்கள். இதில் பலதும் பத்தும் விவாதித்தாலும் ஒரு கட்டத்தின் மேல் பெரும்பாலும் கும்மிகளாகவே முடியும். பல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட களங்களிலும் பெரும்பாலானவர்கள் தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றார்கள்.

அத்துடன் கணிணியுடன் வேலை செய்பவர்கள் எப்படியும் தங்கள் வேலை நேரத்தை கணிணித் திரையுடன் தான் செலவளிக்கவேண்டியிருக்கிறது. சில நேரத்தில் இது ஒருவித‌ வெறுப்பைக் கொடுக்கும். இதற்கான வேறுபல தீர்வுகள் இருக்கின்றன.

இணையத்தின் பாவனையில் தீமையான பக்கங்களை மட்டுமே நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கின்றேன். எத்தனையோ நன்மைகள் இருந்தாலும் என்னைப்போல் தினமும் கிட்டத்தட்ட 16 மணி நேரம் இணையத்தில் இருப்பவர்கள் இணைய அடிமைகளே.

Flash News :விகடன் ஹேக் பண்ணப்பட்டதா?

விகடன் குழுமத்தின் விகடன்.கொம் என்ற இணையத்தளத்தைக் காணவில்லை. அதன் முகவரியில் இன்னொரு பக்கம் வருகின்றது. என்ன நடந்தது? ஹேக் செய்யப்பட்டுவிட்டதா? இல்லை எதாவது அப்டேட் செய்கிறார்களா?


விகடன் முகவரி டைப் செய்யவரும் இணைத்தளத்தின் முதல்ப்பக்கம் இதுதான்