Showing posts with label பிடித்தவை. Show all posts
Showing posts with label பிடித்தவை. Show all posts

அம்மா, அஷாருதீன், ஐஸ்வர்யா, சுஜாதா, மழை இன்னும் பல‌

உறவுகள்

எல்லோரைப் போலவும் அம்மா, அப்பா, அக்கா, சித்திகள், சித்தப்பாக்கள், தங்கைகள், தம்பிகள், மாமா, மாமி, என் பாட்டை விரும்பிக் கேட்கும் செல்ல மச்சாள் என அனைத்து உறவுகளும் எனக்காக எதையும் செய்யும் நண்பர்கள், என்னைத் திருத்தும் நண்பர்கள், நான் சொல்வதைக் கேட்கும் நண்பர்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.



இடங்கள்

நான் தத்தித் தவழ்ந்து விளையாடிய மண், எங்கள் பாடசாலை, மைதானம், 11சி வகுப்பறை, வடமராட்சி மண் ஒழுங்கை முதல் பெரிய வீதிகள் வரை அனைத்து சுற்றிய சுழட்டிய ரோட்டுகள், வெள்ளவத்தை பீச், காலி வீதிகள், காலி உனவட்டுன அழகிய கடற்கரை, கொச்சிக்கடை சிவன் கோவில்.



உணவு

அம்மா சமைக்கும் பருப்புக் கறி, ரசம், உருளைக்கிழங்குப் பொரியல், நெல்லியடி சுபாஷ் பேக்கரிப் பாண், பூட் வேவ்ஸ் பன்னீர் பட்டர் மசாலா, சைனீஸ் ட்ராகன் நூடுல்ஸ், நளபாகம் பால‌ப்பம், பருத்தித்துறை வடை, ஆடை இல்லாத பால்,



ரசனை

அழகான அறிவான பெண்கள் (கண்டுபிடிப்பது மிகமிக கஸ்டம்)
பட்டுச்சாறியில் இளம் பெண்கள்(தேவதையின் தேவதைகள்),
பஸ்சில் பயணிக்கும்போது காதில் இளையராஜா, கையில் சுஜாதா
மழையில் நனையப் பிடிக்கும்
ரயில் பயணங்களில் யன்னலூடாக தென்படும் இயற்கை



விளையாட்டு

கிரிக்கெட் விளையாடவும் பார்க்கவும் பிடிக்கும், நீச்சலடிக்கப் பிடிக்கும்
அஷாருதீன் wrist style batting,
க‌பில்தேவ் வேகம்,
அரவிந்த டி சில்வா ஸ்டைல்,
லாராவின் அதிரடி
முரளியின் சுழல்
ஷ்ரபோவா அழகு
வீனஸ் அதிரடி
பெடரர் புன்னகை



சினிமா

கமலின் படங்கள், இளையராஜா பாடல்கள், தேர்ந்தெடுக்கப் பட்ட ரகுமான் பாடல்கள், ஷ‌ங்கர், நகைச்சுவைப் படங்கள், த்ரில் ஆங்கிலப் படங்கள், எப்போதும் ஐஸ்வர்யா ராய்.



படிப்பது
செங்கை ஆழியான், சுஜாதாவின் அனைத்துப் படைப்புகளும்
ராஜேஸ்குமார் க்ரைம் கதைகள்
உலாத்தல் கட்டுரைகள்
உணர்ச்சி, காதல் கவிதைகள்

இன்னும் நிறைய பிடித்தவை இருக்கின்றன. இந்த தொடருக்கு யாரையும் அழைக்கமாட்டேன் காரணம் ஏற்கனவே சில தொடர்களுக்கு அழைத்தவர்கள் இன்னும் எழுதவில்லை. ஆகவே யாராவது விரும்பினால் தொடருங்கள்.

விளையாட்டுக்கு அழைத்த சுபானுவிற்க்கு நன்றிகள்.