வலையுலக‌ விருதுகளும் சில எண்ணங்களும்

அண்மைக் காலமாக வலையுலகத்தில் விருதுகள் வழங்கும் வைபவம் அமோகமாக நடந்துகொண்டிருக்கின்றது. நல்லதொரு பாராட்டக்கூடிய முயற்சி, அதே நேரம் இந்த விருதுகளின் போக்கு கொஞ்சம் கவலைக்கிடமாகவே இருக்கின்றது.

விருது என்பது முத்தம் போன்றது (தகவல் உதவி ரா.பார்த்திபன்) கொடுப்பவரையும் வாங்குபவரையும் மகிழ்விக்கும். அதேபோல் தான் நான் விருது வாங்கும் போது இருந்த சந்தோசம் என்னிடம் இருந்து விருது பெற்றவகளுக்கு கொடுக்கும் போது இருந்தது.2007 களில் தேன்கூடு, தமிழ்மணம் போன்றவை வலைப் பதிவர்களை ஊக்குவித்து சில விருதுகள் கொடுத்தன. அவை எத்தகைய விருதுகள் என்பன மறந்துபோய்விட்டது, மூத்த பதிவர்கள் தெரிந்தால் சொல்லவும். அந்த விருதுகளை பெறுவது மிகவும் கஸ்டம்.

இன்று பட்டர் பிளை, சுவாரஸ்ய விருது, ஊக்குவிப்பு விருது எனப் பல விருதுகள் பெரும்பாலும் அனைத்துப் பதிவர்களையும் சென்றுவிடுகின்றன. நிச்சயமாக விருது பெற்றவர்கள் சந்தோசமடைவார்கள். அதே நேரம் விருது பெறாத இலை மறை காயாக இருக்கும் பதிவர்களின் நிலை என்ன?

காரணம் இந்த விருதுகள் பெரும்பாலும் தெரிந்த நட்புகளிற்கிடையே சிலர் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒருவரை நேரடியாகத் தெரியாவிட்டாலும் அவரின் பதிவுகள் மூலமு பின்னூட்டங்கள் மூலமும் நண்பர்களாகிவிடுகிறார்கள். இதனால் இந்த விருதுகள் நாங்கள் சிறிய வயதில் தீபாவளிக்கு வாழ்த்து அட்டை அனுப்புவது போல் வந்துவிட்டது.

அதாவது தீபாவளிக்கு நானும் நண்பனும் வாழ்த்து அட்டை விற்க்கும் கடைக்கு போறது, அவன் கேட்பான் உனக்கு சுவாமிப் படமா? நடிகர் படமா? நானே எனக்குரிய வாழ்த்து அட்டையாக பெரும்பாலும் கமலின் படம் தெரிவு செய்வேன், அவன் தனக்குரிய ரஜனி படத்தைத் தெரிவு செய்வான், பின்னர் இருவரும் அதில் எங்கள் வாழ்த்துகளை "இரும்புச் சங்கிலி அறுந்தாலும் எங்கள் அன்புச் சங்கிலி அறுவதில்லை" போன்ற பல தத்துவங்களுடன் எழுதி போஸ்ட் செய்வோம்.எனக்குத் தெரியும், எனக்கு என்ன வாழ்த்து அட்டை வரும் என்று அவனுக்குத் தெரியும் அவனுக்கு என்ன அட்டை வரும் என்று. இதே போல் தான் இன்றைய விருதுகள் மாறிவிட்டன. எனக்கு ஒருவர் சுவாரஸ்ய விருதைக் கொடுத்தால் நான் அவருக்கு பட்டர் பிளை விருதைக் கொடுக்கவேண்டும்.

இதே நேரம் இப்படியான விருதுகளை வளார்ந்து வரும் பதிவர்களை ஊக்கப்படுத்த கொடுக்கலாம், தப்பில்லை காரணம் இந்த விருதுகளினால் அவர்களின் எழுத்துக்கள் மேலும் வளரும். அத்துடன் அவர்களைத் தட்டிக்கொடுப்பதுபோலும் தெரியும். எனக்கு இந்த விருது கிடைத்து விட்டது நான் நன்றாக எழுதவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வரும்.

என் வலையுலக வாழ்க்கையில் கூட தமிழ்மணத்தினதும் சில நண்பர்களினதும் ஊக்கப்படுத்தலினால் முன்னைய காலங்களைப் போல் அல்லாது ஏதோ இப்போ கொஞ்சம் சிறப்பாக எழுதுகின்றேன். என்னை எப்படி அவர்கள் ஊக்கப்படுத்தினார்களோ, அதேபோல் நாமும் (நான் கொஞ்சம் மூத்த பதிவர் எனச் சொல்கின்றார்கள்)இளையவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் ஒருவருக்கு பலர் கொடுக்கும் விருதுகளால் அவர் சலிப்படைகின்றார். பல நண்பர்கள் எனக்கு ஒரு விருது கிடைத்தால் உடனே செய்வது என்னைப் பாராட்டுவது அல்ல அந்த விருதைத் தமக்கு திரும்ப அளிக்கவேண்டாம் என மிரட்டுவது.ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நான் அந்த விருதை அவர்களுக்கும் ஏனைய சில நண்பர்களுக்கும் கொடுக்க அதில் என்னிடம் விருது வாங்கியவர் நான் முதலில் கொடுத்த நண்பருக்கு தானும் கொடுக்க, திரும்ப திரும்ப விருதுகள் சுப்பற்றை கொல்லைக்கைதான் நிற்கபோகின்றது.

அத்துடன் எங்கடை நாட்டிலை பல்கலைக் கழகம் சாரா அமைப்புகள் கொடுக்கும் டொக்டர் பட்டங்கள், கலாசூரிகள் போல் வலையுலக விருதுகளும் மலினப்பட்டுவிடும்.

இதனை மாற்றவேண்டும் என்றால் விருதுகளை ஒரு அமைப்புச் சார்ந்து( தமிழ்மணம், தமிழிஸ், கிடுகு, யாழ்தேவி, உலவு போன்ற திரட்டிகள்)செய்யவேண்டும். அப்போதுதான் அந்த விருதுகளுக்கு பெறுமதி கிடைக்கும். இந்த திரட்டிகள் நட்சத்திர வாரம், கிரீடம் கொடுப்பது இன்னொருவகையான ஊக்குவிப்புகள்.

ஆகவே இந்த விருதுகளை ஆக்கபூர்வமான வழிகளில் செய்து இளையவர்களை ஊக்குவித்தும் மூத்தவர்களின் திறன் சார் எழுத்துகளுக்கு கொடுத்தும் பெருமை சேர்க்கவேண்டியது அனைவரின் கடமை.

11 கருத்துக் கூறியவர்கள்:

ஆயில்யன் சொல்வது:

நீங்க சொல்றதும் யோசிக்க வேண்டிய விசயம்தான் பட் விருது அப்படிங்கற சமாச்சாரமே முதல்ல தொடர் பதிவு அப்படிங்கற ஒரு கட்டத்தை தாண்டிய ஒன்று! தொடர் பதிவு விசயங்கள் பொதுவாகவே மிகுந்த சுவாரஸ்யம் அளிப்பவையாகவே இருந்து வந்திருக்கின்றன - வருகின்றன - இந்த விருது டைப் விசயங்களை விட்டுவிட்டு சுவாரஸ்யமிக்க நல்ல பல தொடர் பதிவுகள் வருவது ஊக்குவிக்கப்படவேண்டிய ஒன்று - சரிதானே...?! :)

வந்தியத்தேவன் சொல்வது:

//ஆயில்யன் said...

தொடர் பதிவு விசயங்கள் பொதுவாகவே மிகுந்த சுவாரஸ்யம் அளிப்பவையாகவே இருந்து வந்திருக்கின்றன - வருகின்றன - இந்த விருது டைப் விசயங்களை விட்டுவிட்டு சுவாரஸ்யமிக்க நல்ல பல தொடர் பதிவுகள் வருவது ஊக்குவிக்கப்படவேண்டிய ஒன்று - சரிதானே...?! :)//

ஆமாம் ஆயில்ஸ் தொடர் பதிவு மிகவும் சுவாரஸ்யமானது, அதிலும் சினிமாத் தொடர், பிடித்த 32 போன்றன பலரைக் கவர்ந்தவை.

Unknown சொல்வது:

///விருது என்பது முத்தம் போன்றது (தகவல் உதவி ரா.பார்த்திபன்)///

இதைச் சொன்ன வந்தி அண்ணா இதைச் சொல்லாமல் விட்டிட்டார்..

இரும்புச் சங்கிலி அறுந்தாலும் எங்கள் அன்புச் சங்கிலி அறுவதில்லை
தகவல் உதவி (சமீபத்தில் அதைத் திரும்ப உபயோகித்து ஞாபகப்படுத்தியதால்)- கு. கிருத்திகன் என்று ஒரு வசனம் சேர்த்திருக்கவேண்டும்... சேர்க்காததுக்கு கடும் கண்டனங்கள்.. lol

Selvaraj சொல்வது:

இதே கருத்துடைய ஒரு பதிவை
பதிவர்களுக்கு பல்கலைகழகம் என்று நினைப்போ என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தேன். அதில் என்னை திட்டி வந்த பின்னூட்டங்களே நிறைய. அதில் நிறைய பிரசுரிக்க தகுதியில்லாதவைகளாகவே இருந்தது. வேண்டுமென்றால் பாருங்கள், இன்னும் சில வருடங்களில் இவை நினைவில் வைத்துக்கொள்ள முடியாதபடி, புது புது பெயருடன் வரும். தன மதிப்பை இழந்து.

Admin சொல்வது:

//Selvaraj said...
இதே கருத்துடைய ஒரு பதிவை
பதிவர்களுக்கு பல்கலைகழகம் என்று நினைப்போ என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தேன். அதில் என்னை திட்டி வந்த பின்னூட்டங்களே நிறைய. அதில் நிறைய பிரசுரிக்க தகுதியில்லாதவைகளாகவே இருந்தது. வேண்டுமென்றால் பாருங்கள், இன்னும் சில வருடங்களில் இவை நினைவில் வைத்துக்கொள்ள முடியாதபடி, புது புது பெயருடன் வரும். தன மதிப்பை இழந்து.//விருதுகள் என்பது பதிவர்களை ஊக்கப்படுத்தும் ஒன்று அது வேறு திசையில் செல்வதுதான் பிரச்சனை. செல்வராஜ் அவர்களின் இடுகைக்கு பதிலளிக்குமுகமாக நானும் ஒரு இடுகை இட்டு இருந்தேன்.


பதிவர்கள் தங்களுக்குள்ளே விருது வழங்குவது சரியா? எனும் தலைப்பிலே.

http://shanthru.blogspot.com/2009/07/blog-post_25.html


வந்தி உங்கள் இடுகைக்கான என் கருத்துக்கள் அதிகமாக இருப்பதனால் சற்று நேரத்தில் பின்னூட்டமிடுகின்றேன்.

புல்லட் சொல்வது:

இப்பிடியெல்லாம் தப்பித்து ஓட முடியாது..

அன்புடையீர்,

பதிவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அள்ளி வழங்கும் பதிவம்சாகினி சாமுண்டிகா சக்களத்தீஸ்வரி அம்மன் திருவருள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. அவரிடம்ரூபா 50 செலுத்தி கழிசடைப்பதிவர் என்ற விருதை பெற்றது உங்களுக்கு தெரிந்ததே.. அந்த விருதின் மகமையால் எனக்கு கடந்த இடுகைக்கு 15 ஓட்டுகள் கிடைத்தது .. இதே போல என் நண்பருக்கு 15 பின்னூட்டம் கிடைத்தது.. ஆகவே நீங்களும் இந்த விருதை ரூபா 50 மணியார்டர் மூலம் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு பயனடையுமாறு வேண்டுகிறேன்.. அதன் பின்பு இந்த விருதை இன்னும் 10 பெருக்கு அனுப்பவம் ..
அப்படிச்செய்யாத பட்சத்தில் உங்க ளுக்கு விபரீத விளைவுகள் ஏற்படலாம்...நன்றி..


பதிவம்சாகினி சாமுண்டிகா சக்களத்தீஸ்வரியே சரணம்..

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

நீங்கள் கூறுவதுடன் உடன்படுகிறேன், ஆனால் நமக்கு விருது கொடுக்கும் நபர்கள் அதை நாம் தொடராக வழங்காவிடின் அவர்கள் மனம் வருத்தப்படும் என தான் நினைக்கிறேன்.

ஆனால் இந்த விருதுகள் இப்போது பதிவுலகில் சற்று அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். இந்த விருதுகள் கொடுக்க கூடிய நிலையில் நான் இல்லை. நாங்களெல்லாம் இப்போ தான் பதிவுலகில் நடை பழகுகிறோம்.

இன்னும் சற்று காலத்துக்கு பதிவுலக விருதுகளை விட்டு விலகி இருப்போம். விருதுகள் என யோசிக்கும் போது காத்திரமான பதிவுகள் இல்லாமல் போய்விட வாய்ப்புகள் உண்டு.

நானும் ஒரே ஒருமுறை இந்து விருதுகள் வழங்கி இருக்கிறேன் பின்னர் அந்த வழங்கலை நிறுத்தி விடடேன். எனக்கு கிடைத்த முதல் விருது எனக்குள் ஒரு கிளர்ச்சி ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான் ஆனால் போக போக இதை மற்றவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதை யோசிக்கும் போது கஷ்டப்பட்டேன். இதன் காரணமாகவே விருது வழங்கும் விடயங்களில் ஒதுங்கியிருக்கிறேன்.

Mathuvathanan Mounasamy / cowboymathu சொல்வது:

சில பதிவர்கள் விருது என்றவுடன், எருது வருது கணக்காக பாய்ந்தோடுவதாகத் தெரிகிறது.

பதிவுலகி்ல் விருது மேனியா அதிகரித்துச் செல்லும் அதேவேளை விருது ஃபோபியாவும் மிக அதிகரித்துச் செல்கிறது.

விருது எனும் சொல்லைக் கேட்டால்
சதுரம் எல்லாம் நடுங்கித் தீர்க்கிறது எனக்கு.

வர்மா சொல்வது:

தெரியாதவர்களூக்குக்கொடுத்தால்தான் விருதுக்குபெறுமதி
அன்புடன்
வர்மா

வர்மா சொல்வது:

தெரியாதவர்களூக்குக்கொடுத்தால்தான் விருதுக்குபெறுமதி
அன்புடன்
வர்மா

குப்பன்.யாஹூ சொல்வது:

why r u so much serious on blog and blog awards, I wonder.