தினக்குரலில் வந்தியத்தேவனின் உளறல்கள்.
இன்றைய ஞாயிறு தினக்குரலில் என்னுடைய வலையைப் பற்றி நண்பர் க.தே.தாசன் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது.
இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது. சென்ற வாரங்களில் டொக்டர்.முருகானந்தன், பிரபல எழுத்தாளர் உடுவை, இலங்கை வலைப் பதிவாளர்களில் மிகவும் பிரபலம் பெற்ற மாயா ஆகியோரின் வலைப்பதிவுகளுக்கு அடுத்ததாக என்னுடைய வலைப்பதிவும் வெளிவந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.
தினக்குரலுக்கும் தாசனுக்கும் மிக்க நன்றிகள்.
சும்மா இணையத்தில் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருந்த என்னை ஏதாவது எழுது எனத் தூண்டிய இனிய தமிழக உறவுகள் பூக்குட்டி, லக்கிலுக் ஆகியோருடன் புலம் பெயர்தேசத்தில் வாழும் இன்னொரு உறவான லீனா அண்ணாவுக்கும், கானாப் பிரபாவுக்கும் நன்றிகள்.
இலங்கையிலிருக்கும் அனைத்து வலைப்பதிவாளர்களை ஒன்றினைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தம்பி மாயாவுக்கும்(எனக்குப் வலைஉலக தொழில் நுட்பங்களை சொல்லிக்கொடுத்தவர்) நன்றிகள்.
அத்துடன் ஊக்கம் கொடுத்த வர்மா அவர்களுக்கும் நன்றிகள்.
மேலும் இணையத்தில் எனக்கு பின்னூட்டம் இட்டத்துடன் தனிப்பட்ட முறையில் ஊக்கமும் பாராட்டுக்களும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பலப்பல.
ஆர்ஜென்ரீனாவுக்கு எதிரான விதி மீறல் விசாரணையை ஆரம்பித்தது பீபா
-
* உலகக் கிண்ண உதைப்ந்தாட்டத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் விதிமீறல்கள்
தொடர்பாக அர்ஜென்டினா உதைபந்தாட்டச் சங்கத்தின் மீதும்,, ஆர்ஜென்ரீனா
வீரர்கள...
23 hours ago
