குசேலனான மும்மூர்த்திகள்

நடந்துமுடிந்த இலங்கை இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட்போட்டிகளில் இலங்கை அணி இந்திய அணி 2 - 1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் மும்மூர்த்திகளான சச்சின் டெண்டுல்கர், ராகுல் ராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த தவறிவிட்டார்கள்.

சச்சின் டெண்டுல்கருக்கு மேற்கிந்திய அணியின் நட்சத்திர பிரைன் லாராவின் டெஸ்ட் போட்டிகளில் எடுத்த 11953 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் சச்சினால் அந்த சாதனையை இலங்கை மண்ணில் எட்டமுடியவில்லை. இலங்கைக்கு தொடர் ஆட வரும்பொழுது சச்சினுக்கு வெறும் 172 ஓட்டங்களே தேவைப்பட்டன. ஒரு இனிங்ஸ்சில் சச்சின் இந்த சாதனை நிலை நாட்டுவார் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் மொத்தமாக 6 இனிங்ஸ்சிலும் சச்சின் எடுத்த ஓட்டங்கள் 95 மட்டுமே.



தொடர் ஆரம்பமாகும் முன்னரே இலங்கை அணித் தலைவர் ஜெயவர்த்தனா இஅல்ங்கை மண்ணில் சச்சின் இந்த சாதனை நிலை நாட்ட அனுமதிக்கமாட்டோம் என சவால் விட்டிருந்தார் அதிலும் ஜெயித்துக்காட்டிவிட்டார்.

எஸ் எஸ் சியில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் சச்சின் முரளியின் சுழலில் அகப்பட்டு முறையே 2, 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். காலியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா சேவக்கின் இரட்டைச் சதத்தாலும் ஹர்பஜனின் சுழலாலும் வெற்றிபெற்றது. சச்சின் சமிந்த வாஸின் வேகத்தில் வீழ்ந்தார். எடுத்த ஓட்டங்கள் முறையே 5, 31(இத்தொடரில் சச்சின் எடுத்த அதிகூடிய ஓட்டம்). பி.சரவணமுத்து மைதானத்தில் நடந்த மூன்றாவதும் இறுதியுமான ஆட்டத்தில் முதல் இனிங்க்ஸ்சில் அறிமுக வீரர் பிரசாத்தின் வேகத்தில் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதே நேரம் களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சச்சின் காயமடைந்ததால் அடுத்த இனிங்கிஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது, ஆனாலும் சச்சின் அடுத்த இனிங்க்ஸில் விளையாடினார் அஜந்த மெண்டிஸின் சுழலுக்கு தன் விக்கெட்டை தாரைவார்த்தார், எடுத்த ஓட்டங்கள் 14.

மொத்தத்தில் இத்தொடரில் சச்சின் 6 இனிங்ஸ்சில் 95 ஓட்டங்களுடன் 15.83 என்ற சராசரியுடன் அதிகூடிய ஓட்டமாக 31 மட்டும் எடுத்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

பல இலங்கை அணி ரசிகர்கள் கூட சச்சினின் இந்த சாதனையை நேரில் பார்க்க ஆவல் கொண்டிருந்தார்கள்.



அடுத்தவர் வங்கப்புலி சவுரவ் கங்குலி சில காலம் அணியிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார். பின்னர் சில தொடர்களில் பிரகாசித்ததன் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இத்தொடரில் இவராலும் பிரகாசிக்கமுடியாமல் போனது 6 இனிங்ஸ்சிலும் மொத்தமாக 96 ஓட்டங்கள் எடுத்தார். சராசரி 16.00 அதிகூடிய ஓட்டம் 35. இவராலும் ஒரு அரைச்சதத்தையேனும் எடுக்கமுடியவில்லை. இவர் முரளிதரனின் சுழலில் 5 தடவைகள் ஆட்டமிழந்த‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.



இந்திய‌ப் பெரும்சுவ‌ர் என‌ அழைக்க‌ப்ப‌டும் ராகுல் ராவிட்டும் இத்தொட‌ரில் பிர‌காசிக்க‌த்த‌வ‌றிவிட்டார். மூன்றாவ‌து போட்டி இர‌ண்டாம் இனிங்ஸ்சில் ம‌ட்டும் ஒரு அரைச் ச‌த‌ம‌டித்தார். 4 த‌ட‌வைக‌ள் அஜ‌ந்த‌ மெண்டிசின் சுழலில் ஆட்ட‌மிழந்த‌ ராவிட் மெண்டிஸின் முத‌ல் டெஸ்ட் விக்கெட் என்ப‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து. 6 இனிங்ஸ்சிலும் மொத்த‌மாக‌ 148 ஓட்ட‌ங்க‌ளை ம‌ட்டுமே பெற்றார்(ச‌ச்சின், க‌ங்குலி இருவ‌ருட‌ன் ஒப்பிடும்போது ப‌ர‌வாயில்லை). ச‌ராச‌ரி 24.66 அதிகூடிய‌ஓட்ட‌ம் 68.

இவர்கள் மூவரும் மிகவும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஆனால் இவர்களால் ஏன் இலங்கையில் சாதிக்கமுடியவில்லை. டெஸ்ட்போட்டிகளில் மிகவும் நிதானமாக விளையாடும் லக்ஸ்மன் 48.53 என்ற சராசரியுடன் 2 அரைச்சதங்களுடன் 215 ஓட்டங்களைப் பெற்றார். அதிரடி வீரர் சேவக் இத்தொடரில் அதிகூடிய ஓட்டங்களை எடுத்த வீரர், இவருக்கு அடுத்து கெளதம் கம்பீரும் மூன்றாவதாக இலங்கை அணித்தலைவர் ஜெவர்த்தனாவும் இருக்கிறார்கள்.
சேவாக் 344, க‌ம்பீர் 310 , ஜெவர்த்த‌னா 279.

மும்மூர்த்திக‌ள் த‌ம்மை மீள்ப‌ரிசீல‌னை செய்ய‌வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌த்தில் இருக்கிறார்க‌ள். எத்த‌னைகால‌ம் ப‌ழைய‌ சாத‌னைக‌ளை வைத்துக்கொண்டே அணியில் இட‌ம் பிடிப்ப‌து. பின்னால் யுவராஜ்,ப‌த்ரினாத், சுரேஸ் ரெய்னா, விராட் கோலி என‌ ஒரு இள‌ம் ப‌டையே தெரிவுக்காக‌ ஏங்கி நிற்கின்ற‌து. தெரிவாள‌ர்க‌ளும் இவ‌ர்க‌ள் விட‌ய‌த்தில் அசிர‌த்தையாக‌( ஒருநாள் போட்டிக‌ளில் நிறுத்திய‌து) டெஸ்ட் போட்டிக‌ளில் விளையாடுவ‌தும் ச‌ந்தேக‌ம்.

ச‌ச்சினின் சாத‌னை ப‌ற்றி இந்திய‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ருட‌ன் பேசிய‌போது சொன்னார் அவுஸ்திரேலிய‌ அணியின் இந்திய‌ விஜ‌ய‌த்தில் சொந்த‌ ம‌ண்ணில் சாத‌னை நிலை நாட்ட‌ ச‌ச்சின் விரும்பியுள்ளார் என்று.

கொசுறு. டோணி மீண்டும் டெஸ்ட் அணிக்கு வ‌ர‌வேண்டும் இந்திய அணி இல‌ங்கையில் தோல்வியுற்ற‌த‌ற்க்கு இன்னொரு கார‌ண‌ம் சிறந்த‌ விக்கெட் காப்பாள‌ர் இல்லாத‌தும்தான். தினேஸ் கார்த்திக், ப‌ட்டேல் இருவ‌ரும் விக்கெட் காப்பிலும் துடுப்பாட்ட‌த்திலும் சொத‌ப்போ சொத‌ப்பென்று சொத‌ப்பினார்க‌ள். தினேஸ் கார்த்திக்கு ப‌ல‌ த‌ட‌வைக‌ள் இட‌ம் கொடுத்தும் த‌ன் இட‌த்தை த‌க்க‌ வைக்க எந்த‌ முய‌ற்சியும் செய்ய‌வில்லை.

பின்குறிப்பு :அவினவ் பிந்ரா என்ற சுனாமியில் இந்த தோல்வி மறக்கப்பட்டுவிட்டது.