Showing posts with label படங்கள். Show all posts
Showing posts with label படங்கள். Show all posts

உலக அழகி 2009 - கயானி

நேற்று தென்னாபிரிக்காவின் ஜோகனர்ஸ்பேர்க் நகரில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டிற்க்கான உலக அழகியாக கிப்ரால்டர் (Gibraltar) நாட்டைச் சேர்ந்த 23 வயதான‌ கயானி அல்டோரினோ (Kaiane Aldorino) தெரிவு செய்யப்பட்டார்.



முதலாவது ரன்னர் அப்பாக மெக்சிகோவைச் சேர்ந்த பெர்லா பெர்ல்ட்ரனும் 2ஆவது ரன்னர் அப்பாக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டட்டும் கேஸ்வரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.







இந்திய அழகி பூஜா சோப்ராவுக்கு மிஸ் என்ற பட்டமே கிடைத்தது.

இலங்கையில் மட்டுமே இவை சாத்தியம் - நகைச்சுவை


தலைவரின் வாகனம் மட்டும் நிறுத்தலாம்


இரண்டு வாகனத்தின் இலக்கங்களும் ஒன்று


இருபக்கமும் வாகனம் நிறுத்துவது தடை


தேனிலவிற்க்கு உதிரியாக இன்னொருவரா


அம்மா தங்கம் என்றால் அப்பா பித்தளையா?


மிகவும் தேவையான வாசகம்


புல்லட்டும் இப்படித்தான்


தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி


இன்னொரு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி


விளக்கம் தேவையா

பின்குறிப்பு : இந்தப் படங்களை மின்னஞ்சல் மூலமாக எனக்கு அனுப்பிய நண்பருக்கு நன்றிகள்.

உலகை அச்சுறுத்தும் சீனா

சீனாவின் கம்யூனிச ஆட்சியின் 60ஆவது ஆண்டுவிழாவை சீனா தன் இராணுவ பலத்தை உலகத்திற்க்கு காட்டும் வகையாக கடந்த அக்டோபர் முதலாம்திகதி பீஜிங் தியானமென் சதுக்கத்தில் கொண்டாடியது.

இந்த கொண்டாட்டத்தில் சீனா தன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உட்பட பெருமளவு ஆயுதங்களை காட்சிக்கு வைத்ததன் மூலம் ஆசியாவில் மட்டுமல்ல உலகத்திற்க்கே அடுத்த ரவுடியாக தன்னைக் காட்டிக்கொண்டது.

உலகின் பெரிய ரவுடி அமெரிக்காவிற்க்கும், இலங்கை, வங்கதேசம் போன்ற குட்டி நாடுகளுக்குப் பயப்படும் தென்னாசிய ரவுடி இந்தியாவிற்க்கும் சீனா தன் பலத்தைக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது போல் தெரிகின்றது.

மின்னஞ்சலில் கிடைத்த சில படங்கள் உங்கள் பார்வைக்காக.

சிவப்பு என்றாலே ஆபத்துதான்

இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

பறவைகள் போல் உலங்குவானூர்திகள்

கண்கவர் வடிவில் கனரக தாங்கிகள்
இந்த நடை போதுமா

இது ட்ரையிலர் தான் மெயின் பிக்சர் பிறகுதான்

அணி வகுப்பில் கனரக தாங்கிகள்

பலத்தை பார்வையிடும் சீன அதிபர்

அணிவகுப்பில் அழகிய லைலாக்கள்

காஸ்மீர்ப் பக்கம் பார்வையைத் திருப்பு என உத்தரவிடுகிறாரோ
இப்போதைக்கு கலர்ப் பொடி தூவும் விமானங்கள்

கழுகுப் பார்வையில் தியானமென் சதுக்கம்

எப்படியிருந்த நயன்தாரா - சில குறிப்புகள்

2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமாகி அடுத்த படத்திலையே சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து பலரின் மனதைக் கவர்ந்தவர் பின்னர் தமிழ் சினிமாவில் தாக்குப் பிடிக்க கவர்ச்சி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து இன்றைக்கும் இளைஞர்களின் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கும் நயன் பற்றிய சில குறிப்புகள்.



இயற்பெயர் : டயானா மரியம் குரியன்

பிறந்த நாள் : 18 நவம்பர் 1984.

பிறந்த இடம் : திருவல்லா, கேரளா (இன்னொரு கேரளத்து பைங்கிளி)

கல்வி : BA (ஆங்கில இலக்கியம்)

முதல் படம் : மனசின்னகரே(மலையாளம், 2003), ஐயா(தமிழ், 2005)



ஐயா படத்தில் "ஒருவார்த்தை பேச ஒரு வருடம் காத்திருந்தேன் என" சரத்குமாரை மட்டுமல்ல இளைஞர்கள் பலரையும் செல்வியாக தன் அழகாலும் புன்னகையாலும் கவர்ந்தவர். இன்னொரு மீரா ஜாஸ்மின், அசின் போல் ஹோம்லியான நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர். பின்னர் சந்திரமுகியில் தர்கா மன்னிக்கவும் துர்காவாகி சூப்பர் ஸ்டாருடன் பட்டம் விட்டு இளைஞர்கள் மனதிலும் பட்டமாக ஒட்டிக்கொண்டவர்.



கஜனியில் சித்ராவாக "எக்ஸ் மச்சி வை மச்சி" என கொஞ்சம் கவர்ச்சியாக ஆட்டம் போட்டவர். பின்னர் சிவகாசியில் இளைய தளபதியுடன் "கோடம்பாக்கம் ஏரியா" என ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.



விரல் வித்தை நடிகர் சிம்புவின் வல்லவன் போஸ்டரிலையே அவரின் உதட்டைக் க‌டித்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். சொப்னாவாக வல்லவன் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் சிம்புவுடன் அவருக்கு "காதல் வந்துடுச்சு". பின்னர் எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி என்ற படத்தில் ஹரிதா என்ற மென்பொருள் பெண்ணாக வந்து பாடல்களில் கவர்ச்சி ஆட்டம்போட்டார்.



பின்னர் தலைமகனில் மீண்டும் சரத்குமாருடன் நடித்தார். ஈ படத்தில் ஜீவாவுடன் ஜோதி என்ற பாத்திரத்தில் நடித்தார்.



இந்த நேரத்தில் சிவாஜியில் "பல்லேலக்கா " பாடலுக்கு ரஜனியுடன் ஆட்டம் போட்டார்.



ஷாசா என்ற பெயரில் பில்லாவில் இவர் காட்டிய கவர்ச்சி, கூட நடித்த கவர்ச்சி சூறாவளி நமீதாவையே கவர்ச்சியில் மிஞ்சி, எப்படி இருந்த நயன் இப்படியாகிவிட்டார் என பலரையும் உச் கொட்டவைத்தார்.



பில்லாவின் பின்னர் வெளிவந்த யாரடி நீ மோகினியில் ஐயராத்து பெண்ணாக அடக்க ஒடுக்கமாக நடித்தார். மருமகனைத் தொடர்ந்து மீண்டும் மாமனாருடன் குசேலன் படத்தில் நயன்தாராவாகவே வந்து போனார்.



சத்யம் படத்தில் விஷாலுடன் இவர் காட்டிய நெருக்கம், கிசுகிசுவாக மாறியது. பின்னர் மீண்டும் தலையுடன் எகன் என்ற படத்தில் நடித்திருந்தார்.



தலைக்கு ஜோடியானால் தளபதி விடுவாரா வில்லுவில் தனக்கு ஜோடியாக்கினார். இந்தப் படத்தை இயக்கிய பிரபுதேவாவுடனான காதல் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கு இணையங்களுக்கும் நல்ல தீனி போட்டது. வில்லுவில் இவர் காட்டிய கவர்ச்சி, கவர்ச்சியின் எல்லை வரை இருந்ததாக நண்பர் லோஷன் தன் வில்லு பட விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார்.



அடுத்து சூரியாவுடன் இணைந்து நடிக்கும் ஆதவனை இவர் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்க்கின்றார்கள். திரிஷா, ஸ்ரேயா, தமன்னா என பலர் வந்தாலும், பல கிசுகிசுக்கள், சர்ச்சைகள் எனப் பல பிரச்சனைகள் இருந்தாலும் இன்னும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக நயன்தாரா இருக்கின்றார் என்பது மிகைப் படுத்தப்பட்ட உண்மையல்ல.



பின்குறிப்பு : என் அன்புத் தம்பி ஆதிரை நயன்தாராவின் தீவிர‌ ரசிகன் என்பது நேற்று ஒரு பதிவினைப் பார்த்த பின்னர் தெரியவந்தது. ஆகவே நயனின் தீவிர ரசிகன் ஆதிரைக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.



போனஸ் படம் :



பிரத்தியேக குறிப்பு : நயனும் என்னைப் போல் நவம்பர் பேபிதான்.

தகவல் மற்றும் பட உதவிகள் : பல இணையத் தளங்கள்.

தமிழ் நடிகைகளின் சம்பளப் பட்டியல் - Top 10

1. நயன்தாரா


ஐயா படத்தில் குத்துவிளக்காக அறிமுகமாகி, சந்திரமுகியில் இடத்தைப் பிடித்து பில்லாவில் கவர்ச்சி சுனாமியில் இறங்கி, இன்றைக்கு ஏகன், சத்யம்,வில்லு என முதலாம் இடத்தில் இருப்பவர் நயந்தாரா.

சம்பளம் : 75 லகரங்கள்

குறிப்பு : பிரபுதேவா சர்ச்சையால் புதுப்படங்கள் குறையும் வாய்ப்புகள் உண்டு ஆதவன் வெற்றி பெற்றால் முதலாம் இடம் சில காலத்துக்கு நிரந்தரம்.

2. ஸ்ரேயா


எனக்கு 20 உனக்கு பதினெட்டில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி, சிவாஜியில் கவர்ச்சி காட்டி, இந்திர லோகத்தில் நா. அழகப்பனில் ஒரு பாட்டுக்கு மட்டும் 15 லகரத்தில் வடிவேலுடன் ஆடி இன்றைக்கு சுப்புலட்சுமியாக கந்தசாமியில் கவர்ச்சி பூனைக்குட்டியாக வலம் வருகிறார்.

சம்பளம் : 70 லகரங்கள்

குறிப்பு : கந்தசாமி வெற்றி பெற்றால் சம்பளமும் உயரலாம். நயனின் முக்கிய போட்டியாளர்.

3. திரிஷா


ஆரம்பத்தில் பிக்கப் ஆகாவிட்டாலும் கில்லியின் வெற்றியால் சில நாட்கள் வெற்றிக்கொடி நாட்டியவர். பின்னர் வந்த குருவியால் சற்று சறுக்கல், சர்வம் இன்னும் கொஞ்சம் சறுக்கல். சர்ச்சைகளின் நாயகி.

சம்பளம் : 60 லகரத்திலிருந்து 50 க்கு குறைந்துவிட்டது.

குறிப்பு : சுனைனா, தமன்னாவின் வரவினால் இடம் பறிபோகும் அபாயம்.

4. அசின்


ஆரம்பத்தில் பெரிதாகப் பேசப்பாடவிட்டாலும் கஜனி,போக்கிரி ஹிட்களால் தசாவதாரம் வரை வெற்றிக்கொடி நாட்டினாலும் ஹிந்திக்குப் போனதால் இவரின் இடம் வெற்றிடம் தான்.

சம்பளம் : 60 லகரம்

குறிப்பு : ஹிந்தியில் இருந்து மீண்டும் தமிழிற்கு வந்தால் இழந்த மார்க்கெட்டைப் பிடிக்கலாம்.

5. பாவனா


குடும்பப் பாங்கான பாத்திரங்களில் மக்களின் மனதை வென்றவர். தீபாவளி, வாழ்த்துகள், ஜெயம் கொண்டான் எனப் பல படங்கள் நடித்தாலும் இன்னும் சொல்லும் படியான ஹிட் கொடுக்கவில்லை.

சம்பளம் : 40 - 45 லகரம்

குறிப்பு : கொலை ஒன்றுடன் சம்பந்தப்பட்டிருப்பதனால் வாய்ப்புகள் குறையும் அபாயம்.

6. ஜெனிலியா


பாய்ஸ்சில் அறிமுகமாகி சச்சினில் கொஞ்சம் பேசப்பட்டாலும் சந்தோஷ் சுப்பிரமணியம் மூலம் ஹிட் அடித்தவர்.

சம்பளம் : 35 லகரம்

குறிப்பு : அக்கட பூமியிலை அடிக்கடி தங்குவதை நிறுத்திவிட்டு தமிழ்ப் பக்கமும் வந்துபோகவும்.

7. சினேகா


இன்னொரு குடும்ப குத்துவிளக்கு. பல படங்கள் நடித்தாலும் ஏனோ முதல் இடம் இன்னும் கிடைக்கவில்லை(சம்பளத்தில்). பாண்டி, ராஜாதி ராஜா போன்ற படங்களில் கவர்ச்சியை கையில் எடுத்து சூடுபட்டதுதான் மிச்சம். விளம்பரங்களில் என்றைக்கும் ஜொலிப்பவர்.

சம்பளம் : 20 - 25 லகரம்

குறிப்பு : எம்எம்எஸ், செருப்பு என பல சர்ச்சைகளில் சிக்குகிறார்.

8. நமீதா



எங்கள் அண்ணாவில் அறிமுகமான சூறாவளி. ஆண்களின் மச்சாள். பில்லாவில் நயனுக்கு நிகராக கவர்ச்சி காட்டினார். சொல்லிக்கொள்ளும் படி எந்த படங்களும் ஹிட் அடிக்கவில்லை. மானாட மயிலாடவில் ஒரு எபிசோட்டிற்க்கு 1 லகரம் என கலைஞர் தொகா வட்டாரங்கள் தகவல்.

சம்பளம் : 20 - 25 லகரம்

குறிப்பு : ஜெகன்மோகினியின் வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்.

9. ப்ரியாமணி


பாரதிராஜா அறிமுகம். பருத்திவீரனில் முத்தழகாக அடக்க ஒடுக்கமாக வந்தாலும் மலைக்கோட்டையில் கவர்ச்சிக் கோட்டை கட்டியவர்.

சம்பளம் : 15 - 20 லகரம்

குறிப்பு : தெலுங்கில் காட்டும் கவர்ச்சியை ஏனோ தமிழில் காட்டுகின்றார் இல்லை.

10. ரீமா சென்


மின்னலாக வந்தவர். தூள் வல்லவன் போன்ற படங்களி கவர்ச்சி காட்டினாலும் வல்லவனில் சிம்புவின் நயன் மோகத்தால் எடிட் செய்யப்ப‌ட்டவர். ஆயிரத்தில் ஒருவனை நம்பியிருக்கின்றார்.

சம்பளம் : 12 - 15 லகரம்

குறிப்பு : பெரிதாக ஹிட் கொடுக்காத படியால் முதலாம் இடத்தில் வரவேண்டியவர் 10ல் இருக்கின்றார்.