அம்மா, அஷாருதீன், ஐஸ்வர்யா, சுஜாதா, மழை இன்னும் பல‌

உறவுகள்

எல்லோரைப் போலவும் அம்மா, அப்பா, அக்கா, சித்திகள், சித்தப்பாக்கள், தங்கைகள், தம்பிகள், மாமா, மாமி, என் பாட்டை விரும்பிக் கேட்கும் செல்ல மச்சாள் என அனைத்து உறவுகளும் எனக்காக எதையும் செய்யும் நண்பர்கள், என்னைத் திருத்தும் நண்பர்கள், நான் சொல்வதைக் கேட்கும் நண்பர்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.



இடங்கள்

நான் தத்தித் தவழ்ந்து விளையாடிய மண், எங்கள் பாடசாலை, மைதானம், 11சி வகுப்பறை, வடமராட்சி மண் ஒழுங்கை முதல் பெரிய வீதிகள் வரை அனைத்து சுற்றிய சுழட்டிய ரோட்டுகள், வெள்ளவத்தை பீச், காலி வீதிகள், காலி உனவட்டுன அழகிய கடற்கரை, கொச்சிக்கடை சிவன் கோவில்.



உணவு

அம்மா சமைக்கும் பருப்புக் கறி, ரசம், உருளைக்கிழங்குப் பொரியல், நெல்லியடி சுபாஷ் பேக்கரிப் பாண், பூட் வேவ்ஸ் பன்னீர் பட்டர் மசாலா, சைனீஸ் ட்ராகன் நூடுல்ஸ், நளபாகம் பால‌ப்பம், பருத்தித்துறை வடை, ஆடை இல்லாத பால்,



ரசனை

அழகான அறிவான பெண்கள் (கண்டுபிடிப்பது மிகமிக கஸ்டம்)
பட்டுச்சாறியில் இளம் பெண்கள்(தேவதையின் தேவதைகள்),
பஸ்சில் பயணிக்கும்போது காதில் இளையராஜா, கையில் சுஜாதா
மழையில் நனையப் பிடிக்கும்
ரயில் பயணங்களில் யன்னலூடாக தென்படும் இயற்கை



விளையாட்டு

கிரிக்கெட் விளையாடவும் பார்க்கவும் பிடிக்கும், நீச்சலடிக்கப் பிடிக்கும்
அஷாருதீன் wrist style batting,
க‌பில்தேவ் வேகம்,
அரவிந்த டி சில்வா ஸ்டைல்,
லாராவின் அதிரடி
முரளியின் சுழல்
ஷ்ரபோவா அழகு
வீனஸ் அதிரடி
பெடரர் புன்னகை



சினிமா

கமலின் படங்கள், இளையராஜா பாடல்கள், தேர்ந்தெடுக்கப் பட்ட ரகுமான் பாடல்கள், ஷ‌ங்கர், நகைச்சுவைப் படங்கள், த்ரில் ஆங்கிலப் படங்கள், எப்போதும் ஐஸ்வர்யா ராய்.



படிப்பது
செங்கை ஆழியான், சுஜாதாவின் அனைத்துப் படைப்புகளும்
ராஜேஸ்குமார் க்ரைம் கதைகள்
உலாத்தல் கட்டுரைகள்
உணர்ச்சி, காதல் கவிதைகள்

இன்னும் நிறைய பிடித்தவை இருக்கின்றன. இந்த தொடருக்கு யாரையும் அழைக்கமாட்டேன் காரணம் ஏற்கனவே சில தொடர்களுக்கு அழைத்தவர்கள் இன்னும் எழுதவில்லை. ஆகவே யாராவது விரும்பினால் தொடருங்கள்.

விளையாட்டுக்கு அழைத்த சுபானுவிற்க்கு நன்றிகள்.

14 கருத்துக் கூறியவர்கள்:

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

//செங்கை ஆழியான், சுஜாதாவின் அனைத்துப் படைப்புகளும்//

செங்கை ஆழியானுக்கு அண்மையில் கிடைத்த விருதுபற்றி பதிவிடுவீர்கள் என எதிர்பார்த்தேன்.

Unknown சொல்வது:

ஓ!
நீங்க ஐஸ்வர்யா அக்கா இரசிகரா?
ம் ம்....

அதுசரி...
வெள்ளவத்தை கடற்கரை ஏன் பிடிக்கும்??? ;)

(ஒன்றுமறியா அப்பாவிகள் சங்கம்)

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

மன்னிக்கவேண்டும். பதிவிட்டிருக்கிறீர்கள். எனது பார்வைக்குக் கிட்டவில்லை.

செங்கை ஆழியான் விருதுபெற்ற செய்தி எட்டியபோது (தினக்குரலில் படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது) உங்கள் நினைவுதான் வந்தது.

இந்த நல்ல எழுத்தாளர் பற்றி இப்போதுள்ள மாணவ சமுதாயம் அவ்வளவாய் அறிந்திருக்கவில்லை.

நன்றி வந்தி.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

ஐயா இப்படி எல்லாத்தையும் நீங்களே பிடிக்கும் என கூறினால் அப்புறம் நாங்க என்னத்தை சொல்லுறது. இந்த தொடர்பதிவுல நான் உங்கள மாட்டிவிட முயற்சித்தால் சுபானு என்னையும் இழுத்து விட்டுட்டார்.

சுபானு சொல்வது:

நல்ல ரசனை.. நன்றாக இரசிகத்தேன்.. உங்களின் பாணியில் கலக்கியிருக்கீங்க.. வாழ்த்துக்கள் அண்ணா..
//

அழகான அறிவான பெண்கள் (கண்டுபிடிப்பது மிகமிக கஸ்டம்)
பட்டுச்சாறியில் இளம் பெண்கள்(தேவதையின் தேவதைகள்),
பஸ்சில் பயணிக்கும்போது காதில் இளையராஜா, கையில் சுஜாதா
மழையில் நனையப் பிடிக்கும்
ரயில் பயணங்களில் யன்னலூடாக தென்படும் இயற்கை//

எனக்கும் மிகவும் பிடிக்கும்..

//அழகான அறிவான பெண்கள் (கண்டுபிடிப்பது மிகமிக கஸ்டம்)//

ம்.. பெண்களின் பார்வையை வைத்தே அவர்களின் அறிவாற்றலைக் கணிக்லாம் என்பது என்கருத்து.. சிலநேரங்களில் பிழைத்தும் விடும்.. :)

சுபானு சொல்வது:

தொடரை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள்.. சங்கிலியை அறுக்க முற்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றறேன்..

நீங்கள் அழைத்து இன்னும் பதியாமல் இருப்பவர்களில் நானும் ஒருவன்.. மன்னித்துக்கொள்ளுங்கள்.. மிகவிரைவில் பதிவேற்றுகின்றேன்..

:)

ARV Loshan சொல்வது:

பிடித்தவற்றுள் உண்மையிலேயே பிடித்த ஒரு சில விஷயங்கள் காணோமே.. ;)

//அழகான அறிவான பெண்கள் (கண்டுபிடிப்பது மிகமிக கஸ்டம்)
பட்டுச்சாறியில் இளம் பெண்கள்(தேவதையின் தேவதைகள்),//
தேடல் நிறைவேறட்டும்.. (அப்பா இனிமேல் சுடிதார்,மொடேர்ன் ட்ரெஸ் பெண்களை வந்தி பார்க்கமாட்டார்??)

//மழையில் நனையப் பிடிக்கும்
ரயில் பயணங்களில் யன்னலூடாக தென்படும் இயற்கை//

நம்ம கட்சி.. ம்ம் இனி நானும் எழுதனும்.. ;)

//இந்த தொடருக்கு யாரையும் அழைக்கமாட்டேன் காரணம் ஏற்கனவே சில தொடர்களுக்கு அழைத்தவர்கள் இன்னும் எழுதவில்லை. //
கடுப்பாயீட்டீங்க போல..

அதுசரி தேவதை,அறிவான பெண்கள் என்று சொல்லிட்டு என் அந்த சிநேகாவின் படம்?
உங்கள் வழமையான பிட் படமே இவரை விடப் பரவாயில்லை.. ;)

வந்தியத்தேவன் சொல்வது:

//இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

செங்கை ஆழியானுக்கு அண்மையில் கிடைத்த விருதுபற்றி பதிவிடுவீர்கள் என எதிர்பார்த்தேன்.//

ஏற்கனவே அவரைப் பற்றிய பதிவு இட்டிட்டேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி said...
ஓ!
நீங்க ஐஸ்வர்யா அக்கா இரசிகரா?//

ஓம் நான் ஐஸ் அக்கா ரசிகன் தான்.

//அதுசரி...
வெள்ளவத்தை கடற்கரை ஏன் பிடிக்கும்??? ;)//

வெள்ளவத்தைக் கடற்கரை பலகாலமாக பார்த்து ரசித்த கடற்கரை, இராமகிருஷ்ண வீதியில் இருந்து மியாமி வரை அடிக்கடி விசிட் செய்யும் கடற்கரை.

//(ஒன்றுமறியா அப்பாவிகள் சங்கம்)//

இந்த சங்கத்தில் நானும் ஒரு அங்கத்தவர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமையடைகின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//இறக்குவானை நிர்ஷன் said...

இந்த நல்ல எழுத்தாளர் பற்றி இப்போதுள்ள மாணவ சமுதாயம் அவ்வளவாய் அறிந்திருக்கவில்லை. //

நிச்சயமான உண்மை ஏனோ மாணவர்களுக்கு அவரைத் தெரியவில்லை, வாசிப்புப் பழக்கமும் குறைந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

வந்தியத்தேவன் சொல்வது:

// யோ வாய்ஸ் (யோகா) said...
ஐயா இப்படி எல்லாத்தையும் நீங்களே பிடிக்கும் என கூறினால் அப்புறம் நாங்க என்னத்தை சொல்லுறது. இந்த தொடர்பதிவுல நான் உங்கள மாட்டிவிட முயற்சித்தால் சுபானு என்னையும் இழுத்து விட்டுட்டார் //

ஹாஹா இதில் பல பிடிக்குங்கள் விட்டுவிட்டேன் சில ரகசியமானவை. சுபானு அனைவருக்கும் ஆப்பு வைத்தாலும் நல்ல விடயம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//சுபானு said...
நல்ல ரசனை.. நன்றாக இரசிகத்தேன்.. உங்களின் பாணியில் கலக்கியிருக்கீங்க.. வாழ்த்துக்கள் அண்ணா.. //

நன்றிகள் என்னை இதில் இழுத்ததற்க்கும் நன்றிகள்.

//ம்.. பெண்களின் பார்வையை வைத்தே அவர்களின் அறிவாற்றலைக் கணிக்லாம் என்பது என்கருத்து.. சிலநேரங்களில் பிழைத்தும் விடும்.. :)//

சில நேரங்களில் அல்ல பல நேரங்களில் பிழைத்துவிடும், தேவதை போல் தோற்றமளிக்கும் ஒருவரிடம் சாதாரண பொது அறிவோ அல்லது ஏனிய அறிவு சார்ந்த விடயங்களோ இருக்காது. பிடித்த எழுத்தாளர் யார் எனக்கேட்டால்? ரமணி சந்திரன் என்றால் அந்த விடையை வைத்தே அவரின் அறிவை மதிப்பிடலாம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//சுபானு said...
தொடரை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள்.. சங்கிலியை அறுக்க முற்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றறேன்.. //

பயப்படவேண்டும் நான் அறுத்தாலும் பலர் தொடர்வார்கள்.

//நீங்கள் அழைத்து இன்னும் பதியாமல் இருப்பவர்களில் நானும் ஒருவன்.. //
அது, கூடியவிரைவில் பதிவேற்றுங்கள் இல்லையென்றால் பதிவுலக சட்டங்களின் படி உங்களுக்கு தினமும் 5 பதிவு இடும் த்ண்டனை வழங்கப்படும்.

வந்தியத்தேவன் சொல்வது:

// LOSHAN said...
பிடித்தவற்றுள் உண்மையிலேயே பிடித்த ஒரு சில விஷயங்கள் காணோமே.. ;) //

எல்லாம் வெளியில் சொல்லமுடியாது.

//தேடல் நிறைவேறட்டும்.. (அப்பா இனிமேல் சுடிதார்,மொடேர்ன் ட்ரெஸ் பெண்களை வந்தி பார்க்கமாட்டார்??) //

நன்றி, அப்படியில்லை அவர்களையும் பார்ப்பேன், அழகை ரசிப்பதில் தப்பில்லை.

//கடுப்பாயீட்டீங்க போல..//

ரொம்பவே

//அதுசரி தேவதை,அறிவான பெண்கள் என்று சொல்லிட்டு என் அந்த சிநேகாவின் படம்? //

சிநேகாவின் படம் பட்டுப் புடவைக்காக.

//உங்கள் வழமையான பிட் படமே இவரை விடப் பரவாயில்லை.. ;)//

கடைசியில் ஆப்படித்துவிட்டீர்களே.