புட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 3

முதல் பகுதி : புட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் பகுதி 1

இரண்டாம் பகுதி : புட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் பகுதி 2

எங்கள் சந்திப்பில் இடமும் காலமும் உறுதியானதும் நாம் ஒன்றுகூடல் பற்றிய விடயங்களை எங்கள் வலைகளில் பிரசுரித்தோம், ஏனைய நண்பர்களும் பிரசுரித்தார்கள், அதுமட்டுமல்லாமல் சகல திரட்டிகளும் இதுபற்றிய செய்திகளை வெளியிட்டு எமக்கு ஊக்கத்தைக் கொடுத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

சந்திப்பு பற்றி நான் வலைகளில் பின்னூட்டம் மூலம் மின்னஞ்சல்கள் மூலமும் பலருக்குத் தெரியப்படுத்தியபோது ஒரு மின்னஞ்சல் தொலைபேசி இலக்கத்துடன் வந்தது. அதை அனுப்பியவர் பெயர் மருதமூரான். ஏற்கனவே இவர் பதிவுகள் வாசித்திருந்தாலும் அவருடன் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த தொடர்புகளும் இருக்கவில்லை. அத்துடன் அவரின் பதிவுகள் மூலம் எனக்கு அவர் வயதில் மூத்தவர் என்ற விம்பம் மனதில் பதிந்திருந்தது.

நன்றாக எழுதுகிறார், நிறைய காத்திரமான பதிவுகள் எழுதுகின்றார் வயதிலும் கூடியவர் ஆகவே அவரை நமக்குள் இழுத்தால் எமக்கு நல்ல பிரயோசனம் எனக் கருதி அவருடன் அன்றிரவு தொலைபேசியில் கதைத்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் அன்றிரவு அவருடன் சேரன் கிரிஷ், மற்றும் மகேஸ் பிரசாந்த் ஆகியோர் நின்றிருந்தார்கள், அவர்களுடனும் பேசினேன்.

எங்கள் நீண்ட நேர உரையாடல்களில் பலதும் பத்தும் பேசினேன், அடுத்த நாள் மருதமூரான் எனக்கு தொலைபேசினார், பேசியவர் ஆதிரையின் நிஜப்பெயர் என்ன? அவரை எனக்குத் தெரியும் அவர் என்னுடைய பாடசாலையின் மாணவர் என்றார். எனக்குத் தெரியும் ஆதிரை என்னுடைய பாடசாலை மாணவன் என்பது உடனே நான் அவரைக்கேட்டேன் அப்போ நீங்களும் ஹாட்லியா என அவரும் ஆமாம் நான் ஹாட்லிதான் நீங்கள் எந்தப் பள்ளி என என்னை வினவினார். நானும் சிரித்துக்கொண்டு நானும் அதே ஹாட்லி மைந்தன் தான், என என் ஏஎல் பேட்சையும் சொல்லிவிட்டு அவரை அவரது பேட் எதுவெனக்கேட்டால் அவர் சொன்ன பதில் என்னை தூக்கிவாரிப்போட்டது.

அடப்பாவி மக்கா நீ சின்னப்பொடியனா எனக்கேட்க ஆமாம் ஏன் என்றார். நானும் நான் இதுவரை உங்களை ஒரு 40 வயது மதிக்கத் தக்க நல்ல அனுபவம் வாய்ந்தவர் என நினைத்தேன் என்றேன்.

இப்படியே எங்கள் தொலைபேசிகள் நாளொரு வலையும் பொழுதொரு பம்பலுமாகப் போய்க்கொண்டிருந்தது, இதே மருதமூரானை நான் பதிவர் ஒன்று கூடலில் நேரில் சந்தித்த நிகழ்வும் சுவாரஸ்யம் நிறைந்தது. அது என்னவென்பது இந்தத் தொடரில் சந்தர்ப்பம் வரும் போது கூறுகின்றேன்.

எமக்கு வந்த மின்னஞ்சல்களும் வாழ்த்துக்களும் எம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தின ஏன் என்றால் நாங்கள் முதலில் எதிர்பார்த்தது ஒரு 40 பேரை மாத்திரம் தான் எனக்குத் தெரிந்தவர்கள் ஒரு 10 பேர், புல்லட்டின் பல்கலைக் கழக நண்பர் ஒரு 10 பேர் லோஷனின் ஊடக வலைப்பதிவர் ஒரு 10 பேர் ஏனையவர்கள் ஒரு 10 எனத்தான் எங்கள் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வந்த வரவேற்பைப் பார்த்து என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தோம்.

11ந்திகதி இரவு நாங்கள் மாநாட்டுக் கோலில் ( ) நாம் நால்வரும் கலந்தாலோசித்து நாளை (12ந்திகதி) தமிழ்ச் சங்கம் சென்று மண்டபத்தைப் பார்வையிடுவோம், மண்டபம் காணாது எனில் இராமகிருஷ்ண மிசன் சின்ன மண்டபத்தை ஒழுங்கு செய்வோம் என முடிவு எடுக்கப்ப‌ட்டது. அடுத்த நாள் மாலை 6 மணியளவில் நான்கு பேரும் சந்திப்பது என்பது முடிவாயிற்று.

அடுத்த நாள் மாலை 6 மணியளவில் நான் ருத்ரா வீதியால் தமிழ்ச் சங்கம் நோக்கி நடந்துசெல்லும்போது சைவ மங்கையர் பாடசாலைக்கு முன்னாள் என்னை உரசுவதுபோல் ஒரு வாகனம், வானின் நிறைத்தைப் பார்த்தேன் வெள்ளை அல்ல, உடனே என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பார்த்தால் உள்ளே லோஷன், அப்படியே லோஷனுடன் ஏறித் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்றால் அங்கே புல்லட் காத்திருக்கின்றார். ஆதிரை இன்னமும் வரவில்லை.

அங்கே லோஷனின் தந்தையார் நின்றார், அவர் தமிழ்ச் சங்க நிர்வாகத்தில் இருப்பவர் என்பதால் எமக்கு அந்த மண்டபத்தையும் புல்லட்டின் வாழ் நாள் சாதனையான வடை பற்றீஸ் கோப்பி பற்றிய விடயங்களுக்கு இன்னொருவரையும் காட்டினார். அந்த நேரத்தில் ஆதிரையும் வந்துவிட்டார்.

மண்டபத்தில் ஆகக்கூடியது 80 பேர் வரை அமரக்கூடிய வசதி இருந்தது. அத்துடன் மேடை போன்றன இல்லாதது எமக்குப் பிடித்துவிட்டது. மண்டபம் மாற்றுவதில்லை என்ற இறுதி முடிவு எடுக்கப்பட்டது. சிறிது நேரம் லோஷனுடன் பம்பலடித்துவிட்டு (அவையெல்லாம் சொல்லமுடியாது சொன்னால் லோஷனின் இமேஜ் போய்விடும்.)( ரொம்ப பெரிய இமேஜ் நான் உருவத்தைத் தான் சொன்னேன்) மீண்டும் காலி வீதி நோக்கு நான் ஆதிரை புல்லட் நடக்கத் தொடங்கினோம். லோஷன் தாய் வீட்டை சென்றுவிட்டார்.

வழியில் ஆதிரை தான் நேரத்துக்கு வீடுபோகவேண்டும் என டெல்மன் பக்கம் சென்றுவிட்டார், நான் வீட்டுக்குபோக எப்படியும் 1 மணித்தியாலத்திற்க்கு மேல் தேவைப்படும் என்பதால் நானும் புல்லட்டும் பக்கதில் இருந்த சைவ ஹோட்டலிற்குள் நுழைந்தோம்.

அங்கே வடை, ரோல்ஸ் என பல ஐட்டங்கள் இருந்தும் புல்லட் ஏனோ கனநாள் மோதகம் சாப்பிட்டு இன்றைக்கு நான் மோதகம் சாப்பிடப்போகின்றேன் என பிள்ளையாரைவிட அடம் பிடித்து சாப்பிட்டும் விட்டார். பின்னர் ஒரு குளிர்பானமும் தாக்கிவிட்டு இருவரும் தனித்தனியே வீடு சென்றோம்.

இந்தப் தொடரின் கடைசிப் பதிவை சில சுவாரஸ்யங்கள் வாரல்கள் நக்கல்களுடன் நாளை தொடர்கின்றேன்.

10 கருத்துக் கூறியவர்கள்:

ARV Loshan சொல்வது:

அடப்பாவி மக்கா நீ சின்னப்பொடியனா //

பார்க்கப் போனால் வந்தியண்ணா பதிவர்கள் எல்லோருமே உங்களை விட வயசு கூடினவங்கலாத் தான் இருப்பாங்க அண்ணா..


சிறிது நேரம் லோஷனுடன் பம்பலடித்துவிட்டு (அவையெல்லாம் சொல்லமுடியாது சொன்னால் லோஷனின் இமேஜ் போய்விடும்//

அடப் பாவி வாசிப்போர் என்னவோ எதோ என்று யோசிக்கப் போறாங்க.. வழமையாக ட்விட்டரில் நாம் கும்மும் அதே வந்தி,ரணில்,அனார்கலி,யானை, புல்லட்டின் மூன்று கோடி, வந்தியின் வயசு தான் நாங்கள் பம்பலடித்த விஷயங்கள்..

புல்லட் ஏனோ கனநாள் மோதகம் சாப்பிட்டு இன்றைக்கு நான் மோதகம் சாப்பிடப்போகின்றேன் என பிள்ளையாரைவிட அடம் பிடித்து சாப்பிட்டும் விட்டார். //
அந்தக் கடையில் அதுக்குப் பிறகு இப்ப மோதகம் போடுவதில்லையாம்.. ;)

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

(அவையெல்லாம் சொல்லமுடியாது சொன்னால் லோஷனின் இமேஜ் போய்விடும்.)

இந்தப் தொடரின் கடைசிப் பதிவை சில சுவாரஸ்யங்கள் வாரல்கள் நக்கல்களுடன் நாளை தொடர்கின்றேன்.

இது இரண்டையும் சேர்த்து யோசித்தால் வேறு ஏதோ எழுத போற மாதிரி இருக்கு எழுதுங்கள், எதிர்பார்த்து இருக்கிறோம்.

Unknown சொல்வது:

//அவையெல்லாம் சொல்லமுடியாது சொன்னால் லோஷனின் இமேஜ் போய்விடும்.//

ஆகா...
இத தான் உசுப்பேத்தி விட்டிற்று அமைதியா போறதெண்டிறதா?
ம்... ம்...
இத சொன்னதாலேயே இமேஜ் இப்பவே போயிருக்குமே?

ARV Loshan சொல்வது:

//இது இரண்டையும் சேர்த்து யோசித்தால் வேறு ஏதோ எழுத போற மாதிரி இருக்கு எழுதுங்கள், எதிர்பார்த்து இருக்கிறோம்.
//
&
//இத தான் உசுப்பேத்தி விட்டிற்று அமைதியா போறதெண்டிறதா?
ம்//


எல்லாம் நல்லாத்தானே வந்தி எழுதிறார்.. இதுல வேற தேவையில்லாமல் கோத்து விட்டு கூத்து பார்க்கிறீங்களே.. அவரே நினைக்காத கோணத்தில எல்லாம் நீங்க சிந்திக்கிறீங்க..

நான் என்ன விஜயா விஜயகாந்தா நினைச்ச ஆட்கள் எல்லாம் அடிச்சு விளையாட..

Admin சொல்வது:

எல்லாமே சுவாரஸ்யமாகத்தான் போயிருக்கு.



பகுதி 4 எப்போ வரும் என்ற எதிர் பார்ப்போடு.

Admin சொல்வது:

//LOSHAN said...

நான் என்ன விஜயா விஜயகாந்தா நினைச்ச ஆட்கள் எல்லாம் அடிச்சு விளையாட..//


அவங்க சினிமா, அரசியலேன்னு பிரபலம், ஆனா நீங்க தெரியும் தானே..... அவங்களுக்கும் இரசிகர்கள் இருக்கிறார்கள் உங்களுக்கும் இருக்கிறார்கள்.


எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்தால் அரசியல் வாதிகள், நடிகர்களைவிட(......... )மேலானவர்கள் இடைவெளி நிரப்புங்க

Unknown சொல்வது:

வந்தியத்தேவரே...
கன இடத்தில வயசு கேட்டு மூக்குடைந்த மாதிரி இருக்கு... மருதமூரானைக் கண்டால் சொல்லுங்கள்.. அவரை அடையாளம் காண சரியா கஸ்டப்பட்டுப் போனன் எண்டு சொல்லி. அந்தப் பழைய தலைவெட்டுக்கு மாறச் சொல்லுங்கோ

SShathiesh-சதீஷ். சொல்வது:

வந்தி அண்ணே உண்மையான வயசை சொல்லுங்க. நீங்கள் தானே இலங்கையின் மூத்த முதிய பதிவர் என நான் நினைக்கிறேன், தொடருமா தொடரட்டும்

maruthamooran சொல்வது:

////சந்திப்பு பற்றி நான் வலைகளில் பின்னூட்டம் மூலம் மின்னஞ்சல்கள் மூலமும் பலருக்குத் தெரியப்படுத்தியபோது ஒரு மின்னஞ்சல் தொலைபேசி இலக்கத்துடன் வந்தது. அதை அனுப்பியவர் பெயர் மருதமூரான். ஏற்கனவே இவர் பதிவுகள் வாசித்திருந்தாலும் அவருடன் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த தொடர்புகளும் இருக்கவில்லை. அத்துடன் அவரின் பதிவுகள் மூலம் எனக்கு அவர் வயதில் மூத்தவர் என்ற விம்பம் மனதில் பதிந்திருந்தது.

நன்றாக எழுதுகிறார், நிறைய காத்திரமான பதிவுகள் எழுதுகின்றார் வயதிலும் கூடியவர் ஆகவே அவரை நமக்குள் இழுத்தால் எமக்கு நல்ல பிரயோசனம் எனக் கருதி அவருடன் அன்றிரவு தொலைபேசியில் கதைத்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் அன்றிரவு அவருடன் சேரன் கிரிஷ், மற்றும் மகேஸ் பிரசாந்த் ஆகியோர் நின்றிருந்தார்கள், அவர்களுடனும் பேசினேன்.

எங்கள் நீண்ட நேர உரையாடல்களில் பலதும் பத்தும் பேசினேன், அடுத்த நாள் மருதமூரான் எனக்கு தொலைபேசினார், பேசியவர் ஆதிரையின் நிஜப்பெயர் என்ன? அவரை எனக்குத் தெரியும் அவர் என்னுடைய பாடசாலையின் மாணவர் என்றார். எனக்குத் தெரியும் ஆதிரை என்னுடைய பாடசாலை மாணவன் என்பது உடனே நான் அவரைக்கேட்டேன் அப்போ நீங்களும் ஹாட்லியா என அவரும் ஆமாம் நான் ஹாட்லிதான் நீங்கள் எந்தப் பள்ளி என என்னை வினவினார். நானும் சிரித்துக்கொண்டு நானும் அதே ஹாட்லி மைந்தன் தான், என என் ஏஎல் பேட்சையும் சொல்லிவிட்டு அவரை அவரது பேட் எதுவெனக்கேட்டால் அவர் சொன்ன பதில் என்னை தூக்கிவாரிப்போட்டது.

அடப்பாவி மக்கா நீ சின்னப்பொடியனா எனக்கேட்க ஆமாம் ஏன் என்றார். நானும் நான் இதுவரை உங்களை ஒரு 40 வயது மதிக்கத் தக்க நல்ல அனுபவம் வாய்ந்தவர் என நினைத்தேன் என்றேன். ////

வந்தி.....

நான் காத்திரமான பதிவர் என்று குறிப்பிட்டதற்கு நன்றிகள்... ஆனால், என்னைப்போய் மூத்த பதிவர் என்று நினைத்து விட்டீர்கள் என்பதுதான் (கவலையாக: அழுகிறேன்......) ஒருமாதிரி இருக்கிறது.

நான் பதிவிடுகின்ற விடயங்களில் பம்மல் சேர்வதில்லை ஏனென்றால் அது எனக்கு அவ்வளவாக வராது... அதையேன் இழுத்துப்பிடித்து வைத்துக்கொள்ளுவான்... அதுதான் ஓரளவு காத்திரமான (சும்மா) பதிவுகளையே இடுகிறேன்.

எனக்கு நாற்பது வயது என்று நினைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன். வந்தி.... எப்படி நீங்கள் என்னுடைய வயதின் இருமடங்கைக் (ஹஹஹ)
கூற முடியும். நான் இப்பொழுதும் சின்னப்பொடியன் தான்... அதிகம் காற்சட்டையுடனேயே இருப்பேன்.

maruthamooran சொல்வது:

////Kiruthikan Kumarasamy said...
வந்தியத்தேவரே...
கன இடத்தில வயசு கேட்டு மூக்குடைந்த மாதிரி இருக்கு...

மருதமூரானைக் கண்டால் சொல்லுங்கள்.. அவரை அடையாளம் காண சரியா கஸ்டப்பட்டுப் போனன் எண்டு சொல்லி. அந்தப் பழைய தலைவெட்டுக்கு மாறச் சொல்லுங்கோ////

கீத்.......

பழைய தலைவெட்டுக்கு மாறுவதில் பெரிய கஸ்ரமுள்ளது (விளங்குமென்டு நினைக்கிறேன்).

எனக்கு பதிவர் சந்திப்பிற்கு சென்றதில் பலரை சந்தித்த கிடைத்தது. நம்மட ‘பனையூரான்’ குமணன், ‘பால்குடி’ தனஞ்சயன் என்று எங்களுடைய உயர்தர வகுப்பு நண்பர்களை. வந்தி... சொன்னதன் பின்னரே கீத் குமாரசாமி கனடாவில் என்று தெரியும். தங்களின் பதிவுகளை வாசிக்கிறேன். வாழ்த்துக்கள்.