ஹாட் அண்ட் சவர் சூப் 16-09-09

இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள்

இலங்கையின் பொருளாதாரம் எனக் கருதப்படும் பெரும்தோட்டத்துறை ஊழியர்கள் தங்கள் தினசரி சம்பளமாக ரூபா 500 கேட்டு போராட்டம் நடத்திவருகின்றார்கள். நாட்கூலியாக 500 ரூபா என்பது மிகவும் சிறிய தொகையே இன்றைய‌ விலைவாசியில் இந்தச் சம்பளம் ஒரு சாரசரிக் குடும்பத்திற்க்கு போதாத நிலைமையே காணப்படுகின்றது.

மேசன் வேலை, மின்சார வேலை, பிளம்பர் என ஏனைய தொழில்செய்பவர்கள் தினப்படியாக ரூபா 1000ற்க்கு மேல் தற்போது சம்பாதிக்கிறார்கள். ஒரு காலத்தில் கொழும்பில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வேலை செய்தவர்களுக்கு ரூபா 1000 தினச் சம்பளமாக வழங்கப்பட்டது. ஏனையவர்களின் நிலை இப்படி இருக்கும் போது இலங்கையின் பொருளாதாரத்துடன் நெருங்கிய தோட்டத் தொழிலாளர்களுக்கு 290 ரூபா இதுவரை காலமும் வழங்கப்பட்டது. இதனை ரூபா 500 ஆக அதிகரிக்கவே அவர்கள் தற்போது போராட்டம் நடத்துகின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் நுவரேலியா, தலவாக்கொல்லை, ஹட்டன் போன்ற இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. பெரும்பாலும் அங்கேயுள்ள இளைஞர்கள் கொழும்பிற்க்கு நகை வேலை, ஹோட்டல்களில் வேலை என தங்கள் தொழில்களை மாற்றிவிட்டார்கள். அதனால் அங்கே பெண்களும் ஓரளவு வயது முதிந்தவர்களும் மாத்திரமே பெரும்பாலும் வேலை செய்கின்றார்கள்.

இவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளிகள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க இவர்களோ குளிரிலும், அட்டைக் கடிகளிலும் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள். இவர்களின் வாழ்வாதார பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை.

இளையதளபதியும் அரசியலும்

கடந்த சில நாட்களாக நடிகர் விஜயின் அரசியல் பற்றிய செய்திகளே பெரும்பாலும் சகல ஊடகங்களையும் ஆக்கிரமித்திருந்தன.விஜய் காங்கிரஸில் சேரப்போகின்றார் என பலரும் காத்திருக்க, ராகுல் காந்தியோ 35 வயதுக்கு மேற்பட்டர்வர்களுக்கு இளைஞர் அணியில் இடமில்லை என மறைமுகமாக விஜயின் இளைஞர் அணித் தலைவர் ஆசைக்கு மண்போட்டுவிட்டார்.

பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் உலகத் தமிழர்களைக் விருப்பத்தை கேட்டுவிட்டு தன் அரசியல் பிரவேசம் இருக்கும் என்றார். நானும் ஒரு தமிழன் என்ற வகையில் விஜய்க்கு என் கருத்தைச் சொல்கின்றேன். அரசியலில் இருக்கும் நடிகர்களான சரத், விஜயகாந்த். நெப்போலியன், வீரத்தளபதி ரித்தீஷ் போன்றவர்கள் திடீரென அரசியலில் குதிக்கவில்லை. இவர்கள் தங்களுக்குப் பிடித்த கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேறி தற்போது நெப்போலியன், ரித்தீஷ் போன்றவர்கள் பாராளமன்ற உறுப்பினர்களாகவும், விஜயகாந்த், சரத்குமார் போன்றோர் அரசியல் கட்சித் தலைவர்களாகவும் ஆனார்கள்.

நீங்களோ இதுவரை எந்தக் கட்சியிலும் அடிப்படை உறுப்பினராகச் சேராமால் நேரடியாகவே இளைஞர் அணித் தலைமை அல்லது சட்ட மன்ற அல்லது நாடாளமன்ற உறுப்பினர் ஆவது எப்படி நியாயமாகும்? முதலில் ஒரு கட்சியில் சேர்ந்து சாதாரண தொண்டனாக கட்சிப் பணியாற்றுங்கள், பின்னர் அரசியல்வாதியாகலாம்.

சன் பிக்சர்ஸ் சில சந்தேகங்கள்.

தற்போது திரைப்பட தயாரிப்பில் ஈடுபடும் சன் பிக்சர்ஸ் இதுவரை நேரடியாக எந்தப் ப்டத்தையும் தயாரிக்காமல் தயாரிப்பாளர்களிடம் இருந்து நல்ல விலைக்கு வாங்கி விற்பனையும் விளம்பரமும் செய்கின்றது. ஒரு பொருளைத் தயாரித்தவனுக்குத் தான் தயாரிப்பாளர் என்ற பெயர் செல்லவேண்டும் அதனை விட்டுவிட்டு மொத்தவியாபாரிகள் போல் பொருளைக் கொள்வனவு செய்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்க்கும் சன் எப்படி தயாரிப்பு நிறுவனமாகும்?

ஏனென்றால் சன்னின் பெரும்பாலான படங்கள்(எந்திரன் உட்பட) இடைநடுவில் தயாரிப்பாளர்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்டதுதான். நடிகர்கள் சம்பளம், ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பளம் என அனைத்தையும் முதலில் தயாரித்தவரே கவனிக்கின்றார். அப்படியென்றால் அவர்களுக்கு முதலாளி முதலில் படத்தைத் தயாரித்தவரே அப்படியிருக்க தரகராக வேலை பார்க்கின்ற சன்னை ஏன் அவர்கள் வாங்கிய படத்தில் நடிக்கும் நடிகள் அனைவரும் புகழ்ந்து தள்ளுகின்றார்கள்.

அயன், எந்திரன் தவிர சன் வாங்கிய அனைத்துப் படங்களும் சிறிய பட்ஜெட் சிறிய நடிகர்கள் நடித்த படங்களே. இந்த சன்னின் தயாரிப்பு அரசியல் பற்றி யாராவது தெளிவாக விளங்கப்படுத்தினால் புண்ணியம் கிடைக்கும்.

கொம்பக் கிண்ணத்தை சுவீகரித்த இந்தியா

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்து டோணி மீண்டும் தான் ஒரு அதிர்ஷ்டசாலித் தலைவர் எனக் காட்டிவிட்டார். இந்தப் போட்டியில் இந்தியா 319 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் அந்த இலக்கை மிகவும் வேகமாக துரத்திய இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்கள் செய்த சிறு சிறு தவறுகளினால் தோல்வியைத் தழுவியது.

ஏனென்றால் இந்தியப் பந்துவீச்சாளர்கள் பாடசாலை மாணவர்கள் போல் பந்துவீசினார்கள். ஆவ்திசையில் பந்துபோட்டால் தில்ஷான் அடிப்பார் எனத் தெரிந்தும் அதே திசையில் அடிக்கடிபந்துபோட்டு தில்ஷானை நான்கு ஓட்டங்கள் எடுக்கவைத்த நெஹ்ராவோ இஷாந்த் சர்மாவோ சிறப்பாக பந்துவீசவில்லை.
இந்தியப் பந்துவீச்சாளர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளாவிட்டால் தென்னாபிரிக்காவில் நடைபெறும் சாம்பியன் கிண்ணத்தில் மிகவும் கஸ்டப்படவேண்டிய நிலை ஏற்படும். அதே போல் இலங்கைத் துடுப்பெடுத்தாட்ட வீரர்களும் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆடிக்கொருக்கால் அமாவாசைக்கு ஒருக்கால் நன்றாக ஆடிவிட்டு அந்த ஆட்டங்களினால் அணிக்குள் இன்றைக்கும் இருக்கும் மஹெல ஜயவர்த்தன தன்னுடை துடுப்பாட்டத்தை இன்னும் திருத்தவேண்டும்.

பொதுவாக மைதானத்தில் அமைதியாக காணப்படும் சங்ககார தான் ஆட்டமிழந்த பின்னர் நடந்துகொண்ட விதம் அவரின் நடத்தைக்கு களங்கம் விளைவிக்கும்.

லோஷனும் அவரது மகனும்

சில நாட்கள் முன்னர் நண்பர் லோஷனுக்கும் அவரது மகனுக்கும் நடந்த உரையாடலை தம்பி புல்லட் ஒட்டுக்கேட்டிருந்தார் அந்த உரையாடலை என்னுடன் பகிர்ந்துகொண்டார், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் ப்ழமொழிக்கமைய உங்களுக்காக அந்த உரையாடல்.

லோஷன் மகன் : நான் இனிமே ஸ்கூல் போகமாட்டேன்
லோஷன் : ஏன்டா?
லோஷன் மகன் : நான் வேலை செய்யப்போறேன்
லோஷன் : யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறாய்?
லோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி|

ஒரு சிறிய சுய விளம்பரம் : இந்தப் பதிவின் மூலம் நான் இந்த வருடம் சதமடித்திருக்கின்றேன்.

17 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

//லோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி| //
ஆகா...
லோஷன் அண்ணா... ம்... ம்...
புலிக்கு.. சீ சீ... சிங்கத்துக்கு பிறந்தது பூனையாகுமா...???

சங்கக்கார தான் ஆட்டமிழந்த துரதிஷ்டத்திற்காகத் தான் அப்படிச் செய்தார் என நம்புகிறேன்.
சங்கக்கார அப்படி ஆட்டமிழந்திராவிட்டால் போட்டி எம் பக்கம் வந்திருக்கலாம்.
ஆனால் தோல்வியை விட எம்மவர்களின் போராட்டம் (கிறிக்கெற்றில்... வெற்றி பெற...) எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது...

இந்த வருடத்தின் 100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
அது சரி, உங்கள் பதிவுக்கும் கீழே இருக்கம் அம்மணியின் படத்துக்கும் என்ன சம்பந்தம்? ;)

maruthamooran சொல்வது:

////லோஷன் மகன் : நான் இனிமே ஸ்கூல் போகமாட்டேன்
லோஷன் : ஏன்டா?
லோஷன் மகன் : நான் வேலை செய்யப்போறேன்
லோஷன் : யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறாய்?
லோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி|////

வந்தி மற்றும் லோஷன்………

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அடடா…….. என்னபொருத்தமடா சாமி.
வந்தி தங்களிடமுள்ள அழகாக படங்களை எனக்கு அனுப்பி வைக்கவும். நல்லத்தான் படங்கள் போடுறீங்கோ………

Unknown சொல்வது:

//புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அடடா…….. என்னபொருத்தமடா சாமி. //

இலங்கையின் தற்கால நிலைமை பற்றியும், அதன்கொள்கைகள் பற்றியும் சற்றும் விளக்கமில்லாத மருதமூரானின் அசட்டைத்தனத்தை நான் கண்டிக்கிறேன்...

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

சதத்துக்கு வாழ்த்துக்கள்.

சச்சினின் ரெக்கோர்டை பிரேக் பண்ணவும்.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

என்னா இந்த வாரம் சூப் இல்லையா என கேட்க இருந்தேன். நல்ல வேளை கேட்க முதலில் வந்துவிட்டது.

//இவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளிகள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க இவர்களோ குளிரிலும், அட்டைக் கடிகளிலும் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள். இவர்களின் வாழ்வாதார பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை.//

போராட்டம் வெற்றி 405 ரூபாய் கிடைத்து விட்டது என ஒரு சாராரும் இன்னும் போராடி 500 ரூபாயை பெற்றே தீருவோம் என மறு சாராரும் கூறுகிறார்கள். என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. தோட்ட தொழிலாளர் பற்றி எழுதியதற்கு நன்றிகள்.

//முதலில் ஒரு கட்சியில் சேர்ந்து சாதாரண தொண்டனாக கட்சிப் பணியாற்றுங்கள், பின்னர் அரசியல்வாதியாகலாம். //

நாங்க எல்லாம் நீங்க சொன்ன உதாரணங்கள் பற்றி யோசிக்க மாட்டோம் நாங்க யோசிப்பது முதல்வன் அர்ஜுன் மாதிரி ஒரே நாளில் முதல்வராவது எப்படி என. அதுக்கு எஸ்.ஏ.சி யை வேண்டுமானாலும் போட்டு தள்ளிடுவோம்.

//அயன், எந்திரன் தவிர சன் வாங்கிய அனைத்துப் படங்களும் சிறிய பட்ஜெட் சிறிய நடிகர்கள் நடித்த படங்களே. //

இந்த கூற்றை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏன் அவர்கள் வருங்கால சுப்பர் ஸ்டார், வசூல் சக்கரவர்த்தி, அடுத்த .......... திலகம் நகுல் நடித்த இரண்டு பிரமாண்ட வெற்றி படங்களை தயாரித்தவர்கள். அப்புறம் எப்படி அதை சிறிய பட்ஜட் படம் என கூறலாம், இப்படிக்கு மாசிலாமணி ரசிகர் சங்க உறுப்பினர்கள்.

//பொதுவாக மைதானத்தில் அமைதியாக காணப்படும் சங்ககார தான் ஆட்டமிழந்த பின்னர் நடந்துகொண்ட விதம் அவரின் நடத்தைக்கு களங்கம் விளைவிக்கும்.//

உண்மைதான் ஆனாலும் இந்திய பந்து வீச்சாளர்களின் நடத்தை அதை விட ரொம்பவே கேவலமானது, சச்சின் மாதிரி கண்ணியமான வீரர்கள் உள்ள டீமிலே தான் இவர்களும் இருக்கிறார்கள் என்பது கவலையானது.

கடைசியாக ஒரு சந்தோஷமான விடயம் கூறியிருக்கிறீர்கள். இனி எனது ரியுசன் மாஸ்டர் லோஷனின் மகன் தான். நன்றி.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

ஆமா நானும் கேட்க இருந்தேன் அந்த அக்காவோ? ஆன்டியொ? அவங்க படத்தை ஏன் போட்டுருக்கீங்க. அவங்களும் ரியுசன் எடுக்க போறாங்களா? அப்படினா என்னையும் ரியுசனில் சேர்த்து விடுங்களே..

SShathiesh-சதீஷ். சொல்வது:

முதலில் சதத்துக்கு வாழ்த்துக்கள். இதுவரை லோஷன் அண்ணா இப்போ மகனுமா? நடக்கட்டும் நடக்கட்டும்............ மைதானத்தில் முதலில் துடுப்பாடும் அணிக்கு தான் வெற்றி என தெரிந்தும் போராடிய இலங்கை அணிக்கு இந்திய ரசிகனாக என் வாழ்த்துக்கள். ஆனால் ஒன்று இது போன்ற ஆடுகளங்கள் எப்போ சரிசெஇயப்படுமோ? தன் வினை தன்னை சுட்டு விட்டது. அந்த ஆண்டியின் படத்தை எங்கே சுடீர்கள் இப்படிப்படம் போடும் உங்களுக்கு பட்டம் ஒன்று வழங்கலாம் போல இருக்கே.

நையாண்டி நைனா சொல்வது:

ok...
Right.

நிகிதா சொல்வது:

யோ வாய்ஸ் (யோகா), and SShathiesh

என்னை ஆண்டி என்பதற்க்கு பலத்த கண்டனங்கள்.

Anonymous சொல்வது:

//லோஷன் : யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறாய்?
லோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி|//இலங்கையிலும் எல்கேஜி,யூகேஜி என்டு இப்ப மாத்தீட்டாங்களா ? ? ? ...

வேந்தன் சொல்வது:

சதமடித்ததிற்கு வாழ்த்துக்கள். இந்த வேகத்தில போனா இந்த வருடம் இரட்டைச்சதம் அடிக்கும் வாய்ப்பு உண்டு :)))

வந்தியத்தேவன் சொல்வது:

//Anonymous said...
இலங்கையிலும் எல்கேஜி,யூகேஜி என்டு இப்ப மாத்தீட்டாங்களா ? ? ? //

அனானி நண்பருக்கு இந்தக் கேள்வியை நீங்கள் உங்கள் பெயரிலையே கேட்டிருக்கலாமே. இங்கே இப்போது 2 1/2 வயதில் இருந்து குழந்தைகள் முன்பள்ளிக்குச் செல்லவேண்டும். அத்துடன் அவர்கள் அங்கே பிகேஜி, யூகேஜி,எல்கேஜி என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இலங்கை சம்பந்தப்பட்ட விடயங்கள் தெரியாவிட்டால் உங்கள் பெயருடன் வந்து கேள்வி கேளுங்கள். நக்கல் நையாண்டிகள் எல்லாம் வேண்டாம்.

மாயா சொல்வது:

சதத்துக்கு வாழ்த்துக்கள்!

சி தயாளன் சொல்வது:

லோசன் அண்ணாவை கலாய்த்ததற்கு கண்டங்கள்...:-)

Joe சொல்வது:

Congrats on the century!

Why the irrelevant photo of Nikita in this post? ;-)

Unknown சொல்வது:

///ஆனாலும் இந்திய பந்து வீச்சாளர்களின் நடத்தை அதை விட ரொம்பவே கேவலமானது, சச்சின் மாதிரி கண்ணியமான வீரர்கள் உள்ள டீமிலே தான் இவர்களும் இருக்கிறார்கள் என்பது கவலையானது///
யோ வாய்ஸ்... சச்சின் ட்ராவிட் மாதிரியே எல்லோரும் இருந்தால் கிரிக்கெட்டில் ஒன்றுமே இருக்காது. இஷாந்த் கொஞ்சம் கத்தினார் என்று நினைக்கிறேன். நெருக்கமான போட்டிகளில் இது சகஜம். 2004 ஆசியக் கோப்பை இறுதியாட்டத்தில் 228 ஓட்டங்களை இலங்கை தடுத்து வென்ற போது உபுல் சந்தன, சங்ககார, டில்ஷான் ஆகிய மூவரும் மோசமான நடத்தைக்காக தண்டிக்கப்பட்டார்கள். விளையாட்டு வீரர்களைப் பொம்மைபோல் விளையாட வைக்கிறது ஐ.சி.சி என்பது என்னுடைய குற்றச்சாட்டு.. உணர்ச்சி காட்டாமல் எப்படி விளையாடுவதாம்??? (சச்சின், ட்ராவிட் இந்த உணர்ச்சி ஏரியாவைக் கடந்தவர்கள்)

Subankan சொல்வது:

//லோஷன் மகன் : நான் இனிமே ஸ்கூல் போகமாட்டேன்
லோஷன் : ஏன்டா?
லோஷன் மகன் : நான் வேலை செய்யப்போறேன்
லோஷன் : யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போறாய்?
லோஷன் மகன் : எல்கேஜி கேர்ல்ஸ்சுக்கு ரியூசன் எடுக்கபோறேன் ஹிஹி|
//

இதுதானே இங்க நடந்துட்டிருக்கு.

சத்ததிற்கு வாழ்த்துக்கள்.