இன்னும் சிறிது நேரத்தில் விரோதி என்னும் புத்தாண்டு பிறக்க இருக்கின்றது. பெயரே பயங்கரமாக இருக்கின்றது. இந்தப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் அகில உலகமே ஈழத்தமிழர்களின் அவலத்தை வெளியுலகிற்க்கு கொண்டுவந்துள்ளது.
சகல இடங்களிலும் ஏதோ ஒருவகையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையில் வடக்கு கிழக்கில் கொடிய யுத்தத்தாலும், ஏனைய இடங்களில் ஆக்கிரமிப்புகளாலும் தமிழர்கள் கஸ்டப்படுகின்றார்கள்.
புலம்பெயர் நாடுகளில் கொட்டும் மழையில் மத்தியிலும் உறவுகளுக்காக குரல் கொடுக்கின்றார்கள்.
ஆகவே இப்படியான ஒரு சூழ்நிலையில் புதுவருட வாழ்த்துக்கள் என்பது வேண்டப்படாத ஒரு விடயம்.
கடந்த பல வருடங்களாக சாந்தியையும் சமாதானத்தையும் வேண்டி நின்றோம் ஆனால் இதுவரை அவை இரண்டும் எங்களுக்கு கிடைக்கவில்லை ஆனாலும் மனம் தளராமல் இம்முறையும் வேண்டி நிற்போம், நம்பிக்கைதான் வாழ்க்கை.
பின் குறிப்பு : இது எண்ணிக்கையில் எனது நூறாவது பதிவு.
ஹவுஸ் வைப்
-
*“ஹவுஸ் வைப்”*
அவளின் மொத்த உலகத்தையும்
இரண்டு வார்த்தைகளில் சுருக்கி,
அதை ஒரு கௌரவப் பட்டமாக
அவள் கழுத்தில் மாட்டிவிடுகிறார்கள்.
“உங்கள் மகள் எங்கள் வீட்ட...
1 week ago
