Showing posts with label ஐபிஎல். Show all posts
Showing posts with label ஐபிஎல். Show all posts

*** வியாபாரமாகும் விளையாட்டு. ***

கன‌வான்களின் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் ஆரம்ப கால‌ங்களில் பெரிதாக பணம் புழங்கவில்லை. அதுவும் ஐந்துநாள் டெஸ்ட்போட்டிகளில் கோப்பைக்குத்தான் போட்டி. பின்னர் ஒரு நாள் போட்டிகளின் ஆதிக்கமும், 83 உலகக்கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியின் எழுச்சியும் கிரிக்கெட்டை பணக்காரர்களின் விளையாட்டாக உருவெடுக்க வைத்தது. இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை என ஆசிய அணிகள் உலகக்கோப்பையை வென்றதன் பின்னர் உலக கிரிக்கெட் அரங்கில் வெள்ளையர்களின் விளையாட்டு ஆசியர்களின் கைகளுக்கு வந்தது. நாட்டுக்காக விளையாடிய வீரர்கள் காசுக்காக விளையாட ஆரம்பித்தார்கள். சில வருடங்களுக்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் விளம்பரத்தில் காட்டுகின்ற அக்கறையை விளையாட்டில் காட்டமறுத்து அடிமேல் அடிவாங்கினார்கள். மேற்கிந்தியவீரர்கள் தங்களுக்கு தகுந்த சம்பளம் இல்லை என்று போர்க்கொடிதூக்கினார்கள். லாராகூடதன் அணித்தலைவர் பதவியை இதற்காக ராஜினாமாச் செய்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உலகில் பணக்கார அமைப்பாக மாறியது. இந்தியாவில் ஏனைய விளையாட்டுக்களை விட கிரிக்கெட்டுக்கு பணம் அதிகம் செலவு செய்யப்படுகின்றது(ஆதாரம் க‌டந்த இரண்டுவார நீயா? நானா?). இதனால் ஹாக்கியில் படுதோல்வி அடைந்து இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்கமுடியாத நிலை வந்தது.


க‌டந்த வருடம் இந்திய அணிக்கு உலககோப்பையில் ஏற்பட்ட படுதோல்வி விளையாட்டில் நிஜமான அக்கறையுள்ள கபில்தேவ் போன்ற சிலரை சீற்றமடைய வைத்தது. இதனால் ஐசிஎல்(இந்தியன் கிரிக்கெட் லீக்) உருவானது. ஐசிஎல்லுக்கு இந்தியாவில் மறைமுகமான தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பெரும்பாலும் ஐசிஎல்லில் விளையாடிய விளையாடுகின்ற ஏனைய நாட்டு வீரர்கள் உட்பட அனைவரும் மூத்தவீரர்களும் தங்கள் நாட்டு அணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுமாவார்கள். சிறந்த உதாரணமாக இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மாவன் அத்தப்பத்துவைக் குறிப்பிடலாம். ஐசிஎல்லுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் ஐபிஎல்(இந்தியன் பிரிமியர் லீக்)உருவாக்கப்பட்டு பெரும் செலவில் ஒரு 20க்கு 20 போட்டியையும் கிரிக்கெட் வீரர்களுடன் சினிமா நடிகர்களையும் வைத்து நடாத்திமுடித்தார்கள். வீரர்கள் அடிமைகள் போல் விலைபேசப்பட்டு தங்கள் எஜமானர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார்கள். எஜமானர்களையே எதிர்த்த சிலரும் உண்டு. (ராகுல் ராவிட் மல்லையா பனிப்போர்). டோணி விலை கூடிய வீரராக இருந்தார்.

பின்னர் சில சர்ச்சைகளுடன் ஐபிஎல் போட்டிகள் இனிதே நிகழ்ந்தன. பிரீத்தி ஜிந்தாவின் கட்டுப்பிடி வைத்தியமும் ஹர்பஜனின் அறையும் மறக்கமுடிய்தா நிகழ்வுகள் ஆகின. மீண்டும் சில நாட்களுக்கு முன்னர் வங்களாதேச வீரர்கள், பாகிஸ்தான் வீரர்கள் தங்களது கிரிக்கெட் சபைகளை எதிர்த்து கபில்தேவின் ஐபிஎல்லில் விளையாட முடிவு செய்தார்கள். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஐசிஎல்லில் விளையாடும் வீரர்களின் தடையை நீக்கியது. இங்கிலாந்து கவுண்டிகளில் எந்த வீரரும் விளையாடமுடியும் ஆனால் ஐசிஎல்லில் விளையாடும் வீரர்களை அணியில் சேர்த்துக்கொள்ளமாட்டோம் என பல கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைகள் ஐசிசிக்கு பயந்து கூறிக்கொண்டன. ஐசிஎல்லில் விளையாடும் இலங்கை வீரர்களின் மீதான தடையை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அண்மையில் நீக்கியது ஆனாலும் மீண்டும் இந்த தடை வரலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஐசிஎல்லுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் ஐபிஎல்லும் செய்யும் சதிகளைப் பலரும் அறிந்தாலும் ஏனோ குரல்கொடுக்க தய‌ங்கவில்லை. பல நாடுகளில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைகள் தனித்த அமைப்பாக இயங்கும்போது ஆசிய நாடுகளில் மட்டும் அரசியல்வாதிகளின் கைப்பிடிக்குள் அடங்கியிருப்பது வேதனைக்குரியது. அதேபோல் தெரிவுக்குழுவும் தங்களிற்க்கு பிடித்தவர்களைத் தான் தெரிவுசெய்கிறார்கள். சொதப்புகின்ற வீரர்களை மீண்டும் மீண்டும் எடுப்பார்கள், சிறந்த உதாரணம் அகர்கார். அதே நேரம் திறமையுள்ள வீரர்களுக்கு ஏனோ இடம் கொடுப்பதில்லை. ஐபிஎல்லில் திறமையாக விளையாடிய ஷான் மார்ஷ் இன்றைக்கு அவுஸ்திரேலிய அணியில் ஆரம்பவீரராக பரிமாணம் எடுத்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ ஹைடன் தான். ஆனால் இந்தியவீரர்களில் பிரகாசித்த பத்ரினாத், கோணீ, யுசூப் பதான், போன்ற வீரகளுக்கு ஓரிருபோட்டிகளில் மட்டும் இடம்கொடுத்து அவர்களை மீண்டும் ஒதுக்குகின்றனர் தெரிவாளர்கள். ஐசிஎல் என்றால் என்ன ஐபிஎல் என்றால் என்ன இரண்டும் திறமைக்கு இடம் கொடுக்காமல் பணத்தினால் எவரையும் வாங்கிவிடமுடியும் என நினைக்கின்றார்கள். இரண்டுபோட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்காது திறமைக்கேற்ற ஊதியம் என்றால் எத்தனை வீரர்கள் போட்டி போட்டுகொண்டு இணைவார்கள். அத்துடன் திறமையாக விளையாடினாலும் அணியில் சில நந்திகள் இருக்கும்வரை இளம் வீரர்களுக்கு இடமில்லை என்பதே யதார்த்தம் .

சச்சினும் கங்குலியும்

நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸுடன் நடந்த போட்டியில் மும்பை இந்தியன் அணி மிக இலகுவாக வென்றது அனைவரும் அறிந்ததே. இந்த மேட்சில் இலங்கை அதிரடி வீரர் ஜெயசூர்யா இந்த போட்டியில் தான் தன் அதிரடியைக் காட்டினார். அவர் 50 அடித்தபோது கூட இருந்த சச்சின் சும்மா ஒரு போமலிட்டிக்காக அவரது கைஉறையில் ஒரு தட்டு மட்டும் தட்டினார். மற்றவர்கள் போல் கட்டி அணைக்கவில்லை. பின்னர் சச்சின் அவுட்டானதும் ஜெய‌சூரியா சதமடித்து போட்டியை நிறைவு செய்தபின்னர் போலக் போன்ற வீரர்கள் ஜெயசூர்யாவை கட்டி அணைத்துப்பாராட்டினார்கள் ஆனால் சச்சின் ஜஸ்ட் ஒரு சிரிப்புடன் கைகொடுத்து மட்டும் விட்டுவிட்டார். என்ன காரணமோ?





இதற்கு முதல் நாள் கோல்கத்தாவில் நடந்த போட்டியில் கங்குலியின் கோல்கத்தா சேவாக்கின் டில்லை அணியை வென்றதும் அதற்க்கு காரணமான பாகிஸ்தானின் வேகம் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் அக்தரை கங்குலி ஷாருக்கான் உட்பட அனைவரும் கட்டி அணைத்தது ஒருவர் மேல் ஒருவர் தாவியும் தங்கள் அன்பையும் பாராட்டையும் செலுத்தினார்கள். இத்தனைக்கும் ஒரு பாகிஸ்தான் வீரர் இந்திய வீரரான சேவாக்கை டக் அவுட் செய்ய ஈடன் கார்டனில் ஏற்பட்ட மக்களின் சத்தம் ராவல்பிண்டிக்கே கேட்டிருக்கும்.

கங்குலிக்கு இருக்கும் பெரும்தன்மை ஏன் சச்சினுக்கு இல்லை?

6 கோடி = ஒரு ஓட்டம் ஐபிஎல்

இன்றைய போட்டியில் ஐபிஎல்லின் விலை உயர்ந்த துடுப்பாட்ட வீரர் மகேந்திர சிங் டோணி எடுத்த ஓட்ட எண்ணிக்கை 1 மட்டுமே.


டோணி இது சரியா?

நண்பர் ஒருவரின் குறிப்பு
இந்த ஐபிஎல் கிரிகேட் போட்டிக்கள் இந்திய அணியின் வீரர்களுக்கு ஈகோவை உண்டு பண்னிவிடலாம். இப்போது நடக்கும் போட்டியில் கங்குலி அணி எல்லா அணியையும் வெற்றிகண்டு பரிசை வென்றால் இந்திய ஒருமித்த அணியில் தோனி இடம் கொடுப்பாரா என்று சந்தேகம் உண்டு. அதேபோல தோனியை வெற்றிகொள்ளும் எந்த ஐபிஎல் அணி கேப்டனுக்கும் சுண்ணாம்புதான் என்று பட்சி சொல்கிறது. முக்கியமாக ஈகோவில் கபடியாடும் யுவராஜ், கங்குலி போன்றோர் தோனியை நொறுக்க இதுதான் வாய்ப்பென காத்துகொண்டிருப்பதாக இணைய உளவாளர் ஒருவர் கூறுகிறார்.