எனக்காக ஒரு நிமிடம்

நண்பர்களே
நண்பர் கோவி கண்ணனின் வலையில் இருந்த சுலபமான வழிமுறையைப் பின்பற்றி தீர்வு கிடைத்துவிட்டது. இதனை பின்னூட்டிய நையாண்டி நைனா அவர்களுக்கு நன்றிகள்.இதே போன்ற தீர்வைத் தந்த நிமல் மற்றும் மதுவிற்க்கும் நன்றிகள்.


அன்பு நண்பர்களே
என் வலையில் பல நாட்களாக ஒரு பிரச்சனை. அண்மைக்காலங்களில் பல நண்பர்கள் இந்தப் பிரச்சனை பற்றி நேரிலும், தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் சிலாகித்தார்கள்.

அதாவது என்னுடைய பதிவுகளைச் சொடுக்கினால் பின்னூட்டம் இட்டவர்களின் பெயர் தெரிவதில்லை. போஸ்ட் கொமெண்ட் லிங்கைச் சொடுக்கினால் மாத்திரம் அவர்களின் பெயர் தெரியும்.யார் யார் பின்னூட்டம் இட்டிருக்கின்றாகள் என ஒரே தடவையில் பார்க்கமுடியவில்லை என பலர் குறைப்பட்டார்கள். இதே பிரச்சனை எங்கள் டொக்டர்.எம்.கே.முருகானந்தம் அவர்களுக்கும் இருக்கின்றது.

நேற்று முழுவதும் புல்லட், ஆதிரை, சினேகிதி, கெளபாய் மது என நண்பர்கள் என்னுடன் சேர்ந்து (இணைய வழி மூலம்)இந்தப் பிரச்சனையைத் தீர்க்க கடினமாக போராடினார்கள். சினேகிதி ஓரளவு தீர்வைக் கண்டுபிடித்தும் பிழையான தகவல் என Message வருகின்றது.

நான் எழுதும் ஏனைய வலைகளான சகலகலாவல்லவன், ஈழத்துமுற்றம் போன்றவற்றின் HTML Code உடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பின்னூட்டம் பகுதியில் சில வேறுபாடுகளை அவதானித்தேன், ஆனால் அவற்றை அழித்துவிட்டு புதிய பின்னூட்டதிற்கான coding இடும் போதும் என்னுடைய வலையின் வடிவமும் மாறுகின்றது, அத்துடன் மீண்டும் தகவல் பிழையென Message வருகின்றது.

இதற்கான தீர்வு என்ன? தகவல் தொழில்நுட்பப் புலிகள் எனக்கு உதவுங்கள்.

யாழ்தேவிக்கு ஒரு தகவல்.

இன்றுமுதல் என்னை தங்கள் திரட்டியின் நட்சத்திரப் பதிவராக அழைத்தமைக்கு நன்றிகள். உங்கள் மின்னஞ்சல் இன்று காலையில் தான் கிடைத்தது. தயவு செய்து நட்சத்திரப் பதிவர்களுக்கான அழைப்பினை ஒரு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பதிவர்களுக்கு அறியத் தந்தால் அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

ஏனென்றால் ஒரு திரட்டியின் நட்சத்திரமாக இருக்கும் காலத்தில் கொஞ்சமேனும் நல்ல பதிவுகள் எழுதமுடியும். தங்களின் திரட்டி புதிது என்பதால் என் கண்டனங்களைத் தெரிவிக்காமல், ஏதோ என்னால் முடிந்தவரை சிறப்பாக எழுத முயற்சிக்கின்றேன்.

இனிமேல் இந்தத் தவறை விடவேண்டாம், என்பதை நட்புரீதியில் உங்களிடம் சொல்லிக்கொள்கின்றேன்.

முடிந்தவரை தினம் ஒரு பதிவு எழுத முயற்சி செய்கின்றேன். சென்ற வருட செப்டம்பரில் தமிழ்மண நட்சத்திரம், இந்தவருடம் யாழ்தேவியில் நட்சத்திரம்.

13 கருத்துக் கூறியவர்கள்:

என்ன கொடும சார் சொல்வது:

Template ஐ மாற்றுங்கள். எப்போதும் வெற்றிகரமாக இயங்கும் Templateகளை மாத்திரம் தேர்ந்தெடுக்கவும். Blogger இல் கிடைக்கும் Templateகள் மாத்திரம் நம்பிக்கைக்குரியவை. அவற்றை உங்கள் தேவைக்கேற்றாற்போல் மாற்றுவதும் இலகு..

புருனோ Bruno சொல்வது:

வார்ப்புருவை மாற்றினால் சரியாகிவிடும்

SurveySan சொல்வது:

ஒரு ஜாவாஸ்க்ரிப்ட் இருக்கு அதை ஏத்தினா சரியாகிடும். தேடிக்கிட்டே இருக்கேன். கெடச்சா சொல்றேன்.

டெம்ப்ளேட் மாத்துவதும் வர்க் அவுட் ஆகும்.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

முதலில் உங்களுக்கு நட்சத்திர பதிவாளராகியதற்கு வாழ்த்துக்கள். இந்த வாரம் முழுவதும் இனி அடிச்சி தூள் கிளப்புங்க..

பின்னூட்ட விடயத்துக்கு பல வழிகள் இருந்தாலும் இலகுவானது டெம்ப்ளேட் மாற்றுவது தான்...

Admin சொல்வது:

நட்சத்திரப் பதிவராகியமைக்கு வாழ்த்துக்கள்.


நானும் அவதானித்த விடயம்தான். temlete மாற்றினால் சரியாகிவிடும்.

நையாண்டி நைனா சொல்வது:

Dear Friend,
Here is your solution.

Admin சொல்வது:

சில விடயங்களை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்திருக்கின்றேன்.

Unknown சொல்வது:

வந்தியத்தேவனுக்கு யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவர் மகுடத்துக்கான வாழ்த்துக்கள்.

நீங்கள் குறிப்பிட்ட பின்னூட்டம் சார்பான விடயத்துக்கு வார்ப்புருவை மாற்றுவதே சிறப்பானதாகும், எனக்கும் முன்பு ஒரு தடவை இப் பிரச்சனை ஏற்பட்டிருந்தது.

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றிகள் நண்பர்களே நீண்ட நாள் பிரச்சனை உங்களின் உதவியால் தீர்க்கப்பட்டுவிட்டது.

வேந்தன் சொல்வது:

நட்சத்திர வாழ்த்துக்கள் :)))

மாயா சொல்வது:

நட்சத்திர வாழ்த்துக்கள் !

தங்க முகுந்தன் சொல்வது:

வந்தியத்தேவரே! யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவரானதற்கு வாழ்த்துக்கள்!
நான் கடந்தவாரம் பட்டதை நீங்கள் இப்போ செய்யுங்கள்! உங்களுக்கு என்ன? அடிக்கடி எழுதுபவாரச்சே! கலக்குங்கள்!

Unknown சொல்வது:

நட்சத்திரப் பதிவராகியமைக்கு வாழ்த்துக்கள்..
கலக்குங்கள்...
Template பிரச்சினை சரியாகியமை எனக்கும் மகிழ்ச்சி தான், ஏனென்றால் எனது பின்னூட்டங்களுக்கு பின்னர் வந்த பின்னூட்டங்களை நான் வாசிக்க வரும்போது அவஸ்தைப்பட்டிருக்கிறேன் உங்கள் தளத்தில்.
வாழ்த்துக்கள் மீண்டும்.