இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - நிகழ்ச்சி நிரல்


வணக்கம் நண்பர்களே

இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்புக்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்துள்ளோம். நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகமான நண்பர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு


காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.



நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • பதிவர்கள் அறிமுகம்
  • வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
  • திரட்டிகள்
  • சிறப்பு அதிதி உரை
இடைவேளை
  • வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
  • வலைப்பதிவும் சட்டமும்
  • பதிவுலக அனுபவங்கள்
  • எதிர்காலத் திட்டங்கள்
  • கலந்துரையாடல்
  • நன்றியுரை
இதுவரை எம்முடன் தொடர்புகொண்டு வருகையை உறுதி செய்யாதவர்கள் தயவு செய்து எதிர்வரும் புதன்கிழமைக்கு(19.08.2009) முன்னர் தொடர்புகொள்ளவும்.

லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

4 கருத்துக் கூறியவர்கள்:

maruthamooran சொல்வது:

வந்தி....
தங்களின் நிகழ்ச்சி அறிவித்தலுக்கு நன்றி.... வலைப்பதிவு தொழிநுட்பங்களில் என்னென்ன விடயங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்று அறியத்தரவும். அவ்வாறு அறியத்தரும் பொழுது அவ்விடயத்தை செம்மையாகச் செய்ய உதவும். சிறப்பு அதிதியாக யார் வருகிறார்கள் என்று குறிப்பிடவில்லையே? அதையும் அறியத்தரவும். வாழ்த்துக்கள்.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தி, சந்திப்பு இன்புற வாழ்த்துக்கள். என்னால் அநேகமாக வர இயலாது. எனினும் என் மனம் உங்கள் சந்திப்பில் பங்கு கொள்ளும்.

மாயா சொல்வது:

வணக்கம் !

சக வலைப்பதிவர் சிங்கை நாதன் இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அவரின் இவ் வைத்தியச் செலவுகளுக்கான உதவிகளை சக பதிவர்கள் உலகெங்குமிருந்து உதவி வருகின்றனர்.

23ம் திகதி இலங்கை பதிவர் ஒன்றுகூடல் நடைபெற இருக்கும் அந்நாளில் இலங்கைப்பதிவர்கள் அனைவரும் தங்களால் இயன்றளவு தொகையை அன்றே திரட்டி சிங்கை நாதன் அவர்களுக்கு அனுப்பினால் நல்லது. இதை ஏற்பாட்டுக்குழுவிலுள்ள யாரேனும் செய்யலாம். இன்றுவரை அவருக்கு தேவையான பணத்தேவையில் அரைப்பங்கு தான் சேர்ந்துள்ளது. எனவெ நண்பர்களே வரும் 23ம் திகதி இது தொடர்பாகவும் கலந்துரையாடுங்கள் நிதியைச் சேருங்கள். நண்பர் விரைவாக நலம்பெறப் பிரார்த்தியுங்கள்.

அறுவை சிகிச்சைக்கு பெரும் பொருளுதவி தேவைப்படுகிறது, பதிவர் நண்பர்கள் இயன்றதை அளித்தும், நீங்கள் அறிந்த சேவை அமைப்புகளிடம் பேசி பொருளுதவி பெற்றுத் தந்து நம்மில் ஒருவரான நண்பர் சிங்கை நாதனின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும்.

நீங்கள் தருவது எவ்வளவு குறைவாக இருந்தாலும் கொடுங்கள்.

சிறுதுளி பெருவெள்ளமென உணர்த்துவோம்

இலங்கை வலைப்பதிவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகளுடன்
மாயா

மாயா சொல்வது:

நிகழ்ச்சி நிரலுக்கு நன்றி . . .

நிறைவுடனும் சிறப்பாகவும் நடைபெற வாழ்த்துக்கள்