ஆகஸ்ட் 1 புல்லட்டின் இலங்கைப் பதிவர் சந்திப்பு 2009 ஐ வாசித்தேன், வாசித்ததும் கோபம் புல்லட் தலைமையில் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பதிவர் சந்திப்பைப் பற்றி எழுதியிருந்தார். பிறகுதான் பார்த்தால் அது அவரின் கனவாம்.
சரி புல்லட்டின் கனவை நனவாக்குவோம் என நினைத்து அவருக்கு ஒரு உடனேயே ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.
"அன்பின் புல்லட்
இலங்கைப் பதிவர் சந்திப்பை ஒழுங்குபடுத்துங்கள் வேண்டிய உதவிகள் செய்கிறேன். பல காலமாக ஒத்திவைத்த பதிவர் சந்திப்பு இம்முறையாவது நடக்கட்டும்."
உடனேயே அவரும் பதில் போட்டார் இந்த மின்னஞ்சலுடன் ஆரம்பமாகியது எங்கள் கலகலப்பான பயணம்.
பின்னர் புல்லட்டின் தொலைபேசி இலக்கம் கிடைத்தது. என்னை 3ந்திகதி திங்கட்கிழமை வெள்ளவத்தை நளபாகம் சாப்பாட்டுக்கடைக்கு மாலை 6.30 மணியளவில் வருமாறு கேட்டிருந்தார்.
ஏற்கனவே வெள்ளவத்தையில் நிற்கும் என் நண்பனைச் சந்தித்திவிட்டு நானும் என் நண்பனும் அதே கடையில் புல்லட் வரும் வரை பால் அப்பம் சாப்பிட்டபடி காத்திருந்தோம். அப்போது ஒரு இளைஞர்கள் பட்டாளம் கடைக்குள் நுழைந்தது. அவர்களில் யார் புல்லட் என அறிய நான் தொலைபேசியில் புல்லட்டை அழைத்தேன். அதே நேரம் அந்தக்கூட்டத்தில் இருந்த ஒரு தடித்த பொடியனின் தொலைபேசி அடித்தது உடனே நான் எழும்பிச் சென்று அவரை "நீங்கள் தான் புல்லட்டா" எனக் கேட்க அவர் முழுசியபடி "புல்லட்டா நான் புல்லட் இல்லை நீங்கள் பிழையாக நினைத்துவிட்டீர்கள்" என என்னை அசடு வழியச்செய்தார்.
அப்போது மீண்டும் என்னை புல்லட் தொலைபேசியில் அழைத்தார் தான் நளபாகத்திற்க்கு வெளியில் நிற்பதாக கூறினார். உடனே நான் வெளியே சென்றுபார்த்தால் ஒரு சிரித்த முகம் வாங்கோ வந்தி என அழைத்தது, கூடவே இன்னொரு சிரித்த ஆனா முகத்தில் ஒரு அறிவுக்களை நிரம்பிய இன்னொருவர். இவர்கள் இருவருடன் அவர்களீன் நண்பர்கள் இரண்டு பேர்.
முதலில் என்னை அழைத்தவர் தன்னை புல்லட் என அறிமுகப்படுத்திக் கொண்டார். மற்றவர் ஆதிரை. நான் புல்லட் என்றால் ஜிம் பாடியுடன் ஒரு கரடுமுரடான உருவம் இருக்கும் என நம்பியிருந்தேன். எல்லாவற்றையும் சிதறடித்து நல்ல நகைச்சுவை உணர்வுள்ள ஒருவரைக் கண்டேன்.
ஆதிரை என்னை முதலில் கேட்ட கேள்வி நீங்கள் ஹாட்லிக் கல்லூரியா? நானும் ஓம் எப்படித் தெரியும் என்றேன். உடனே ஒரு வாரத்திற்க்கு முன்னர் நடந்த எங்கள் பழைய மாணவர் சந்திப்பில் என்னைக் கண்டதாகக் கூறினார். அப்போதான் புரிந்தது அவரது முகத்தில் எப்படி அறிவுக்களை வந்தது என்று( ஹிஹி சும்மா).
நான் கதைத்தது எதுவும் விளங்காமல் அந்த இரு நண்பர்களும் ஹோட்டலினுல் சென்றுவிட்டார்கள். பல விடயங்களையும் சந்திப்பு பற்றிய விடயங்களையும் பேசிக்கோண்டிருந்தோம். அப்போதுதான் புல்லட் நான் எத்தனையாம் ஆண்டு ஏஎல் எடுத்தது எனக்கேட்டார், எங்கடை நாட்டிலை எப்போ ஏஎல் எடுத்தீர்கள் எனக்கெட்டால் அவரின் வயதை இலகுவாக அறியமுடியும். நானும் உண்மையான வருடத்தைச் சொல்ல வந்தி என்றவர் வந்தி அண்ணா எனத் தொடங்கினார்.
ஆதிரையை நான் கேட்டேன் எப்போ ஹாட்லியில் அடிவைத்தீர்கள் என அவர் சொன்ன வருடத்தில் நான் பாடசாலை வாழ்க்கையை முடித்து விலகிவிட்டேன்.
சிறிது நேரத்தில் புல்லட் சொன்னார் அண்ணா கொஞ்ச நேரம் நில்லுங்கள் ஒரு பார்சல் புட்டுக் கட்டிக்கொண்டு வாறன் எண்டார். அப்போதான் எனக்கு புல்லட்டின் உடம்பின் ரகசியம் புரிந்தது. புட்டும் குழம்பும் சாப்பிட்டு உடம்பைத் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.
பின்னர் அப்படியே புல்லடின் வீதிவரை சென்று அவரை வழி அனுப்பிவிட்டு நான் இனிமையான நினைவுகளுடன் வீடு திரும்பி லோஷனுக்கு மெயில் அனுப்பினேன். இரண்டு சிங்கம்கள் தானாகவே வலையில் வந்து மாட்டிவிட்டார்கள். இவர்களின் உதவியுடன் நாம் இம்முறை பதிவர் சந்திப்பை முன்னின்று நடத்துவோம் என்றேன். அதற்கு லோஷன் தன் பழைய கால சில கசப்பான நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தும் அனுபவங்களால் நீங்கள் முன்னின்று செய்யுங்கள் நான் பின்னாலிருந்து உதவி செய்கின்றேன் என்றார்.
5ந்திகதி அனைவரின் கருத்துக்கும் அமைய என்னால் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலமும், மின்னஞ்சல் முகவரிகள் தெரியாதவர்களுக்கு அவர்களின் வலைகளில் பின்னூட்டம் மூலமும் எம்மைத் தொடர்புகொள்ளச் சொல்லி பின்னூட்டம் அனுப்பினேன்.
அடுத்த நாள் லோஷனிடம் இருந்து ஒரு மெயில்.
அது என்ன அடுத்த பதிவில் அடுத்த பதிவை எப்படியும் இன்றிரவிற்க்குள் எழுதிவிடுகின்றேன்.
Box Office Report This Week Jul-4
-
*Box Office: Paranthu Po, 3BHK, Maargon, *
1 Day: Paaranthu Po - 40L (Approx)
1 Day: 3BHK - 80L (Approx) Inclusive of Telugu
8 day: Maargon- 7.5 Cr (Approx)...
19 hours ago
11 கருத்துக் கூறியவர்கள்:
சுவாரசியமான இடுகை! :-)
இது Making of பதிவர் சந்திப்பு
வந்தியின் கோணத்திலா?
//வந்தி என்றவர் வந்தி அண்ணா எனத் தொடங்கினார்.//
சரிசரி புல்லட் உங்களை அண்ணா எண்டுதான் கூப்பிட்டார். ஆனால் நான் உங்களை வந்தி அங்கிள் எண்டு கூப்பிடலாம் எண்டு நினைத்தேன்.
உங்கட வயது உங்கட பதிவில் இருந்து.
1981 என நினைக்கின்றேன் அப்போது எனக்கு கிட்டத்தட்ட 5 வயது...(எனக்குள் ஒரு ரசிகன் - பகுதி 1)
அப்போ நீங்க பிறந்தது ~1976.
வந்தி அங்கிள் என்ட கணக்கு சரியா? :)))
அட அப்ப நான் உங்கட ஏஎல் பச் கேட்டது உங்கட வயசை கண்டுபிடிக்கத்தான் எண்டு தெரியுுமோ? ஹிஹி! நல்ல காலம் , தம்பி எனக்கு 45 வயசு எண்டு நேர சொல்லியிருந்தீங்களெண்டால் அதிர்ச்சியாகியிருப்பன்.. ;)
கல்குலேட் பண்ண கொஞ்ச நேரமெடுத்ததால அந்த அதிர்ச்சி வெளிப்படவில்ல..
அது சரி எப்பிடி யூத்தா தெரியுறியள்? நளபாகம் பாலப்பம் சாப்பிட்டுதானோ ? ;)
என்ன இருந்தாலும் இத்தனை வயசாகியும் நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு .. யோகாசனம் செய்யுறனியளோ?
( அன்பர்களே ! நான் சும்மா நக்கலுக்கு சொன்னேன்.. வந்தியண்ணர் இன்னும் கட்டுக்குலையாத யூத்துக் காளை..அடக்குவதற்கு அன்பான பெண்கள் தேடப்படுகிறனர்.. )
கட்டுக்குலையாத யூத்துக் காளை..//
கட்டவிழ்த்தா சீறிப்பாய்வார் என்பதால கட்டவிழ்க்கப்போறவர் பலசாலியா இருக்கணுமோ.. :) :)
// சந்தனமுல்லை said...
சுவாரசியமான இடுகை! :)//
நன்றிகள் சந்தனமுல்லை.
//யோ வாய்ஸ் said...
இது Making of பதிவர் சந்திப்பு
வந்தியின் கோணத்திலா?//
ஆமாம் அதே தான் என் பார்வையில், நாம் எப்படி இயங்கினோம் என அறிந்தால் தான் வருங்கால் ஒருங்கிணைப்பாளர்கள் இலகுவாக இயங்கமுடியும்.
//வேந்தன் said...
உங்கட வயது உங்கட பதிவில் இருந்து.
1981 என நினைக்கின்றேன் அப்போது எனக்கு கிட்டத்தட்ட 5 வயது...(எனக்குள் ஒரு ரசிகன் - பகுதி 1)
அப்போ நீங்க பிறந்தது ~1976.
வந்தி அங்கிள் என்ட கணக்கு சரியா? :)))//
கணக்கு படுபிழை. நான் என் 5 வயதில் குரு பார்த்தேன் என எழுதியுள்ளேன் ஆகவே எனக்கும் உங்களுக்கும் ஒரே வயதுதான், ஹிஹிஹி.
//புல்லட் said...
அட அப்ப நான் உங்கட ஏஎல் பச் கேட்டது உங்கட வயசை கண்டுபிடிக்கத்தான் எண்டு தெரியுுமோ//
இதே டெக்னிக்கைத் தான் நாங்கள் பாவிப்பது. நேரடியாக எனக்கு 27 வயதென்றால் நம்புவீர்களா? அதுதான் சும்மா ஏஎல் பச் எல்லாம் சொல்லியது.
//அது சரி எப்பிடி யூத்தா தெரியுறியள்? நளபாகம் பாலப்பம் சாப்பிட்டுதானோ ? ;)//
நளபாகம் பாலப்பத்தை விட நான் சாப்பிடும் இராமகிருஷ்ணா இடியப்பத்திற்கு கலோரி அதிகம் ஹிஹீ.
//என்ன இருந்தாலும் இத்தனை வயசாகியும் நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு .. யோகாசனம் செய்யுறனியளோ?//
யோகாசனம் இல்லை ஜிம்முக்கு போறது அத்துடன் ஞாபகசக்தியைக்கூட நிறைய வெண்டிக்காய் சாப்பிடுவது. உங்களுக்கும் சிபாரிசு செய்கின்றேன்
//சயந்தன் said...
கட்டவிழ்த்தா சீறிப்பாய்வார் என்பதால கட்டவிழ்க்கப்போறவர் பலசாலியா இருக்கணுமோ.. :) :)//
இதற்கெல்லாம் பொது இடத்தில் பதில் சொல்லமுடியாது
நல்ல ஆரம்பம் வந்தி..
தலைப்பும் அசத்தல்..
// நான் புல்லட் என்றால் ஜிம் பாடியுடன் ஒரு கரடுமுரடான உருவம் இருக்கும் என நம்பியிருந்தேன்.//
நீங்கள் புல்லட் என்றவுடன் ஜிம்மி (புல் டோக்)போல இருப்பார் என்று சொன்னதாக ஞாபகம் ')
வயசு அடிக்கடி வந்திக்கு உறுத்துதோ? கவலைப் படாதீங்க ஐயா.. ஐம்பத்து வயதிலும் திருமணம் முடித்தோர் உலகில் உள்ளனர்..
கட்டுக்குலையாத யூத்துக் காளை..//..//
எந்தக் குலை இது??? கட்டு என்பது எந்தப் பொருளில் இங்கே பாவிக்கப் பட்டுள்ளது? ;)
Post a Comment