இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு - ஆகஸ்ட் 23

அன்புடைய இலங்கை வலைப்பதிவாளர்களுக்கு
நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்ட இலங்கை வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வு இந்த மாதம் நடைபெற ஏற்பாடகியுள்ளது.

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.

நோக்கங்கள் :

  • இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.
  • புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்
  • இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.
  • பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.
  • பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்
  • இன்னும் பல‌

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.

லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல்கள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

மிகவும் குறுகிய காலத்தில் இதற்க்குரிய படத்தை வ‌டிவமைத்துத்தந்த நிமலுக்கு நன்றிகள்.

36 கருத்துக் கூறியவர்கள்:

அறிவிலி சொல்வது:

சிறப்பாக நடந்தேறிட வாழ்த்துகள்

வர்மா சொல்வது:

பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியநாள்.ஒன்றாக இணைவோம். புதுயுகம் படைப்போம்
அன்புடன்
வர்மா

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தி.. இந்த இணைப்புக்கு என்றும் என் ஆதரவு உண்டு. நாம் இலங்கையர்கள் என்ற விதத்தில் புதுமைகள் பல படைப்போம்...

Mathuvathanan Mounasamy / cowboymathu சொல்வது:

நல்லது.. எனது மின்னஞ்சலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

cowboymathu(at)gmail.com.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

ARV Loshan சொல்வது:

அனைவரையும் இணைக்க ஒரு சிறு முயற்சி.. அனைவரையும் அழைக்கிறோம்..

உங்கள் கருத்தையும் கூறுங்கள்

சி தயாளன் சொல்வது:

சந்திப்பு இனிதே நடக்க என் வாழ்த்துகள்...

பனையூரான் சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தி

Unknown சொல்வது:

நிகழ்ச்சி நிரல் எல்லாம் ஒழுங்கு பண்ணி ஏலுமெண்டால் சின்னதாக ஒரு நிறைவேற்றுக் குழுவும் அமைத்து நல்ல முறையில் நடத்துங்கோ உங்கட முதல் சந்திப்பை. அடிக்கடி சந்திக்கிறதுக்கும் ஏதாவது வழி செய்யுங்கோ. சண்டை, சச்சரவு, சர்ச்சைகள் இல்லாமல் நல்ல முறையில் மற்றவர்க்கு முன்னுதாரணமாக, உருப்படியாக (கேக்கும், வடையும் சாப்பிட மட்டும் ஒன்றுகூடாமல்) உங்கள் ஒன்று கூடல் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//அறிவிலி said...
சிறப்பாக நடந்தேறிட வாழ்த்துகள்//

நன்றிகள் அறிவிலி

வந்தியத்தேவன் சொல்வது:

//வர்மா said...
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியநாள்.ஒன்றாக இணைவோம். புதுயுகம் படைப்போம்//

நன்றிகள் வர்மா முயற்சி செய்கின்றோம் நல்லதே நடக்கும் என நினைப்போம். உங்களை எல்லாம் நேரில் சந்திக்க மிகவும் ஆவலுடன் உள்ளோம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ (Yoga) said...
வாழ்த்துக்கள் வந்தி.. இந்த இணைப்புக்கு என்றும் என் ஆதரவு உண்டு. நாம் இலங்கையர்கள் என்ற விதத்தில் புதுமைகள் பல படைப்போம்...//

நிச்சயமாக யோ எங்கள் வழியில் புதுமைகள் படைப்போம். உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் எப்படியும் வர முயற்சி செய்யவும்.

வந்தியத்தேவன் சொல்வது:

//மதுவதனன் மௌ. / cowboymathu said...
நல்லது.. எனது மின்னஞ்சலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.//

இணைத்துவிட்டேன் மதுவதனன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//LOSHAN said...
அனைவரையும் இணைக்க ஒரு சிறு முயற்சி.. அனைவரையும் அழைக்கிறோம்..

உங்கள் கருத்தையும் கூறுங்கள்//

ஆமாம் நண்பர்கலே இந்தத் திரிகளில் உங்கள் கருத்தை கூறினால் நிகழ்ச்சியை செவ்வனே நிறைவேற்ற ஏதுவாக இருக்கும். எவை பற்றி விவாதிப்பது என்பதை அறியத்தரவும்.

வந்தியத்தேவன் சொல்வது:

//டொன்’ லீ said...
சந்திப்பு இனிதே நடக்க என் வாழ்த்துகள்...//

நன்றிகள் டொன் லீ,

வந்தியத்தேவன் சொல்வது:

//பனையூரான் said...
வாழ்த்துக்கள் வந்தி//

பனையூரன் என் மின்னஞ்சல் கிடைத்திருக்கும் என நினைக்கின்றேன். எந்தவித தயக்கமும் இன்றி நீங்களும் உங்கள் நண்பர்களும் வரலாம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Kiruthikan Kumarasamy said...
நிகழ்ச்சி நிரல் எல்லாம் ஒழுங்கு பண்ணி ஏலுமெண்டால் சின்னதாக ஒரு நிறைவேற்றுக் குழுவும் அமைத்து நல்ல முறையில் நடத்துங்கோ உங்கட முதல் சந்திப்பை. அடிக்கடி சந்திக்கிறதுக்கும் ஏதாவது வழி செய்யுங்கோ. சண்டை, சச்சரவு, சர்ச்சைகள் இல்லாமல் நல்ல முறையில் மற்றவர்க்கு முன்னுதாரணமாக, உருப்படியாக (கேக்கும், வடையும் சாப்பிட மட்டும் ஒன்றுகூடாமல்) உங்கள் ஒன்று கூடல் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.//

கீத் உந்த குழு என்று வந்தால் பிரச்சனைதான். இந்த சந்திப்பின் வெற்றியில் அடுத்த அடுத்த சந்திப்புகள் நிகழும்.

ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு கருத்துக்கள் இருந்தாலும் நாங்கள் இலங்கை பதிவர் என்ற குடையின் கீழ் ஒன்றுகூடுவதால் எந்த பிரச்சனையும் வராது என நினைக்கின்றேன்.

தமிழன்-கறுப்பி... சொல்வது:

கடும் லேட்தான் இருந்தாலும்,

வாழ்த்துக்கள் நண்பர்களே...

பனையூரான் நண்பன். சொல்வது:

சந்திப்பு முடிய ஏதாவது பப்புக்கு கூட்டிக்கொண்டு போவியள் எண்டா நானும் வாறன்.

;)

Admin சொல்வது:

இலங்கைப் பதிவர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நேரம். ஏறபாட்டுக்குளுவினருக்கு நன்றிகள். அனைத்து பதிவர்களும் வருகை தந்து சந்திப்பு நல்லபடியாக அமைய என்றும் என் ஒத்துழைப்புக்களும், வாழ்த்துக்களும்

SShathiesh-சதீஷ். சொல்வது:

வெற்றியோடு ஒன்றாய் சேருவோம். கலக்குவோம். அண்ணே இதற்கான ஏற்ப்பாட்டில் நிறைய விடயங்கள் செய்ய வேண்டி இருக்கும். எனவே உங்கள் இந்த மிகப்பெரிய வேலைகளில் நானும் உதவியாக இருக்க விரும்புகின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

// தமிழன்-கறுப்பி... said...
கடும் லேட்தான் இருந்தாலும்,//

உண்மைதான் 2007ல் ஆரம்பித்த சந்திப்பு பல தடைகளால் இம்முறைதான் சாத்தியப்பட்டிருக்கிறது.

வந்தியத்தேவன் சொல்வது:

//பனையூரான் நண்பன். said...
சந்திப்பு முடிய ஏதாவது பப்புக்கு கூட்டிக்கொண்டு போவியள் எண்டா நானும் வாறன்.//
உங்கள் கேள்வி பனையூரானுக்கு அனுப்பபடுகிறது.

வந்தியத்தேவன் சொல்வது:

//சந்ரு said...
இலங்கைப் பதிவர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நேரம். ஏறபாட்டுக்குளுவினருக்கு நன்றிகள். அனைத்து பதிவர்களும் வருகை தந்து சந்திப்பு நல்லபடியாக அமைய என்றும் என் ஒத்துழைப்புக்களும், வாழ்த்துக்களும்//

நன்றிகள் சந்ரு. பலரிடம் வந்த மின்னஞ்சல்கள் இந்தச் சந்திப்பு நல்லபடியாக நடக்கும் என்பதைக் கட்டியம் கூறுகின்றது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமானவர்கள் கலந்துகொள்வார்கள் என நினைக்கின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//SShathiesh said...
வெற்றியோடு ஒன்றாய் சேருவோம். கலக்குவோம். அண்ணே இதற்கான ஏற்ப்பாட்டில் நிறைய விடயங்கள் செய்ய வேண்டி இருக்கும். எனவே உங்கள் இந்த மிகப்பெரிய வேலைகளில் நானும் உதவியாக இருக்க விரும்புகின்றேன்.//

சதீஷ் நாங்கள் ஒரு சிலர் மட்டுமல்ல திரைக்குப் பின்னால் பலர் இருக்கின்றார்கள் இந்த நிகழ்வுக்கு பக்கபலமாக. யாரும் உதவி செய்யலாம். உங்கள் உதவிகள் எமக்குத் தேவைப்படுகின்றது. நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் ஏற்பாட்டாளர்கள் தான்.

ஆதிரை சொல்வது:

இலங்கையில் முதன்முதலாக இச்சந்திப்பு நடைபெற உள்ளது மகிழ்வளிக்கின்றது. அதிகரிக்கும் வரவேற்பும் ஆதரவும் இந்நிகழ்வு சிறப்பாக அமையும் என்பதை கட்டியம் கூறுகின்றன.

பனையூரான் சொல்வது:

என்ட நண்பன் எண்டு ஆரோ விளையாடுறாங்கள் வந்தி ஆரெண்டு தெரியல்ல

Unknown சொல்வது:

இலங்கை வலைப் பதிவாளர்கள் சந்திப்பு சிறப்படைய வாழ்த்துக்கள்.

Darmaraj (எ) Darma சொல்வது:

வணக்கம் வந்தியத்தேவன் அண்ணா!
நான் தர்மராஜ் , யாழ்ப்பாணத்தில் இருந்து....

தற்போது நான் அவ்வளவாக எழுதுவது இல்லை (BLogger என்னுடைய எழுத்துக்களை கடந்த வருடம் ஆட்டையப் போட்ட பிறகு).

எனக்கு உங்கள் தனிப்பட் மடல் "ஊரோடி பகீ" மூலம் கிடைக்கப்பெற்றேன் ..
வாழ்த்துக்கள்

நன்றி!

இங்கு எல்லோரும் இலங்கையில் நடைபெறும் முதலாவது வலைப்பதிவர் சந்திப்பென்றெல்லாம் பில்டப் கொடுக்கிறாங்களே !

அப்ப....2007 -2008 காலப்பகுதியென நினைக்கிறேன்

* 2007 வருடக்கடைசியில அப்போ வலைப்பதிவு எழுதி வந்த எல்லோருக்கும் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு நடக்கப்போகுதெண்டு ஒராள் மின்னஞ்சல் மூலமாக அழைப்பனுப்பியிருந்தார்

*சிலர் தங்களுக்கு பயமா இருக்கு வரமாட்டமெண்டு சொல்லி மறுமொழி அனுப்பியிருந்தனர், சிலர் தாங்கள் வாறதா உறுதியாக சொல்லியிருந்திச்சினம் (நான் முதல் வகை ஆள்)

* பிறகு நான் உதப்பற்றி மறந்து போனன்

* அதுக்குப்பிறகு அவை ஏதோ ஏழெட்டுப்பேர் வெள்ளவத்தையில் எங்கையோ சந்தித்ததாகவும் தனக்கு இது பற்றி சொல்லவில்லையெனவும் நந்தவனத்து ஆண்டி சொல்லி அழுதிருந்தார் :(

* பிறகு தான் அதுபற்றி பகீயிடம் விசாரித்த போது தானும் போயிட்டு வந்தனான் என்டு சொன்னான் !!!!!! (அடப்பாவி சொல்லவேயில்ல)

* அந்தச்சந்திப்பில யார் யார் சந்திச்சைவையென்டு எனக்கு தெரியவும்இல்லை அதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படவுமில்லை . . . (8 பேர் சந்தித்துக்கொண்டதாக கேள்வி)

இது பற்றி உங்களுக்கு நிச்சயமாக வந்தியத்தேவன் அண்ணாவாகிய உங்களுக்கு தெரிந்திருக்கும்.. ஆனால் இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் உங்களிடமிருந்து வெளிவரவில்லை .... (ஆரம்ப பதிவுகளில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்)

அப்ப அது வலைப்பதிவர் சந்திப்பில்லையா ?

இது தொடர்பாக அவர்களிடம் கதைத்தீர்களா ?

எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய பகீயை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதனால் தான் இதுதொடர்பான முழுமையான பதிலை எதிர்பார்க்கிறேன் . . .

நன்றியுடன்
தர்மா(எ)தர்மராஜ்

வந்தியத்தேவன் சொல்வது:

வணக்கம் தர்மராஜ்
உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்க்கு நன்றிகள். மாயா தலைமையில் அந்த சந்திப்பு நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஆனால் மிகக் குறைந்த பதிவர்களின் வரவால் அந்த சந்திப்பு ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. இதுபற்றி மாயா ஒரு பதிவு போட்டிருந்தார்.

அந்தச் சந்திப்பில் நானும் கலந்துகொள்ளவேண்டியவர் ஆனால் வேலைகாரணமாக கொழும்பிற்க்கு வெளியே சென்றபடியால் சமூகமளிக்கவில்லை.

பின்னர் இந்தச் சந்திப்பு பற்றி நந்தவனத்து ஆண்டி பிரச்சனைப் பட்டதும் உண்மை.

உண்மையாக அங்கே என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. ஊரோடி பகீ,மு.மயூரன், மாயா, ரேகுப்தி நிவேதா இன்னும் இருவர் சந்தித்ததாக அறிந்தேன். இன்றிரவு முடிந்தால் மாயாவிடம் இதனைக் கேட்டுவிட்டு உறுதி செய்கின்றேன்.

அந்தச் சந்திப்பைப் பற்றியும் இந்த சந்திப்பில் கலந்துரையாடுவோம் ஏனென்றால் அதுதான் இதற்க்கு ஒரு கால்கோளாக அமைந்தது.

ஆனால் இந்தமுறை கொஞ்சம் பெருமெடுப்பில் முயற்சி செய்கின்றோம். பலர் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளார்கள்.

வசதியிருந்தால் வரவும்.

Darmaraj (எ) Darma சொல்வது:

வந்தி அண்ணா உங்கள் தெளிவான பின்னூட்டலுக்கு நன்றிகள்...

நான் வரலாம்....
போறது தான் சிக்கல்...
(நான் யாழ்ப்பாணத்தியெல்லோ இருக்கிறன்)

தர்ஷன் சொல்வது:

பதிவர் சந்திப்பு சிறப்புற நடக்க வாழ்த்துக்கள் என் போன்ற பதிவர்களுக்கு ஏனைய பதிவர்களுடன் பரஸ்பரம் அறிமுகத்தை ஏற்படுத்த இது உதவியாய் இருக்குமெனினும் வேலைப்பளுவின் காரணமாக வர முடியாதென்றே கருதுகிறேன்.
இருக்கட்டும் இது ஆரம்பம் தானே
ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

வலசு - வேலணை சொல்வது:

சந்திப்பு சிறப்புற வாழ்த்துக்கள்

யாரோ - ? சொல்வது:

ஒரு நல்ல முயற்சி நிச்சயமாக எனது பங்குபற்றலும் ஆதரவும். உண்டு. வாழ்த்துக்கள்

யசோதா.பத்மநாதன் சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தி. சந்திப்பின் பின்பான உங்கள் பதிவையும் படங்களையும் ஆவலுடம் எதிர்பார்க்கிறேன்.முடிந்தால் ஈழத்து முற்றத்திலும் அதனைத் தாருங்கள்.

வாழ்த்துக்கள் மீண்டும்!!

M.Rishan Shareef சொல்வது:

அன்பின் வந்தியத்தேவன்,

நிகழ்வு சிறப்பாக நடக்க எனது வாழ்த்துக்கள்.

கலந்துகொள்ளும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள்.

திண்ணை இணையத்தளத்தில் இது பற்றி அறியத் தந்திருக்கிறேன்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80908134&format=html

இச் சந்திப்பு, பதிவர்களைத் தொடர்ந்து இயங்க ஊக்குவிப்பதோடு, இலங்கையில் இன்னும் பல சிறப்பான பதிவர்களை உருவாக்கட்டும் !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

Anonymous சொல்வது:

hello, who would win in the Champions League? Barcelona or Real Madrid?
[url=http://medsonlinenoprescription.net/category/blood-pressure]blood pressure medication[/url]