புட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 2

முதல் பகுதி : புட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் பகுதி 1

அடுத்த நாள் காலை லோஷனிடம் இருந்து வந்த மின்னஞ்சலில் சனிக்கிழமை(08.08.2009) தன்னை புட்சால் விளையாட்டு நடைபெறும் சிட்டி லீக் மைதானத்தில் சந்திக்குமாறு கேட்டிருந்தார்.

உடனே ஆதிரையையும் புல்லட்டையும் தொடர்பு கொண்டு புட்சால் மைதானத்திற்க்கு சனிக்கிழமை சிட்டி லீக் மைதானத்திற்க்கு வருமாறு கேட்டுக்கொண்டேன் அதற்க்கு புல்லட் ஓம் என்று விட்டு அந்த மைதானம் எவடத்தில் இருக்கெனக்கேட்டார். நவா, ரியோ தியேட்டர்களுக்கு அருகில் இருக்கென்றேன். ஆனால் புல்லட்டிற்க்கு அந்த இரு தியேட்டர்களும் எங்கே எனத் தெரியவில்லை. பின்னர் அந்த இரண்டு தியேட்டர்களின் சிறப்பைச்(ஒன்றில் ஷகீலா படமும் இன்னொன்றில் வயதுவந்தவர்களுக்கான ஆங்கிலப்படமும் போடுவார்கள்) சொல்ல உடனே புல்லட் ஓ அந்த தியேட்டர்களா தெரியும் தெரியும் என்றார்.

சனிக்கிழமை காலை புல்லட்டிற்க்கு கோல் பண்ணினால் சரியாக 9.30க்கு அங்கே நிற்பதாக சொன்னார். நானும் ஆடி அலைந்து எப்படியோ 9.45க்கு போனால் எனது சக ரியூசன் நண்பன் லோஷன் இருந்தார் நீண்ட நாட்களின் பின்னர் லோசனை நேரில் சந்திக்கும் போது எப்படியிருந்த லோஷன் இப்படியாகிவிட்டார் என்ற ஜோக் நினைவிற்க்கு வந்தது,

சின்னவயதில் லோஷன் அவ்வளவு மொத்தமல்ல, ஆனால் இப்போ நமீதாவின் அண்ணன் போல் காட்சியளித்தார்.

பிறகென்ன கொஞ்ச நேரம் எங்கள் பழைய அந்த நாள் நினைவுகளை மீட்டு மறந்திருந்த சிலரின் பெயர்களையும் ஞாபகப்படித்தினோம். புல்லட்டிற்க்கும் ஆதிரைக்கும் எங்கள் பேச்சுவார்த்தை போரடிக்கவே நாம் பதிவர் சந்திப்புப் பற்றி பேசத் தொடங்கினோம்.

நான் போகும்போதே 23ந்திகதியை யோசித்துக்கொண்டுதான் போனேன் ஏனென்றால் மாதக் கடைசியில் நிறைய வேலைகள் இருப்பதால் 30ந்திகதி சரிப்பட்டு வராது என்பது தெரியும், அதனை அவர்களுக்குச் சொல்ல ஏகமனதாக 23ந்திகதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் என்ன என்ன விடயங்கள் சம்பந்தமாக பேச வேண்டும் என்பதும் யார் யாரை பேச அழைப்பது என்ற விடயங்களும் கலந்தாலோசிக்கபப்ட்டது. அந்த நேரம் எங்கள் நான்கு பேரைத்தவிர வேறு யாரும் இணையவில்லை.

அதன் பின்னர் லோஷனின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க அனைவரும் குளிர்பானம் அருந்திக்கொண்டிருக்கும் போது லோசன் ஒருவருக்கு கோல் பண்ணினார், கொஞ்ச நேரத்தில் ஒரு சின்னப் பொடியன் எங்களை நோக்கி கலியாண வீடுகளுக்கு செல்வது போன்ற உடையுடன் வந்துகொண்டிருந்தான்.

அவர் தான் நம்ம அனானிகளின் நண்பன் சதீஸ் என்பதை லோஷன் எமக்கு அறிமுகப்படுத்தி வைக்க நாமு சதீசுக்கு நாம் யார் என்பதைச் சொன்னோம். அன்றைக்குத் தான் சதீஸ் பிறந்த நாள் அதுதான் சிங்கன் மைனர் கெட்டப்பில் இருந்தார்.

சிறிது நேரத்தில் இன்னொரு குட்டிப் பையன் மீசை அரும்பும் வயதில் வந்தான், யார் என்று பார்த்தால் அவர் தான் நம்ம ஹிஷாம். அவருடனும் கொஞ்ச நேரம் பேசி விட்டு மீண்டும் புட்சால் மைதானத்திற்க்கு வர நம்ம புல்லட் சுத்தி சுத்தி ஒரு விடயத்தை படம் எடுத்தார். அது என்னெவன்றால் ஆண்களின் உள்ளாடைகள், அந்த நிறுவனம் தான் புட்சாலுக்கு அனுசரணை, ஆகையால் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள். புல்லட் ஏன் அவற்றைப் படம் எடுத்தார் என்பதன் ரகசியம் இன்னும் புரியவில்லை.

அதே நேரம் நாங்கள் பலதும் பத்தும் கதைத்துக்கொண்டிருந்தபோது எனக்கு கந்தசாமி மீனாகுமாரி பாடலில் ஒரு சிறிய சந்தேகம் வந்தது, அந்தப்பாடலில் வரும் காமசூத்திராவில் முதல் வரி என்ற வரிக்கு அர்த்தம் என்னவென்று கேட்டேன் உடனே ராக்கெட் வேகத்தில் புல்லட்டிடம் இருந்து பதில் "காமசூத்திராவின் முதல் வரி உ சிவமயம் அண்ணை" என்றார். நாம் சிரித்து விழுந்ததில் மைதானமே உண்மையில் அதிர்ந்தது. புல்லட்டின் டைமிங் சென்ஸ்சும் நகைச்சுவை உணர்வும் எம்மை எந்த வேலைகள் செய்யும் போது களைப்ப‌டையாமல் உற்சாகமாக வைத்திருக்க உதவியதற்க்கு இந்தக் கதை ஒரு சின்ன உதாரணம்.

அன்றிலிருந்து எம் பயணம் தொடங்கியது அனைவருக்கும் மீண்டும் திகதியுடன் அழைப்பிதழ்களை அனுப்பினோம். எமக்கு வந்த பதில்கள் எம்மைத் திக்குமுக்காடச் செய்தது.

இதற்கிடையில் எனது மின்னஞ்சலுக்கு ஒரு தொலைபேசி எண்ணுடன் கூடிய பதில் வந்தது. என்ன பதில் யார் அந்தப் பதிவர் நாளை...

உங்களுக்கு வாசிக்க போரடிக்ககூடாது என்பதற்காகத் தான் பகுதிகளாகப் பிரசுரிக்கின்றேன்.

12 கருத்துக் கூறியவர்கள்:

ARV Loshan சொல்வது:

குஷ்புவின் தம்பி என்று உவமித்திருந்தாலும் பரவாயில்லை.. நமீதாவின் அண்ணன் என்று என் மனதை சுக்கு நூறாக உடைத்த வந்தியின் கபடத் தனத்தை எதிர்க்கிறேன்..

புல்லட்டின் இமேஜும் நொறுங்கிப் போனது கவலையே.. ;) மூன்று கோடி டமார்.. டுமீல்.. டும்..

வேந்தன் சொல்வது:

முதல் பகுதிக்கு பதிவின் ஆரம்பத்தில் தொடுப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

SShathiesh-சதீஷ். சொல்வது:

அதன் பின்னர் லோஷனின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க அனைவரும் குளிர்பானம் அருந்திக்கொண்டிருக்கும் போது லோசன் ஒருவருக்கு கோல் பண்ணினார், கொஞ்ச நேரத்தில் ஒரு சின்னப் பொடியன் எங்களை நோக்கி கலியாண வீடுகளுக்கு செல்வது போன்ற உடையுடன் வந்துகொண்டிருந்தான்.

அவர் தான் நம்ம அனானிகளின் நண்பன் சதீஸ் என்பதை லோஷன் எமக்கு அறிமுகப்படுத்தி வைக்க நாமு சதீசுக்கு நாம் யார் என்பதைச் சொன்னோம். அன்றைக்குத் தான் சதீஸ் பிறந்த நாள் அதுதான் சிங்கன் மைனர் கெட்டப்பில் இருந்தார்.

இந்த சந்திப்பை என்னாலும் மறக்க முடியாது. அதேநேரம் என்னை விட்டிடு குளிர்பானம் ஆ\ருந்திய உங்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

எனக்கு கந்தசாமி மீனாகுமாரி பாடலில் ஒரு சிறிய சந்தேகம் வந்தது, அந்தப்பாடலில் வரும் காமசூத்திராவில் முதல் வரி என்ற வரிக்கு அர்த்தம் என்னவென்று கேட்டேன் உடனே ராக்கெட் வேகத்தில் புல்லட்டிடம் இருந்து பதில் "காமசூத்திராவின் முதல் வரி உ சிவமயம் அண்ணை" என்றார். நாம் சிரித்து விழுந்ததில் மைதானமே உண்மையில் அதிர்ந்தது. புல்லட்டின் டைமிங் சென்ஸ்சும் நகைச்சுவை உணர்வும் எம்மை எந்த வேலைகள் செய்யும் போது களைப்ப‌டையாமல் உற்சாகமாக வைத்திருக்க உதவியதற்க்கு இந்தக் கதை ஒரு சின்ன உதாரணம்.

புல்லேட்டின் நகைச்சுவைதான் அவர் பலம். அதுவும் இந்த சந்தர்ப்பத்தை வாசித்த எனக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை. உங்கள் நிலையோ?

புல்லட் சொல்வது:

லோசண்ணா.. ஒண்ணுமே தெரியாத பப்பாங்கள விட கனகாரியமானாக்களதான் பிள்ளையளுக்கு ரகசியமா பிடிக்கும்.. அதால 3.1+05 3.15 இப்ப..

சில விடயங்களிண்ட முதல்வரியே தெரியாதாக்களின் வீட்டில கொதிக்கிற பால்பாயாசம் பக்கத்து வீட்டுக்காரன்தான் சாப்பிடுவான்... ஆகயால வந்திக்கு ஏற்கனNவு இருந்த -15 இப்ப -16...

ARV Loshan சொல்வது:

வந்தி இந்தப் பதிவு போடும்போதே நினைத்தேன்.. இப்படி எடாகூடப் பின்னூட்டங்கள் வரும் எண்டு..

பாருங்கள் புல்லட் எப்பிடிப் பொங்கி வெடிக்கிறார் எண்டு.. பாயாசமாம் பாலாம்.. நான் வரலப்பா..

அன்டியாக்கு புல்லட் 'ரன்ன்' படம் எடுக்கும் போதே யோசித்தேன்.. ;)

Admin சொல்வது:

எல்லாமே அமர்க்களமாகத்தான் நடந்திருக்கின்றன. புல்லட்டின் நகைச் சுவைகளை அவரின் பதிவுகளே சொல்கின்றன.

லோஷன் அண்ணா நிலைதான் புரியாத புதிர். எங்கு போனாலும் இளம் பெண்கள் விடுவதாக இல்லை. இப்போ நடிகைகளோடு பேச்சுக்கள். எதுவும் வீட்டில் தெரியாமல் இருந்தால் சரிதான்.

Unknown சொல்வது:

///உடனே ராக்கெட் வேகத்தில் புல்லட்டிடம் இருந்து பதில் "காமசூத்திராவின் முதல் வரி உ சிவமயம் அண்ணை"///

சிரிச்சுச் சிரிச்சு கதிரேலை இருந்து விழுந்திட்டன்... அக்கா பொடி கொம்பியூட்டர் பாத்திட்டு லூசாகீட்டிது எண்டு கவலையாப் பாக்கிறா...

மற்றது வந்தியண்ணை... லோசன் அண்ணா சொன்னமாதிரி உவன் புல்லட் பாயாசம் பால் எண்டெல்லாம் கதைக்கிறான்... அவனுக்கு உங்களுக்குத் தெரியாததெல்லாம் (கா.சூ. முதல் வரி) தெரியுது... உங்களுக்குக் கலியாணம் எண்டு கதையும் அடிபடுது. எதுக்கும் பாத்துச் செய்யுங்கோ

maruthamooran சொல்வது:

////சின்னவயதில் லோஷன் அவ்வளவு மொத்தமல்ல, ஆனால் இப்போ நமீதாவின் அண்ணன் போல் காட்சியளித்தார்.////

வந்தி....

நல்ல பிளான் பண்ணிறீங்கப்பா.... லோசனை நமிதாவின் அண்ணனாக்கி நீங்கள் அவருக்கு மச்சானாகப் பாக்கிறீங்களோ? வீட்டுக்கு சொல்லிடுவேன். கவனமாக இருக்கவும். (எங்களுக்கு தெரியும் உங்களுக்கு பெண்பார்த்த விசயம்) நயன்தாராவும், நமிதாவும் உங்களுக்கு சகோதரிகள் ஓகே?

ARV Loshan சொல்வது:

மருதமூரான்.. உங்களுக்கும் சூட்சுமம் புரிந்து விட்டதா..

//நயன்தாராவும், நமிதாவும் உங்களுக்கு சகோதரிகள் ஓகே?//
கையைக் கொடுங்கள்..

வந்தி மச்சான் கவனியுங்கள்.. ;)

maruthamooran சொல்வது:

////LOSHAN said...
மருதமூரான்.. உங்களுக்கும் சூட்சுமம் புரிந்து விட்டதா..

//நயன்தாராவும், நமிதாவும் உங்களுக்கு சகோதரிகள் ஓகே?//
கையைக் கொடுங்கள்..

வந்தி மச்சான் கவனியுங்கள்.. ;)////


என்னடா இது எனக்கு லோஷனும் போட்டியா?...... அப்ப நான் வடநாட்டுப் பக்கம் போறன்... ஒரு கத்ரீனா கைப் இல்லாட்டி ஒரு தீபிகா படுகோன் சிக்காமலா போய்விடும்.

(MRS.லோஷன் உங்கட அவரின்ர வலைப்பதிவுகளையும் அப்பப்ப பாருங்க, லோஷனின் லூட்டி தாங்கமுடியல்ல..)

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

அப்ப லோஷன் நமக்கெல்லாம் மச்சானா? ஏனென்றால் நமீதாவுக்கு நாம ஹாய் மச்சான்ஸ் தானே

பால்குடி சொல்வது:

வந்தியண்ணா தான் ‘இளைஞன்’ என்ற ‘நினைப்பில’ லோஷண்ணாவை நக்கலடிக்கிறார். (லோஷண்ணாவை வர்ணிச்சதும் பிழை மாரித் தெரியேல்ல.)