எனக்குள் ஒரு ரசிகன் - பகுதி 1

கமல்ஹாசன் இந்தப் பெயரைச் சொன்னாலே எனக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். சிறுவயதில் இருந்த்தே ஒரு நடிகனாக, பாடகனாக நான் பார்த்து அதிசயப்பட்ட ஒருவர் என்றால் அது கமல் தான்.



நான் ஒரு கமல் ரசிகன் என்பது பலரும் அறிந்தவிடயம். ஆனாலும் இன்னும் நான் எப்படி அவரது ரசிகனானேன், ஏன் அவரை ரசிக்கின்றேன் என ஒரு பதிவு கூட எழுதவில்லை. என்னைக் காணும், என்னுடன் பேசும் பின்னூட்டம் இடும் நண்பர்கள் பலர் இதனை என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்காக நம்மவர் பற்றிய இந்தப் பதிவு.

1981 என நினைக்கின்றேன் அப்போது எனக்கு கிட்டத்தட்ட 5 வயது, கொழும்பில் குரு படம் ஓராண்டாக ஓடிக்கொண்டிருந்த காலம் அது. (1980களில் வெளியான குரு தெகிவளை கொன்கோர்ட் திரையரங்கில் தொடர்ந்து ஒரு வருடமாக நான்கு காட்சிகள் ஓடின சாதனையை இன்னும் எந்தப் படங்களும் முறியடிக்கவில்லை) நானும் குடும்பத்தவர்களுடன் கொன்கோர்ட் திரையரங்கில் அந்தப்படம் பார்க்கசென்றேன்.

எப்படி இன்றைய குழந்தைகளை ஸ்பைடர் மானும், சூப்பர் மானும் கவர்ந்தார்களோ அன்றைய குழந்தையாகிய என்னை கமல் என்னும் உலகநாயகன் கவர்ந்தார். அவர் ஸ்ரீதேவியுடன் "பறந்தாலும் விடமாட்டேன்" பாடலில் கையைவிட்டு விட்டு விமானம் ஓட்டுவதும்(அப்போ அதெல்லாம் கமரா நுட்பம் என்பது புரியாத வயசு), பின்னர் தங்க மீனுக்காக தலைகீழாக தொங்கி அதனைக் கவரும் துணிச்சலும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. அன்றிலிருந்து நான் கமலை ரசிக்கத் தொடங்கினேன் இன்றுவரை ரசிக்கின்றேன், இனியும் ரசிப்பேன்.

சிலருக்கு சந்தேகம் வரலாம் சின்ன வயது ஞாபகம் எப்படி எனக்கு நினைவிருக்கின்றது என சில விடயங்கள் எத்தனை வயது போனாலும் மறக்கமுடியாது, அப்படித்தான் நான் முதல் முதல் திரையில் பார்த்த திரைப்படமான கர்ணன் கூட இன்னும் நினைவில் நிற்கிறது.

பின்னர் அதே ஆண்டு கொழும்பு கெயிட்டி திரையரங்கில்(இன்று அந்த தியேட்டர் இல்லை) கடல்மீன்கள் படம் பார்த்தது கூட நினைவில் நிற்கிறது. அதன் பிறகு தியேட்டரில் கமல் படம் பார்க்கும் சந்தர்ப்பங்கள் 1991வரை கிடைக்கவில்லை. காரணம் நாட்டுச்சூழல்.

வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, ராம் லக்ஸ்மன் போன்ற படங்கள் ஊரிலை டெக்கில் பார்த்தவை. அதிலும் மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் காட்சியில் சீனுவுடன் நானும் சேர்ந்து அழுதிருக்கின்றேன். வாழ்வே மாயத்தில் ராஜாவை ஏமாற்றிய ஸ்ரீதேவி மூன்றாம் பிறையில் சீனுவையும் ஏமாத்தமாட்டார் என அந்தக் கால சிறுவனாக இருந்த மனது எண்ணியது. ஆனால் மூன்றாம் பிறையிலும் ஏமாற்றியது தாங்கமுடியாத கவலை. ஓரளவு உலகம் புரியும் வரை என் மனதில் கமலின் மனைவி ஸ்ரீதேவிதான் என்ற விம்பம் இருந்தது. இதற்கான காரணம் ஸ்ரீதேவி கமலுடன் இணைந்து நடித்திருந்த படங்களின் எண்ணிக்கையாக இருக்கலாம்.



மொழி தெரியாமல் எக் துஜே கெ லியே, சனம் தேரி கசம் போன்ற படங்களையும் ஊரில் பார்த்தேன், அந்த நாளில் கூட ஹிந்திப் படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள் என இப்போது நினைக்க அதிசயமாக இருக்கின்றது.

சகலகலாவல்லவனில் "இளமை இதோ இதோ" என டிஸ்கோ நடனம் ஆடிப் பலரைக் கவர்ந்த கமல்( அந்த நாளில் இவரின் பட்டம் காதல் இளவரசன்), சலங்கை ஒலியில் பரதநாட்டியம் ஆடி என்னை அதிசயிக்கவைத்தார். ஏனென்றால் இதுவரை கமலுக்கு டிஸ்கோ மட்டும் தான் ஆடத்தெரியும் என என்னுடன் சண்டையிட்ட அதே காலத்து ரஜனி ரசிகர் நண்பர்களுடன் சண்டைபோட கமல் ஆடிய பரதநாட்டியம் பெரிதும் கைகொடுத்தது.



சிறுவயது முதலே விகடன் குமுதம் படிக்கத் தொடங்கியாச்சு. ஆகவே அந்தக் காலத்தில் வெளியான சுஜாதாவின் விக்ரம் கதையையும் ஒன்றுமே விளங்காமல்(அக்னிபுத்திரன், கம்யூட்டர், மெமரி)வாசித்திருந்தேன். அதே கதையை கமல் படமாக எடுத்து நடித்தபோது எனக்கு அந்தப் படம் ரொம்ப பிடித்தது படத்தை விட விக்ரம் விக்ரம் என கமல் பாடுவது மிகமிக பிடிக்கும் அந்தப்பாடலை அடிக்கடி கத்திக் கத்திப் பாடியிருக்கிறேன்.(பாவம் பக்கத்துவீட்டுகாரர்கள் எப்படித் தான் என் குரலைச் சகித்தார்களோ). இன்றைக்கும் அந்தப் படத்தை மிகப்பெரிய ஹைடெக் படமாக கமல் ரீமேக் செய்யலாம்.

1986களில் பலாலி இராணுவ முகாமிலிருந்து தொடர்ந்து சில தமிழ்ப் படங்களாகப் ஒளிபரப்புவார்கள். பெரும்பாலும் புன்னகை மன்னன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, தாவணிக் கனவுகள் போன்ற படங்கள் திரும்பதிரும்ப ஒளிபரப்புவார்கள். அப்படி ஒளிபரப்பாகியதில் புன்னகை மன்னன் பல தடவை சலிக்காமல் பார்த்த படம்.

அதன் பின்னர் உலகநாயகன் கமல் வேலு நாயக்கராக வாழ்ந்துகாட்டிய நாயகன் பற்றிய அனுபவங்கள் அடுத்த பதிவில்.

10 கருத்துக் கூறியவர்கள்:

23-C சொல்வது:

nanum ulaga nayaganin rasigan thaan...ungal adutha pathivirkaga kaathirukiraen...

SUREஷ்(பழனியிலிருந்து) சொல்வது:

//ஓரளவு உலகம் புரியும் வரை என் மனதில் கமலின் மனைவி ஸ்ரீதேவிதான் என்ற விம்பம் இருந்தது//

நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்..,

விவாகரத்து செய்த போது கூட இவரைத்தான் விவாகரத்து செய்ததாகவே வெகு காலம் நினைத்திருந்தோம்

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

நானும் கமல் ரசிகர்களில் ஒருத்தர்தான் நான் சின்ன வயவில மூன்றாம் பிறை பார்த்து அழுததை உங்கள் பதிவு ஒன்றுக்கு பின்னூட்டம் இட்ட ஞாபகம் இருக்கு..

Muruganandan M.K. சொல்வது:

நிங்கள் சிவாஜியின் உச்ச காலத்தில் இல்லை. அப்பொழுது நான் அவர் ரசிகன்.
பிறகு கமல் ரசிகனானேன்.
சூர்யா, விக்ரம் எனப் பலரை இப்பொழுது பிடித்தாலும் கமல் ஸ்பெசல்தான்.

புல்லட் சொல்வது:

நான் கமலைப்பறிற ஆ ஊ என்று புழுக மாட்டேன்.. காரணம் என்னவென்று தெரியவில்லை.. ஆனாலும் கல்யாண ராமன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. யப்பானில் கல்யாணராமன் பிடிக்கவில்லை.. பின்னர் மைக்கல் மதனகாமராஜன் விறுவயதில் பொதிகையில் பார்த்துக்கொண்டிருந்தவேளை (ஒரே சிரிப்பு)அப்பா நடுவில் வந்து அடுத்தநாள் எக்சாமுக்கு படிக்கச்சொல்லி அடித்து துரத்தி விட்டார். அந்தப்படத்தை 2007ம் ஆண்டு பார்கக்கிடைத்தபோது ஏன்டா அப்போது அப்படிச்சிரித்தோம் என்று விளங்க வில்லை. வேறு சில பிடித்த படங்கள் தெனாலி பெஸ்ட். வசூல்ராஜா சுப்பர். தசாவதாரம் ஓகே.. வேட்டையாடு விளையாடு குட். குரு கிரேட். வேறு எதுவும் சொல்லிக்கொள்வது மாதிரி இல்லை... குணா நாயகன் எல்லாம் ஞாபகம் இல்லை.. நினைத்தலே இனிக்கும் மிகமிக சிறுவயதில் பார்த்தது .. யாரோ ரத்தவாந்தியை சிங்கினுள் எடுப்பது போன்ற பிம்பம் மாத்திரம் ஞாபகம் இருக்கு.. ரஜனியின் சம்போ பாடலும் ஞாபகம் உண்டு

உஙகள் பகிர்வு நன்றாகNவு உள்ளது

வந்தியத்தேவன் சொல்வது:

// 23-C said...
nanum ulaga nayaganin rasigan thaan...ungal adutha pathivirkaga kaathirukiraen...//

உங்களின் அன்பு வேண்டுகோளுக்காக அடுத்த பதிவும் இன்றே போட்டுவிட்டேன்
23-C.

உங்கள் பெயரைப் பார்த்ததும் மும்பை எக்ஸ்பிரஸ் கமல், பசுபதி, வையாபுரி A,B,C ஞாபகத்திற்க்கு வந்தது.

வந்தியத்தேவன் சொல்வது:

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்..,

விவாகரத்து செய்த போது கூட இவரைத்தான் விவாகரத்து செய்ததாகவே வெகு காலம் நினைத்திருந்தோம்//

வாங்கோ சுரேஷ் நீங்களும் நம்ம கட்சிதான். பின்னர் கொஞ்சம் அறிவு(?) வளர்ந்ததன் பிற்பாடு வாணி, சரிகா என பல விடயங்கள் அறிந்தோம். எமக்குத் தேவை நடிகன் கமலே ஒழிய சாதாரண மனிதன் கமல் அல்ல. ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு பிரேக்கின் பாயிண்ட் இருக்கும்.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் said...
நானும் கமல் ரசிகர்களில் ஒருத்தர்தான் நான் சின்ன வயவில மூன்றாம் பிறை பார்த்து அழுததை உங்கள் பதிவு ஒன்றுக்கு பின்னூட்டம் இட்ட ஞாபகம் இருக்கு..//

ஆமாம் எனக்கும் ஞாபகம் இருக்கு. ஏன் இன்றைக்கும் அந்தக் கட்டம் வந்தால் நான் பார்ப்பதில்லை. படம் முழுமையாக ஸ்ரீதேவி ஆக்கிரமித்திருப்பார் ஆனால் அந்தக் கடைசிக் காட்சியில் மட்டும் கமல் சிக்சர் அடித்து ஸ்ரீதேவியிடம் இருந்து விருதைத் தட்டிக் கொண்டார். மூன்றாம் பிறைக்கும் தேசியவிருது கிடைத்தது.

வந்தியத்தேவன் சொல்வது:

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
நிங்கள் சிவாஜியின் உச்ச காலத்தில் இல்லை. அப்பொழுது நான் அவர் ரசிகன்.
பிறகு கமல் ரசிகனானேன்.
சூர்யா, விக்ரம் எனப் பலரை இப்பொழுது பிடித்தாலும் கமல் ஸ்பெசல்தான்.//

இல்லை டொக்டர் இன்றைக்கும் நான் சிவாஜியின் பல படங்களின் ரசிகன். கர்ணன், வீரபாண்டிய கட்டப்பொம்மன், தில்லானா மோகானாம்பாள் என சிவாஜி படங்களும் எனக்கும் பிடிக்கும்.

கமலுக்குப் பின்னர் சூரியா விக்ரம் நடிப்பில் சிறப்பாக வந்தாலும் இவர்களும் இடையிடையே கதை இல்லாத படங்களில் நடித்து பேரைக் கெடுக்கின்றார்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//புல்லட் said...
நான் கமலைப்பறிற ஆ ஊ என்று புழுக மாட்டேன்.. காரணம் என்னவென்று தெரியவில்லை.. ஆனாலும் கல்யாண ராமன் படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. யப்பானில் கல்யாணராமன் பிடிக்கவில்லை.. ///

எனக்கும் இதுதான் யப்பானில் கல்யாணராமன் எல்லாம் ஒரு முறை மட்டும் பார்த்த படங்கள்.

//பின்னர் மைக்கல் மதனகாமராஜன் விறுவயதில் பொதிகையில் பார்த்துக்கொண்டிருந்தவேளை (ஒரே சிரிப்பு)அப்பா நடுவில் வந்து அடுத்தநாள் எக்சாமுக்கு படிக்கச்சொல்லி அடித்து துரத்தி விட்டார். அந்தப்படத்தை 2007ம் ஆண்டு பார்கக்கிடைத்தபோது ஏன்டா அப்போது அப்படிச்சிரித்தோம் என்று விளங்க வில்லை. //

மைக்கல் மதன காமராஜனில் உள்ள நுண்ணரசியில் உங்களுக்கு விளங்கவில்லை என நினைக்கின்றேன். கிராபிக்ஸ் இல்லாத காலத்தில் எடுக்கப்பட்ட படம். சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் பாடல் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான ரசனை. ஹேராம் பிடித்தவர்கள் வேட்டையாடு விளையாடை குப்பை என்பார்கள்.

// யாரோ ரத்தவாந்தியை சிங்கினுள் எடுப்பது போன்ற பிம்பம் மாத்திரம் ஞாபகம் இருக்கு.. ரஜனியின் சம்போ பாடலும் ஞாபகம் உண்டு//

ஆமாம் எனக்கும் அந்த ரத்தவாந்தியும் ரஜனியின் குறுந்தாடியும் ஞாபகம் இருக்கு.

//உஙகள் பகிர்வு நன்றாகNவு உள்ளது//

நன்றிகள்