ஸ்ரீதேவி முதல் அசின் வரை - பகுதி 2

முதல் பகுதியில் என்னுடைய சிறு பராயத்தில் நடித்த நடிகைகளில் நான் ரசித்தவர்களில் ஐந்து பேரைப் பற்றி எழுதியதில் கிடைத்த வரவேற்புக்கு நன்றிகள். இவர்கள் மட்டுமல்ல இன்னும் சிலரும் பட்டியலில் இருந்தாலும் 5 பேரை மட்டுமே குறிப்பிட்டேன். நண்பர் டொன்லீ ஒரு படி மேலே போய் ஹோலிவூட், பாலிவூட் நடிகைகள் பற்றியும் ஜொள்ளச் சொன்னார். அடுத்த அடுத்த பதிவுகளில் ஹிந்தி ஆங்கில ஜொள்ளுகள் வரலாம்.

இந்தப் பதிவில் நான் கட்டுக்கடங்காத காளையாக இருக்கின்ற இக்காலத்தில் நடித்துக்கொண்டிருக்கின்ற நடிகைகள் பற்றிய ஜொள்ளு மழை தூறப்போகின்றேன். தயவு செய்து மழை சூறாவளியாகாமல் பார்ப்பது உங்கள் கடமை.

முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம் - ஸ்ரீதேவி முதல் அசின் வரை

சிம்ரன்

97களில் பார்க்கின்ற பெண்கள் எல்லாம் அழகாத் தெரிந்த காலம். தமிழ்சினிமாவைப் புரட்டிப்போட மும்பையிலிருந்து ரிஷிபாலா என்ற இயற்பெயருடைய‌ சூறாவளி "ஓன்ஸ்மோர் " என்ற படம் மூலம் சிம்ரனாக வீசியது. ஓன்ஸ்மோர், விஜபி என ஆரம்பத்தில் நடித்த இரண்டுபடங்களிலும் ஏனோ சிம்ரன் கவரவில்லை.

"மனம் விரும்புதே உன்னை" என நேருக்கு நேரில் பாடி சூரியாவை மட்டுமல்ல என்னைப் போன்ற எத்தனையோ இளைஞர்களின் மனதை அவள் வருவாளா என கொள்ளை கொண்டவர். அந்தப் பாடலின் அவரின் இடுப்பசவைக்கு தமிழ்நாடு மட்டுமல்ல உலகே ஒரு கணம் அதிர்ந்தது. சட்டென்று சலனம் வரும் என சிம்ரனின் இந்தப் பாடலைப் பார்த்தபின்னர் தான் புரிந்தது.குஷ்புகள் ரம்பாக்கள் எல்லாம் Floppy disk போல் தூக்கி எறியப்பட்டு சிம்ரன் file எங்கள் ஹார்ட்(Heart) டிஸ்க்களில் சேமிக்கப்பட்டுவிட்டது. இன்றைக்கும் Format செய்து அழிக்கமுடியாத ஒரே ஒரு System file சிம்ரன்.

அதன் பின்னர் சிம்ரனுக்காக சில மொக்கைப் படங்களைக்கூடப் பார்க்கவேண்டியிருந்தது. பின்னர் கண்ணெதிரே தோன்றினால் ப்ரியாவும் வாலி ப்ரியாவும் மனதில் ஒட்டிக்கொண்டார்கள். இரண்டு படங்களில் தனக்கு நடிக்கவும் தெரியும் என நிரூபித்த சிம்ரனை துள்ளாத மனமும் துள்ளும் படம் உச்சத்திற்க்கு இட்டுச் சென்றது எனலாம்.

பின்னர் சில காலம் மொக்கைப் படங்களில் வந்து போனார். 2000ல் பார்த்தேன் ரசித்தேனில் வில்லியாக தன் நடிப்பின் இன்னொரு கோணத்தைக் காட்டினார். இந்தப் படம் பார்க்கும் போது என் நண்பன் ஒருவன் என்ன சிம்ரனுக்கு ஒரு பாடலையும் காணவில்லை என்ற போது "தின்னாதே" பாடலில் ஆடிய ஆட்டம் முழுப் படத்தையும் தின்றுவிட்டது என என் நண்பன் சொன்னான்.

பிறகு ப்ரியமானவளே, பார்த்தாலே பரவசம், 12பி என சில படங்களில் தன் நடிப்பைக் காட்டியவர். மீண்டும் இடையில் சில மொக்கைப் படங்கள்.

இந்த நேரத்தில் அவருக்கு கை கொடுத்தவர் எங்கள் உலகநாயகன் பம்மல்.கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் என அடுத்த இரண்டு படங்களிலும் ஜானகி, மைதிலியாக கமலுக்கு இணையாக நடித்திருந்தார். கமலுடன் நடித்த ராசியோ என்னவோ அடுத்து மணிரத்னம் படமான கன்னத்தில் முத்தமிட்டாலில் மூன்று பிள்ளைகளுக்கு தாயாக நடித்திருப்பார். இந்தப் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது, ப்லிம்பேர் அவார்ட் என நான்கு விருதுகள் கிடைத்தன.

இதன் பின்னர் தமிழ்சினிமாவைக் கலக்கிய சில நடிகைகளின் வரவால் சிம்ரன் பின்னடைந்தாலும் சென்ற வருடம் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் மாலினியாக சிம்ரன் தன் முத்திரையைப் பதித்திருப்பார்.

ஜோதிகா

சிம்ரன் என்ற சூறாவளி வீசிக்கொண்டிருந்த ஆண்டில் அந்த சூறாவளியுடன் சேர்ந்து நடிக்க வாலி படத்தில் சோனாவாக அறிமுகமானவர் ஜோதிகா. முதல்ப் படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் அவரது விழிகளும் தமிழர்களுக்குப் பிடித்தமான கொஞ்சம் குண்டான உடலும் தமிழ்நாட்டின் சொத்தாக அவரை மாற்றிவிட்டது.

இவர் நடித்து வெளிவந்த முதல் படம் வாலியாக இருந்தாலும் அறிமுகமான படம் பூவெல்லாம் கேட்டுப்பார். அதில் சுடிதார் அணிந்த சொர்க்கமாக மாறி சூரியாவின் தூக்கத்தை மட்டுமல்ல பலர் இளைஞர்களின் தூக்கத்தையும் கெடுத்தவர்.அஜித், விஜய், சூரியா, பிரசாந்த், மாதவன் என இளம் நடிகர்களுடன் அதிகமாக நடித்தவர். சூரியாவுடன் தான் அதிகமான படங்கள் நடித்தவர். தெனாலியில் ஜானகியாக கமலுடன் ஜோடி சேர்ந்தார். பின்னர் வேட்டையாடு விளையாடுவில் ஆராதனா என்ற இன்னொரு வித்தியாசமான பாத்திரம் என பல்வேறு வகையான நடிப்புகளைக் காட்டினவர்.

கவர்ச்சி சுனாமிகளுக்கு மத்தியில் தமிழ்சினிமாவில் தென்றலாக வீசியவர் ஜோதிகா தான். எத்தனையோ பாத்திரங்களில் நடித்திருந்தாலும் சந்திரமுகியாக ரஜனியுடன் தன் சிறப்பான நடிப்பில் பலருக்கு பயம் காட்டியவர்.

ஜோதிகா சிறந்த நடிகையாக இருந்தாலும் பலருக்கு கனவுக் கன்னியாக ஏற்கமுடியவில்லை இதற்கான காரணமாக அவரின் சூரியாவுடனான காதலைக் கூறலாம். திருமணத்தின் நடிக்க வராதது தமிழ்சினிமாவிற்க்கு கிடைத்த துரதிஷ்டம்.

சினேகா

அழகான அடக்கமான தமிழ்பெண் எப்படி இருப்பாரோ அப்படியான Girls next door தோற்றம். இவரின் புன்னகையாலே பல இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர். நதியா போல் உடைகளைத் துறந்து கவர்ச்சி காட்டாமல் தன் சிரிப்பினாலேயும் நடிப்பினாலேயும் பலரைக் கவர்ந்த புன்னகை இளவரசி.

என்னவளேயில் அறிமுகமானாலும் விரும்புகின்றேன் தான் இவரின் முதல்படம். 2001களில் அறிமுகமானபோதே ஆனந்தம், பார்த்தாலே பரவசம், என்ற படங்களிலும் 2002ல் விரும்புகின்றேன், நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய், உன்னை நினைத்து, பம்மல் கே.சம்பந்தம் எனப் பல படங்களில் தொடந்து நடித்தவர்.வசீகரா, பார்த்தீபன் கனவு இன்றைக்கும் சினேகாவின் நடிப்பில் சிறந்த படங்களில் ஒன்றாக இருந்தாலும் வசூல்ராஜா ஜானகியும் "ப‌த்துக்குள்ளே நம்பர்" பாடலும் சினேகாவின் பைத்தியமாக பலரை மாற்றியது.

புதுப்பேட்டையில் யாரும் செய்யத் துணியாத பாத்திரமாக நடித்தவர்( இன்றை சூழலில் இதனை விபரித்தால் பிழை). பின்னர் பிரிவோம் சந்திப்போமில் நிஜமான குடும்பப் பெண் அல்லது மனைவி எப்படி இருப்பாரோ அப்படியே வாழ்ந்து காட்டினார்.

கவர்ச்சி காட்டாவிட்டாலும் அதிகம் கிசுகிசுக்களில் அடிபட்டவர் மட்டுமல்ல, இன்றைய கவர்ச்சி சுனாமிகள் நயந்தாரா, திரிஷா,ஸ்ரேயாக்கள் மத்தியில் நின்று நிலைப்பது அவரது நடிப்பை நம்பியே என்பது பலருக்கும் தெரியும்.

அசின்

2004ல் தமிழ்சினிமாவிற்க்கு கிடைத்த இன்னொரு கேரளத்து பெண். எம்.குமரன் சன் ஆவ் மஹாலட்சுமியில் மலபாராக வந்து "சென்னைச் செந்தமிழை" மறக்கச் செய்தவர். அனைத்து இளைஞர்கள் மனசிலும் பிசினாக ஒட்டியவர் அசின்.

கஜனியில் மொட்டைமாடி கல்பனாக வந்து அனைவரின் அனுதாபத்தையும் பெற்றவர். சிரித்த முகம், மெல்லிய உடல் என இன்றைய இளைஞர்களின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்தவர். குண்டுப் பெண்களை விரும்பிய தமிழ் இளைஞர்கள் சிம்ரனுக்குப் பின்னர் விரும்பியது அசினைத் தான்.விஜய், அஜித் சூரியா என இளம் கதாநாயகர்களுடன் அதிகமாக நடித்தவர். கமலின் தசாவதாரத்தின் இன்னொரு தூண் என்றால் மிகையாகாது. ஐயங்கர் ஆத்து ஆண்டாளாகவே பெருமாளே பெருமாளே என புலம்பித்திரிந்தவர்.

ஸ்ரீதேவி போல ஹிந்தி சினிமாவிற்க்கு கஜனிக்காக சென்றவர் அங்கேயும் வெற்றிக் கொடி நாட்டி தமிழ்நாட்டையும் தமிழ் இளைஞர்களையும் மறந்துபோனது அகில உலக அசின் ரசிகர்கள் சார்பாக கண்டிக்கத்தக்கது.

இன்றைக்கும் அசினைப் பார்த்தால் ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயையோ எனப் பாடுபவர்கள் பலர்.

ஐஸ்வர்யா ராய்

1994ல் உலக அழகியானதில் இருந்து நான் ஐஸ் ரசிகனாகிவிட்டேன். எத்தனையோ உலக அழகிகள் வந்தாலும் ஐஸ்க்கு நிகர் அவரே தான். உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யாவை நடிகையாக்கிய பெருமை இயக்குனர் மணிரத்தினத்திற்கே சேரும்.

1997 ல் இருவரில் "ஜெ"யாக மன்னிக்கவும் கல்பனாவாக நடிக்கவைத்தார். ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி என அவர் ஆடிய ஆட்டம் உலக அழகி பட்டம் கொடுத்ததில் எந்தத் தப்பும் இல்லை எனப் புரிந்தது.மணிரத்தனம் ஹீரோக்களை தன் ஹீரோவாக மாற்றும் ஷங்கர் தன்னுடய ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாவை மதுமிதாவாக்கி " நீ எனக்கே எனக்கா" என பிரசாந்துடன் சேர்ந்து பலரையும் பாட வைத்தார். பின்னர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் " கண்ணாமூச்சி ஏனடா" எனக் கேட்டுவிட்டு ஹிந்திக்கு பறந்துவிட்டார். மீண்டும் ஷங்கரின் முயற்சியால் எந்திரனில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.

ஐஸுக்காக தால், தேவதாஸ், டூம்2 , ஜோதா அக்பர், புரவோக்ட் போன்ற தரமான ஹிந்திப்படங்களும் சில மொக்கைப் படங்களும் பார்த்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

கோடி யுகம் போனாலும் ஐஸ்வர்யாவுக்கு மட்டும் வயசாகாது அதனால் தான் அவர் இன்றைக்கு ஐஸ்வர்யா பச்சானாக மாறினாலும் இளைஞர்களின் கனவுக் கன்னி.


பின்குறிப்பு : நண்பர்கள் மருதமூரான், சுரேஷ் (பழனியிலிருந்து) போன்றவர்கள் விருப்புக்கமைய ஒவ்வொரு நடிகையின் நடிப்பைப் பற்றிய சின்ன ஆராய்ச்சிப் பதிவு விரைவில்.

12 கருத்துக் கூறியவர்கள்:

SUREஷ்(பழனியிலிருந்து) சொல்வது:

//ஒவ்வொரு நடிகையின் நடிப்பைப் பற்றிய சின்ன ஆராய்ச்சிப் பதிவு விரைவில்.
//

நன்றி தல

SUREஷ்(பழனியிலிருந்து) சொல்வது:

//சினேகா//

நிறையப் பேர் இவரை பயங்கர கவர்ச்சி என்று சொல்கிறார்களே குறிப்பாக விஜய் உடன் நடித்த மழைப் பாடல்

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொல்வது:

ஜோதிகா என்னையும் மிகவும் கவர்ந்த நடிகை அண்ணா.

//திருமணத்தின் நடிக்க வராதது தமிழ்சினிமாவிற்க்கு கிடைத்த துரதிஷ்டம்.//

ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து

நன்று

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

////இந்தப் பதிவில் நான் கட்டுக்கடங்காத காளையாக இருக்கின்ற இக்காலத்தில் ////

இருக்கிற காலத்திலா? இருந்த காலத்திலா?

சி தயாளன் சொல்வது:

//குஷ்புகள் ரம்பாக்கள் எல்லாம் Floppy disk போல் தூக்கி எறியப்பட்டு சிம்ரன் file எங்கள் ஹார்ட்(Heart) டிஸ்க்களில் சேமிக்கப்பட்டுவிட்டது. இன்றைக்கும் Format செய்து அழிக்கமுடியாத ஒரே ஒரு System file சிம்ரன்
//

hahahaha...:-)

root சொல்வது:

enda present lover
suru
pati elutha ila
athu than apa
suruthi kamal hasan

வந்தியத்தேவன் சொல்வது:

//SUREஷ் (பழனியிலிருந்து) said...

நன்றி தல//

என்ன தல இதெற்கெல்லாம் நன்றி சொல்லிக்கொண்டு உங்களைப் போல நாலு பேர் எழுதச் சொன்னால் நல்ல விசயங்களும் எழுதுவோம்ல‌

வந்தியத்தேவன் சொல்வது:

// SUREஷ் (பழனியிலிருந்து) said...

நிறையப் பேர் இவரை பயங்கர கவர்ச்சி என்று சொல்கிறார்களே குறிப்பாக விஜய் உடன் நடித்த மழைப் பாடல்//

நீங்கள் சொல்வது வசீகராப் படப் பாடல் என நினைக்கின்றேன். தற்போது பாண்டி மற்றும் இன்னொரு படத்தில் சினேகாவும் கவர்ச்சிக்கு மாறினார். வெங்கட் பிரபுவின் கோவாவில் பிகினியில் வருகின்றார் எனக் கேள்வி. விஷாவின் வலையில் நல்லதொரு படம் கூட இருக்கின்றது.

வந்தியத்தேவன் சொல்வது:

// ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
ஜோதிகா என்னையும் மிகவும் கவர்ந்த நடிகை அண்ணா.//

அப்படியா நீங்களும் உங்களைக் கவர்ந்த நடிகைகளை பட்டியல் இட்டு எழுதலாமே.

//ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து//

நன்றிகள். சில நடிகைகளைப் பார்த்தால் பெண்களே முகம் சுழிப்பார்கள் ஆனால் ஜோவை அவர்கள் வீட்டுப் பெண் போல பார்ப்பார்கள். அவர் சினிமாவை விட்டு நீங்கியது பல பெண்களுக்கு கவலைதான்.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) said...

இருக்கிற காலத்திலா? இருந்த காலத்திலா?//

நிகழ்காலத்தில் தான் இதில் என்ன சந்தேகம் நாமெல்லாம் இன்றைக்கும் யூத் யோ.

வந்தியத்தேவன் சொல்வது:

// ’டொன்’ லீ said...

hahahaha...:‍) //

என்ன லீ தம்பி ஒரே சிரிப்பாக இருக்கு.

வந்தியத்தேவன் சொல்வது:

//root said...
enda present lover
suru
pati elutha ila
athu than apa
suruthi kamal hasan //

ரூட் நீ என்ன சொல்லவாறாய் எனப் புரிகின்றது, மவனே உன்னைச் சந்திக்கும் போது வைச்சுக்கொள்கின்றேன்.