அச்சு வலைச் சந்திப்பு வரைபடம் - நேரடி ஒளிபரப்பு

இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் அச்சுவலைச் சந்திப்புக்கு தமது வருகையை உறுதிப்படுத்திய வலைப்பதிவர்களுக்கு எமது நன்றிகள். வருகையை உறுதிப்படுத்திய அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் இருக்கிறம் அலுவலகத்துக்கு வருவதற்கான வரைவுப்படமொன்றை இங்கே தந்திருக் கின்றோம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்க பஸ்களில் வந்து சேரலாம்.முக்கிய குறிப்பு: இரவு 10 மணியுடன் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு பொளத்தாலோக மாவத்தையின் வீதி மூடப்படுவதால் மாலை 3 மணியிலி ருந்து இரவு 8 மணிவரையுமே எமது நிகழ்ச்சிக்கான ஒழுங்கு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதையும். உங்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை நீங்களே மேற்கொள்ள வேண்டுமென்பதையும் அறியத் தருகின்றோம்.


இலங்கையில் (02-11-2009) திங்கட்கிழமை மாலை மூன்று மணிக்கு நடக்கவிருக்கும் அச்சுவலைச் சந்திப்பு நேரடி ஒளிபரப்பாகக் காண்பிக்கப்படவிருக்கிறது.


சந்திப்புக்கு வரவியலாதுள்ள அச்சு ஊடகம் மற்றும் வலைப்பதிவுகள் சம்மந்தப்பட்டவர்கள் நேரடியாக சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களைப் பார்த்து அதன்போதே உங்கள் கருத்துக்களைப் பகிரக்கூடிய (Chatting மூலமாக)சந்தர்ப்பத்தை இது வழங்குகிறது.

நேரடி ஒளிபரப்பு மற்றும் எழுத்துமூல உரையாடலுக்கான சுட்டி இதோ,


www.livestream.com/srilankatamilbloggers

நேரடி ஒளிபரப்பின் அனுபவமும், அதன்மூலமான கருத்துக்களைக் கையாளும் தன்மையும் நன்றாக அமைய பங்குபற்றுபவர்களின் ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது.

நன்றி : கெளபாய்மது

2 கருத்துக் கூறியவர்கள்:

தங்க முகுந்தன் சொல்வது:

எல்லாவற்றுக்கும் நன்றி வந்தி!

Unknown சொல்வது:

அதுசரி....
இலங்கையில வரைபடங்களை பயன்படுத்த அனுமதி இருக்கா???