வட்சன் அதிரடி மீண்டும் ஆஸிக்கு மினி உலகக்கிண்ணம்

இன்றைய ஐசிசி மினி உலககிண்ணப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து ஆடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளால் 4.4 ஓவர்கள் மீதமிருக்க வெற்றிக்கிண்ணத்தை இரண்டாவது தடவையாக சுவீகரித்தது. மீண்டும் தாங்கள் தான் ஒருநாள் போட்டிகளில் முதல் தர அணி என்பதை அவுஸ்திரேலியா நிரூபித்தது.

பலரின் பலத்த எதிர்பார்ப்புகளையும் ஹாசியங்களையும் தவிடுபொடியாக்கி இன்று செஞ்சூரியனில் நியூசிலாந்தும் அவுஸ்திரேலியாவும் ஐசிசி மினி உலகக் கிண்ணப் போட்டியில் மோதின.

போட்டி தொடங்கமுன்னரே நியூசிலாந்துக்கு முதல் அடியாக அணித்தலைவரும் அந்த அணியில் சிறந்த ஃபோர்மில் இருந்தவருமான டானியல் வெட்டோரி காயம் காரணமாக நீக்கப்பட்டு அணித்தலைமைப் பொறுப்பு பிரண்டன் மக்கலத்திடம் கொடுக்கப்பட்டது. வொட்டோரிக்கு பதிலாக ஜீத்தன் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டார்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித்தலைவர் மக்கலம் முதலில் தாங்கள் துடுப்பாடப்போவதாக அறிவித்தார்.

ப்ரட் லீ, பீட்டர் சீடில் ஆகியோரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் ஆரம்பம் முதலே நியூசிலாந்து தடுமாறியது. சீடிலின் நான்காவது ஓவரின் 2 ஆவது பந்துவீச்சில் அணித்தலைவர் மக்கலம் விக்கெட் காப்பாளர் பெயினிடம் பிடிகொடுத்து ஓட்டம் எதுவும் எடுக்காமல் "டக்" அவுட் ஆனார்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஏரோன் ரெட்மெண்டுடன் இணைந்த மார்ட்டின் குப்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டங்களை 61 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளை ரெட்மெண்ட் ஹோரிட்ஸின் பந்துவீச்சில் பெயினிடம் பிடிகொடுத்து 26 ஆட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குப்தில் ஹோரிட்ஸின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோஸ் டைலரும் மிச்சல் ஜோன்சனின் பந்துவீச்சில் ஹசியிடம் பிடிகொடுத்து 6 ஓட்டங்களுடன் ஓட்டமிழந்தார். எலியொட் பிரட் லீயின் பந்துவீச்சில் எல்பிடவுள்யூ முறையில் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 94 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற இக்கெட்டான நிலையில் இருந்தது.

பின்னர் இணை சேர்ந்த நீல் புரோமும் சகலதுறை வீரர் ஜேம்ஸ் பிராங்கிளிங்கும் 40 ஓவர் வரை சிறப்பாக 6ஆவது விக்கெட்டுக்காக 65 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று ஓரளவு அணியைத் தூக்கிவிட்டனர்.

புரோம் ரன் அவுட் முறையில் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்த சில பந்துகளிலையே பிராங்கிளினும் 33 ஓட்டங்களுக்கு லீயின் பந்துவீச்சில் போல்ட்டாகி ஆட்டமிழந்தார். அணியின் மொத்த எண்ணிக்கை 41.6 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166.

அதன் பின்னர் கைல் மில்ஸ் 12 ஓட்டங்களுடன் ரன் அவுட்டாக, பட்லர் ஹோரிட்சின் பந்துவீச்சில் 6 ஓட்டங்களுக்கு எல்பிடவுள்யூ முறையில் ஆட்டமிழக்க. இறுதிஜோடியான ஜீத்தன் பட்டேலும் ஷேன் பொண்டும் இணைந்து அணியின் எண்ணிக்கையை கஸ்டப்பட்டு 200 ஓட்டங்களுக்கு உயர்த்தினர். பட்டேல் ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்கள் பொண்ட் ஆட்டமிழக்காமல் 3 ஓட்டங்கள். ஆக மொத்த 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து பெற்ற ஓட்ட எண்ணிக்கை 200.

200 ஓட்டம் என்ற மிகவும் இலகுவான இலக்கை துரத்திய ஆஸிக்கு இரண்டாவது ஓவரிலையே முதல் பழியாக பெயின் பொண்டின் பந்துவீச்சில் டைலரிடம் பிடிகொடுத்து 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து ஆட வந்த அணித்தலைவர் பொண்டிங்கும் அடுத்த ஓவரில் மில்ஸின் பந்தில் எல்பிடவுள்யூ மூலம் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.பின்னர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷேன் வட்சனுடன் இணை சேர்ந்தார் கம்ரூன் வைட். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஷேன் பொண்ட், மில்ஸ் இருவரின் வேகங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறினாலும் பின்னர் சிறுகச் சிறுக ஓட்டங்களைச் சேர்த்து அதன் பின்னர் பந்துவீசிய பட்லர், பிராங்கிளின், பட்டேல் ஆகியோரின் பந்துகளை அடிக்கத் தொடங்கினர்.

மூன்றாவது விக்கெட்டுக்காக வைட்டும் வட்சனும் இணைந்து 128 ஓட்டங்களை எடுத்தனர். இந்த வேளையில் மீண்டும் மில்ஸை பந்துவீச அழைத்தார் மக்கலம். அதற்குப் பலனாக மில்ஸின் பந்தில் 7 நான்கு ஓட்டங்கள் 1 ஆறு ஓட்டம் அடங்கலாக 62 ஓட்டங்களுடன் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார் வைட்.

மைக் ஹசியும் மில்ஸின் பந்தில் பட்டேலிடம் பிடிகொடுத்து 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். போட்டி நியூசிலாந்தின் பக்கம் திரும்பினாலும் ஒரு பக்கம் வட்சன் சிறப்பாக ஆடி ஒருநாள் போட்டிகளில் 2000 ஓட்டங்களையும் கடந்தார்.

அதிரடி வட்சன‌வட்சனுடன் பின்னர் இணைந்த ஜேம்ஸ் ஹோப்ஸும் தன் பங்கிற்க்கு அதிரடி காட்ட இருவரும் பிரிக்கமுடியாத இணைப்பாட்டமாக 41 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்து ஆஸியின் வெற்றிக்கு வழிகோலினர். வட்சன் அதிரடியாக இந்த தொடரின் தன்னுடைய இரண்டாவது சதத்தையும் எடுத்தார். இரண்டும் இதே செஞ்சூரியன் மைதானத்தில் எடுத்தவை. 129 பந்துகளில் 10 நான்குகள் 4 ஆறுகள் என வட்சன் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைப் பெற்றார். இறுதி ஓவரில் 7 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் வட்சன் 93 ஓட்டங்களில் இருந்தார். பட்டேலின் இரண்டு பந்துகளையும் ஆறு ஓட்டங்களாக மாற்றி ஆஸியின் வெற்றியை இலகுவாக்கினார் வட்சன்.

விருதுகள் :
போட்டியின் ஆட்ட நாயகன் : ஷேன் வட்சன்
தொடர்நாயகன் : ரிக்கி பொண்டிங்

முதல்முதலாக தங்க துடுப்பும் தங்கப் பந்தும் தொடரில் அதிக ஓட்டங்கள் அதிக விக்கெட்டுகள் பெற்ற வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

தங்கத் துடுப்பு (Golden Bat): ரிக்கி பொண்டிங். 288 ஓட்டங்கள்
தங்க பந்து (Golden Ball): பார்னல் (தென்னாபிரிக்கா)‍ 11 விக்கெட்டுகள்

5 கருத்துக் கூறியவர்கள்:

root சொல்வது:

ithuku thana 2am varaikum irunthathu?
nama ponting aaa vela mudumaaaaaaaaa

Unknown சொல்வது:

நானும் போட்டாச்சு...
பார்னெல்லுக்குத் தங்கப் பந்து கொஞ்சம் ஓவர் அண்ணை... எண்ணிக்கையை மட்டும் வைத்துக் கொடுத்தது தவறு. பொண்டிங் அதிக ரன்களை எடுத்தது மட்டுமல்ல.. எடுத்தது எல்லாம் தரமான ரண்கள். ஆனால் பார்னெல்??

Unknown சொல்வது:

உங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்
gadget ஐ பெற இங்கே செல்லவும்

tamil10 .com சார்பாக
தமிழினி
நன்றி

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

அவுஸ்திரெலியா வெற்றி பெற போகுது என தெரிந்தவுடன் கடுப்புடன் தூங்கி விட்டேன்..

maruthamooran சொல்வது:

தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்த வட்சன். அரையிறுதி, இறுதி ஆட்டங்களில் சதமடித்து கலக்கியது அருமை. நல்ல சகலதுறை ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு அணிக்கும் தேவை என்பதை அவரது எழுச்சியும் உணர்த்தியுள்ளது.