இலங்கையில் மட்டுமே இவை சாத்தியம் - நகைச்சுவை


தலைவரின் வாகனம் மட்டும் நிறுத்தலாம்


இரண்டு வாகனத்தின் இலக்கங்களும் ஒன்று


இருபக்கமும் வாகனம் நிறுத்துவது தடை


தேனிலவிற்க்கு உதிரியாக இன்னொருவரா


அம்மா தங்கம் என்றால் அப்பா பித்தளையா?


மிகவும் தேவையான வாசகம்


புல்லட்டும் இப்படித்தான்


தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி


இன்னொரு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி


விளக்கம் தேவையா

பின்குறிப்பு : இந்தப் படங்களை மின்னஞ்சல் மூலமாக எனக்கு அனுப்பிய நண்பருக்கு நன்றிகள்.

46 கருத்துக் கூறியவர்கள்:

maruthamooran சொல்வது:

புல்லட்டின் செருப்பு அருமை:

பதிவுக்கு சம்பந்தமில்லாக கேள்வி: வத்தளையிலிருந்து காரில் ‘அச்சுவலை’ சந்திப்புக்கு வருவதென்றால் எப்படி வருவது. (உடனடியாக பதில் தரவும்)

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

கொடும சரவணா

Anonymous சொல்வது:

செருப்புக்கே பூட்டா, எல்லா படங்களையும் ரசித்தேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

// மருதமூரான். said...
புல்லட்டின் செருப்பு அருமை://
புல்லட்டிற்க்கே இந்தப் பாராட்டுகள் சென்றடையவேண்டும்.

//பதிவுக்கு சம்பந்தமில்லாக கேள்வி: வத்தளையிலிருந்து காரில் ‘அச்சுவலை’ சந்திப்புக்கு வருவதென்றால் எப்படி வருவது. (உடனடியாக பதில் தரவும்)//

காரில் ஏறி ஸ்டார்ப் பண்ணியபின்னர் நீர்கொழும்பு வீதியூடாக களனிப் பாலத்தினூடாக பேஸ்லைன் வீதியூடாக பொரளைக்கு வாருங்கள்.(நேரான புதிய அகல வீதி) பின்னர் கனத்தை(மயானம்) சந்தியில் வலப்பக்கமாக திரும்பி பெளத்தாலோக மாவத்தையில் பிராயணம் செய்து, அங்கே ரூபவாஹினிக்கு முன்னால் உள்ள போக்குவரத்து சமிக்ஞ்ச்சையில் இடது பக்கம் திரும்பினால் இருக்கிறம் அலுவலககத்தை வந்தடையலாம். மிகவும் இலகுவான பாதை இந்தப் பாதைதான். கல்கிசையில் இருந்து வருவது என்றால் சரியான கஸ்டம்.

maruthamooran சொல்வது:

////காரில் ஏறி ஸ்டார்ப் பண்ணியபின்னர் நீர்கொழும்பு வீதியூடாக களனிப் பாலத்தினூடாக பேஸ்லைன் வீதியூடாக பொரளைக்கு வாருங்கள்.(நேரான புதிய அகல வீதி) பின்னர் கனத்தை(மயானம்) சந்தியில் வலப்பக்கமாக திரும்பி பெளத்தாலோக மாவத்தையில் பிராயணம் செய்து, அங்கே ரூபவாஹினிக்கு முன்னால் உள்ள போக்குவரத்து சமிக்ஞ்ச்சையில் இடது பக்கம் திரும்பினால் இருக்கிறம் அலுவலககத்தை வந்தடையலாம். மிகவும் இலகுவான பாதை இந்தப் பாதைதான். கல்கிசையில் இருந்து வருவது என்றால் சரியான கஸ்டம்.////

ஏன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வத்தளையில் இருந்து பலரை (ஒருவர், இருவர், மூவர் என்று பலர்) அழைத்துவர இருக்கிறார். அதுதான் பாதையை விளக்கமாக கேட்டனான். இந்த தகவலை அவருக்கு அலைபேச வேண்டும்.

கல்கிசையில் இருந்து வாரும் நண்பர்கள் 154 இலக்க பேரூந்தில் வரலாம் என்று நினைக்கிறேன். சரிதானே வந்தி,

நான், யாழ்ப்பாணத்தில் இருந்து தனி விமானத்தில் வரவிருக்கிறேன். பயண ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து தருவதாக அறிவித்துள்ளனர்.

நர்சிம் சொல்வது:

மிக அருமை வந்தியத்தேவன்.

எல்லாமே டாப் என்றாலும் எக்ஸ்ட்ரா பெர்சன் ...சிரிப்பை அடக்க முடியவில்லை.

Bavan சொல்வது:

மிக மிக அருமை...:D

sanjeevan சொல்வது:

செருப்பு படம் சூப்பர்.
இனி உது தான் செய்யனும் போல.

Unknown சொல்வது:

ஹலோ...
ஓட்டோ அனுப்பிறதா?
நாங்க ஒரு இலக்கத்தில 2 வாகனமும் வச்சிருப்பம், ஒரே குடும்பத்தில ஆட்சியும் நடத்துவம்... அதப் பற்றி கேக்கிறறவனுக்கு உயிர் இருக்காது. ;)

படங்கள் அருமை...
செருப்புப் படம் பற்றிய விளக்கத்தை புல்லட் அண்ணாவிடம் இருந்து எதிர்பார்க்கிறோம், ஏனென்றால் அவர் தனது செருப்புகளுக்கு இரண்டு பூட்டுகள் இடுவதாக கேள்வி....

Look my back, not her's
ஹா ஹா....
உங்களுக்குத் தான் சொல்லினம் வந்தியண்ணா.... ;)

என்றும் அன்புடன் கரன்... சொல்வது:

இலங்கையில் முடியாதது ஏதும் இல்லை...அமைச்சர்களின் வாகனம் சில்லும் இல்லாமல் ஓடலாம் நம்பர் plate ஜுஜுபி

root சொல்வது:

சும்ம கொமடிக்கு தான் :P
எனக்கு உந்த பதிவு பிடிக்க இல்லை...
நீங்கள் எழுதுற வேலைய பாருங்க ...
நாங்கள் படம் போட்டு காட்டுறம்....

எங்க பிளைப்பில மண்ண போடுரிங்க போல...

ஆதிரை சொல்வது:

நேரே விசயத்துக்கு வராமல் சாட்டுக்காக சொல்லிப்போட்டு கேட்போம்.

ஆஹா... எல்லாம் சூப்பர்.

சரி, இனி விசயத்துக்கு வருவோம்.
பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்வி: வத்தளையிலிருந்து மாட்டு வண்டிலில் ‘அச்சுவலை’ சந்திப்புக்கு வருவதென்றால் எப்படி வருவது. (உடனடியாக பதில் தரவும்)

Admin சொல்வது:

//கனககோபி said...
ஹலோ...
ஓட்டோ அனுப்பிறதா?
நாங்க ஒரு இலக்கத்தில 2 வாகனமும் வச்சிருப்பம், ஒரே குடும்பத்தில ஆட்சியும் நடத்துவம்... அதப் பற்றி கேக்கிறறவனுக்கு உயிர் இருக்காது. ;)//


அதேதான்.....

இங்க நான் போடுவதுதான் சட்டம் அப்படியும் சொல்லலாம்.


புல்லட்டை பின்பற்ற வேண்டும் போல இருக்கு. நான் அதிகம் கோவிலுக்குச் செல்வதால் அதிகமாக செருப்பைத் தொலைப்பதுண்டு. நல்ல முயற்சி

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொல்வது:

அண்ணா அருமையா இருக்கு. படங்களும் உங்கள் விளக்கமும். உண்மை தான் எம் சொந்த வீடுகளை கூட எனது என சொல்ல முடியாத நிலை கொடுமை வலி இது தான் நாம் வாழும் நரக தேசம்

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

புல்லட்டின் தொழிநுட்ப அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.

Unknown சொல்வது:

Honeymoon Extra Person.. நீங்கள் அந்த ஹோட்டல் எல்லாம் புதுமணத் தம்பதிகளுக்கு என்று பிழையாக விளங்கிக் கொண்டீர்கள்... இது வேற ஹனிமூன்... ஒராள் எத்தனை பேரையும் கூட்டிக்கொண்டுபோய் தங்கலாம். ஆங்கிலத்தில் O_ _ Y என்ற வார்த்தை இருக்கிறதல்லவா? இங்கே Honeymoon என்பதை நீங்கள் அந்த வார்த்தையாக கணக்கெடுக்க வேண்டும்

வந்தியத்தேவன் சொல்வது:

//இறக்குவானை நிர்ஷன் said...
கொடும சரவணா//

இதை விட இன்னும் கொடுமைகள் இருக்கின்றது அவை தனிச் சிங்களத்தில் இருப்பதால் சிங்களம் புரியாதவர்களுக்கு கஸ்டம் என்பதால் பிரசுரிக்கவில்லை.

வந்தியத்தேவன் சொல்வது:

//சின்ன அம்மிணி said...
செருப்புக்கே பூட்டா, எல்லா படங்களையும் ரசித்தேன்.//

ஆமாம் அம்மிணி பூட்டாவிட்டால் சுட்டுக்கொண்டுபோய்விடுவார்கள், உங்கள் வருகைக்கு நன்றிகள்

வந்தியத்தேவன் சொல்வது:

//மருதமூரான். said...

ஏன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வத்தளையில் இருந்து பலரை (ஒருவர், இருவர், மூவர் என்று பலர்) அழைத்துவர இருக்கிறார். அதுதான் பாதையை விளக்கமாக கேட்டனான். இந்த தகவலை அவருக்கு அலைபேச வேண்டும். //

உடனடியாக அவருக்குச் சொல்லிவிடுங்கள் இல்லையென்றால் ஆள் பாதை மாறி கண்டிக்குப் போய்விடுவார்,

//கல்கிசையில் இருந்து வாரும் நண்பர்கள் 154 இலக்க பேரூந்தில் வரலாம் என்று நினைக்கிறேன். சரிதானே வந்தி,//

அதே தான் ஏறி அப்படியே நல்ல நித்திரை கொண்டுகொண்டு வரலாம்.

//நான், யாழ்ப்பாணத்தில் இருந்து தனி விமானத்தில் வரவிருக்கிறேன். பயண ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து தருவதாக அறிவித்துள்ளனர்.//

அப்படியா நல்லது நேரடியாக வந்து இறங்குங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//நர்சிம் said...
மிக அருமை வந்தியத்தேவன்.

எல்லாமே டாப் என்றாலும் எக்ஸ்ட்ரா பெர்சன் ...சிரிப்பை அடக்க முடியவில்லை.//

வருகைக்கு நன்றிகள் நர்சிம். எக்ஸ்ட்ரா பெர்சன் உண்மையாகவே அந்த ஹோட்டலின் இணையத்தில் இருந்தது.

வந்தியத்தேவன் சொல்வது:

//Bavan said...
மிக மிக அருமை...:ட்//

வருகைக்கு நன்றிகள் பவன்

வந்தியத்தேவன் சொல்வது:

// sanjeevan said...
செருப்பு படம் சூப்பர்.
இனி உது தான் செய்யனும் போல.//

ஹாஹா, அனுபவம் போல கிடக்கு

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி said...
ஹலோ...
ஓட்டோ அனுப்பிறதா?//
நாங்க ஒரு இலக்கத்தில 2 வாகனமும் வச்சிருப்பம், ஒரே குடும்பத்தில ஆட்சியும் நடத்துவம்... அதப் பற்றி கேக்கிறறவனுக்கு உயிர் இருக்காது. ;) //

நான் இந்தப் பின்னூட்டம் வாசிக்கவில்லை.

//படங்கள் அருமை...//

நன்றிகள்

//செருப்புப் படம் பற்றிய விளக்கத்தை புல்லட் அண்ணாவிடம் இருந்து எதிர்பார்க்கிறோம், ஏனென்றால் அவர் தனது செருப்புகளுக்கு இரண்டு பூட்டுகள் இடுவதாக கேள்வி....//

புல்லட் விரைவில் பதில் தருவார்

//Look my back, not her's
ஹா ஹா....
உங்களுக்குத் தான் சொல்லினம் வந்தியண்ணா.... ;)//

எனக்கு மட்டுமல்ல பெரும்பாலான சாரதிகள் இப்படித்தான்.

வந்தியத்தேவன் சொல்வது:

// யசோ...அன்பாய் உரிமையோடு கரன் said...
இலங்கையில் முடியாதது ஏதும் இல்லை...அமைச்சர்களின் வாகனம் சில்லும் இல்லாமல் ஓடலாம் நம்பர் plate ஜுஜுபி//

அதுதானே கரன், எப்படியும் ஓடலாம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//root said...
எனக்கு உந்த பதிவு பிடிக்க இல்லை...
நீங்கள் எழுதுற வேலைய பாருங்க ...
நாங்கள் படம் போட்டு காட்டுறம்....
எங்க பிளைப்பில மண்ண போடுரிங்க போல...//

இல்லை இல்லை நான் மாதத்திற்க்கு ஒரு படம் தான் காட்டுகின்றது. நீங்கள் தினமும் படம் காட்டுபவர் அல்லவோ.

வந்தியத்தேவன் சொல்வது:

//ஆதிரை said...

ஆஹா... எல்லாம் சூப்பர்.//

பாராட்டுக்கு நன்றிகள்.

//பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்வி: வத்தளையிலிருந்து மாட்டு வண்டிலில் ‘அச்சுவலை’ சந்திப்புக்கு வருவதென்றால் எப்படி வருவது. (உடனடியாக பதில் தரவும்)//

மாட்டு வண்டியில் வருவது என்றால் மாடும் வண்டிலும் வேண்டும் முதலில் அவற்றைத் தயார் செய்யுங்கள். பின்னர் மருதமூரானுக்கு சொன்ன பாதையில் வந்தால் சரி. என்ன இரண்டு பாடசாலை நண்பர்களும் என்னைக் கலாய்க்கின்றீர்களோ.

புல்லட் சொல்வது:

என்னுடைய செருப்பை சுட்டதுமில்லாமல் அதை போட்டோ வேறா எடுத்து போடுறியள்.. அதுவும் பாத்ரூம் செருப்பு.. இனி பக்கத்து வீட்டு பாட்டியை கூட உள்பாவாடைய உலக்கையோட கட்டி வக்கச் சொல்லவேணும்... அதையும் தூக்கிக்கொண்டு போய் போட்டோ எடுத்துப்போடும் உந்த மந்தி.. சாரி வந்தி...

உண்மையான ஜடியா என்னெண்டால் உந்த செருப்பை கொழுவிக்கொண்டு ஓடமுடியாதல்லோ? ஆனால் வந்தி மாதிரி சாக்கு ஓட்டம் ஓடப்பழகினாக்கள் வெள்ளவத்தையில இருந்து கொட்டேனா வரைக்கும் குட்டிபோட்ட கங்காரு குதிச்சது போல ஓடுவாங்கள் எண்டு கனவிலும் நினைக்கேல்ல.. என்ன பெபோமன்சு? ஹ்ம்ம்

அது சரி உண்மையச்சொல்லுங்க வந்தி.. அந்த எக்ஸரா பேசனாக போறதுக்கு எத்தினை அப்பிளிக்கசன் பில் பண்ணினியள்.. ஆ?

வந்தியத்தேவன் சொல்வது:

//சந்ரு said...
அதேதான்.....

இங்க நான் போடுவதுதான் சட்டம் அப்படியும் சொல்லலாம். //

நான் இந்தப் பின்னூட்டத்தையும் வாசிக்கவில்லை.

//புல்லட்டை பின்பற்ற வேண்டும் போல இருக்கு. நான் அதிகம் கோவிலுக்குச் செல்வதால் அதிகமாக செருப்பைத் தொலைப்பதுண்டு. நல்ல முயற்சி//

புல்லட் தன்னுடைய திறமையை இப்படித் தான் காட்டுகின்றவர். அடுத்த முறை பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலுக்கு போனால் பூட்டுடன் ஒரு செருப்பு இருந்தால் அது புல்லட் தான் என நினையுங்கள். கோவிலுக்குச் செல்லும்போது பழைய செருப்புடன் போங்கள் தொலைக்கச் சந்தர்ப்பம் குறைவு,

வந்தியத்தேவன் சொல்வது:

//ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
அண்ணா அருமையா இருக்கு. படங்களும் உங்கள் விளக்கமும். உண்மை தான் எம் சொந்த வீடுகளை கூட எனது என சொல்ல முடியாத நிலை கொடுமை வலி இது தான் நாம் வாழும் நரக தேசம்//

வருகைக்கு நன்றிகள் கீர்த்தி. ம்ம்ம் சில நாட்களில் அனைத்தும் குறையும் என நினைக்கின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

// வேந்தன் said...
:)))))//

என்ன வேந்தன் இப்படிச் சிரிக்கின்றீர்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) said...
புல்லட்டின் தொழிநுட்ப அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.//

விரைவில் புல்லட் Barcode மூலம் தன்னுடைய‌ பொருட்களைப் பாதுகாக்க புரோகிராம் எழுதுகின்றார்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Kiruthikan Kumarasamy said...
Honeymoon Extra Person.. நீங்கள் அந்த ஹோட்டல் எல்லாம் புதுமணத் தம்பதிகளுக்கு என்று பிழையாக விளங்கிக் கொண்டீர்கள்... இது வேற ஹனிமூன்... ஒராள் எத்தனை பேரையும் கூட்டிக்கொண்டுபோய் தங்கலாம். ஆங்கிலத்தில் O_ _ Y என்ற வார்த்தை இருக்கிறதல்லவா? இங்கே Honeymoon என்பதை நீங்கள் அந்த வார்த்தையாக கணக்கெடுக்க வேண்டும்//

கிருத்தி நீங்கள் ஒரு நவீன இளைஞன் என்பதைக் காட்டிவிட்டீர்கள், ஆசிய நாடுகளுக்கு இதெல்லாம் புதிசு.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

//வந்தியத்தேவன் said...
//ஆதிரை said...

ஆஹா... எல்லாம் சூப்பர்.//

பாராட்டுக்கு நன்றிகள்.

//பதிவுக்கு சம்பந்தமில்லாத கேள்வி: வத்தளையிலிருந்து மாட்டு வண்டிலில் ‘அச்சுவலை’ சந்திப்புக்கு வருவதென்றால் எப்படி வருவது. (உடனடியாக பதில் தரவும்)//

மாட்டு வண்டியில் வருவது என்றால் மாடும் வண்டிலும் வேண்டும் முதலில் அவற்றைத் தயார் செய்யுங்கள். பின்னர் மருதமூரானுக்கு சொன்ன பாதையில் வந்தால் சரி. என்ன இரண்டு பாடசாலை நண்பர்களும் என்னைக் //

சரி வந்தி நானும் மாட்டு வண்டியில் வர யோசித்திருக்கிறேன். ஆனால் மாடு கிடைக்குதில்லையே. மாட்டு வண்டி ஒன்றை கண்டிக்கு அனுப்ப இயலுமா?

வந்தியத்தேவன் சொல்வது:

//புல்லட் said...
என்னுடைய செருப்பை சுட்டதுமில்லாமல் அதை போட்டோ வேறா எடுத்து போடுறியள்.. அதுவும் பாத்ரூம் செருப்பு.. இனி பக்கத்து வீட்டு பாட்டியை கூட உள்பாவாடைய உலக்கையோட கட்டி வக்கச் சொல்லவேணும்... அதையும் தூக்கிக்கொண்டு போய் போட்டோ எடுத்துப்போடும் உந்த மந்தி.. சாரி வந்தி...//

ஹாஹா நினைத்தேன் இப்படி பிளேட்டைத் திருப்புவியள் என்று. தம்பி உள்பாவாடை மேட்டர் எனக்குத் தான் தெரியும் அமைதியாக இருக்கவும்.

//உண்மையான ஜடியா என்னெண்டால் உந்த செருப்பை கொழுவிக்கொண்டு ஓடமுடியாதல்லோ? ஆனால் வந்தி மாதிரி சாக்கு ஓட்டம் ஓடப்பழகினாக்கள் வெள்ளவத்தையில இருந்து கொட்டேனா வரைக்கும் குட்டிபோட்ட கங்காரு குதிச்சது போல ஓடுவாங்கள் எண்டு கனவிலும் நினைக்கேல்ல.. என்ன பெபோமன்சு? ஹ்ம்ம்//

சாக்கு ஓட்டமோ ஐயோ ஐயோ நான் இதுவரை எந்த விளையாட்டுப்போட்டிகளிலும் பங்குபெறவில்லை ஆகவே இது சரிவராது.

//அது சரி உண்மையச்சொல்லுங்க வந்தி.. அந்த எக்ஸரா பேசனாக போறதுக்கு எத்தினை அப்பிளிக்கசன் பில் பண்ணினியள்.. ஆ?//

அந்தக் கதை பொது இடத்தில் சொல்லமுடியாது.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) said...

சரி வந்தி நானும் மாட்டு வண்டியில் வர யோசித்திருக்கிறேன். ஆனால் மாடு கிடைக்குதில்லையே. மாட்டு வண்டி ஒன்றை கண்டிக்கு அனுப்ப இயலுமா?//

என்னுடைய Farm ville ல் இருந்து 2 மாடுகள் அனுப்பவோ. மாட்டுவண்டிலில் கலியாணம் செய்த புதுமணத்தம்பதிகள் தான் தேனிலவுக்குச் செல்வார்கள், ஆதிரைக்கும் யோவிற்க்கும் வண்டி கேட்குது என்றால் விடயம் விவகாரமாக இருக்கின்றதே.

Subankan சொல்வது:

அந்த கண்ணாடி கட்டின வானை பம்பலப்பிட்டில ஒருநாள் கண்ட ஞாபகம்.

அண்ணா, இதை எனக்குமட்டும் சொல்லுங்கோ, அந்த ஹனிமூன் மேட்டர் எந்த ஹோட்டல்ல?

என்ன கொடும சார் சொல்வது:

ஹனிமூன் இலங்கை விஷயம் இல்லை.. இருந்தால் எந்த ஹோட்டலின் இணையதளத்தில் அல்லது விளம்பரத்தில் இருக்கிறது என்று சொல்லமுடியுமா?

அதோடு பூட்டும் இலங்கை விஷயமும் அல்ல. இருந்தால் யாராவது விஷமம் பண்ணியிருப்பார்கள்.

தேவை இல்லாமல் எதற்கு இலங்கையை அவமானப்படுத்துகிறீர்கள்?

Anonymous சொல்வது:

//என்ன கொடும சார்
தேவை இல்லாமல் எதற்கு இலங்கையை அவமானப்படுத்துகிறீர்கள்?
//
இலங்கைக்கு ஒரு மானம் இருக்கா??
அதை இப்படி தான் அவமான படுத்தணுமா??
brother உங்களுக்கு இந்த படம் போட்டதால இலங்கைக்கு அவமானம்?
"என்ன கொடும் சார்"(உங்களை கூப்பிட இல்ல எனக்கு நானே சொல்லி கொள்ளுறன்) இப்படியெல்லாம் ஒரு பின்னூட்டம் இந்த கேவலம் கெட்ட நாட்டுக்கு..... supportaaa....

root சொல்வது:

வந்தியத்தேவன் said...
//இல்லை இல்லை நான் மாதத்திற்க்கு ஒரு படம் தான் காட்டுகின்றது. நீங்கள் தினமும் படம் காட்டுபவர் //

public public பாத்திட்டு இருக்கு....

வந்தியத்தேவன் சொல்வது:

//Subankan said...
அந்த கண்ணாடி கட்டின வானை பம்பலப்பிட்டில ஒருநாள் கண்ட ஞாபகம். //

ஹாஹா நானும் கண்டேன், அந்த வான் மட்டுமல்ல சில கார்கள் கூட இதே பாணியில் ஓடுகின்றன.

//அண்ணா, இதை எனக்குமட்டும் சொல்லுங்கோ, அந்த ஹனிமூன் மேட்டர் எந்த ஹோட்டல்ல?//

இது ஒரு ஹோட்டலின் இணையத்தளத்தில் இருந்தது. இப்போ இந்த பக்கத்தை எடுத்துவிட்டார்கள். சில நாட்களுக்கு முன்னர் இன்னொரு வலையில் அந்த ஹோட்டல் மேட்டர் இருந்தது. தேடிப்பார்த்து அனுப்புகின்றேன்,

வந்தியத்தேவன் சொல்வது:

//என்ன கொடும சார் said...
ஹனிமூன் இலங்கை விஷயம் இல்லை.. இருந்தால் எந்த ஹோட்டலின் இணையதளத்தில் அல்லது விளம்பரத்தில் இருக்கிறது என்று சொல்லமுடியுமா?//

சுபாங்கனுக்கு கொடுத்த பதில் தான் உமக்கும்.

//தேவை இல்லாமல் எதற்கு இலங்கையை அவமானப்படுத்துகிறீர்கள்?/

படம் மட்டும் தான் பார்ப்பீர்களா? இது நகைச்சுவை என இடப்பட்டிருக்கிறது. இதை எனக்கு அனுப்பியவர் என் பெரும்பான்மை இன நண்பர், அவர்களின் ஒரு பிரபல இணையத்தில் இதனைவிட மோசமான படங்கள் கூட இருக்கிறது. அவர்களே கவலைப்படவில்லை நீர் எதற்க்குக் கவலைப்படுகிறீர்?

வந்தியத்தேவன் சொல்வது:

// Anonymous said...
இலங்கைக்கு ஒரு மானம் இருக்கா??
அதை இப்படி தான் அவமான படுத்தணுமா??
brother உங்களுக்கு இந்த படம் போட்டதால இலங்கைக்கு அவமானம்?
"என்ன கொடும் சார்"(உங்களை கூப்பிட இல்ல எனக்கு நானே சொல்லி கொள்ளுறன்) இப்படியெல்லாம் ஒரு பின்னூட்டம் இந்த கேவலம் கெட்ட நாட்டுக்கு..... supportaaa....///

அனானியே இதனை உங்கள் பெயரில் சொல்லியிருக்கலாம் காரணம் ஒரு நாட்டைத் திட்டும் உரிமையாருக்கும் இல்லை. அத்துடன் இந்தப் படங்கள் நகைச்சுவைக்காகவே அன்றி வேறில்லை. என்ன கொடுமை சார் தன்னுடைய அறிவுஜீவித்தனத்தை இதிலும் காட்டுகின்றார், அவரின் குணம் இதுதான் அவரைக் குறை சொல்வது தவறு.

வந்தியத்தேவன் சொல்வது:

//root said...
public public பாத்திட்டு இருக்கு//

ம்ம்ம் உண்மைதான் பப்ளிக் நன்றாகவே பார்த்திக்கிட்டு இருக்கு, இல்லையென்றால் நகைச்சுவைப் பதிவில் சீரியசாகப் பின்னூட்டம் இடுவார்களா?

Unknown சொல்வது:

என்ன கொடுமை சேர் இது...
இங்கே நிறைய patriot கள் இருப்பார்கள் போல...
நகைச்சுவையை நகைச்சுவையாக பாருங்கள் நண்பர்களே....

Anonymous சொல்வது:

வந்தி அவர்களே...
உந்த நகைச்சுவை படத்தையே..
பயபிள்ள "என்ன கொடும சார்" எவ்வளவு seriousaa எடுக்குரார்...
அவரது நாட்டு பற்று என்னை நாட்டில் உலாவ விடாம பண்ணிடும் எண்ட பயத்தில தான்...
அன்னனியாக பின்னூட்டம் இட்டதுக்கு மன்னிக்கவும்..

balavasakan சொல்வது:

ஹா.....ஹா .....வந்தி அண்ணா ....
உங்கள் ...பதிவை விட கும்மி சுவாரஸ்யமாக இருக்கு ....
ஹா.....ஹா ...