ஜொள்ளு ஸ்பெசல்
திரைப்படம் என்றதொரு பொழுது போக்கு சாதனம் வந்தநாள் முதல் திரையில் எத்தனையோ நடிகைகள் நட்சத்திரங்களாக தோன்றி மறைந்தாலும் இன்றைக்கும் ஒரு சிலரே கனவுக் கன்னிகளாக நினைவில் நிற்பவர்கள். ஒரு ரசிகனுக்கு அவனது கதாநாயகர்கள் பெரும்பாலும் மாறுவதில்லை ஆனால் கதாநாயகிகள் மட்டும் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டிருக்கும், இதற்கான காரணத்தை யாரும் உளவியலாளர்கள் தான் கூறவேண்டும்.
அந்தக் காலத்து பழம்பெரும் நடிகைகளான பத்மினி, சரோஜாதேவி முதல் இன்றைய சுனைனா, தமன்னா வரை தமிழ் சினிமாவில் கனவுக் கன்னிகள் அதிகம். என்னுடைய திரைப்பட அனுபவங்களில் என்னைக் கவர்ந்த கதாநாயகிகள் பற்றிய ஒரு ஜொள்ளுப் பதிவே இது.
ஏற்கனவே நம்ம அண்ணன் கானா பிரபா ஒரு ஜொள்ளு மழையையே அழகு ராணிகள் என்ற பதிவில் ஏற்படுத்தியவர், அண்ணன் காட்டிய வழியில் தம்பியின் ஜொள்ளுத் தூறல் இந்தப் பதிவு.
இப்படியான பதிவுகள் எழுதும்போது ஏனோ உற்சாகம் தானாகத் தொற்றிக் கொள்கின்றது.
ஸ்ரீ தேவி
மயிலாக திரையில் பலருக்கு நன்கு தெரியவந்தாலும் எனக்கு குரு படம் மூலமே குழந்தைப் பருவத்தில் தெரியவந்தார். அந்தக் காலத்தில் என்னுடைய ஆதர்ச கதாநாயகர்கள் கமல், ரஜனியுடன் அதிக படங்களில் இணைந்து நடித்ததாலோ என்னவோ ஸ்ரீ தேவியை இன்றுவரை மிகவும் பிடிக்கும். நான் விடலைப் பருவத்தை அடைந்த சமயம் ஏனோ ஹிந்திக்குப் போய் அந்நியமானாலும் இன்றைக்கும் அவரின் பழைய பாடல்கள் மூலம் அடிக்கடி யூடூயூப்பிலும் இசையருவியிலும் ( இரவுகளில் இடைக்காலப் பாடல்கள் ஒளிபரப்புவார்கள் ) ஜொள்ளுவிடும் நடிகை.
அழகையும் நடிப்பையும் ஒருங்கே கொண்ட நடிகைகளில் முக்கிய இடம் இவருக்குத் தான் இன்னும் ஸ்ரீ தேவி போல ஒருவர் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கவில்லை. குரு, தர்மயுத்தம், ப்ரியா போன்ற படங்களில் மிகவும் அழகாக இருப்பார். பதினாறு வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், சிவப்பு ரோஜாக்கள், மூன்றாம் பிறை போன்ற படங்களில் நன்றாக நடித்தும் இருப்பார்.
கமல், ரஜனி இருவருடன் நடித்தளவு ஸ்ரீ தேவி ஏனோ ஏனைய நடிகர்களுடன் அவ்வளவாக நடிக்கவில்லை.
ரேவதி
மண்வாசனையில் முத்துப்பேச்சியாக பாரதிராஜாவால் அறிமுகமானவர். மண்வாசனை, புதுமைப் பெண்,வைதேகி காத்திருந்தாள் என ஆரம்பகாலத்தில் கிராமத்து தேவதையாக தன் நடிப்பாலும் அழகாலும் பலரைக் கவர்ந்தவர். பின்னர் புன்னகை மன்னன், கைதியின் டயறி, இதயத் தாமரை எனப் பல படங்களில் நகரத்து நவநாகரீக பெண்ணாகவும் மாறி அந்த நாள் இளைஞர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர்.
தேவர் மகன், மெளனராகம், அரங்கேற்ற வேளை, கிழக்கு வாசல், அஞ்சலி எனப் பல படங்களில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர். கமல், கார்த்திக், பிரபு, மோகன் போன்றவர்களுடன் அதிகளவான படங்களை நடித்திருந்தார். ரஜனியுடன் கை கொடுக்கும் கையில் நடித்தவர். தேவர் மகனுக்காக தேசிய விருது பெற்றவர். நடிப்பை மட்டும் நம்பி அந்தக் காலக் கவர்ச்சிக் கன்னிகளுடன் போட்டிபோட்டவர்.
ரேவதியின் பலமே அவரது சிரிப்புத்தான். ரேவதி போன்ற சாயலுடன் அவரது சிரிப்பையும் ஒத்த என்னுடன் உயர்தரம் படித்தவர் ஒரு பெண் ஏனோ மனதில் வந்துபோகின்றார்.
நதியா
பூவே பூச்சூடவாவில் அனைவரின் மனதைக் கொள்ளை கொண்ட நடிகை, பின்னர் "நதியா நதியா நைல் நதியா" என தனக்கென ஒரு பாணியில் மிகவும் குறைந்தளவு படங்களில் நடித்தவர். நதியாவின் தாக்கம் அந்தக் காலத்தில் காதணி,வளையல், என பெண்களின் ஒப்பனைப் பொருட்களுக்கு நதியாவின் பெயர் வைக்கும் அளவிற்க்கு பிரபலமானது. நதியாக் காப்பு கொஞ்சக் காலம் ஊர்த் திருவிழாக்களை அலங்கரித்தது. அந்தக் கால இளைஞர்கள் பலரிடம் நதியாவின் மோகம் அதிகமாகவே காணப்பட்டது. இதற்க்கு அவரின் ஹோம்லி லுக்கும் நடிப்பும் முக்கிய காரணமாகும்.
சுரேஷ், மோகன், பிரபு போன்ற நடிகர்களுடன் அதிகளவு படங்களில் நடித்தவர். ரஜனியுடன் ஜோடி சேர்ந்து " எங்கிட்டை மோதாதே" என ஆடிப்பாடிய ராஜாதி ராஜா ஒரு மைல்கல்லான படம் எனலாம்.
சில காலம் திரைத்துறையில் இல்லாமல் மீண்டும் மஹாலட்சுமியாக எம்.குமரன் மஹாலட்சுமியில் அதே இளமையுடன் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்தார்.
குஷ்பு
தர்மத்தின் தலைவனில் அறிமுகமானாலும் வருஷம் 16 தான் இவரின் பெயரை உச்சரிக்க வைத்த படம். பின்னர் "போவோமா ஊர்கோலம்" என சின்னத்தம்பியில் பலரின் மனதைக் கொள்ளையடித்தவர். குஷ்புவுக்காகவும் இசைஞானிக்காகவும் இந்தப் படம் ஓடியது என இருவரின் ரசிகர்களும் இப்பவும் சத்தியம் செய்வார்கள். ரஜனியுடன் மன்னன், அண்ணாமலை, பாண்டியன் கமலுடன் சிங்காரவேலன், மைக்கல் மதன காமராஜன் என இருவருடனும் ஒரே நேரத்தில் நடித்த நடிகை. நதியாவிற்க்குப் பின்னர் மக்களிடையே செல்வாக்கு அதிகம் கிடைத்த நடிகையுமாவார். நதியாக் காப்புகளுக்குப் பின்னர் குஷ்பு காப்பும் குஷ்பு சேலையும் பெண்களிடம் செல்வாக்குச் செலுத்தியது.
அந்தக் காலத்தில் சைனீஸ் பட்லர், பப்ளிமாஸ் என செல்லப் பெயர்களால் அழைக்கப்பட்டவர். கார்த்திக், பிரபு இருவருடனும் அதிக படங்கள் நடித்தவர். ஆரம்பத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக இருந்தாலும் பின்னர் நடிக்கவும் செய்தபடியால் ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்க்கு மனதைக் கவர்ந்து அப்படியே தமிழ்நாட்டின் மருமகளாகத் தங்கிவிட்டார். பின்னர் சரத்குமாருடன் நாட்டாமை, சிம்மராசி என கொஞ்சம் வயதான தோற்றத்தில் வந்தவர் படிப்படியாக வெள்ளித்திரையில் கதாநாயகி அந்தஸ்தில் இருந்து அடுத்த கட்டத்திற்க்கு சென்றுவிட்டார்.
அப்படியே சின்னத் திரையில் கண்ணீருடன் அறிமுகமாகி பின்னர் இவரின் ஜாக்கெட்டுக்காகவே ஜாக்பொட் நிகழ்ச்சியை அதிகம் பேர் பார்க்க வைத்தவர். தற்போது குண்டாக மாறி மானாட மயிலாடவில் நடனம் ஆடுகின்றேன் என மேடையை அதிரவைக்கிறார். அந்தக் காலத்து நயன்தாரா இவர் தான் எத்தனை கிசுகிசுக்கள் சர்ச்சைகள்.
ரம்பா
"அழகிய லைலாவாக" அன்றைய என்னைப்போன்ற விடலைகளின் மனதைக் கொள்ளை கொண்டவர். உள்ளத்தை அள்ளித் தா படத்தை ரம்பாவுக்காகவே பார்த்த நாட்கள் பல. நான் உயர்தரம் படிக்கும் போது அறிமுகமான நடிகை அதனாலோ என்னவோ என் வகுப்பு மாணவர்களின் கனவுக் கன்னியாக அப்போது மாறிவிட்டார்.
ரம்பாவின் கண் கொஞ்சம் ஒன்றரையாக இருந்தாலும் ஏனோ பலருக்கு அவரைப் பிடித்தது. நடிப்பை விட கவர்ச்சியை நம்பித தொடை தட்டிக் களமிறங்கியவர். அந்த நாள் நக்மா, மீனா போன்றவர்களுடன் தாக்குப் பிடித்ததே பெரிய காரியம். கமல், ரஜனி இருவருடனும் ஜோடியாக நடிக்காவிட்டாலும் இருவரின் படத்திலும் நடித்திருந்தார். கார்த்திக்,அர்ஜீன் ஆகியோருடன் அதிக படம் நடித்தார்.
சில காலத்தில் நடிகைகள் மறைவதுபோல் மறைந்தாலும் கலா மாஸ்டரின் புண்ணியத்தில் மானாட மயிலாடவில் வந்து தன் பழைய ரசிகர்களை தனக்காகவே அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வைத்த பெருமை ரம்பாவையே சேரும்.
குறிப்பு : இந்தப் பதிவில் உள்ள ரம்பா தவிர ஏனையோர் நான் பச்சிளம் பாலகனாக இருக்கும் போது ரசித்தவர்கள். யூத்தாகி ரசித்தவர்களின் பட்டியல் நாளை வரும்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
15 கருத்துக் கூறியவர்கள்:
//ரேவதி போன்ற சாயலுடன் அவரது சிரிப்பையும் ஒத்த என்னுடன் உயர்தரம் படித்தவர் ஒரு பெண் ஏனோ மனதில் வந்துபோகின்றார். //
நாங்க அத நம்பிவிட்டோம் வந்தி.
ஜொள்ளு தூறல் என கூறிவிட்டு ஜொள்ளு புயலையே காட்டுகிறிர்களே
ஹாஹாஹ
////தேவர் மகன், மெளனராகம், அரங்கேற்ற வேளை, கிழக்கு வாசல், அஞ்சலி எனப் பல படங்களில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர்.////
தமிழ் சினிமாவில் என்னை ஆழமாகப் பாதித்த நடிகைகள் ரேவதியும், சுஹாசினியும். ரேவதி குறித்த குறிப்புக்கள் சரியானதே. ஆனாலும், மௌனராகம், தேவர்மகன் குறித்து இன்னும் எழுதியிருக்கலாமே.
என்ன இருந்தாலும் இந்தியன், உயிரே, பப்பாய் படங்களில் நடித்த மனிஷா கொய்ராலா குறித்து எதுவும் கூறாமல் சென்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதவும், குறிப்பாக பம்பாய் படத்தில் மனிஷாவின் நடிப்பு அற்புதம். (நேற்றும் இந்தியன் படப்பாட்டு பார்த்தேன். அவங்க இப்ப அண்டி ஆயிட்டாலும், என்னை அதிகளவில் பாதித்த நடிகை மனிஷாவே)
அதுசரி என்கால கால தமன்னாவையும், சுனைனாவையும் ஏன் விட்டுவிட்டீர்கள்.
//ரேவதியின் பலமே அவரது சிரிப்புத்தான். ரேவதி போன்ற சாயலுடன் அவரது சிரிப்பையும் ஒத்த என்னுடன் உயர்தரம் படித்தவர் ஒரு பெண் ஏனோ மனதில் வந்துபோகின்றார்.//
Hmmmmm ithukku naan reply podanuma?? :P
////தூயா ♥ Thooya ♥ சொல்வது:
//ரேவதியின் பலமே அவரது சிரிப்புத்தான். ரேவதி போன்ற சாயலுடன் அவரது சிரிப்பையும் ஒத்த என்னுடன் உயர்தரம் படித்தவர் ஒரு பெண் ஏனோ மனதில் வந்துபோகின்றார்.//
Hmmmmm ithukku naan reply podanuma?? :P////
அதுதானே நான் கூட பதில் போடவில்லையே
தமிழ் சினிமா உலகில் குஷ்பூ ஒரு மைல் கல். குஷ்பூ இட்டிலி, குஷ்பூ கோயில், இவைகளோடு நில்லாமல் கூடையில் என்ன பூ குஷ்பூ என்று பாட்டில் இடம்பிடித்த ஒரே நாயகி! அவருக்கு தனிப் பதிவே போடலாம்!
http://kgjawarlal.wordpress.com
நல்லா வயசு போன கெசோ நீங்கள்? கிழவியள பற்றி கிளுகிளுப்பா கதைக்கிறியள்? நானெல்லாம் சின்ன வயிசல குஸ்புவ பாத்து ஏனிந்த மண்ணெண்ணய் பீப்பா மரத்தை சுத்தி ஓடுதெண்டு யொசிச்சிருக்கிறன்..
ரேவதி ஒரு அழுமூஞ்சி .. சீரியஸ் கரெக்டர் ..
சிறிதேவி ரஜனியோட ஒரு உமிக்கும்பத்துக்க கிடந்து உருளுவததான் இன்றைவரைக்கும் வந்த தமிழ் சினிமாக்களில் ரசிக்கக்கூடிய கிளுகிளு காட்சி..
ரம்பா அப்ப ( 98-99) ஒரு பிகர்தான்.. இப்ப வீங்கி விளைஞ்சு போ்சு..
//"அழகிய லைலாவாக" அன்றைய என்னைப்போன்ற விடலைகளின் மனதைக் கொள்ளை கொண்டவர். //
இது நடந்தது 20, 25 வருசத்துக்கு முதல் தானே?
ஹி ஹி ஹி....
@வந்தி
//ரேவதியின் பலமே அவரது சிரிப்புத்தான். ரேவதி போன்ற சாயலுடன் அவரது சிரிப்பையும் ஒத்த என்னுடன் உயர்தரம் படித்தவர் ஒரு பெண் ஏனோ மனதில் வந்துபோகின்றார்.//
@தூயா
//Hmmmmm ithukku naan reply podanuma?? :P//
அப்போ... பதில் நான் போடட்டுமா... :P
//குறிப்பு : இந்தப் பதிவில் உள்ள ரம்பா தவிர ஏனையோர் நான் பச்சிளம் பாலகனாக இருக்கும் போது ரசித்தவர்கள். யூத்தாகி ரசித்தவர்களின் பட்டியல் நாளை வரும்.//
இது உங்களுக்கு ஓவரா தெரியலையா? பச்சிளம் பாலகனாக இருக்கும் போது நீங்க தேவிகா, கே.அர். விஜயா, சௌக்கார்ஜானகி இவங்கள தானே ரசிச்சீங்க. எப்போவும் உண்மைய சொல்லுங்க பாஸு.
இது உங்களுக்கு ஓவரா தெரியலையா? பச்சிளம் பாலகனாக இருக்கும் போது நீங்க தேவிகா, கே.அர். விஜயா, சௌக்கார்ஜானகி இவங்கள தானே ரசிச்சீங்க. எப்போவும் உண்மைய சொல்லுங்க பாஸு.//
றிப்பீட்டே
அண்ணோய் வந்தி அண்ணோய்
அண்ணன் காட்டிய வழியில் வந்த நீங்கள் அண்ணனுக்கு முந்தின கால முதிர்கன்னிகளைப் பட்டியல் இட்டுட்டீங்களே ;-))
ஆனாலும் ஜொள்ளு கலக்கல்
மாதவி, ரதி, அனிதா, ராதா, அம்பிகா, ஜோதி, நளினி, என தொடராக பலர் வந்தார்கள். இதில் ராதிகாவையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும் உண்மையான சிறந்த ஒரு நடிகை.
என்னைப்பொறுத்தவரை நீங்கள் எழுதியுள்ளவர்களின் கால கட்ட நடிகைகளில் நடிப்பு ஹிட் - சுஹாசினி, அதேபோல எந்த நடிகையும் கனவிலும் நினைத்துப்பார்க்காத மெஹா கிட் ஆகியவர் -நதியாவே.
கனவுக் கன்னிகள் என்பதால் தப்பித்தீர்கள், இல்லாட்டா ஸ்ரீதேவி, ரேவதி வாற பதிவில ரம்பாவப் போட்டதுக்கு கண்டனம் தெரிவிச்சிருப்பம்... (அது சரி, ரேவதி இதுக்க எங்கை வந்தவ.. உங்கடை கன்னி அவ மாதிரி இருந்தவடியா அவவும் கனவுக் கன்னி ஆகீட்டாவோ).. ஸ்ரீதேவி நடித்த மலையாளப் படம் தேவராகத்தின் டப்பிங் பார்த்தேன்... அழகோ அழகு
நேற்றய ட்வீட் இன்றய பதிவா?
// இந்தப் பதிவில் உள்ள ரம்பா தவிர ஏனையோர் நான் பச்சிளம் பாலகனாக இருக்கும் போது ரசித்தவர்கள். யூத்தாகி ரசித்தவர்களின் பட்டியல் நாளை வரும்//
:-)
ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு இடுகை போடலாமே.., தல
அவ்வளவு விஷயங்கள் எழுதலாம். பின்னூட்டங்களில் விவாதிக்கலாம்
Post a Comment