ஆதவன் - திரை விமர்சனம்

சூர்யா

ஆரம்பம் முதல் முடிவு வரை சூர்யாவின் ராட்சியம் தான். முதல்பாதியில் வடிவேலுடன் சேர்ந்து கலகலக்க வைக்கின்றார். பல இடங்களில் மெய் மறந்து சிரிக்கச் செய்கின்றார்கள். சண்டைக்காட்சிகளில் அயன் பாதிப்பில் இருந்து சூர்யா மாறவில்லைபோல் தெரிகின்றது.

நயனுடன் பாடல் காட்சிகளில் நல்ல கெமிஸ்ரி இருக்கிறது. ஆனாலும் படத்தில் சூர்யாவிற்க்கும் நயனுக்குமிடையில் சொல்லிக்கொள்ளும்படி காதல் காட்சிகள் இல்லை. இரண்டாம் பாதியில் கொஞ்சம் முரட்டுத் தனமான சூர்யாவைக் காணக்கூடியதாக இருக்கிறது. வாரணம் ஆயிரம், காக்க காக்க, சில்லென்று ஒரு காதல் போன்ற படங்களில் காட்டிய நடிப்பை விட குறைச்சலாக சூர்யா நடிச்சாலும் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு என்ற படியால் இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான தமிழக விருது கிடைக்கும் சாத்தியங்கள் அதிகம்.



படம் தொடங்கும் போது சூரியாவின் சிறுவயதுப்படங்கள் தொடங்கி ஜோதிகா மற்றும் அவரின் குழந்தையுடன் நிற்க்கும் குடும்பப் படம் வரை காட்டிவிட்டு டைட்டிலில் சூர்யா எனக் காட்டுகின்றார்கள். சூர்யாவும் மாயவலைக்குள் விழுகின்றாரோ போன்ற எண்ணம் ஏற்படுகின்றது.

சூர்யாவைப் படத்தில் 10 வயதுத் தோற்றத்தில் காட்டுவது எரிச்சலைத் தான் தெருகின்றது. அவருக்குப் பொருந்தவேயில்லை.

நயன்தாரா

முதல் காட்சியிலையே ஜிம் உடையுடன் தோன்றினாலும் எண்ணை அப்பிய முகமாக அந்தக் காட்சியிலும் அதனைத் தொடர்ந்து வருகின்ற பாடலிலும் முகத்தை ஒப்பனை செய்து முகம் சுழிக்கவைக்கின்றார். எனக்குப் பக்கத்தில் இருந்த நயன் ரசிகர்கள் இருவரும் நயனின் அழகு குறைந்துகொண்டே வருகின்றது எனக் கவலைப்பட்டார்கள்.

வில்லுப் படத்தைப்போல் பாடல்களில் வந்துபோனாலும் ஏனோ அவ்வளவு கவர்ச்சி காட்டவில்லை. மற்றும்படி வழக்கமான தமிழ்சினிமா கதாநாயகிதான். தியேட்டரில் இருந்த பச்சிளம் பாலகர்கள் கூட நயன் வர விசில் அடிக்கின்றார்கள்.

வடிவேல்

படத்தின் அச்சாணியே இவர்தான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வின்னர் கைப்புள்ள போல் நினைவில் நிற்க்கும் பனர்ஜி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சூர்யாவுடன் செய்யும் அலும்புகள் அதிலும் அவ்ரா பாலத்தில் இவர் செய்யும் கூத்துகள் சிரிப்பொலியிலும் ஆதியாவிலும் இனி அடிக்கடி ஒளிபரப்பாகும். துணைக்கு வேறு ஒருவரையும் வைத்திருக்காமல் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கதையுடனும் கதாநாயகனுடன் சேர்ந்து கலக்கி எடுத்திருக்கிறார்.

கதை

நொய்டாவில் நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க வருகின்ற நீதிபதியைக் கொல்லும் கும்பலின் கதை. நீதிபதியைக் கொல்ல்வேண்டியதற்கான‌ காரணத்தை இன்னும் கொஞ்சம் காத்திரமாகச் சொல்லியிருக்கலாம். நடிகர் ரமேஸ்கண்ணாவின் கதை.

திரைக்கதை, வசனம்

கேஎஸ்.ரவிகுமார் திரைக்கதையுடன் வசனத்தையும் எழுதியிருக்கின்றார். ஏற்கனவே பார்த்த சில படங்களின் திரைக்கதை போல் இருந்ததாலும் அதிலும் சில காட்சிகள் வாரணம் ஆயிரம், அயன் போன்ற படங்களில் சூர்யாவே செய்தவை. அடுத்து வரும் வசனத்தையும் காட்சியையும் முன் சீட் சின்னப் பொடியனே சொல்லுகின்ற அளவுக்கு காத்திரமில்லை. அடுத்து இதுதான் நடக்கபோகின்றது என இலகுவாக ஊகிக்கூடிய காட்சிகள். போரடிக்காமல் திரைக்கதையை ரவிகுமார் அமைத்திருந்தாலும் இறுதிக் காட்சியில் தடுமாறி சொதப்போ சொதப்பு எனச் சொதப்பிவிட்டார். தசாவதாரம் இறுதிக்காட்சி அமைத்தவரா? (ஓஓ தசாவதாரம் திரைக்கதை வசனம் கமல்)எனக்கேட்க வைக்கின்றார். சிலவேளைகளில் தீபாவளிக்கு வெளியிடவேண்டும் என்ற அவசரத்தில் தடுமாறிவிட்டாரோ தெரியவில்லை.



இயக்கம்

தசவாதாரத்தில் சதமடித்த கே.எஸ்.ரவிகுமார் இதில் ரன் அவுட்டாகிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அதேயளவு பிரமாண்டம் படத்தில் இல்லாவிட்டாலும் பல இடங்களில் லொஜிக் மீறி குருவியில் விஜய் ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டடத்திற்க்குப் பாய்வது போல் சூர்யாவையும் பாயவிடுகின்றார். இறுதிக்காட்சியில் சொதப்பியது மிகப்பெரிய பலவீனம். முன்பாதிவரை ரவிகுமார் படம் என நினைக்கவைத்தவர் பின்பாதியில் லொஜிக் இல்லாமல் மாஜிக் காட்டியிருக்கின்றார்.

ஒளிப்பதிவு

கணேசின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தின் பலம். பாடல் காட்சிகளில் அவ்வளவு அழகு. கொல்கத்தாவை அழகாகப் படம் பிடித்திருக்கின்றார். அவ்ரா பாலமும் அதனைச் சூழந்த நீர்நிலைக் காட்சிகளும் குளிர்மை.

இசை

ஹாரிஸ் ஜெயராஜ் ஏற்கனவே பாடல்களை ஹிட்டாகியதை எவ் எம் வானொலிகள் மூலம் கேட்டாலும் பின்னணி இசையில் அவ்வளவாக சோபிக்கவில்லை. முதல் சண்டையில் தகரக் கடைக்குள் யானைகள் புகுந்தது போல் அவ்வளவு சத்தம். நல்ல இனிமையான பின்னணி கொடுக்க காதல் காட்சிகள் இல்லையென்பதும் இன்னொரு குறை.

சண்டைப் பயிற்சி

கனல் கண்ணன், தென்னாபிரிக்காவின் பிரான்ஸ் ஸ்பில்ஹாஸ் இருவரும் சண்டைக் காட்சிகள் இயக்கியிருக்கின்றார்கள். முதலாவது சண்டை அச்சு அசல் அயன் கொங்கோ சண்டைபோல் இருக்கின்றது.

படத் தொகுப்பு

டான் மேக்ஸின் படத் தொகுப்பு படத்தின் பலம். சில பார்த்த காட்சிகள் தான் என்றாலும் போராடிக்காமல் தொகுத்திருக்கின்றார். படத் தொகுப்பின் வேகம் படத்தின் இன்னொரு பலம்.

தயாரிப்பு

உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு என்பதால் அவரும் ஒரு காட்சியில் தோன்றுகின்றார். இன்னும் அவர் குருவியில் இருந்து மீளவில்லை என்பது சில காட்சிகளில் தெரிகின்றது.

சரோஜாதேவி, மறைந்த நடிகர் முரளி, ஷயாயி ஷிண்டே, அனுஹாசன், ரமேஸ்கண்ணா, பெப்சி விஜயன், ரியாஸ்கான் உட்பட பெரிய பட்டாளமே நடித்திருக்கின்றது.

அபிநய சரஸ்வதி சரோஜாதேவியை அதீத ஒப்பனையுடன் வழக்கமான அவரின் எம்ஜிஆர் புராணங்களுடன் உலாவவிட்டிருக்கின்றார்கள்.

முஸ்லீம்களை கூலிக்கு கொலைசெய்பவர்களாகவும் கொல்கத்தா பிராமணர்கள் மீன் சாப்பிடுவதையும் காட்டியிருக்கின்றார்கள். ( படத்தில் பிரச்சனைகள் கிழப்பவேண்டும் என்றால் இவைதான் பிரச்சனையானவை).

மொத்தத்தில் ஆபாச இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகள் அற்ற குடும்பத்துடன் நகைச்சுவைக்காக ஒரு தடவை பார்க்ககூடிய சிறந்த பொழுதுபோக்குப் படம்.

ஆதவன் - அதீத‌ எதிர்பார்ப்பு குறைந்த பலன்

டிஸ்கி : வேட்டைக்காரனை ஆதவனுடன் மோதவிட்டிருக்கலாம்.

38 கருத்துக் கூறியவர்கள்:

Anonymous சொல்வது:

Brahmins will eat fish in Kolkatta, that is Fact.

Muruganandan M.K. சொல்வது:

இரவு விழித்திருந்தது வீண்போகவில்லை. முதல் காட்சி பார்த்த அனுபவம் உங்கள் பதிவில் கிடைத்தது

Unknown சொல்வது:

சூட்டோட சூடாப் போட்டாச்சு போல இருக்கு... நான் கடைசியாப் பார்த்த தமிழ்ப்படம் ஈரம்.... முதல்நாள் முதல் ஷோ மொக்கைப்படம் பாத்ததெல்லாம் ஒரு காலம்..ம்ஹும்

SUREஷ்(பழனியிலிருந்து) சொல்வது:

உங்களின் கடின உழைப்புக்கு ஓட்டுப் போட்டாச்சு..,

நயனத்துக்கு வயதாகிக் கொண்டு இருக்கிறது...,



அதனால் படத்தில் கெமிஸ்ட்ரி நல்லா வேலை செய்யும்

கரன் சொல்வது:

வேகமான விமர்சனத்துக்கு நன்றிகள்.
இன்று மாலை(17/10/2009) படம் பார்த்தபின், பின்னூட்டத்தோடு சந்திக்கிறேன்.

புல்லட் சொல்வது:

நண்பர்களிடம் பொய்கூறுவதை தவிர்க்கவும்... ;-)
கிளைமாக்சில் எனக்கு கண் ஒரு புறம் வீங்கிவிட்டது... தாங்க முடியாமல் அழுது குழறிவிட்டேன்.. (ஏதோ சென்டிமெண்ட் காட்சி என்று நினைத்து விடாதீங்க..போய்ப்பாருங்க) பட் முதல் பாதி வாவ்

வந்தியத்தேவன் சொல்வது:

// Anonymous said...
Brahmins will eat fish in Kolkatta, that is Fact.//

Thanks friend. I knew this but I mentioned here because of ppl dont like Brahmins or criticize them.

வந்தியத்தேவன் சொல்வது:

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
இரவு விழித்திருந்தது வீண்போகவில்லை. முதல் காட்சி பார்த்த அனுபவம் உங்கள் பதிவில் கிடைத்தது//

நன்றிகள் டொக்டர் படத்தின் கதையை விட நாம் படம் பார்த்த கதை இதை விட சுவாரசியம். பொக்ஸ்சில் இருந்துபார்த்த படம்.

வந்தியத்தேவன் சொல்வது:

// Kiruthikan Kumarasamy said...
சூட்டோட சூடாப் போட்டாச்சு போல இருக்கு... நான் கடைசியாப் பார்த்த தமிழ்ப்படம் ஈரம்.... முதல்நாள் முதல் ஷோ மொக்கைப்படம் பாத்ததெல்லாம் ஒரு காலம்..ம்ஹும்//

சூட்டோடு சூடு தான். சூர்யாவை நம்பினால் அவர் தன் நண்பனைப் போல் நடித்திருக்கிறார்.

வந்தியத்தேவன் சொல்வது:

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
உங்களின் கடின உழைப்புக்கு ஓட்டுப் போட்டாச்சு..,//

நன்றிகள் தலை.

//நயனத்துக்கு வயதாகிக் கொண்டு இருக்கிறது...,

அதனால் படத்தில் கெமிஸ்ட்ரி நல்லா வேலை செய்யும்//

வயது போனால் கெமிஸ்ட்ரி வேலை செய்யுமா? எப்படி விளக்கம் தாருங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//கரன் said...
வேகமான விமர்சனத்துக்கு நன்றிகள்.
இன்று மாலை(17/10/2009) படம் பார்த்தபின், பின்னூட்டத்தோடு சந்திக்கிறேன்.//

நன்றிகள் நன்றிகள் சந்திக்கவும்

Jackiesekar சொல்வது:

,இந்த படத்தை எந்த தியேட்டர்ல பார்த்திங்க?

SUREஷ்(பழனியிலிருந்து) சொல்வது:

//வயது போனால் கெமிஸ்ட்ரி வேலை செய்யுமா? எப்படி விளக்கம் தாருங்கள்.//

அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க கெமிஸ்ட்ரி மட்டுமல்ல, இயற்பியல், வரலாறு, புவியியல், கணக்கியல் எல்லாமே வேலை செய்யும் தலைவரே


தீபாவளி வாழ்த்துக்கள்

Unknown சொல்வது:

//வாரணம் ஆயிரம், காக்க காக்க, சில்லென்று ஒரு காதல் போன்ற படங்களில் காட்டிய நடிப்பை விட குறைச்சலாக சூர்யா நடிச்சாலும் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு என்ற படியால் இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான தமிழக விருது கிடைக்கும் சாத்தியங்கள் அதிகம். //

அப்பிடிப் போடு அரிவாள...

வானதி சொல்வது:

படம் பார்க்கும்போதே மடிக்கணணியுடன் சென்று தட்டச்சு செய்கின்றீர்களா? இவ்வளவு வேகமான விமர்சனம் முதல் காட்சி முடிந்து சில மணி நேரங்களில் தந்திருக்கின்றீர்கள்.

விமர்சனம் நன்றாக இருக்கின்றது. வாரணம் ஆயிரம், அயனைத் தொடர்ந்து சூர்யா ஹட்ரிக் அடிப்பார் எனப் பார்த்தால் ஏமாத்திவிட்டார் போல் தெரிகின்றது.

நன்றியுடன்
வானதி

Muruganandan M.K. சொல்வது:

"நாம் படம் பார்த்த கதை இதை விட சுவாரசியம். பொக்ஸ்சில் இருந்துபார்த்த படம்."
அதையும் ஒரு பதிவாகப் போடலாமே. மிகச் சுவார்ஸமாக இருக்கும்

Unknown சொல்வது:

///நன்றிகள் டொக்டர் படத்தின் கதையை விட நாம் படம் பார்த்த கதை இதை விட சுவாரசியம். பொக்ஸ்சில் இருந்துபார்த்த படம்.///

என்னா வந்தி நீங்க... கலியாணத்துக்குக் காத்திட்டிருக்கிற ஒரு கன்னிப்பையன் அவசரப்பட்டு இப்பிடிச் செய்யலாமா??? செய்ததைப் பப்ளிக்காச் சொல்லலாமா??? சீச்சீ

Sanjai Gandhi சொல்வது:

//வில்லுப் படத்தைப்போல் பாடல்களில் வந்துபோனாலும் ஏனோ அவ்வளவு கவர்ச்சி காட்டவில்லை.//

உங்க கஷ்டம் புரியுது.. ஆகவே நானும் படம் பார்க்க மாட்டேன்.. :))

ARV Loshan சொல்வது:

உங்கள் அநேக கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்..

//பின்னணி இசையில் அவ்வளவாக சோபிக்கவில்லை.//
அவர் சேசிங்,சண்டைக் காட்சிகளில் கலக்கியே இருக்கிறார்.நீங்கள் சொன்னது போல காதல் காட்சிகள் இல்லாதது படத்தையும் அவரையும் பாதித்திருக்கலாம்..

//பல இடங்களில் லொஜிக் மீறி குருவியில் விஜய் ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டடத்திற்க்குப் பாய்வது போல் சூர்யாவையும் பாயவிடுகின்றார். இறுதிக்காட்சியில் சொதப்பியது மிகப்பெரிய பலவீனம். முன்பாதிவரை ரவிகுமார் படம் என நினைக்கவைத்தவர் பின்பாதியில் லொஜிக் இல்லாமல் மாஜிக் காட்டியிருக்கின்றார்.
//

முழுமையாக ஏற்கிறேன்.

மொத்தத்தில் ஆபாச இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகள் அற்ற குடும்பத்துடன் நகைச்சுவைக்காக ஒரு தடவை பார்க்ககூடிய சிறந்த பொழுதுபோக்குப் படம்.
//

accepted

//ஆதவன் - அதீத‌ எதிர்பார்ப்பு குறைந்த பலன்

டிஸ்கி : வேட்டைக்காரனை ஆதவனுடன் மோதவிட்டிருக்கலாம்.//

நல்லா சொன்னீங்க..
உங்கள் பதிவு என்னுடையதை முந்தியதால் உலக பதிவுகளிலேயே முதல் முறையாக ஆதவனுக்கு திரை விமர்சனம் எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளீர்கள்.

smith சொல்வது:

neenga sollura alavukku padam nalla ella.

surya is a second hero,

vaigai puyal vadivelu is first hero.

ஆதிரை சொல்வது:

இறுதிப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் தியேட்டரை விட்டு வெளியேறினால் நல்லது. கூடவே, சனக்கூட்டத்தில் சிக்காமலும் வந்ததாய் இருக்கும்.

//எனக்குப் பக்கத்தில் இருந்த நயன் ரசிகர்கள் இருவரும் நயனின் அழகு குறைந்துகொண்டே வருகின்றது எனக் கவலைப்பட்டார்கள்.//
அப்படியா???? ஆனால், அவங்கள் நயன் ரசிகர்கள் இல்லையாம்.

வந்தியத்தேவன் சொல்வது:

// jackiesekar said...
,இந்த படத்தை எந்த தியேட்டர்ல பார்த்திங்க?//

கொழும்பிலுள்ள கொன்கோர்ட் என்ற தியேட்டரில் ஸ்பெசல் ஷோவில் பார்த்தேன் ஏன் சந்தேகம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//SUREஷ் (பழனியிலிருந்து) சொல்வது:

அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க கெமிஸ்ட்ரி மட்டுமல்ல, இயற்பியல், வரலாறு, புவியியல், கணக்கியல் எல்லாமே வேலை செய்யும் தலைவரே//

விளக்கத்திற்கு நன்றிகள் தலை இதற்க்குத் தான் அனுபவம் வேண்டும் என்பார்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி சொல்வது:

அப்பிடிப் போடு அரிவாள...//

தம்பி நீங்களும் இந்தப் படம் தியேட்டரில் சென்று பார்க்கவேண்டும்

வந்தியத்தேவன் சொல்வது:

//வானதி சொல்வது:
படம் பார்க்கும்போதே மடிக்கணணியுடன் சென்று தட்டச்சு செய்கின்றீர்களா? இவ்வளவு வேகமான விமர்சனம் முதல் காட்சி முடிந்து சில மணி நேரங்களில் தந்திருக்கின்றீர்கள். //

அப்படியில்லை படம் பார்த்து ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் எழுதியது இது. தியேட்டரில் நிறைய வலைப் பதிவர்கள் நின்றார்கள்.

//விமர்சனம் நன்றாக இருக்கின்றது. வாரணம் ஆயிரம், அயனைத் தொடர்ந்து சூர்யா ஹட்ரிக் அடிப்பார் எனப் பார்த்தால் ஏமாத்திவிட்டார் போல் தெரிகின்றது.//

நன்றிகள் நானும் அப்படித் தான் எதிர்பார்த்தேன் ஆனால் சூர்யா போட்ட ஹட்ரிக் பந்து நோ போலாகப் போய்விட்டது.

வந்தியத்தேவன் சொல்வது:

//Dr.எம்.கே.முருகானந்தன் சொல்வது:
"நாம் படம் பார்த்த கதை இதை விட சுவாரசியம். பொக்ஸ்சில் இருந்துபார்த்த படம்."
அதையும் ஒரு பதிவாகப் போடலாமே. மிகச் சுவார்ஸமாக இருக்கும்//

நன்றிகள் டொக்டர் பதிவாகப் போடுகின்றேன் என்னுடன் யார் பொக்ஸ்சில் இருந்தார் என்ற உண்மையையும் அந்தப் பதிவில் சொல்கின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Kiruthikan Kumarasamy சொல்வது:

என்னா வந்தி நீங்க... கலியாணத்துக்குக் காத்திட்டிருக்கிற ஒரு கன்னிப்பையன் அவசரப்பட்டு இப்பிடிச் செய்யலாமா??? செய்ததைப் பப்ளிக்காச் சொல்லலாமா??? //

தம்பி 2 நாள் பொறு அப்பு நான் படம் பார்த்த கதை சொல்கின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//SanjaiGandhi சொல்வது:

உங்க கஷ்டம் புரியுது.. ஆகவே நானும் படம் பார்க்க மாட்டேன்.. :))//

சஞ்சே உங்களுக்கு வடிவேல் காமெடி பிடித்தால் சென்று பாருங்கள். நயனை எதிர்பார்த்துப்போனால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

வந்தியத்தேவன் சொல்வது:

//LOSHAN சொல்வது:
உங்கள் அநேக கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்..//

நன்றிகள் லோஷன் சேம் பிளட்.

//அவர் சேசிங்,சண்டைக் காட்சிகளில் கலக்கியே இருக்கிறார்.நீங்கள் சொன்னது போல காதல் காட்சிகள் இல்லாதது படத்தையும் அவரையும் பாதித்திருக்கலாம்..//

எனக்கு ஏனோ பின்னணி அவ்வளவாக பிடிக்கவில்லை.

//உங்கள் பதிவு என்னுடையதை முந்தியதால் உலக பதிவுகளிலேயே முதல் முறையாக ஆதவனுக்கு திரை விமர்சனம் எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளீர்கள்.//

நன்றிகள் இதற்க்கு எதுவும் விருது எனக்கு கொடுப்பார்களா என நண்பர் சிங்கப்பூர் சீலன் கேட்கச் சொன்னார்.

வந்தியத்தேவன் சொல்வது:

//smith சொல்வது:
neenga sollura alavukku padam nalla ella.

surya is a second hero,

vaigai puyal vadivelu is first hero.

ஸ்மித் அவர்களே உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன் வடிவேல் தான் ஹீரோ ஆனால் அவருக்கு பாடல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் இல்லாத படியால் அவர் ஹீரோ அல்ல சூர்யா தான்.

வந்தியத்தேவன் சொல்வது:

//ஆதிரை சொல்வது:
இறுதிப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் தியேட்டரை விட்டு வெளியேறினால் நல்லது. கூடவே, சனக்கூட்டத்தில் சிக்காமலும் வந்ததாய் இருக்கும்.//

உண்மைதான் ஆனால் அடுத்த காட்சிக்கு நிற்க்கும் ரசிகர்கள் வித்தியாசமாகப் பார்ப்பார்கள்.

//அப்படியா???? ஆனால், அவங்கள் நயன் ரசிகர்கள் இல்லையாம்.//

அப்படியோ எனக்குத் தெரிந்து அவர்கள் நயன் ரசிகர்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

// புல்லட் said...
நண்பர்களிடம் பொய்கூறுவதை தவிர்க்கவும்... ;‍)//

நண்பன் என்பவன் தன் உண்மையான நண்பர்களின் துன்பத்திலும் பங்கு கொள்ளவேண்டும்.

Buஸூly சொல்வது:

எதுவா இருந்தாலும் பாத்துட்டு பாத்துக்கலாம்னு இருந்தன் ஆனா பாத்ததும் தான் தோனிச்சு ஆஹா நம்ம ஜஜ்சுமண்டு ரொம்ப தப்புன்னு......

ஜெட்லி... சொல்வது:

//வேட்டைக்காரனை ஆதவனுடன் மோதவிட்டிருக்கலாம். //


ஏன்???
ஒரே டைம்ல ரெண்டு தலைவலி

வந்தியத்தேவன் சொல்வது:

//Buஸூly said...
எதுவா இருந்தாலும் பாத்துட்டு பாத்துக்கலாம்னு இருந்தன் ஆனா பாத்ததும் தான் தோனிச்சு ஆஹா நம்ம ஜஜ்சுமண்டு ரொம்ப தப்புன்னு......//

சிலவேளைகளில் நம்ம ஜஜ்மெண்டு தப்பாகிவிடும். ஆனால் படம் ஒரு தடவை பார்க்கலாம் கடைசிக் கட்டம் வரும் போது எழும்பி வந்துவிடுங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//ஜெட்லி said...

ஏன்???
ஒரே டைம்ல ரெண்டு தலைவலி//

ஹாஹா விஜய் ரசிகர்கள் கோபித்துக்கோள்ளப்போகின்றார்கள். வேட்டைக்காரன் வந்திருந்தால் வென்றிருக்கலாம், அழகிய தமிழ்மகன் வேல் அனுபவத்தில் வெளியிடவில்லை எனக் கதைக்கின்றார்கள்.

Unknown சொல்வது:

//வந்தியத்தேவன் சொல்வது:
//கனககோபி சொல்வது:

அப்பிடிப் போடு அரிவாள...//

தம்பி நீங்களும் இந்தப் படம் தியேட்டரில் சென்று பார்க்கவேண்டும் //

என்னில ஏதாவது கோபம், கொலைவெறி இருக்கா? இருந்தா நேர சொல்லோனும்... :)

வந்தியத்தேவன் சொல்வது:

// கனககோபி said...

என்னில ஏதாவது கோபம், கொலைவெறி இருக்கா? இருந்தா நேர சொல்லோனும்... :)//

அப்படியொண்டும் இல்லை எல்லாம் நாங்கள் பட்ட துன்பம் நீங்கள் படவேண்டும் என்ற நல்ல எண்ணம் தான்,