பூரணை விருந்து

இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் வலைப் பதிவர்களுக்கும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று எதிர் வரும் நவம்பர் 2ந்திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

மீண்டும் சந்திக்கவிரும்பும் உறவுகள் இருக்கிறம் சஞ்சிகையின் இணை ஆசிரியர் திரு. சஞ்சீத் அவர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்துகொள்ளுங்கள்.

இந்தச் சந்திப்பானது திங்கள் மாலையில் நடைபெறவுள்ளதால் சிற்றுண்டிகளுடன் மாலை நேர பானங்களும் வழங்கப்படும் என இருக்கிறம் நிர்வாகிகள் அறிவுத்துள்ளார்கள்.

இலங்கை வலைப்பதிவர் கூகுள் குழுமத்தில் தங்களைப் பதிவு செய்தவர்கள் மின்னஞ்சலூடாக தங்களுக்கு அழைப்புகள் அனுப்பப்படும். எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் தங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.



சந்திப்பு நிகழும் இடம் இருக்கிறம் அலுவலகம், இல 3, டொரிங்டன் அவெனியூ , கொழும்பு 7. (ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்க்கு முன்னால் உள்ள வீதி).

மேலதிக விபரங்களுக்கு :

திரு.சஞ்சீத்

தொலைபேசி : 0113150836
மின்னஞ்சல் : irukiram@gmail.com


உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் இருக்கிறம் நிர்வாகத்தினர்.

மீண்டும் இருக்கிறம் அலுவலகத்தின் புல்வெளியில் சந்திப்போம்.

36 கருத்துக் கூறியவர்கள்:

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

கட்டாயம் சந்திப்போம்..

//மாலை நேர பானங்களும் வழங்கப்படும் என இருக்கிறம் நிர்வாகிகள் அறிவுத்துள்ளார்கள். //

மாலை நேர பானம் என்றால் என்ன?

கானா பிரபா சொல்வது:

சந்திப்பு சிறப்புற வாழ்த்துகின்றேன்

சி தயாளன் சொல்வது:

வாவ்..கலக்குங்கள்

வேந்தன் சொல்வது:

பதிவர்களுக்கும் ஊடகவியலாளருக்கும் இடையிலான இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

தங்க முகுந்தன் சொல்வது:

பூரணைவிருந்தில் நாம் கலந்து கொள்ள முடியாதமையையிட்டு கவலையாக இருக்கிறது!
விருந்து சிறப்பாக நடக்கட்டும்!
முன்னையது போல கதையைச் சொன்னால் தெரிந்து கொள்ளலாம்!

root சொல்வது:

வாரன்..
but
>பாதை தெரியாது?

Subankan சொல்வது:

வாறேன், வாறேன்.

// root said...
வாரன்..
but
>பாதை தெரியாது?//

எனக்கும்தான்.

தங்க முகுந்தன் சொல்வது:

103, 154 இந்த எண்ணுள்ள பஸ்களில் போகலாம். இன்னுமொரு பஸ் திம்பிரிகஸ்யாயவால மகரகமயிலிருந்து வருவது -திரும்பி க்கு முன்பாக வந்து பொரளை போவதிலும் வரலாம். அதன் இலக்கத்தை மறந்து விட்டேன்!

கரவைக்குரல் சொல்வது:

வாழ்த்துக்கள்
மிகவும் மகிழ்ச்சியான விடயம்,
பூரணைவிருந்தில் கலந்துகொள்ள முடியாமையையிட்டு எமக்கெல்லாம் கவலைதான்,
மாலை நேரப்பானம் கூட தருவினம் எண்டு சொல்லியிருக்கிறீங்க போதாக்குறைக்கு

ஹிஹிஹிஹி
வாழ்த்துக்கள் வந்தியத்தேவரே

இளையதம்பி தயானந்தா சொல்வது:

நன்றிகள் வந்தியத்தேவன்!

இது இருக்கிறமின் முயற்சியும் முனைவும் மட்டுமல்ல, உங்கள் எல்லோருடையதும்தான்.

என்றுமன்புடன்,
இளையதபி தயானந்தா

Unknown சொல்வது:

///மாலை நேர பானங்களும் வழங்கப்படும் என இருக்கிறம் நிர்வாகிகள் அறிவுத்துள்ளார்கள்///

பூரணையில் இதுக்கெல்லாம் அனுமதி உண்டா. (என்ன இருந்தாலும் திக்கம் வடிசாலை அயிட்டம் மாதிரி வருமா வந்தியண்ணை)

Unknown சொல்வது:

அடியேன் கனகலிங்கம் கோபிகிருஷ்ணாவும் கலந்து கொள்கிறேன்...

மீண்டுமொருமுறை கலக்குவோம்...
(எங்க கலக்கிறது... நீங்க கலக்க, நான் மூலையில இருந்து பாத்திற்று வரப்போறன்...)

அதுசரி... நீங்க பாட்டுப் பாடுறீங்களாமே 2ம் திகதி???ஹி ஹி....

Unknown சொல்வது:

அண்ணா... ஒரு சின்னச் சந்தேகம்...
பறுவத்தில (அது தான் பூரணை..) நடத்தப் போயினமே, என்னப் போல ஆக்களுக்கு பறுவத்துக்கு கூடுறது எண்டு தெரியுமோ தெரியாதோ???

Chandravathanaa சொல்வது:

வாழ்த்துக்கள்

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) said...
கட்டாயம் சந்திப்போம்..//

சந்திப்போம் இம்முறை நான் எல்லாம் பார்வையாளர் என்பதால் பலருடன் பேச நேரம் கிடைக்கும்.

//மாலை நேர பானம் என்றால் என்ன?//
மாலை நேர பானம் மாலையில் கிடைக்கும் பானங்கள்,

வந்தியத்தேவன் சொல்வது:

//கானா பிரபா said...
சந்திப்பு சிறப்புற வாழ்த்துகின்றேன்//

வெறும் வாழ்த்துதானா? ஒருக்கால் வந்திட்டுப்போகலாமே.

வந்தியத்தேவன் சொல்வது:

//’டொன்’ லீ said...
வாவ்..கலக்குங்கள்//

சிங்கை மாதவனே நீங்களும் ஒருக்கால் வந்துபோகலாம் தானே.

வந்தியத்தேவன் சொல்வது:

//வேந்தன் said...
பதிவர்களுக்கும் ஊடகவியலாளருக்கும் இடையிலான இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.//

என்ன வாழ்த்துக்களா? அப்போ நீங்கள் வரவில்லையா? வேந்தனைப் பார்க்க பலர் ஆவலுடன் இருக்கின்றார்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

// தங்க முகுந்தன் said...
பூரணைவிருந்தில் நாம் கலந்து கொள்ள முடியாதமையையிட்டு கவலையாக இருக்கிறது! //

சில நேரம் சில விடயங்களை விட்டுக்கொடுக்கத் தான் வேண்டும்.

//விருந்து சிறப்பாக நடக்கட்டும்! //

நடக்கும் என்பது என் எண்ணம்.

//முன்னையது போல கதையைச் சொன்னால் தெரிந்து கொள்ளலாம்!//

சரி சரி சொல்கின்றோம்.

வந்தியத்தேவன் சொல்வது:

// root said...
வாரன்..
but
>பாதை தெரியாது?//

வாருங்கள் பாதை தனிப்பின்னூட்டத்தில் வருகின்றது.

வந்தியத்தேவன் சொல்வது:

//தங்க முகுந்தன் said...
103, 154 இந்த எண்ணுள்ள பஸ்களில் போகலாம். //

103 நேரடியாகப் போகாது. பொரளையில் அல்லது கனத்தையில் இறங்கி 154 எடுக்கவேண்டும்.

//இன்னுமொரு பஸ் திம்பிரிகஸ்யாயவால மகரகமயிலிருந்து வருவது -திரும்பி க்கு முன்பாக வந்து பொரளை போவதிலும் வரலாம். அதன் இலக்கத்தை மறந்து விட்டேன்!//

131 இதனை விட 173 பஸ் அந்த வீதியினூடாக போவது ஆனால் போயா தினம் என்பதால் மிகவும் குறைவாக இருக்கும்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Subankan said...
வாறேன், வாறேன்.//

முதல் முறை சந்திக்கபோகின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//கரவைக்குரல் said...
வாழ்த்துக்கள்
மிகவும் மகிழ்ச்சியான விடயம்,//

நன்றிகள்

//பூரணைவிருந்தில் கலந்துகொள்ள முடியாமையையிட்டு எமக்கெல்லாம் கவலைதான்,//

உங்களை ரிக்கெட் எடுத்து வரச் சொல்லமுடியாது இப்போதுதான் புது நாட்டில் இருக்கின்றீர்கள். அட

//மாலை நேரப்பானம் கூட தருவினம் எண்டு சொல்லியிருக்கிறீங்க போதாக்குறைக்கு//

தம்பி இது வேறை

வந்தியத்தேவன் சொல்வது:

//இளையதம்பி தயானந்தா said...

இது இருக்கிறமின் முயற்சியும் முனைவும் மட்டுமல்ல, உங்கள் எல்லோருடையதும்தான்.//

நன்றிகள் தயா அண்ணா, உங்கள் முயற்சிகளுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Kiruthikan Kumarasamy said...

பூரணையில் இதுக்கெல்லாம் அனுமதி உண்டா. (என்ன இருந்தாலும் திக்கம் வடிசாலை அயிட்டம் மாதிரி வருமா வந்தியண்ணை)//

இது வேறை அதனால் அனுமதி தேவையில்லை என நினைக்கின்றேன்.

இப்ப ஏனடா திக்கத்தை ஞாபகப் படுத்துகிறாய்.

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி said...
அடியேன் கனகலிங்கம் கோபிகிருஷ்ணாவும் கலந்து கொள்கிறேன்...//

உங்களைத் தான் இந்த முறை பலர் தேடுவார்கள்.

//மீண்டுமொருமுறை கலக்குவோம்...
(எங்க கலக்கிறது... நீங்க கலக்க, நான் மூலையில இருந்து பாத்திற்று வரப்போறன்...)//

ஹாஹா போனமுறை அனுபவமோ. இந்த முறை கோபியை பாட்டுப்பாட வைப்பதாக உள்ளகத் தகவல் தெரிவிக்கின்றன.

//அதுசரி... நீங்க பாட்டுப் பாடுறீங்களாமே 2ம் திகதி???ஹி ஹி....//

சிற்றுண்டிகள் தட்டுப்பாடு என்றால் நான் பாடுவேன் உடனே மக்கள் ஓடிவிடுவார்க்ள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி said...
அண்ணா... ஒரு சின்னச் சந்தேகம்...
பறுவத்தில (அது தான் பூரணை..) நடத்தப் போயினமே, என்னப் போல ஆக்களுக்கு பறுவத்துக்கு கூடுறது எண்டு தெரியுமோ தெரியாதோ???//

நானும் இதை யோசித்தனான். உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் கூடுவதால் பம்பல் பார்க்கலாம்,

வந்தியத்தேவன் சொல்வது:

//Chandravathanaa said...
வாழ்த்துக்கள்//

நன்றிகள் அக்கா.

வந்தியத்தேவன் சொல்வது:

இருக்கிறத்துக்கு வருகின்ற பாதை :
தெகிவளை,வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிப் பகுதிகளில் இருந்து வருபவர்கள் 154 ஆம் இலக்க பஸ்சில் ரூபவாஹினி அல்லது டொரிங்டன் என ரிக்கெட் எடுத்து ரூபவாஹினிக்கு முன்னால் இறங்கவும். கொட்டாஞ்சேனை, மோதரை, மட்டக்குளி பக்கம் இருந்து வருபவர்கள் கொட்டாஞ்சேனையில் 176 ஆம் இலக்க பஸ்சில் ஏறி பொரளையில் இறங்கவும் அங்கிருந்து 154 ஆம் இலக்க பஸ்சில் ஏறி ரூபவாஹினிக்கு முன்னால் இறங்கவும். மோதரை மட்டக்குளியைச் சேர்ந்தவர்கள் 173 ஆம் பஸ்சில் நேரடியாக வரலாம் ஆனால் விடுமுறை தினம் என்பதால் பஸ் குறைவாக இருக்கும்.

பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் கோட்டையில் இறங்கி 103 ஆம் இலக்க பஸ்சில் பொரளைக்கு வரவும், அங்கிருந்து 154 ஆம் இலக்க பஸ்சில் ஏறிவரலாம்.

மிகவும் இலகுவான வழி பாதை தெரிந்தவர்களுடன் தொற்றிக்கொண்டு வருவதே.

வந்தியத்தேவன் சொல்வது:

35 மைனஸ் ஓட்டுகள் போட்ட புண்ணியவான் எந்த கஸ்டமும் இன்றி நெடுங்காலம் வாழ்க.

Admin சொல்வது:

சந்திப்போம் சிந்திப்போம்... செயற்படுவோம்.

Admin சொல்வது:

//வந்தியத்தேவன் said...
35 மைனஸ் ஓட்டுகள் போட்ட புண்ணியவான் எந்த கஸ்டமும் இன்றி நெடுங்காலம் வாழ்க.//



எல்லாமே பொறாமைதான்.

தங்க முகுந்தன் சொல்வது:

103 இல்லை மன்னிக்கவும் 104 பம்பலப்பிட்டியிலிருந்து பொரளைக்குப் போவது! மற்றது 173! நன்றி வந்தி திருத்தியதுக்கு! இன்று சஞ்சீத்துடன் பேசியபின்தான் இதை எழுதுகிறேன். நீர் முந்திவிட்டீர் நன்றிகள்!முன்னைய நிகழ்வுக்கு - தமிழ்ச் சங்க மண்டபத்திற்கு வருவதற்கான வரைபடம் ஒன்றை காட்டியிருந்தீர்கள்! அதுபோல இதற்கும் ஒரு வரைபடத்தைப் போடலாமே!

வந்தியத்தேவன் சொல்வது:

//சந்ரு சொல்வது:
சந்திப்போம் சிந்திப்போம்... செயற்படுவோம்.//

ஆமாம் சந்ரு ஆக்கபூர்வமான வழிகளில் செயற்படுவோம்

வந்தியத்தேவன் சொல்வது:

///சந்ரு சொல்வது:

எல்லாமே பொறாமைதான்.//

ஆமாம் இப்போ அப்படி வோட் விழாமல் யாழ்தேவி தொழில்நுட்பவாதிகள் சரி செய்துவிட்டார்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//தங்க முகுந்தன் said...
103 இல்லை மன்னிக்கவும் 104 பம்பலப்பிட்டியிலிருந்து பொரளைக்குப் போவது! மற்றது 173! நன்றி வந்தி திருத்தியதுக்கு! இன்று சஞ்சீத்துடன் பேசியபின்தான் இதை எழுதுகிறேன். நீர் முந்திவிட்டீர் நன்றிகள்!முன்னைய நிகழ்வுக்கு - தமிழ்ச் சங்க மண்டபத்திற்கு வருவதற்கான வரைபடம் ஒன்றை காட்டியிருந்தீர்கள்! அதுபோல இதற்கும் ஒரு வரைபடத்தைப் போடலாமே!//

தகவலுக்கு நன்றிகல் முகுந்தன் அண்ணா. வரைபடம் தேடினேன் கிடைக்கவில்லை.