*** இவர்களைத் தெரியுமா? ***

சில காலங்களுக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்த சிலர் இப்போ எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்களைப் பற்றிய சில சிறுகுறிப்புகள்.

தயாரிப்பாளர்கள்:
எத்தனையோ தயாரிப்பாளர்கள் சில இயக்குனர்களாலும், பொருத்தமில்லாத கதைகளாலும் பிரமாண்ட விளமபரங்களாலும் போண்டியாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஞாபகம் வைத்த்திருப்பது கடினம் அதில் ஒருவரை மட்டும் உங்களுக்குத் தெரிகின்றதா?

ஜென்டில்மேன் குஞ்சுமோன்:
பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு வாழ்வளித்த வள்ளல். பின்னர் மகனை( மகனின் பெயர் எபி என ஞாபாகம்) வைத்து கோடிஸ்வரன் என்ற பெயரில் பத்து வருடங்களுக்கு முன்னர் படம் எடுத்தார். இன்னமும் படமும் வெளிவரவில்லை இவரும் படம் எடுப்பதில்லை. அந்த படத்தின் ஒரு பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது. நம்ம ஊர் எவ் எம் வானொலிகள் ஆரம்பித்த காலத்தில் வெளிவந்த பாடல் அடிக்கடி ஒலிபரப்பினார்கள். பாடல் ஞாபகம் இல்லை. இந்தப் பாடலை கானாபிரபா கண்டுபிடித்துக்கொடுப்பார் என நினைக்கின்றேன். ஷங்கர் தன் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இவருக்கு ஏன் நிதி உதவி செய்யக்கூடாது?

இயக்குனர்கள் :

ஆர்.வி.உதயகுமார்:
கமல், ரஜனியை வைத்து வெற்றிப்படங்கள் கொடுத்தவர். பலகாலமாக படம் எதையும் இயக்கவில்லை.

பாண்டியராஜன் :
கதாநாயகனாக நடிப்பதை சில காலமாக நிறுத்தியிருந்தார். துணை நடிகராக பல படங்களில் தலைகாட்டுபவர் சில காலமாக படங்களை இயக்குவதை ஏனோ நிறுத்திவிட்டார். ஆண்பாவத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம மற்றக்முடியாது.

எஸ்பி.முத்துராமன்:
ரஜனி, கமலை வைத்து ஏவிஎம் நிறுவனத்துக்கு பல படங்களை இயக்கிவெற்றிகொடுத்தவர். இவர்களை இருவரையும் வசூல் நாயகன்களாக்கிய பெருமை இவரையே சாரும். இவர் ஏனைய நடிகர்களை வைத்து படம் இயக்கிய படங்கள் மிகச் சிலவாகும்.

மணிவண்ணன் :

நூறாவது நாள், அமைதிப்படை என பல சிறந்தபடங்களைக் கொடுத்தவர். பின்னர் இவர் இயக்கிய படங்கள் பெரிதாக சோபிக்காவிட்டாலும் படங்களீல் வில்லனாகவும் கொமடியனாகவும் வந்துபோனார். நண்பர் முரளிகண்ணன் இவர் பற்றிய சிறப்பான பதிவு ஒன்றைப்போட்டிருக்கின்றார்.

சசி :
ரோஜாக்கூட்டம், சொல்லாமலே என சிறந்த காதல் படங்களைக் கொடுத்தவர். தற்போது என்ன செய்கின்றார் எனத் தெரியவில்லை.

இசையமைப்பாளர்கள் :


கார்த்திக்ராஜா:
டும்டும்டும், உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளைபோகுமே, அல்பம்( செல்லமே செல்லம் ஸ்ரேயா கோஷலின் முதல் தமிழ்ப் பாடல்) என பலபாடல்களில் உள்ளத்தை கொள்ளைகொண்ட இசைராஜாவின் முதல்வாரிசு, தம்பி யுவன் இசை உலகில் கொடிகட்டிப்பறந்துகொண்டிருக்கிறார். ஏனோ வாரிசுகளில் இரண்டாமவருக்குத் தான் செல்வாக்கு அதிகம் என நினைக்கின்றேன். தற்போது புதிதாக ஒரு படத்திற்க்கு இசையமைப்பதாக அறியக்கிடைத்தது.

தேவா:
காப்பி ராக மன்னர் தேவா, பாடல்கள் பல ஒரே மாதிரியும் எங்கேயோ கேட்டதுபோல் இருந்தாலும், கானாப்பாடல்களில் கொடிகட்டிப்பறந்தவர். ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர். வாலி, குஷி, நேருக்கே நேர், கண்ணெதிரே தோன்றினாள் என பல படங்களில் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர், ஸ்ரீகாந்த் தேவாவின் வரவின் பின்னர் ஒதுங்கிவிட்டாரோ தெரியவில்லை.

எஸ்ஏ ராஜ்குமார் :

லாலலா புகழ் இசையமைப்பாளர் அனேகமாக இவரது பாடல்கள் மெல்லிசையாகவே இருக்கும். இயக்குனர் விக்ரமனி ஆஸ்தான இசையமைப்பாளர். சில காலமாகக் காணாமல் போய்விட்டார்.

நடிகர்கள் :

கார்த்திக் :

80களின் காதல் மன்னன், இளவரசன் எனப் பல பட்டங்களைக் கூறலாம். இளஞிகளைக் கட்டிப்போட்ட நடிகர். எத்தனையோ ஹிட் கொடுத்தவர். அரசியல்வாதியாகி 2011 ஆம் ஆண்டில் முதல்வராகும் கனவில் இருப்பதாலோ என்னவோ படங்களில் அதிகம் காணவில்லை.

முரளி :
மைக் மோகனிற்க்கு பின்னர் அதிகம் மைக் பிடித்த நடிகர். காதலைச் சொல்லாமல் வைத்திருப்பதிலும் பலகாலம் கல்லூரிக்கு போனதிலும் இவரது சாதனையை வருங்கால கதாநாயகர்கள் உடைப்பது என்பது மிகவும் கஸ்டம். இறுதியாக இவரின் நல்ல படம் என்றால் சுந்தரா ராவல்ஸ் தான்.

பிரபு :

என்ன கொடுமை சரவணன் என்ற வசனத்தை மிகப் பிரபலமாக்கியவர். சமீபகாலமாக துணை நடிகராகத் தான் வருகின்றாரே ஒழிய கதாநாயகனாக வருவதில்லை.

நடிகைகள் :

நடிகைகளைப் பொறுத்தவரை அவர்கள் காலத்திற்கேற்ப அடிக்கடி மாறுவதால் பட்டியல் இடமுடியாது. ஆனாலும் திவ்யா உன்னி, மீரா ஜாஸ்மின் போன்ற சில கேரளத்து கிளிகள் காணாமல் போனது கவலை அளிக்கின்றது. அல்லது நடிகைகள் தங்கள் காலம் முடிய சின்னத் திரையில் கிளிசரினுடன் அவதாரம் எடுக்கிறார்கள்.


இன்னும் யார் யாரை நீங்கள் தேடுகின்றீர்கள் என அறியத்தாருங்கள்.

9 கருத்துக் கூறியவர்கள்:

முரளிகண்ணன் சொல்வது:

படங்களுடன் அசத்தலாக இருக்கிறது பதிவு. மீரா சூப்பர். குஞ்சுமோன் அறிமுகம் சிரிப்பை வரவழைத்தது.

நீங்கள் குறிப்பிட்ட பாடல் அருமையக இருக்கும். தொலைவினிலே என்பது போல தொடங்குவதுதானே அது?

முரளிகண்ணன் சொல்வது:

nice reminder. mira jasmine picture very nice.

you mention about one song in koodiscaran

it starts like

Tholivinilee

ஜெகதீசன் சொல்வது:

நடிகர் மைக் மோகன்!
:)

-/பெயரிலி. சொல்வது:

நான் தேடுவது,

இலங்கைப்பதிவர்களின் பதிவுகளில் இலங்கைப்புதினங்களை.

-/இலங்காத்தமிழன்.

தமிழன்-கறுப்பி... சொல்வது:

:))

தமிழன்-கறுப்பி... சொல்வது:

தேடப்போனா நிறையப்பேரை தேட வேண்டி வரும்...:)

`மழை` ஷ்ரேயா(Shreya) சொல்வது:

தாம் தரிகிட தோம்... என்டு தொடங்கி "சந்திர வெளிச்சத்தில் வீட்டுக்கு வெள்ளையடி" என்டு தொடருற பாட்டையா சொன்னீங்க? எங்கையாவது கிடைச்சா சொல்லுங்க, நானும் தேடுறன்.. :O)

மணிகண்டன் சொல்வது:

:)- super

butterfly Surya சொல்வது:

இசையமைப்பாளர் தேவா..எங்கே....???


சூர்யா
சென்னை