இன்னொரு சர்ச்சையில் குஷ்பு,


இன்று மானாட மயிலாடவின் முதாலாம் ஆண்டுக் கொண்டாட்டங்களை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் நடிகை குஷ்புவை ஒருவர் உங்களுக்கு பிடித்த நடிகை யார் எனக் கேட்டார். அதற்க்கு குஷ்பு சிம்ரன், ஜோதிகாவிற்க்குப் பின்னர் எந்த நடிகையும் ஒழுங்காக நடிக்கவில்லை என்றும் சும்மா கிளாமராக வந்துபோகின்றார்கள் எனவும் கொஞ்சம் காட்டமாகக் கூறினார். 

அதாவது தற்போதைய முன்னணி நடிகைகளான அசின், நயந்தாரா, திரிஷா, பாவனா, சினேகா, நமீதா இவர்கள் ஒருதரும் நடிகைகள் இல்லையாம். 

யார் யார் குஷ்புவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களோ, பொறுத்திருந்து பார்ப்போம். முன்னர் ஒரு பத்திரிகையில் நடன இயக்குனர் பிருந்தா சினேகாவிற்க்கு நடனம் ஆடவராது எனப்பேட்டி கொடுத்து சர்ச்சையாக்கினார். குஷ்புவுக்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல.

நிகழ்ச்சியைத் தப்பவிட்டவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை இரவு இந்திய நேரம் 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்வார்கள் பார்த்து மகிழுங்கள். வீதியில் கூட நம்ம நடனமங்கைகள் ஆடினார்கள். என்ன கொடுமை கலா மாஸ்டர். 

13 கருத்துக் கூறியவர்கள்:

G.Ragavan சொல்வது:

அசின், சிநேகா நல்ல வாய்ப்புக் குடுத்தா நல்லா நடிப்பாங்க. ஆனா மத்தவங்கள்ளாம் கவர்ச்சிப் பாவைகள்தான். அழகா இருக்காங்க. ஆடுறாங்க. ஆனா மாறுபட்ட பாத்திரங்களக் குடுத்தா துண்டக் காணோம்...துணியக் காணோம்தான். தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகி இடத்தைப் பூர்த்தி செய்ய நெறையப் பேரு இருக்காங்க. ஆனா நல்ல நடிகை எடத்தப் பூர்த்தி செய்யத்தான் ஆளில்லை. இதக் குஷ்பூ வேற சொல்லீட்டாரா...கிழிஞ்சது போங்க. வேற வெனையே வேண்டாம்டோய்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) சொல்வது:

Ondrum solvatharikkillai

கானா பிரபா சொல்வது:

appa innoru paraparappu irukku ;)

வந்தியத்தேவன் சொல்வது:

//g.ragavan said...
அசின், சிநேகா நல்ல வாய்ப்புக் குடுத்தா நல்லா நடிப்பாங்க. ஆனா மத்தவங்கள்ளாம் கவர்ச்சிப் பாவைகள்தான். அழகா இருக்காங்க. ஆடுறாங்க. ஆனா மாறுபட்ட பாத்திரங்களக் குடுத்தா துண்டக் காணோம்...துணியக் காணோம்தான். தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகி இடத்தைப் பூர்த்தி செய்ய நெறையப் பேரு இருக்காங்க. ஆனா நல்ல நடிகை எடத்தப் பூர்த்தி செய்யத்தான் ஆளில்லை. இதக் குஷ்பூ வேற சொல்லீட்டாரா...கிழிஞ்சது போங்க. வேற வெனையே //

வாங்க ஜீ.ராகவன்
நீங்கள் சொல்வது சரிதான், அசின், சினேகா இருவரும் சிறந்த நடிகைகள் தான். நயனதாரா, திரிஷா, நமீதா போன்றோருடன் ஒப்பிடும்போது மிகவும் சிறந்த நடிகைகள். ஆனாலும் அதிகம் கவர்ச்சி காட்டுபவரைத்தான் நம்பர் ஒன் என்கின்றார்கள் இன்டஸ்ரியில். இதனை விகடன் குமுதம் போன்றவை சர்ச்சையாக்கினால் வேறை வினையே வேண்டாம்.

வந்தியத்தேவன் சொல்வது:

வாங்க கொஞ்சம் நல்லவன் ஏதாவது சொல்லிப்புட்டுப்போய் இருக்கலாம்.

ஆமாம் கானா இன்னொரு பரபரப்பு நிச்சயமாக இருக்கும். இதனை ஏதாவது பத்திரிகை கண்டுபிடித்தால். வேறு நடிகைகள் யாராவது சொல்லியிருந்தால் பத்திரிகைகள் கண்டுகொள்ளாது குஷ்பு சர்ச்சை நாயகி ஆச்சே நிச்சயம் பரபரப்பு ஏற்படும்.

முரளிகண்ணன் சொல்வது:

சூப்பர், இனி கொஞ்சம் நாள் நல்லா பொழுது போகும்

பொன்னர் சொல்வது:

'சிக்' குஷ்பு - 'நக்கல்' சத்யராஜ்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முரளி நடித்துள்ள எங்க ராசி நல்ல ராசி பட ஆடியோ வெளியீட்டு விழாவில், ஜீன்ஸ், டீ சர்ட்டில் சின்னப் புள்ளை தோற்றத்தில் சிக்கென வந்திருந்தார் குஷ்பு. விழாவில் பேசிய சத்யராஜ், இப்போதெல்லாம் குஷ்பு கால் மேல் கால் போடுவதில்லை என்று பேசி கூட்டத்தில் கலகலப்பூட்டினார்.

ரொம்ப காலமாக இளைஞராகவும், மாணவராகவும் நடித்துக் கொண்டிருந்தவர் முரளி. ஆனால் நிஜமான இளைஞர்களும், மாணவர்களும் ஹீரோக்களாக வந்து விட்டதால் முரளிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தேக்கமடைந்திருந்த அவரது மார்க்கெட்டை தூக்கி நிமிர்த்தும் வகையில் கிடைத்த வாய்ப்புதான் எங்க ராசி நல்ல ராசி.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. சத்யராஜ் முதல் கேசட்டை வெளியிட, குஷ்பு பெற்றுக் கொண்டார். வழக்கமாக மங்களகரமாக புடவை அல்லது சுடிதார் போன்ற உடைகளில் வரும் குஷ்பு, இந்த நிகழ்ச்சிக்கு சிக்கென்ற ஜீன்ஸ் மற்றும் டீசர்ட்டில் வந்திருந்தார்.

வழக்கம் போல தமாஷாகாவும், லொள்ளாகவும், நக்கலாகவும் பேசினார் சத்யராஜ். பேச்சுவாக்கில் முரளியை குண்டக்க மண்டக்க வாரினார். களத்தூர் கண்ணம்மா படத்தை இப்போது எடுத்தால் அதில் குட்டி கமல் வேடத்தில் முரளியை நடிக்க வைக்கலாம். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாட்டுக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று வாரினார்.

பிறகு குஷ்பு பக்கம் வந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த கஸ்தூரி ராஜாவைக் குறிப்பிட்டு வந்தது முதலே பார்க்கிறேன், குஷ்பு பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிறார் கஸ்தூரி ராஜா. அப்போதுதான் தனது படம் பத்திரிக்கையில் வரும் என்று நினைக்கிறார் போலும். குஷ்பு மீது உள்ள வழக்கில் அவரையும் சேர்த்து விடப் போகிறார்கள் என்றார் சத்யராஜ்.

//அத்தோடு நில்லாமல், குஷ்பு இப்போதெல்லாம் கால் மேல் கால் போடுவதில்லை என்றும் தமாஷாக பேசினார். அப்போது குறுக்கிட்ட குஷ்பு, இங்கு விளக்கு இல்லை என்று குரல் விட்டார்.
நல்ல தமாஷ்!//

www.thatstamil.com

Please any body explain?

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

"என்ன பற்றி புளொக் லயும் பேசத்தொடங்கிட்டாங்கப்பா..... வந்து பாருங்க" என்று குஷ்பு கையடக்கத் தொலைபேசியில யாருக்கோ சொல்ற படம் தான் மேலே இருக்குதோ?

SurveySan சொல்வது:

ஜூப்பர் ஃபோட்டோ.

Subash சொல்வது:

அதா இப்ப சர்ச்சைக்கு நீங்களே ஐடியா குடுத்திடடீங்கல்ல. இனி கத்திக்கும்!!!
:)

A Blog for Edutainment சொல்வது:

குஷ்பூவுக்கு மறுபெயர் சர்ச்சையோ?

Anonymous சொல்வது:

இது அவரின் தனிப்பட்ட கருத்து தானே..:)

வந்தியத்தேவன் சொல்வது:

முரளிகண்ணன், திரிஷா, நிர்ஷன், சர்வேசன், சுபாஷ், குறும்படங்களின் வலை, தூயா வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள். இதுவரை என்னுடைய பதிவுகளிலே 24 மணி நேரத்தில் அதிகம் பேர் படித்த பதிவு இதுவாகத்தான் இருக்கும். வாழ்க குஷ்பு.

நிர்ஷன் அதிரடியான காமெண்ட் கொடுத்துள்ளீர்கள்,

சுபாஷ் இப்படிச் சர்ச்சைகள் அடிக்கடி நிகழ்ந்தால் தான் ஊடகங்கள் பிழைக்கமுடியும். அந்த நாளில் சிவபெருமான் செய்யாத சர்ச்சைகளா? உடனே ஞாபகத்துக்கு வருவது பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா இல்லையா?


தூயா இது அவரின் தனிப்பட்ட கருத்துத்தான் ஆனாலும் நம்பர் ஒன் நடிகைகளான திரிஷா, நயனதாரா, அசினுக்கு நடிப்பு வராது என எப்படி இவர் சொல்லலாம். காரணம் குஷ்பு விமர்சகர் அல்ல. குஷ்புவும் ஒரு நடிகைதான்.