கிறிஸ்துமஸுக்கு இரு நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் கங்கோனின் செய்தி " நான் யாழ்ப்பாணம் போகப்போகின்றேன்" இதன் பின்னர் அவர் தனது பயண விபரங்களை இடையிடையே அனுப்பிக்கொண்டிருந்தார். கங்கோனின் யாழ்ப்பாணத்திற்கான தீடிர் விஜயம் பற்றி ட்விட்டரில் பல வதந்திகள் வந்துகொண்டிருந்தன. ஒரு பிரபலத்திற்க்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய என ஒருவர், அது இல்லை கங்கோன் ட்விட்டர், புளொக், பேஸ்புக் போன்றவற்றில் 24 மணித்தியாலத்தில் 25 மணித்தியாலங்களைச் செலவிடுவதாகவும் இதனால் அவரது தாயர் சில நாட்கள் ஓய்வுக்காக யாழ்ப்பாணம் அனுப்பியதாகவும், இவை எதுவும் இல்லை கங்கோனின் ராசிக்கு இந்த வருடம் காதல் கைகூடும் என்பதால் அவர் தனது காதலியைத் தேடி யாழ் செல்வதாகவும் பரபரப்பான செய்திகள் அவரது நண்பர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
கொழும்பு கோட்டையில் பஸ்சில் ஏறி கங்கோன் அனுப்பிய ட்விட்டர் செய்தியில் இருந்து கங்கோன் பெண் பார்க்கத் தான் போகின்றார் என்ற விடயம் புலனாகியது. அந்தச் செய்தி இதுதான் " பஸ்சினுள் ஏறிவிட்டேன் பஸ் மிகவும் வரட்சியாக இருக்கின்றது எப்படித்தான் பொழுது போகப்போகின்றதோ". சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டுவிட்டதாகவும் பஸ் புறப்படும் தருவாயில் 2 அழகான பெண்கள் பஸ்சினுள் ஏறிவிட்டார்கள் எனவும் கங்கோனின் செய்தி ட்விட்டரில் வெளியானது.
சரியாக பின்னேரம் 4.15 அளவில் கோட்டையில் இருந்து கங்கோனின் பஸ் யாழ் நகர் நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அந்தப் பெண்களிடம் கங்கோன் கொஞ்சம் கதை கொடுத்தார். அவர்கள் இருவரும் வலைப்பூக்கள் வாசிப்பவர்கள் என்ற உண்மையை அறிந்த கங்கோன் தன்னை அறிமுகம் செய்ய ஒரு துடுக்கான பெண் அப்போ நீங்கள் தான் அந்த சமூக விலங்கோ என கங்கோனுக்கே அதிர்ச்சி அளித்தார். அவரைப் பழிவாங்க எண்ணிய கங்கோன் நிலவில் இருந்து பிரிண்ட் எடுத்து வந்த சில பின்நவீனத்துவ கட்டுரைகளை அவர்களீடம் வாசிக்க கொடுக்க, அந்தக் கட்டுரைகளின் தாக்கத்தில் அதனை வாசித்த அந்த இரு பெண்களைத் தவிர ஏனையவர்கள் நன்றாக நித்திரைகொண்டார்கள். பின்னர் வவுனியாவில் பஸ்சில் இருந்து அவர்கள் இறங்கும்போது கங்கோனைப் பார்த்த பார்வையில் மலையே சரிந்துவிழுந்துவிட்டது.
ஒருமாதிரி வவுனியாவில் கால் கடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த கங்கோனிற்க்கு யாழ் செல்ல அனுமதி கிடைத்துவிட்டது. பொடியன் அந்த மகிழ்ச்சியான செய்தியையும் மொபைல் வெப் மூலம் ட்விட்டரில் அனைவருக்கும் அறிவிக்க விரும்பினால் அந்த இடத்தில் நெட்வேர்க் டவுணாகி இருந்தது. தன்னுடைய மொபைல்காரர்களைத் திட்டிக்கொண்டே கங்கோன் கண்டி வீதியுனூடாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார்.
கங்கோன் ஒரு சமூக அக்கறை உடையவர் என்பதால் அந்த வீதீயூடாக பயணிக்கும் போது கண்ட காட்சிகள் அவரது நெஞ்சையே கலங்கச் செய்தது. அந்தக் காட்சிகளைத் தன்னுடைய கமேராவில் சுட்ட கங்கோன் அதனை வைத்து ஒரு பதிவு போட எண்ணிக்கொண்டார். ஆடி அசைந்து கங்கோன் சென்ற பஸ் யாழை அடைந்தது.
யாழ் மண்ணில் நீண்ட நாட்களின் பின்னர் காலை வைக்கும் போது கங்கோன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். கொழும்பு நரக மன்னிக்கவும் நகர வாகனப் புகையும், குப்பையுமாக இருந்த வீதிகளுடன் ஒப்பிடும் போது யாழ் வீதிகள் அழகாகவும் சுத்தமாகவும் இருந்தன. அந்த உணர்ச்சிப் பெருக்கில் கங்கோன் "சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?" என இசைஞானியின் குரலில் பாடத் தொடங்கிவிட்டார்.
பயண அலுப்பில் அன்றைக்கு தன்னுடைய பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கமுடியாது அடுத்த நாள் வெள்ளிக்கிழமை நல்ல நாள் ஆகவே வெள்ளியே தன்னுடைய கடமையைச் செய்வோம் என எண்ணியபடி காதல் பாடல்களை கேட்டபடி கங்கோன் நித்திரைக்குச் சென்றுவிட்டார்.
வெள்ளி அதிகாலையில் வழக்கமாக நாலு சட்டி தண்ணியில் குளிக்கும் கங்கோன் கிணற்றில் 40 வாளி தண்ணியில் 2 லக்ஸ் சோப் போட்டுக் குளித்துவிட்டு, நல்லூர் கந்தனைத் தரிசிக்கச் சென்றார். நல்லூரில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
கச்சான் விற்கின்ற ஆச்சியிடம் தன்னுடைய சாதகக் குறிப்பைக் கங்கோன் கொடுக்கும் போது பாலவாசகன் கண்டுவிட்டார். கங்கோன் கையும் குறிப்புமாக அவரிடம் பிடிபட்ட பின்னர் என்ன செய்வது எனத் தெரியாமல் பாலவாசகனிடம் உண்மையை ஒத்துக்கொண்டுவிட்டார். ஆச்சி பல இடங்களுக்கும் வியாபாரம் செய்ய செல்பவர் ஆகவே அவருக்கு பலரின் தொடர்புகள் இருக்கும் அதுதான் அவரிடம் சாதகத்தைக் கொடுத்தேன் எனக்குத் தோதான ஒரு பெண்ணைப் பார்ப்பதாகச் சொன்னார். ஆனால் என்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் பயப்படுகின்றார் போல் தெரிகின்றது என கங்கோன் உண்மையச் சொல்லிவிட்டார்.
ஒரு பதிவரின் கஸ்டம் இன்னொரு பதிவருக்குத் தான் தெரியும் என்பதுபோல் பாலாவும் இதெற்கெல்லாம் கவலைப் படாதே வா கோயிலுக்குள் சென்று முருகனிடம் ஒரு விண்ணப்பம் கொடுப்போம் என உள்ளே சென்றார்கள். உள்ளே போனால் பட்டுவேட்டியில் வெயில் இல்லாத மழை நாளில் கூலிங் கிளாசுடன் "ஏறுமயில் ஏறு விளையாடு " என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.
பின்குறிப்பு : சில பல ஆணிகள் இருப்பதால் பகுதி 2 மதியம் அல்லது மாலையில் வெளியாகும்.
முக்கியமான பின்குறிப்பு : உண்மையான சம்பவங்களைத் தழுவியதே இந்தப் பதிவு யாவும் கற்பனை அல்ல.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
14 கருத்துக் கூறியவர்கள்:
##உண்மையான சம்பவங்களைத் தழுவியதே இந்தப் பதிவு யாவும் கற்பனை அல்ல##
அட இது வேறயா...
பாகம் ஒண்ணு நல்லாத்தான் போகுது எனட தல பெரிசா உருளல... அப்பனே முருகா வாறவெள்ளிக்கிழமை கற்பூரம் கொழுத்திறன் என்ன இரண்டாம் பதிவிலயும் காப்பாத்துடா..சாமியோவ்
அட அட அட.
//தன்னுடைய கமேராவில் சுட்ட கங்கோன் அதனை வைத்து ஒரு பதிவு போட எண்ணிக்கொண்டார்//
அதன்பின் கமெராவை பொலித்தீன் பையில் பத்ததிரப்படுத்திக்கொண்டார்
//கிணற்றில் 40 வாளி தண்ணியில் 2 லக்ஸ் சோப் போட்டுக் குளித்துவிட்டு//
பேரழகன் கங்கோனுக்கு ஒரு ஜோ இல்லாட்டாலும் நயன் கிடைக்காமலா போவார்?
//கச்சான் விற்கின்ற ஆச்சியிடம் தன்னுடைய சாதகக் குறிப்பைக் கங்கோன் கொடுக்கும் போது பாலவாசகன் கண்டுவிட்டார்//
அதற்குள் வைத்திருந்த ஃபோட்டோ பற்றி எனக்கு எதுவும் தெரியாது
//உள்ளே போனால் பட்டுவேட்டியில் வெயில் இல்லாத மழை நாளில் கூலிங் கிளாசுடன் "ஏறுமயில் ஏறு விளையாடு " என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.//
அவரைப்பார்த்து முருகனே திகைத்துவிட்டதாக கேள்வி.
// ஒரு பிரபலத்திற்க்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய என ஒருவர்//
ஆகா......
//கங்கோன் ட்விட்டர், புளொக், பேஸ்புக் போன்றவற்றில் 24 மணித்தியாலத்தில் 25 மணித்தியாலங்களைச் செலவிடுவதாகவும் இதனால் அவரது தாயர் சில நாட்கள் ஓய்வுக்காக யாழ்ப்பாணம் அனுப்பியதாகவும்//
நான் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதில்லை என்பதை பொறுப்புடன் சொல்லிக் கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்து கொள்கிறேன்....
//கங்கோனின் ராசிக்கு இந்த வருடம் காதல் கைகூடும் என்பதால்//
கூடுமா? உண்மையாவா? :)
//ஒரு துடுக்கான பெண் அப்போ நீங்கள் தான் அந்த சமூக விலங்கோ என கங்கோனுக்கே அதிர்ச்சி அளித்தார்.//
ஹி ஹி..... உண்மையாவே கேட்டிருந்தா சந்தோசப்பட்டிருப்பன்..... ஒருத்தருக்கும் என்னத் தெரியாது. :P
//நிலவில் இருந்து பிரிண்ட் எடுத்து வந்த சில பின்நவீனத்துவ கட்டுரைகளை//
ஹி ஹி.... நித்திரை இல்ல.... அது மயக்கம்....
//கங்கோனைப் பார்த்த பார்வையில் மலையே சரிந்துவிழுந்துவிட்டது//
சீ போங்கோ.... வெக்கமாயிருக்கு... ;)
//சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?" என இசைஞானியின் குரலில் பாடத் தொடங்கிவிட்டார். //
உண்மையாகவே நினைத்துக் கொண்டேன்.... ஆயிரம் தான் இருந்தாலும் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் தான்....
ஆனால் இப்போது அங்கும் கொஞ்சமாக நாகரிகக் குப்பைகள் பரவிவிட்டன....
இளைஞர்களும், யுவதிகளும் கொங்சம் மாறிவிட்டார்கள்...
பதிவொன்று போட வேண்டும்....
//நாலு சட்டி தண்ணியில் குளிக்கும் கங்கோன் கிணற்றில் 40 வாளி தண்ணியில் 2 லக்ஸ் சோப் போட்டுக் குளித்துவிட்டு//
நீங்களே சொல்லுங்கோ.... 4 சட்டியில என்ர முகத்தக்கூட முழுமையா நனைக்க முடியாதே....
//என்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் பயப்படுகின்றார் போல் தெரிகின்றது என கங்கோன் உண்மையச் சொல்லிவிட்டார். //
:) நான் இப்பிடி இருக்கிறது தான் ஒராளுக்குப் பிடிச்சிருக்காம்... ;)
//கூலிங் கிளாசுடன் "ஏறுமயில் ஏறு விளையாடு " என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.//
ஓ! தொடருமா???
நிறைய நெடுந்தொடர்களப் பாப்பீங்கள் போல?
//முக்கியமான பின்குறிப்பு : உண்மையான சம்பவங்களைத் தழுவியதே இந்தப் பதிவு யாவும் கற்பனை அல்ல. //
இது வேறயா?
இந்தப் பதிவால எனக்கு பெண்பார்க்கும் படலத்தில் குழப்பங்கள் ஏற்பட்டால் சிங்கப்பூரிலிருந்து நீங்கள் தான் பார்க்க வேண்டும்.....
சிரித்தேன்.... இரசித்தேன்.....
அப்படியோ சங்கதி... என்ன நடந்தது என்று அடுத்த இடுகையில விளக்கமாக சொல்லுங்க வந்தி அண்ணா....
விரைவில் டும்... டும்.. டும்தான் என்று சொல்லுங்கோ. பச்சிளம் பாலகருக்கே டும்..டும்...டும்... மூத்த பதிவர்கள் பலர் இருக்கிறார்களே அவர்களுக்கு எப்போ டும்... டும்... டும்...
///கச்சான் விற்கின்ற ஆச்சியிடம் தன்னுடைய சாதகக் குறிப்பைக் கங்கோன் கொடுக்கும் போது///
ஹாஹா... பாவம் காங்கோன் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் தேடியிருக்கிறார்..
///என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.///
என்னாது?... நாடகங்களில் தொடரும் போடுவது போல விறுவிறுப்பான இடத்தில் நிப்பாட்டிட்டீங்களே.
பார்ட்-2க்கு வெயிட்டிங்
நல்ல நகைச்சுவை! :)
//உள்ளே போனால் பட்டுவேட்டியில் வெயில் இல்லாத மழை நாளில் கூலிங் கிளாசுடன் "ஏறுமயில் ஏறு விளையாடு " என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.//
யாருங்க அந்த பெரிய மனிதர்??
உண்மையில் நீண்ட காலத்திற்கு பின்னர் நான் பிறந்த மண்ணை தரிசிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவு தான் ஏது! மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் பதிவு! :)
//உள்ளே போனால் பட்டுவேட்டியில் வெயில் இல்லாத மழை நாளில் கூலிங் கிளாசுடன் "ஏறுமயில் ஏறு விளையாடு " என கணீரெனப் பாடிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்கள்.//
அது நம்ம புல்லட் தானே?????
//" நான் யாழ்ப்பாணம் போகப்போகின்றேன்" //
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா?
இந்தக் கதை பக்கத்து இலைப் பாயாசம் மாதிரி இருக்கே..
வந்தியின் அம்மா இந்த அங்கிளுக்கு விரைவாகத் திருமணம் செய்து வைக்கவும்..
இந்தாள் கால்,கை முளைக்காத (ஹீ ஹீ) சின்ன சின்னப் பெடியங்களுக்கேல்லாம் ஐடியா குடுத்து அலைய வைக்குது..
கண்கோனுக்கு மனம் முடிக்கும் படலம் ஆரம்பித்துள்ள மாமா வந்தியருக்கு 2010 இல் அன்று பார்த்த தேவதையை மனம் முடிக்கும் வரத்தை அருள் நல்லூரானே..
பதிவுலகம் சார்பாக நாங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு தேங்காய் உடைக்கிறோம்.. வந்தியின் கணக்கில்..
// LOSHAN said...
இந்தக் கதை பக்கத்து இலைப் பாயாசம் மாதிரி இருக்கே..
வந்தியின் அம்மா இந்த அங்கிளுக்கு விரைவாகத் திருமணம் செய்து வைக்கவும்..
இந்தாள் கால்,கை முளைக்காத (ஹீ ஹீ) சின்ன சின்னப் பெடியங்களுக்கேல்லாம் ஐடியா குடுத்து அலைய வைக்குது..
கண்கோனுக்கு மனம் முடிக்கும் படலம் ஆரம்பித்துள்ள மாமா வந்தியருக்கு 2010 இல் அன்று பார்த்த தேவதையை மனம் முடிக்கும் வரத்தை அருள் நல்லூரானே..
பதிவுலகம் சார்பாக நாங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு தேங்காய் உடைக்கிறோம்.. வந்தியின் கணக்கில்.. //
அப்பாடா.... லோஷன் அண்ணைக்காவது உண்மை தெரிஞ்சுதே.......
வந்தி அங்கிளின்ர அம்மாவுக்கு எல்லாரும் கோரிக்கைக் கடிதம் அனுப்புவம் என?
இதில நிறைய உள்குத்துகள் இருக்கும் போல...!
ரொம்ப லேட்டா வாசிச்சிட்டனோ ? எண்டாலும் அந்த மயங்கி விழுந்த ஆக்கள் பாவம், எனக்கேதோ அவை 'பாரிய' உருவமொண்டைப் பாத்து பயந்து மயங்கின மாதிரி தோணுது...)))
பி.கு:- அந்த ரெண்டு பொம்பிளைப் பிள்ளையளும் எனக்குத் தெரிஞ்சாக்கள் தான் ...ஹி ஹி.....!!!
//எனக்கேதோ அவை 'பாரிய' உருவமொண்டைப் பாத்து பயந்து மயங்கின மாதிரி தோணுது...)))
//
இல்ல இல்ல....
அவ ஒரு கவிதைய வாசிச்சுத் தான் மயங்கி விழுந்தவ....
கதைய மாத்தப்படாது....
kalakkal
I just read it Super... writing...Go Ahead...
Post a Comment