சன் பிக்சர்சின் காமன் வெல்த்

கோபாலபுரத்தில் ஒரு காலைப்பொழுதில் கருணாநிதி தன் நாட்குறிப்பில் சினிமா இசை வெளியீடு, மானாடா மயிலாட சீசன் 5 இறுதிப்போட்டி, அடுத்த பாராட்டு விழா, போன்ற முக்கியமான விடயங்களை ஆராய்ந்துகொண்டிருக்கும் போது தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.

சிங் : வணக்கம் கலைஞர்ஜி

கலைஞர் : உங்களுக்கு கடிதம் எழுத நினைத்தேன் அழைத்துவிட்டீர்கள்ஜீ, இதுவல்லவோ பண்பாடு.

சிங் :(மனதில்) சப்பா இந்த மனிசன் இனிப் பண்பாடு கலாச்சாரம் என அறுக்கபோகின்றது.
கலைஞர் : அழைத்த காரணம் என்னவோ. பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதவேண்டுமா? இல்லை எனக்கு தலைநகரில் ஏதும் பாராட்டு விழாவா?

சிங் : (அவசரமாக) இல்லை இல்லை காமன்வெல்த் போட்டிகளை சீனாவைப் பார்த்து ஏதோ ஒரு உசாரில் நடத்துவோம் என தொடங்கினால் பாபர் மசூதி பிரச்சனையை விட இது பெரிய்ய பிரச்சனையாகிவிட்டது. அதுதான் உங்களிடம் ஒரு உதவி.

கலைஞர் : உங்களுக்கு இல்லாத உதவியா சொல்லுங்கள் ஜீ.

சிங் : நம்ம அரசால் காமன்வெல்த் நடத்து அளவிற்க்கு பணம் இல்லை, இருந்த பணத்தையும் ஊழல் செய்துவிட்டார்கள், பத்திரிகைகள் எல்லாம் இது காமன் வெல்த்தா இல்லை காங்கிரஸ் வெல்த் கேமா என கிண்டல் செய்கின்றது. உங்கள் பேரன் கலாநிதியை காமன் வெல்த்தை ஸ்பொன்சர் செய்யச் சொல்லுவீர்களா?

கலைஞர் : இது சின்ன விடயம் இதனை நீங்களே செய்யலாமே? இடையில் நான் ஏன்?
சிங் : இல்லை ஜீ நீங்கள் அழைத்தால் அவர்கள் இதயம் இனிக்கும்.

இதனை மன்மோகன் சிங் கூறீயவுடன் கலைஞரின் கண்கள் உடனே பனித்தன.

கலைஞர் : உங்களுக்காக இல்லாவிடிலும் என் நண்பர் இந்திராகாந்தியின் மருமகள் சோனியாஜிக்காக நான் இதனைச் செய்கின்றேன் என்றபடி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

காமன் வெல்த் கேமை தாமே நடத்தும் சந்தோஷத்தில் எந்திரன் பரபரப்புடன் சன் குழும அலுவலகம் அதகளப்பட்டத்து. கலாநிதி, தயாநிதி, ஷங்கர்,வைரமுத்து, ஷக்சேனா என பலர் எப்படி காமன் வெல்த்தை எப்படி சிறப்பாக செய்வது என தீவிர டிஸ்கசனில் இருந்தார்கள்.

தயாநிதி : எந்திரன் இசை வெளியீட்டை எப்படி மலேசியாவில் நடத்தினமோ அதேபோல் காமன் வெல்த் போட்டி தொடக்க விழாவை சந்திரனில் நடத்துவோம்.

வைரமுத்து : பூமாலையில் தொடங்கிய உங்கள் பயணம் சந்திரன் வரை செல்லும் என்பது நான் அறிவேன் ஒரு தமிழனாக எமக்கு இது பெருமை.

ஷங்கர் : ரகுமானின் தீம் பாடல் ஏற்கனவே பிரபலமானதால் அதனை நாம் நடிகர்களை வைத்து படம் எடுத்து காமன் வெல்த்தில் அடிக்கடி ஒளிபரப்பலாம்.

கலாநிதி : இல்லை ஷங்கர் இது விளையாட்டுப்போட்டி அதனாலை நடிகர்களை வைத்து எடுத்தால் மூளையுள்ளவர்கள் கேள்வி கேட்பார்கள். சோ டோணி, சச்சின், சானியா போன்றவர்களை நடிகர்களுடன் இணைத்து நடிக்க வைத்துவிடலாம்,

ஷக்சேனா : சூப்பர் ஐடியா நான் இப்பவே அனைவருக்கும் கோல் போடுகின்றேன்.
நீங்கள் கால் போடமுன்னரே நான் வந்திட்டேன் எனக் கூறியபடி நடிகர் கருணாசும் டிஸ்கசனில் நுழைகின்றார்.

கலாநிதி : ஸ்ரேடியம் முழுவதும் எந்திரன், மற்றும் சன் பிக்சர்ஸின் மெஹா சீரியல்கள் விளம்பரப் பதாதைகள் வைக்கவேண்டும்,

ஷங்கர் : ஸ்ரேடியத்தை நம்ம தோட்டாதரணி செட்டாகவே போட்டுவிடுவார் , ஸ்ரேடியம் புதிதாக கட்டுவதை விட செலவு கொஞ்சம் அதிகமாகும்.

தயாநிதி: வீரர்கள் தங்கும் விடுதிகளிலுள்ள டிவிக்களில் எல்லாம் சன் டிவி, கேடிவி, சன் மியூசிக் மட்டும் தான் தெரியவேண்டும்.

கருணாஸ் : என்னுடயை திண்டுக்கல் சாரதியை உலகத்திலுள்ள அத்தனைபேரும் அப்போ பார்ப்பார்கள்.

ஷக்சேனா : ஒவ்வொரு போட்டியின் ஆரம்பத்தின் போதும் உலகத் தொலைகாட்சிகளில் முதன் முறையாக சன் பிக்சர்ஸ் வழங்கும் 100 மீற்றர் ஓட்டம், குத்துச் சண்டை என விளம்பரப்படுத்தவேண்டும்.

ஷங்கர் :சியர் லீடர்சாக நம்ம நமீதா, அசின், திரிஷா என அனைவரையும் ஆடவிடலாம்.

கலாநிதி : உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக என்ற வரிகள் இந்த நிகழ்வில் தான் நிஜமாகும்.

கலாநிதி : மைதானத்தைச் சுற்றி உள்ள விளம்பரப் பலகைகள் அனைத்திலும் எங்கள் தயாரிப்புகளான திண்டுக்கல் சாரதி, காதலில் விழுந்தேன் போன்ற மொக்கைக்ப் படங்களின் போஸ்டர்களை வைக்கவேண்டும்.

வைரமுத்து : வாவ் இதுதான் வியாபார யுக்தி, அப்படியே அந்தப் படங்களை ஆங்கிலத்தில் டப் செய்தால் இன்னமும் விளம்பரம் பெருகும்.

ஷக்சேனா : (மனதில்) அந்த மொக்கைகளை ஓட்ட நாம் பட்ட கஸ்டம் இவருக்கு எங்கே தெரியப்போகின்றது.

தயாநிதி : அப்படியென்றால் தங்கம் எல்லாம் நமக்குத் தான்.

ஷங்கர் : எனக்குப் புரியவில்லை.

தயாநிதி : அந்தப் படங்களைப் பார்க்கும் வெளிநாட்டினர் போட்டியும் வேண்டாம் ஒரு பதக்கமும் வேண்டாம் என தங்கள் நாட்டுக்கு ஓடிவிடுவார்கள்.

அனைவரும் அவரை கொல்லுவது போல் பார்த்தார்கள்.

இந்த விடயம் இப்படியே ரெட் ஜெயின்ட், கிளவுட் நைன் போன்ற தமிழ்ப் பட நிறுவனங்களுக்குப் பரவ அவர்களும் பரபரப்பாக தமக்குத் தான் போட்டிகளை நடத்தும் உரிமை வேண்டும் என கலைஞருக்கு போன் போடுகின்றார்கள்.

8 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

அதென்னவோ, வாசிக்காம ஓட்டுப் போடுறது உமக்கு மட்டும்தானய்யா.. வாழ்க வளர்க

Subankan சொல்வது:

கலக்கல் மாம்ஸ், நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் டச் :)

கன்கொன் || Kangon சொல்வது:

:D :D :D

போட்டுத் தாக்கிப் போட்டியள்.
கலைஞர் மேல இருக்கிற 'காண்ட்'ம் விளங்குது. :D

இடையில் கருணாஸையும், திண்டுக்கல் சாரதியையும் தான் பாவம் போட்டுத் தாக்கிவிட்டீர்கள். ;-)

anuthinan சொல்வது:

சான்ஸ்சே இல்லை அண்ணா!!! உங்களை தவிர ஒருவர் இப்படி சிந்திக்க...

நான் ரசித்த இடங்கள்...

//ஸ்ரேடியம் முழுவதும் எந்திரன், மற்றும் சன் பிக்சர்ஸின் மெஹா சீரியல்கள் விளம்பரப் பதாதைகள் வைக்கவேண்டும்//

//தயாநிதி: வீரர்கள் தங்கும் விடுதிகளிலுள்ள டிவிக்களில் எல்லாம் சன் டிவி, கேடிவி, சன் மியூசிக் மட்டும் தான் தெரியவேண்டும்.

கருணாஸ் : என்னுடயை திண்டுக்கல் சாரதியை உலகத்திலுள்ள அத்தனைபேரும் அப்போ பார்ப்பார்கள்//

என்னும் பல!!!! சூப்பர்!!!

Anonymous சொல்வது:

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post.html

கார்த்தி சொல்வது:

நீண்ட காலத்திற்கு பிறகு வலைப்பதிவுகள் வாசிக்க நேரம் இப்போதுதான் கிடைக்கிறது.

பல இடங்களில் உங்கள் விமர்சனத்தோடு நான் ஒத்துப்போகவில்லை.

// சிவாஜியில் உள்ள விறுவிறுப்பு இதில் சில இடங்களில் குறைவு என்று தான் சொல்லவேண்டும்.

சிவாஜியில் எங்கய்யா விறுவிறுப்பு இருந்தது. ஏற்கனவெ அரச்ச கதைதானே அது. படம் தொடங்கினோனயே விளங்கிட்டுதே இதான் கதையெண்டு.

// பிற்பாதியில் சில இடத்திலும் கத்தரி வைத்திருந்தார் படம் தொய்வில்லாமல் போயிருக்கும்.
ஏற்கொள்கிறேன். பிற்பாதி கொஞ்சம் தொய்வுதான்.


// சாதாரண ரசிகர்களுக்கு - பொழுது போக்குப் படம்
பாத்த ஆக்களெல்லாம் சூப்பர் படம் எண்டுதானே சொல்கிறார்கள்.

ஷஹன்ஷா சொல்வது:

கலக்கீட்டீங்க போங்க....

"உழவன்" "Uzhavan" சொல்வது:

நடந்தாலும் நடக்கும் :-))))