புதிய வேலை கிடைத்த பதிவர்கள்.

அண்மைக்காலமாக நான் உட்பட சில இலங்கைப் பதிவர்கள் அடிக்கடி பதிவு எழுதாமல் ஓய்வில் இருக்கின்றார்கள். இதற்கான காரணம் என்ன என அறிய அவர்களை ரகசியமாக கண்காணித்ததில் அனைவரும் புதிய கால்பந்தாட்ட அணி ஒன்றிற்கு பயிற்சியாளராகச் செல்ல விண்ணப்பித்திருக்கின்றார்களாம்.

கால்ப்பந்தில் எத்தனை சிக்ஸ் அடிப்பார்கள் எத்தனை விக்கெட் என கால்பந்தை அக்குவேறு ஆணி வேறாக அறிந்த கனககோபி சில நாட்களாக கூரே பார்க்கில் உடற்பயிற்சியுடன் ஓட்டப் பயிற்சியும் செய்வதால் அந்தப் பகுதியே அதிர்வதாக செய்திகள் கசிகின்றன.

அதே நேரம் இந்தப் பயிற்சியாளருக்கான சகல தகுதிகளும் தனக்குத் தான் இருக்கின்றது என சுபாங்கன் தொடை தட்டி சுகததாச ஸ்டேடியத்தில் அதிதீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். ஸ்டேடியம் தனக்குப் பக்கத்தில் இருப்பதால் தனக்குத் தான் வாய்ப்புகள் அதிகம் என சுபாங்கன் நினைத்துவிட்டார்.

பாடசாலைக் காலங்களில் பாடசாலை அணிக்காக விளையாடிய ஆதிரை ரூபியுடன் பிசியாக இருப்பதால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கமுடியாமல் வருந்தினாலும் தன் பங்குக்கு ஒரு நீலக் கலர் விண்ணப்பத்தை அனுப்பியிருப்பதாகவும் தனக்கு உதவியாளராக புல்லட்டை இணைக்கும் படி வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் புல்லட்டிற்க்கு எந்த விளையாட்டும் தெரியாது என கெளபாய் தன் பாணியில் அறிக்கை விட்டுள்ளார்.

கண்டியில் உள்ள மலைகளில் நன்கு ஓடி ஆடிப் பயிற்சி செய்த யோகா இந்த வேலைக்காக தான் எந்த நாட்டிற்கும் செல்லத் தயார் என்றும் அத்துடன் இந்தப் பயிற்சிகளுக்காக தான் பல காலம் நூடுல்ஸ் சாப்பிடவில்லை என்றும் கூறியிருப்பதுடன் இந்தப் பதவிற்காக தான் எத்தனை காலமும் இருக்கிறதற்க்கு தயார் என அறிவித்துள்ளார்.

வரும் 18ந்திகதி இளைய தளபதியின் வேட்டைக்காரன் வெளிவருவதால் தன்னால் இந்தப் பதவிற்க்கு விண்ணப்பிக்கமுடியாது என்றும் தனக்காக தன்னுடைய ரசிகர் மருதமூரானை தான் சிபாரிசு செய்வதாக சதீஷ் அறிக்கைவிட்டிருந்தாலும் இந்த அணியில் சில தமிழ்ப் பெண்கள் இருப்பது தனக்கு ஒத்துவராது என்பதால் மருதமூரான் விண்ணப்பிக்க மறுத்துவிட்டார்.

இதே நேரம் கலாச்சார ஆடைகளுடன் இவர்கள் பயிற்சி எடுக்க தயார் என்றால் தான் பயிற்சி கொடுக்கத் தயார் என சந்ரு அறிவித்திருந்தாலும் சந்ருவின் முடிவு அவரின் ரசிகர்களின் கைகளில் தான் உள்ளது.

இதே நேரம் இந்த விடயத்தைக் கேள்விப்பட்ட லோஷன் இதற்கெல்லாம் நான் தான் பொருத்தமானவர் என நினைத்தபடி கனககோபியுடன் கூரே பார்க்கில் ஓடுகின்றாராம். ஒரே நேரத்தில் இரண்டு பூகம்பம் என வெள்ளவத்தைவாசிகள் தெரிவிக்கின்றார்கள்.

இவர்களை விட இன்னும் பலர் விண்ணப்பிக்க‌ முயன்றுகொண்டிருந்தாலும் வந்திக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதால் போட்டியில் இருந்து விலகிவிட்டதாக கடுகதிச் செய்திகள் தெரிவித்தாலும் வந்தி விசாப் பிள்ளையாருக்கு விசேட பூசை செய்யப்போகின்றாராம்.

இவர்கள் எல்லாம் போட்டி போட்டு விண்ணப்பிக்கும் பதவி எதற்க்குத் தெரியுமா? கீழே உள்ள படத்தில் இருக்கும் பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளர் தேவையாம். விரும்பினால் நீங்களும் விண்ணப்பிக்கலாம்.டிஸ்கி: அண்மைக் காலமாக எங்கள் பதிவுலகம் அமைதியாக இருப்பதால் அவர்களை உசாராக்கவே இந்தப் பதிவு. எவரையும் புண்படுத்தவல்லை.இந்தப் பதிவு நகைச்சுவைக்காகவே ஒழிய வேறில்லை. 18+ பின்னூட்டங்கள் வந்தால் நான் பொறுப்பில்லை.

39 கருத்துக் கூறியவர்கள்:

Subankan சொல்வது:

//அதே நேரம் இந்தப் பயிற்சியாளருக்கான சகல தகுதிகளும் தனக்குத் தான் இருக்கின்றது என சுபாங்கன் தொடை தட்டி சுகததாச ஸ்டேடியத்தில் அதிதீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். ஸ்டேடியம் தனக்குப் பக்கத்தில் இருப்பதால் தனக்குத் தான் வாய்ப்புகள் அதிகம் என சுபாங்கன் நினைத்துவிட்டார்//

இந்த வேலைக்கு ஏற்கனவே சுபாங்கன் தெரிவுசெய்யப்பட்டுவிட்டார். இதை அறிவிக்குமுகமாக நேற்று மாலை சுகததாச ஸ்டேடியத்தில் வாணவேடிக்கைகளும் நடாத்தப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இதைக்கொண்டாடுமுகமாகவே அவர் இன்று சரக்குடன் வந்திருக்கிறார்.

என்.கே.அஷோக்பரன் சொல்வது:

;-)

Unknown சொல்வது:

//கால்ப்பந்தில் எத்தனை சிக்ஸ் அடிப்பார்கள் எத்தனை விக்கெட் என கால்பந்தை அக்குவேறு ஆணி வேறாக அறிந்த கனககோபி சில நாட்களாக கூரே பார்க்கில் உடற்பயிற்சியுடன் ஓட்டப் பயிற்சியும் செய்வதால் அந்தப் பகுதியே அதிர்வதாக செய்திகள் கசிகின்றன. //

ஹி ஹி.....//பாடசாலைக் காலங்களில் பாடசாலை அணிக்காக விளையாடிய ஆதிரை ரூபியுடன் பிசியாக இருப்பதால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கமுடியாமல் வருந்தினாலும் தன் பங்குக்கு ஒரு நீலக் கலர் விண்ணப்பத்தை அனுப்பியிருப்பதாகவும்//

ஓம் ஓம்.... அவர் பயங்கரமா ரூபியோட பிசி.... நீலர்க்கலர் இல அனுப்ப வாய்ப்புகள் உள்ளன தான்...


//சில தமிழ்ப் பெண்கள் இருப்பது தனக்கு ஒத்துவராது என்பதால் மருதமூரான் விண்ணப்பிக்க மறுத்துவிட்டார்.//
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே.... ஹா ஹா.....


//இதே நேரம் கலாச்சார ஆடைகளுடன் இவர்கள் பயிற்சி எடுக்க தயார் என்றால் தான் பயிற்சி கொடுக்கத் தயார் என சந்ரு//

இது தான் முதற்தரம்....
ஹா ஹா....


//இதே நேரம் இந்த விடயத்தைக் கேள்விப்பட்ட லோஷன் இதற்கெல்லாம் நான் தான் பொருத்தமானவர் என நினைத்தபடி கனககோபியுடன் கூரே பார்க்கில் ஓடுகின்றாராம். ஒரே நேரத்தில் இரண்டு பூகம்பம் என வெள்ளவத்தைவாசிகள் தெரிவிக்கின்றார்கள். //

இருக்கலாம் இருக்கலாம்...
நடக்கக்கூடியது தான்....வந்திக்கோ?
கதை கோவிந்தா தான்...
அவர் வேற ஏதும் சொல்லிக்குடுத்திரப் போறார்....

Unknown சொல்வது:

//இதை அறிவிக்குமுகமாக நேற்று மாலை சுகததாச ஸ்டேடியத்தில் வாணவேடிக்கைகளும் நடாத்தப்பட்டதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். //

அது கோபிக்கு நேற்று புதுசா பொன்னர் சங்கத்தில பிரசாரச் செயலாளர் பதவி கிடைச்சதுக்குத் தான்...
நீங்கள் தப்பா நினைச்சிற்றியள்....

Unknown சொல்வது:

//டிஸ்கி: அண்மைக் காலமாக எங்கள் பதிவுலகம் அமைதியாக இருப்பதால் அவர்களை உசாராக்கவே இந்தப் பதிவு. எவரையும் புண்படுத்தவல்லை.//

என்ன கொடுமை இது...
எல்லாம் நம்மவர்கள் தான்....
நம்மவர்கள் யார் கோவிக்கப் போகிறார்கள்...?

புல்லட் சொல்வது:

வந்திக்கே சான்ஸ் அதிகம் .. அவரால் பெண்பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தும் நேராது என்ற ஒரே காரணம்தான்..

Unknown சொல்வது:

// புல்லட் said...
வந்திக்கே சான்ஸ் அதிகம் .. அவரால் பெண்பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தும் நேராது என்ற ஒரே காரணம்தான்..//

வந்தி டம்மி எண்டுறியளோ?

புல்லட் சொல்வது:

”எக்பைரியான பொருட்கள் ஆபத்தற்றவை”

Subankan சொல்வது:

//புல்லட் said...
வந்திக்கே சான்ஸ் அதிகம் .. அவரால் பெண்பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தும் நேராது என்ற ஒரே காரணம்தான்//

வந்தி அண்ணாவிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு இடப்பட்ட இந்தப்பின்னூட்டத்தை நான் வன்மையாக்க் கண்டிக்கிறேன்.

புல்லட் சொல்வது:

அது சரி படத்திலிருக்கும் எந்தப்பந்தை வைத்து விளையாடுவார்கள்?

Subankan சொல்வது:

// புல்லட் said...
அது சரி படத்திலிருக்கும் எந்தப்பந்தை வைத்து விளையாடுவார்கள்?
//

வலதுபக்கக் கீழ் மூலை

Unknown சொல்வது:

//புல்லட் said...
”எக்பைரியான பொருட்கள் ஆபத்தற்றவை//
இது எந்த மொழி?

Bavan சொல்வது:

.......அனைவருக்கும் ஒரு வருத்தமான செய்தி......

அந்த உதைபந்துநடன பயிற்சியாளராக பவன் தேர்வுசெய்யப்பட்டார்.....

பராக்..
பராக்..
பராக்..

Anonymous சொல்வது:

// Subankan said...

வலதுபக்கக் கீழ் மூலை//

சுபாங்கன் தமிழை எழுதும்போது கவனமாக எழுதவும் நல்ல காலம் சுழிபோட்டுவிட்டீர்கள்

Anonymous சொல்வது:

// Subankan said...

வலதுபக்கக் கீழ் மூலை//

சுபாங்கன் தமிழை எழுதும்போது கவனமாக எழுதவும் நல்ல காலம் சுழிபோட்டுவிட்டீர்கள்

புல்லட் சொல்வது:

expiry :காலாவதி

பந்துக்கு காற்று மிக அதிகமாக அடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பந்து சிலிக்கனில் செய்யக்கட்டுள்ளது.. ஆகவே கை கால் பட்டால் பிரிந்து விடும்.. கவனம்..

Subankan சொல்வது:

//Anonymous சொல்வது:
// Subankan said...

வலதுபக்கக் கீழ் மூலை//

சுபாங்கன் தமிழை எழுதும்போது கவனமாக எழுதவும் நல்ல காலம் சுழிபோட்டுவிட்டீர்கள்
//

ஆகா, கொஞ்சம் அசந்தாலும் ஆப்பு வருகுதே

புல்லட் சொல்வது:

வந்தி மாமா! Hand ball foul இல்லைதானே?

Paheerathan சொல்வது:

யாரப்பா அது என்ட டீமுக்கு கோச்சா வர அடிபிடிபடுறது ?, வந்தி ஏதோ பழைய பேப்பர பாத்துட்டார் போல, நான் ஏற்க்கனவே அங்க விளையாடிட்டு இருக்கன், I mean விளையாட்டு சொல்லிகுடுத்திட்டு இருக்கன்.

Unknown சொல்வது:

//புல்லட் said...
expiry :காலாவதி//

ஓ! எக்ஸ்பைரி....
நீங்கள் 'ஸ்' ஐ தவற்றிவிட்டதால் என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை... :)


@ சுபாங்கன்....
தப்பி விட்டீர்கள் போல?
எப்பிடியெல்லாம் பின்னூட்டம் போடுகிறார்கள் என?

maruthamooran சொல்வது:

////வரும் 18ந்திகதி இளைய தளபதியின் வேட்டைக்காரன் வெளிவருவதால் தன்னால் இந்தப் பதவிற்க்கு விண்ணப்பிக்கமுடியாது என்றும் தனக்காக தன்னுடைய ரசிகர் மருதமூரானை தான் சிபாரிசு செய்வதாக சதீஷ் அறிக்கைவிட்டிருந்தாலும் இந்த அணியில் சில தமிழ்ப் பெண்கள் இருப்பது தனக்கு ஒத்துவராது என்பதால் மருதமூரான் விண்ணப்பிக்க மறுத்துவிட்டார்.////

அடடேய் அடேய் அடடெய்ய்;;;;;;;;

Unknown சொல்வது:

/ Paheerathan said...
யாரப்பா அது என்ட டீமுக்கு கோச்சா வர அடிபிடிபடுறது ?, வந்தி ஏதோ பழைய பேப்பர பாத்துட்டார் போல, நான் ஏற்க்கனவே அங்க விளையாடிட்டு இருக்கன், I mean விளையாட்டு சொல்லிகுடுத்திட்டு இருக்கன் //

இரவு நித்திரை கொள்ளமா இப்ப தான் நித்திரை கொண்டு எழும்பினீங்க போல?
நித்திரையில கண்டதுக்குப் பேர் கனவு.....
'பகற் கனவு....'

Bavan சொல்வது:

//// Subankan said...
//Anonymous சொல்வது:
// Subankan said...

வலதுபக்கக் கீழ் மூலை//

சுபாங்கன் தமிழை எழுதும்போது கவனமாக எழுதவும் நல்ல காலம் சுழிபோட்டுவிட்டீர்கள்
//

ஆகா, கொஞ்சம் அசந்தாலும் ஆப்பு வருகுதே////

அசந்தா அடிக்கிறது அவங்க பாலிசி....
அசராம அடிக்கிறது எங்க பாலிசி...////புல்லட் said...
expiry :காலாவதி

பந்துக்கு காற்று மிக அதிகமாக அடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பந்து சிலிக்கனில் செய்யக்கட்டுள்ளது.. ஆகவே கை கால் பட்டால் பிரிந்து விடும்.. கவனம்..////

நல்லா அடிக்குறீங்க.....
காற்று....:p

Bavan சொல்வது:

////கனககோபி said...
/ Paheerathan said...
யாரப்பா அது என்ட டீமுக்கு கோச்சா வர அடிபிடிபடுறது ?, வந்தி ஏதோ பழைய பேப்பர பாத்துட்டார் போல, நான் ஏற்க்கனவே அங்க விளையாடிட்டு இருக்கன், I mean விளையாட்டு சொல்லிகுடுத்திட்டு இருக்கன் //

இரவு நித்திரை கொள்ளமா இப்ப தான் நித்திரை கொண்டு எழும்பினீங்க போல?
நித்திரையில கண்டதுக்குப் பேர் கனவு.....
'பகற் கனவு....'////

அதுசரி... பிரதான கோச் தெரிவுசெய்யப்பட்டுவிட்டார்(அடியேன் தான்)

இனி நீங்கள் sub coach பதவிக்கு தமுயற்சி செய்தால் நல்லது..ஹீ..ஹீ..

Unknown சொல்வது:

// Bavan said...

அதுசரி... பிரதான கோச் தெரிவுசெய்யப்பட்டுவிட்டார்(அடியேன் தான்)

இனி நீங்கள் sub coach பதவிக்கு தமுயற்சி செய்தால் நல்லது..ஹீ..ஹீ..//

அட அட அட....
அடுத்தவர் நித்திரை வெறியில வந்து நிக்கிறார்......

ARV Loshan சொல்வது:

அடப் பாவி வந்தி.. இன்று பதிவு போடமுடியாது.. பிசி. என்றெல்லாம் கதை விட்டிட்டு இதுதான் வேலையா?
நான் நீங்கள் போட்ட படம் பார்த்ததை சொல்லவில்லை.. பதிவு போட்டதை சொன்னேன்..

;)

நான் வர்றதுக்குள்ளே இரு டசின் பதிவுகளா?

பையன்கள் ரொம்ப உசார் தான்...

நானும் புல்லட்டும் ரிஜெக்டெட்.. அழகானவர்கள் என்பதால் மங்கையர் கவனம் திசை திரும்பிவிடும் என்று..

புல்லட் வந்தி பற்றி சொன்னதை கண்ணைமூடிக் கொண்டு கரகோஷம் எழுப்பி ஆமோதிக்கிறேன்..

ARV Loshan சொல்வது:

ஆபத்தில்லாத அப்பாவிகள், கால்பந்து மட்டும் விளையாடத் தெரிந்தவர்கள் பயிற்சியாளராக செல்லட்டும்.. ;)

தனிப்பட்ட ஸ்பெஷல் கோச்சிங் (கால்பந்தில் அல்ல) வேண்டுமானால் ஹீ ஹீ.. என்னை அணுகலாம்..

அதுசரி எப்பவும் பிசியான புல்லட்டை உசார்ப்படுத்திய வந்திக்கு ஸ்பெஷலாக ஒரு பந்து.. கால்பந்து தான்.. வழங்கப்படுகிறது..

ARV Loshan சொல்வது:

ஆபத்தில்லாத அப்பாவிகள், கால்பந்து மட்டும் விளையாடத் தெரிந்தவர்கள் பயிற்சியாளராக செல்லட்டும்.. ;)

தனிப்பட்ட ஸ்பெஷல் கோச்சிங் (கால்பந்தில் அல்ல) வேண்டுமானால் ஹீ ஹீ.. என்னை அணுகலாம்..

அதுசரி எப்பவும் பிசியான புல்லட்டை உசார்ப்படுத்திய வந்திக்கு ஸ்பெஷலாக ஒரு பந்து.. கால்பந்து தான்.. வழங்கப்படுகிறது..

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

///கண்டியில் உள்ள மலைகளில் நன்கு ஓடி ஆடிப் பயிற்சி செய்த யோகா இந்த வேலைக்காக தான் எந்த நாட்டிற்கும் செல்லத் தயார் என்றும் அத்துடன் இந்தப் பயிற்சிகளுக்காக தான் பல காலம் நூடுல்ஸ் சாப்பிடவில்லை என்றும் கூறியிருப்பதுடன் இந்தப் பதவிற்காக தான் எத்தனை காலமும் இருக்கிறதற்க்கு தயார் என அறிவித்துள்ளார்/////

இந்த விடயம் தெரிந்தோ என்னவோ எங்க நிறுவனத்தில நிறைய ஆணிகளை கொடுத்து பிடுங்கி கொண்டிரு என சொல்லி விட்டார்கள், ஆகையால் நான் கோச் போட்டியிலிருந்து விலகுகிறேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்,

தெரியாத பிசாசை விட தெரிஞ்ச பேயே மேல் என்றதால், நான் இப்ப கோச் ஆக இருக்கும் அணியிலேயே இருக்கிறேன்..

சி தயாளன் சொல்வது:

கால்பந்தாட்டத்தில் சிக்ஸரா...? ஆகா .

Unknown சொல்வது:

//நானும் புல்லட்டும் ரிஜெக்டெட்.. அழகானவர்கள் என்பதால் மங்கையர் கவனம் திசை திரும்பிவிடும் என்று.. //

அச்சும் அச்சும்....
கொழும்புக் காலநிலை சரியில்லை வந்தியண்ணா...
ஒரே தும்மலாக உள்ளது....

தமிழன்-கறுப்பி... சொல்வது:

:)

தமிழன்-கறுப்பி... சொல்வது:

:))

ஊர்சுற்றி சொல்வது:

:)

thiyaa சொல்வது:

m...

Jude சொல்வது:

எல்லோருக்கும் ஒரு நல்ல செய்தி!
பதிவுக்கும் இந்த comment க்கும் சம்பந்தமே இல்ல !
நம்ம தலதா( அதான் நம்ம லோஷன் அண்ணா) வாய்ஸ் எங்கோ எல்லாம் கேட்க போவுது பாரு, அதுவும் உங்க மொபைல் போன்ல....

Wait and see tomorrow!!!

Dial 556 tomorrow from your Dialog mobile tomorrow for more info!

Congratz Loshan anna!

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சொல்வது:

அன்பின் பதிவர்,

இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - அமைப்புக் குழு

மயில்வாகனம் செந்தூரன். சொல்வது:

ஆஹா!!!!!!! இதைப்பற்றிய விஷயம் எனக்குத் தெரியாமல் போச்சுதே என்று நான் சொல்லல்ல பக்கத்தில இருக்கிற சக பதிவர் சொல்லிறார்..... பெயர் சொல்லமாட்டன்..... ஹி..ஹி..ஹி...

Admin சொல்வது:

வந்தி அண்ணா எங்களிடம் சொல்லாமல் நீங்கள்தான் போய்விட்டதாக கோபியும், சுபாங்கனும் புலம்பிக் கொண்டிருப்பதாக அறிந்தேன். உண்மையா?