எதிரிவரும் 26ந்திகதி சிங்க ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் சனீஸ்வரன் நுழைகின்றார். இந்தப் பெயர்ச்சியினால் நம்ம பதிவர்கள் சிலருக்கு என்ன பலாபலன்கள் ஏற்படும் என குசும்பன் ஸ்டைல் பதிவு.
மேடம் :
என்றைக்கும் எதற்க்கும் துணிந்து செல்லும் மேட ராசி அன்பர்களே, இதுவரை 5 ஆம் வீட்டில் இருந்த சனிபகவான் 6ஆம் வீட்டில் நுழைகின்றார்.
பதிவர்களின் பலன்:
கேபிள் சங்கர் : திரையுலகினரின் எதிர்ப்பைச் சம்பாதித்தாலும், கோடம்பாக்கம் அம்மன் அருளால் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல விலகும்.
டொன்லீ : இணையத்தில் பெண் தேடும் விபரீத முயற்சிகளை நிறுத்தவேண்டும். டிவிட்டர் முருகன் அருளால் நல்ல வரன் கிடைக்கும்.
ஆதிரை : இரு நாட்கள் முன்னரே காகம் எச்சம் மூலம் உங்கள் சனி அகன்றுவிட்டது, வெள்ளவத்தை வீதிகளில் தனித்து திரிவதை தவிர்க்கவும். விசாப் பிள்ளையாரை வணங்கிவந்தால் சகல செளபாக்கியமும் கிட்டும்.
இடபம் :
கற்பனைக் கனவுகளில் மிதக்கும் இடப ராசி அன்பர்களே 4 ஆம் வீட்டில் அமர்ந்து உங்களை படாத பாடு படுத்திய சனிபகவான் இனி 5 ஆம் வீட்டில் அமர்ந்து நற்பலன்களைக் கொடுப்பார்.
பதிவர்களின் பலன்:
கானா பிரபா : வெளிநாட்டு யோகம் உண்டு, உங்கள் பாட்டுப் பாடும் திறன் மேலும் வளரும், நேரடி ஒளிபரப்புகள் மூலம் நண்பர்களின் எதிர்ப்பைப் பெற்றாலும் ட்விட்டர் முருகன் அருளால் அவை விலகிவிடும்.
பால்குடி : விருந்துபசாரம் செய்வதில் பேருவகை கொள்ளும் நீங்கள், பழைய நண்பர்கள் சிலரின் கூட்டினால் பீர்குடி என பேரெடுக்க நேரலாம், புட்டளை பிள்ளையாரின் அருளினால் பிரச்சனைகள் நீங்கிவிடும்.
யோகா : நீங்கள் எழுதும் கவிதைகளினால் அரசியல் சிக்கல்களில் சிக்கும் ஆபத்திருந்தாலும் இரம்பொடை ஆஞ்சநேயர் அருளால் நல்லவையே நடக்கும்.
மிதுனம் :
மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றிப் பேசும் மிதுன ராசி நண்பர்களே இதுவரை 3ஆம் வீட்டில் அமர்ந்து தைரியத்தை கொடுத்த சனிபகவான் இனி 4ஆம் வீட்டில் அமர்ந்து கொஞ்சம் அல்லல்படுத்துவார்.
பதிவர்களின் பலன்:
புல்லட் : சிறுவர்களினால் தொல்லை, மரண பயம் ஏற்படும், சிரிப்பாக பேசினாலும் சீரியசானவர் நீங்கள் என பலர் உணர்வார்கள். இரவில் பஸ் பயணத்தைத் தவிர்க்கவும். பேஸ்புக் விநாயகரின் அருள் இருப்பதால் இளம் பெண்களின் நட்பு கிடைக்கும்.
கெளபாய் மது : பஸ் பயணங்களில் பெண்களால் தொல்லை ஏற்படும். கூகுள் குழுமங்களில் அரட்டை அடிப்பதை குறைக்கவும், அந்நியன் கெட்டப்பில் இருந்து அம்பி கெட்டப்புக்கு மாறினால் காதல் கைகூடும்.
டயானா: சில நாட்கள் காணாமல் போயிருந்த உங்களுக்கு, இனி சந்தோசமான நாட்கள் கெமிஸ்ரி கைகொடுக்கும், பேஸ்புக்கில் நண்பர்களின் எண்ணிக்கையால் கின்னஸ் சாதனை புரியும் வாய்ப்பிருக்கிறது.
கடகம் :
அடக்கத்திற்க்குப் பெயர் போன கடகராசி நண்பர்களே இதுவரை பாதச் சனியாக உங்களை அலைக்கழித்த சனிபகவான் இனி 3 ஆம் வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களைக் கொடுப்பார்.
பதிவர்களின் பலன்:
ஆயில்யன் : புதிய நண்பர்கள் ட்விட்டர் மூலமும் , பிந்தொடர்பவர்கள் மூலமும் கிடைக்கலாம். எதிர்பார்த்திருக்கும் விடயங்கள் விரைவில் நடக்கும்.
மு.மயூரன் : இளைஞர் என்ற நினைப்பு நீங்கி திருமண யோகம் கிட்டிவிட்டது, விசைப்பலகைகளால் தொல்லை ஏற்பட்டாலும், லினக்ஸ் சிவன் அருளால் அனைத்தும் விலகுவிடும்.
மாயா : இதுவரை உங்களை விட்டுப் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். புதுப் பொலிவுடன் உங்கள் ஆக்கங்களை மீண்டும் தொடர்வீர்கள். வெம்பிளி முருகனை வழிபட்டு வந்தால் சகல யோகமும் கிட்டும்.
சிங்கம் :
எதற்கும் அஞ்சாத சிங்க ராசி அன்பர்களே இதுவரை உங்களை ஜென்மச் சனியாக ஆட்டிப் படைத்த சனிபகவான் 2 ஆம் வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களைக் கொடுப்பார்.
பதிவர்களின் பலன்:
சதீஸ் : அனானிகளின் அடிவாங்கிய நீங்கள் இனி அனைவரிடமும் ஒற்றுமையாக இருப்பீர்கள். நவா, நியூ ஒலிம்பியா தியேட்டர்கள் பக்கம் அடிக்கடி செல்லவேண்டாம். விரைவில் அரசியல் வெற்றிச் செய்தி வந்துசேரும்.
தூயா : இதுவரை காலமும் பதிவுகளில் ஏற்பட்ட தேக்கம் நீங்கி புதிய புதிய சமையல் குறிப்புகளுடன் நண்பர்களுக்கு மீண்டும் விசப் பரீட்சை வைப்பீர்கள். பதிவுலகின் பங்காளிகள் உங்களைக் கலாய்ப்பார்கள், அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
சயந்தன் : யூடுயூப்பில் உங்கள் நடனங்களை வெளியிட்டு விசப் பரீட்சைகளில் ஈடுபட வேண்டாம். வலைகளில் உங்கள் படங்கள் வெளியாவதால் சினிமா வாய்ப்புகள் வரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. ட்விட்டர் கும்மிகளைக் குறைத்தால் சிறந்த எதிர்காலம் இருக்கின்றது.
கன்னி :
பெண்களின் மனதைக் கவர்ந்த கன்னி ராசி நண்பர்களே இதுவரை 12 ஆம்வீட்டில் இருந்தபடி உங்களை ஆட்டிப் படைத்த சனி பகவான் இனி ஜென்மச் சனியாக நல்ல பலன்களைத் தருவார்.
பதிவர்களின் பலன்:
லோஷன் : இளம் பெண்களின் கதாநாயகனாக இருந்துவந்த நீங்கள் உங்கள் உடல் அமைப்பின் மூலம் அந்த இடத்தில் இருந்து இறங்கிவிடுவீர்கள். உடற்பயிற்சி செய்யவும், புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். கிரிக்கெட் முடிவுகள் கடுப்பைக் கொடுக்கும், கெத்தாராமா சிவனை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
லக்கி லுக் : மடிப்பாக்கத்தின் முடிசூடான மன்னனாகிய நீங்கள் காண்டு கஜேந்திரன் போன்ற நட்புகளினால் கெட்ட பெயர் பெறக்கூடும். பரங்கிமலை ஜோதியைத் தவிர்க்கவும், தண்ணியில் உங்களுக்கு கண்டம். தளபதி அருளினால் அரசியல் எதிர்காலம் உண்டு.
சேரன் : வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கவும், அது முடியாவிட்டால் கேலாங்க் பக்கம் செல்லவேண்டாம். உடற்பயிற்சி செய்துவரவும். பெயர் குழப்பம் ஏற்பட்டாலும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
டிஸ்கி: இது சும்மா நகைச்சுவைக்காக எழுதிய பலனே ஒழிய உண்மையான பலன்கள் இல்லை. திரு.சுப்பையா வாத்தியாரும், நண்பர்களும் பொறுத்தருள்க.
உங்கள் பெயர் இல்லை எனச் சந்தோசப் படவேண்டாம், அடுத்த 6 ராசிக்காரர்களினதும் பலன் சில மணித்தியாலத்தில்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
18 hours ago
29 கருத்துக் கூறியவர்கள்:
ஜோதிடமாமணி வந்தி, நல்லா இருக்கு.. :)
அருமையான பலன்கள்.. அப்படியே எங்கள் நண்பர் வந்தியத்தேவன் என்ற மூத்த,சிரேஷ்ட,மஜா பதிவருக்கு எப்போது திருமண யோகம் என்று கணித்து சொன்னால் நல்லா இருக்கும்.. ;)
நிறையப் பலன்களில் கடந்த காலமும், சில பலன்களில் உங்கள் எதிர்காலமும் தெரியுது போல.. ;)
விளங்குதா?
அது சரி.. உங்கட பலனைப் பாத்தீங்களா முதல்ல.. வீண்பொல்லாப்பு வம்மைப்த் தரும் என்று வந்திருக்குமே.. என்ன செய்யப் போகிறீங்க..
மற்றது இதுவரை தாலி ஸ்தானமாதிய களஸ்திரதில் இருந்து உங்களை ஆட்டிவந்த சனி இப்போது ஜென்ம சனியாக மறுவதால் உங்களுக்கு எதிர்பாராத சந்தோச நிகழ்வுகளும் நடக்கக் கூடும்..
/
ஆயில்யன் : புதிய நண்பர்கள் ட்விட்டர் மூலமும் , பிந்தொடர்பவர்கள் மூலமும் கிடைக்கலாம். எதிர்பார்த்திருக்கும் விடயங்கள் விரைவில் நடக்கும்./
ஆஹா சூப்பரூ ! வந்தியதேவனும் கானா பிரபாவும் ஆளுக்கொரு 1000 டாலர் கொடுக்கணும் ரொம்ப நாளா ஒரு எதிர்ப்பார்ப்பு நடந்துரும்ங்களா? :)))
:)
வந்தியத்தேவன் - பதிவர்கள், டிவிட்டர் தொடர்பவர்கள் ஆகியொர் எதிர்பாக மாற கூடிய அபாயம் இருக்கிறது. கந்தசாமியானந்தா சுவாமியை தினமும் போற்றி பாடுதல் நல்ல பயனை தரும்.
இதை போட்டிருக்கலாமே?
joodhidam nalla irukku..:)
//இடபம் :
கற்பனைக் கனவுகளில் மிதக்கும் இடப ராசி அன்பர்களே 4 ஆம் வீட்டில் அமர்ந்து உங்களை படாத பாடு படுத்திய சனிபகவான் இனி 5 ஆம் வீட்டில் அமர்ந்து நற்பலன்களைக் கொடுப்பார்.//
அப்போ தப்பிவிட்டோம் போல
//லோஷன் : இளம் பெண்களின் கதாநாயகனாக இருந்துவந்த நீங்கள் உங்கள் உடல் அமைப்பின் மூலம் அந்த இடத்தில் இருந்து இறங்கிவிடுவீர்கள். உடற்பயிற்சி செய்யவும், புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். கிரிக்கெட் முடிவுகள் கடுப்பைக் கொடுக்கும், கெத்தாராமா சிவனை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.//
கவலைப் படாதிங்க அண்ணா எல்லாம் சரியாயிடும் எப்பவும் நீங்க இளம் பெண்களின் கதாநாயகனாக இருக்கணும் என்று இறைவன வேண்டிக்கிறேன்.
haha!
:))
Good One
avvv yean intha k veri
//புல்லட் : சிறுவர்களினால் தொல்லை, மரண பயம் ஏற்படும், சிரிப்பாக பேசினாலும் சீரியசானவர் நீங்கள் என பலர் உணர்வார்கள். இரவில் பஸ் பயணத்தைத் தவிர்க்கவும். பேஸ்புக் விநாயகரின் அருள் இருப்பதால் இளம் பெண்களின் நட்பு கிடைக்கும். //
இது பதிவு...
ஆனால் இவை ஏற்கனவே நடந்துவிட்டதால் நீங்கள் மிகவும் மெதுவாகவே செயற்படுகிறீர்கள் என சுப்ரமணியம் அண்ணா சொல்லச் சொன்னார்.
Marriage resume என்று பதிவு போட்டதுக்காக எனக்கு கல்யாணம் என்று கதை கட்டி விட்டார்களே...:-))
சூப்பர் உட்டாலங்கடி சனி மாற்றப் பலன்கள்..
. வலைகளில் உங்கள் படங்கள் வெளியாவதால் சினிமா வாய்ப்புகள் வரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. //
அப்பிடியே எந்த நடிகை ஜோடியாக வருவா என்பதையும் கணித்துச் சொன்னால்... அது அசின் தமன்னா ஆட்களாக இருந்தால் ஆயிரத்து ஒரு அமெரிக்க டொலர்களை வெற்றிலையில் மடித்துத் தருவேன்.
சயந்தன் said...
. வலைகளில் உங்கள் படங்கள் வெளியாவதால் சினிமா வாய்ப்புகள் வரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. //
அப்பிடியே எந்த நடிகை ஜோடியாக வருவா என்பதையும் கணித்துச் சொன்னால்... அது அசின் தமன்னா ஆட்களாக இருந்தால் ஆயிரத்து ஒரு அமெரிக்க டொலர்களை வெற்றிலையில் மடித்துத் தருவேன்//
தற்செயலா கோவை சரளா,பறவை முனியம்மாவா இருந்தால்? ;) (அதுக்குத்தான் உங்களுக்கு சாத்தியம் அதிகம்)
லோசன்..
அசினோடு ஒரு அருவிக்கரையிலும் திரிசாவோடு எயார்போர்ட்டிலும் எடுத்த படங்களை வெளிவிட்டால்த்தான் அடங்குவீங்கள்... க்ர்ர்ர்ர்ர்ர்
சேரன்கிருஷ்>>
எங்க என்னுடைய பலனை காணவில்லையே என்று பார்த்தேன்.கலாங்கோடு தொடுத்துவிட்டுட்டீங்களே வந்தி. வீட்டுப்பக்கம் ஆட்டோக்கள் வந்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல.பதிவர்களுக்கு பலன் சொல்லி சனியனைப்பிடித்து பெனியனுக்குள் விட்டால் அதுக்கும் நாங்கள் பொறுப்பல்ல
நாங்கள் ஏற்கனவே அந்நியன் கெட்டப்பில இருந்து மாறிட்டமில்ல.. :)
அடி சக்கை... இன்னொரு பாகம் வேறயா. அப்ப எனக்கும் ஆப்பு இருக்கும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு அவசர வேண்டுகோள்.. வந்தி என்னுடைய ராசியை தவறாக குறிப்பிடடுள்ளதால் அந்த ராசிக்குரிய உங்கள் பெண்பிள்ளைகளின் ஜாதனக்குறிப்புகளை உடனடியானக அனுப்பவதை நிறுத்தவும்... என்னுடைய மெயில் எகௌண்ட்க்கு 3ஜிபி ப்ரீ ஸ்பேசில் இன்னும் 3 எம்பி மாத்திரமே மிச்சமாயுள்ளது..
அன்பின் புல்லட் உங்கள் ராசி எதுவெனக் குறிப்பிடவும் நீங்களும் பெண் தேடுகிறீர்கள் என உங்கள் பதிவுகள் பின்னூட்டங்களில் இருந்து விளங்கிக்கொள்ளகூடியதாக இருக்கிறது. ராசியைக் குறிப்பிட்டால் உங்களைத் தொடர்புகொள்ளமுடியும்.
//இரு நாட்கள் முன்னரே காகம் எச்சம் மூலம் உங்கள் சனி அகன்றுவிட்டது,
ஓ... அன்றைக்குத் தான் உங்களையும் வெள்ளவத்தையில் சந்தித்தேனல்லவா...?
நல்லாயிருக்கு!
கண்டினியூ பண்ணுங்க!
நடிகைகளின் ஆசி கிடைக்க இராசிக்கு சண்டை போடும் தாத்தாக்களுக்காக...
http://www.youtube.com/watch?v=rTWy7hOtWjE
மறக்காமல் நன்றி சயந்தன்
எப்பிடி முடியுது உங்களால??? ரூம் போட்டு யோசிச்சாலும் இப்படியெல்லாம் எழுத முடியாது ;)
வந்தியண்ணே, உங்களுக்கு எப்ப நேரம்? நான் என்ர ஓலையை ஒருக்கா உங்களிட்ட பாக்கோணும்...
Kikikiki, Periya Pangu Superb Raasi Palan..
ஹா ஹா ரெம்ப நல்லாயிருக்கே!:))
அண்ணே,
இப்பல்லாம் ஜோதியில அந்த மாதிரி படங்கள் போடுவதில்லை. தியேட்டர் கைமாறிப்போச்சுது. :)
// இதுவரை காலமும் பதிவுகளில் ஏற்பட்ட தேக்கம் நீங்கி புதிய புதிய சமையல் குறிப்புகளுடன் நண்பர்களுக்கு மீண்டும் விசப் பரீட்சை வைப்பீர்கள். பதிவுலகின் பங்காளிகள் உங்களைக் கலாய்ப்பார்கள், அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.//
ஹ ஹ ஹா,,,,,
// மாயா : இதுவரை உங்களை விட்டுப் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். புதுப் பொலிவுடன் உங்கள் ஆக்கங்களை மீண்டும் தொடர்வீர்கள். வெம்பிளி முருகனை வழிபட்டு வந்தால் சகல யோகமும் கிட்டும்.
//
நல்லது...
காணாமல் போன என் வலைப்பதிவு பற்றி வெற்றிலையில் மைபோட்டுச் சொல்ல முடியுமா ஜோதிடமாமணி வந்தி அவர்களே ?
Post a Comment