தமிழ்மணம் மனுத் தாக்கல்
தமிழ்மணத்தின் இந்தவருடத்திற்கான தமிழ்மணம் விருதுகள் அறிவிக்கப்பட்டு நானும் என்னுடைய 2 இடுகைகளை பரிந்துரைத்திருக்கின்றேன். சென்ற ஆண்டு விருதுக்கு அனுப்பிய என்னுடைய இரண்டு பதிவுகளும் முதல் 10 இடங்களுக்குள் வந்தபடியால் இந்த ஆண்டும் என்னுடைய பதிவுகள் இரண்டினை அனுப்பியுள்ளேன்.
விருது கிடைக்குதோ இல்லையோ நானும் போட்டியில் பங்குபற்றினான் என்ற ஆத்ம திருப்திக்காகவே இம்முறையும் பழம் தின்று கொட்டை போட்ட பிரபல, மூத்த பதிவர்களுடன் போட்டிக்கு வந்துள்ளேன். சினிமா, விளையாட்டு, நகைச்சுவை என இந்த வருடம் பல பதிவுகள் எழுதினாலும் போட்டிக்கு அனுப்பும் தரத்தில் உள்ள இரண்டு பதிவுகளை செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் மற்றும் அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவுகளில் போட்டிக்கு அனுப்பியிருக்கின்றேன்.
செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் வெடித்து கிளம்பிய புவனேஸ்வரியும், அடக்கி வாசித்த ஊடகங்களும் என்ற பதிவையும் அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவில் மாற்றான் மனை கவர்தல் - தகாமுறைத் துணைகவரல் என்ற பதிவினையும் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். பதிவுகள் உங்களைக் கவர்ந்தால் ஓட்டளியுங்கள். சிறப்பான படைப்புகளுக்கு ஓட்டளியுங்கள்.
தவறான விளம்பரம்
சில நாட்களுக்கு முன்னர் ஒரு பிளேட்டிற்கான விளம்பரத்தைத் தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்துபோனேன். இரண்டு அழகான இளம் பெண்கள் தமக்குள் பேசிக்கொள்கின்றார்கள். ஒருவர் சொல்கின்றார் தன்னுடைய காதலன் தாடியுடன் சவரம் செய்யாமல் வந்தால் தான் அவருடன் வெளியில் செல்லமாட்டேன் எனக்குச் செல்ல வெட்கமாக இருக்கின்றது, மற்றொருவரோ அவர் என்னுடைய வீட்டிற்க்கு வருவதாகச் சொல்லியுள்ளார் தாடி மீசையுடன் வந்தால் உள்ளே அனுமதிக்க மாட்டேன் இப்படி அந்த இரண்டு பெண்களும் தாடி, மீசையுடன் இருக்கும் ஆண்களை விரும்பவில்லை என்கின்றார்கள்.
அடுத்த காட்சியில் அவர்களின் காதலர்கள் மூன்று நாள் தாடி மீசையுடன் தங்களுக்குள் தொலைபேசியில் பேசிக்கொள்கின்றார்கள். தங்கள் காதலிகள் தங்களை இந்தக் கோலத்தில் விரும்பவில்லை எனவும் ஆகவே தாம் சவரம் செய்துகொண்டு செல்லவேண்டும் எனவும் அதற்க்குச் சிறந்த பிளேடு இதுதான் என ஒரு குறிப்பிட்ட பிளேடை விளம்பரப்படுத்துகின்றார்கள். அவர்கள் கிளீஸ் சேவ் செய்து காதலிகளைச் சந்திக்கும் போது இவர்களின் காதலிகள் மிகவும் உற்சாகம் அடைகின்றார்கள். இதுதான் அந்த விளம்பரம்.
இந்த விளம்பரத்தின் மூலம் தாடி, மீசையுடன் இருக்கும் ஆண்களை கேவலப்படுத்துவதுடன் சவரம் செய்தால் தான் காதலியுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற தவறனா கருத்தையும் விளம்பரமூடு பரப்புகின்றார்கள். இந்த விளம்பரத்தை யூடூயூப்பில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.
கிரிக்கெட்
நேற்றைய ராஜ்கொட் போட்டியானது ரன் மழையில் மூழ்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பமே அதிரடியாக இருக்க சேவாக் அன்வரின் சாதனையை முறியடித்து 200 ஓட்டங்களைக் கடப்பாரா எனப் பலரும் எதிர்பார்க்க டெஸ்ட் போட்டியில் எப்படி 300 ஓட்டங்களைக் கடக்கமுடியாமல் அவட்டாகினாரோ அப்படியே நேற்றும் நடந்தது.
அதேபோல் இரண்டாம் இனிங்கிசில் இலங்கை அணியும் அதே அதிரடியுடன் ஆடியது, சேவாக்கைப் போல் டில்ஷான் அன்வரின் சாதனையை முறியடிப்பார் என நம்பிக்கொண்டிருக்க அன்வரின் சாதனை மீண்டும் தப்பியது. இறுதியில் இந்திய அணி இலங்கைப் பின்வரிசை வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தினால் வென்றுவிட்டது. இரண்டு அணியின் பந்துவீச்சாளர்களும் வள்ளல்களாக மாறியிருந்தார்கள். நல்லகாலம் இந்திய அணி வெறும் 3 ஓட்டங்களினால் தான் வென்றது இல்லையென்றால் இந்தப் பிட்ச் போட்டிக்கு சரியில்லை,பிட்சை வைத்துதான் இந்திய அணி வென்றது எனப் பொருள் பட விமர்சனம் பலரால் எழுப்பப்பட்டிருக்கும்.
ஒரு குட்டிக் கதை
அண்மையில் சந்தித்த என்னுடைய நண்பர் ஒருவர் கொஞ்சம் சோகமாக இருந்தார் ஏனென்று கேட்க தன் சோகக் கதையைச் சொன்னார். அண்மையில் அவரின் காதலியின் பிறந்தநாள் வந்தது. இருவரும் ஒரிடத்தில் சந்தித்தார்கள், என் நண்பன் தன் கையில் இருந்த அன்புப் பரிசை கொடுத்து வீடு சென்றுதான் பிரிக்கவேண்டும் என்ற அன்புக் கட்டளையும் இட்டான். அவனின் செல்லச் சிரிப்பில் மயங்கிய நண்பனின் காதலியும் தன்னுடைய பரிசாக ஒரு பறக்கும் முத்தத்தை நண்பனுக்கு வழங்கிவிட்டு அதே இடத்தில் பிரிக்க முயற்சிக்க நண்பனோ விடாப்பிடியாக இங்கே பிரிக்கவேண்டாம் வீட்டில் பிரிக்கவேண்டும் என மீண்டும் வற்புறுத்த அவனின் காதலியோ அவனின் அன்புக்காக வீட்டில் சென்று ஏதோ மோதிரமோ அல்லது மொபைல் போனோ உள்ளே இருக்கும் என்ற ஆவலில் பிரிக்க உள்ளே இருந்ததோ இரண்டே இரண்டே இஞ்சி பிஸ்கட் மாத்திரம் இருந்தது. அடுத்த நாளே என் நண்பனை அவள் கேட்டாளாம் "ஏன்டா பரதேசி உனக்கு இஞ்சி பிஸ்கட் தான் கிடைத்ததா? அட்லீஸ்ட் ஒரு லெமன் பப்பாவது கிடைக்கவில்லையா?". சாடிக்கு ஏற்ற மூடி ஹிஹிஹி. (உண்மைக் கதை ).jpg)
ஹாட் அண்ட் சவர் சூப் 16-12-2009
எழுதியது வந்தியத்தேவன் at 19 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கிரிக்கெட், சூப், தமிழ்மணம், பதிவர் வட்டம்
இனிமையான இரண்டாவது சந்திப்பு
கெளபாய் மதுவின் தொலைபேசி அழைப்புடன் தான் நேற்றைய காலைப்பொழுது எனக்கு விடிந்தது. அத்துடன் அவர் என்னை கொஞ்சம் நேரத்திற்க்கு வருமாறு அன்புக் கட்டளை இட்டார். மதுவின் கட்டளையை மதித்து நான், லோஷன், ஆதிரை, புல்லட் நால்வரும் ஒன்றாகவே சென்றோம். தனித்து தனித்து சென்றால் ஒருவரை ஒருவர் மற்றவர்களுக்கு விற்றுவிடுவோம் என்ற லோஷனின் சிறந்த எண்ணத்திற்காக இந்த முடிவு. காரணம் சில நாட்களாக இலங்கைப் பதிவுலகில் ஒருவரை ஒருத்தர் வாரியிருந்தார்கள். ஆகவே இந்த முடிவின் படி மூவரும் ஒரே நேரத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை வாசலில் நின்றோம்.
திடீரென எங்கள் முன்னால் வேர்த்து விறுவிறுத்து ஒரு பாரிய உருவம் நீலக் கலர் சேர்ட்டில் சேர்ட்டில் மேல்பாகம் ஈரமாக காட்சியளித்தார். யார் அவர் எனப் பார்த்தால் நம்ம கங்கோன் கனககோபி. அவரில் மேல் இருக்கும் அன்பில் என்ன நடந்தது எனக் கேட்டால் " ஓடியாடி வேலை செய்ததில் களைத்துப்போனேன்" என்றார். பெரும்பாலும் ட்விடரிலும் பேஸ்புக்கிலும் குடியிருக்கும் அவர் முதன் முறையாக வேலை செய்திருக்கின்றார் என்ற ரகசியம் பின்னர் தெரியவந்தது.
அப்படியே கோபியின் தரிசனம் முடித்து உள்ளே போனால் நம்ம கெளபோய் ஜெல் எல்லாம் பூசி திருமண விருந்துபசார கெட்டப்பில் நிற்கின்றார். அப்படியே மதுவுக்கு எங்கள் வருகையைத் தெரிவித்துக்கொண்டு இன்னொரு பக்கம் பார்த்தால் குசினிக்குள் கீர்த்தியும் இன்னொருவரும்(மேகலா) மும்முரமாக சன்குவிக் கரைத்துக்கொண்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு உதவியாக சுபாங்கன். அப்படியே அவர்களுக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு நிற்க மேமன் கவி அவர்கள் வந்தார் அவருக்கும் சாகித்திய விருது பெற்றதற்கான ஒரு வாழ்த்தை தெரிவித்துவிட்டு நின்ற போது புன்னகையுடன் மயில்வாகனம் செந்தூரன் வந்தார்.
இப்படி ஒவ்வொருவராக வந்து என்னை நலம் விசாரிக்க நான் அவர்களை நலம் விசாரிக்க கொஞ்ச நேரம் இப்படியே போகும் போது தீடிரென குசினிப் பக்கம் சலசலப்பு. கீர்த்திதான் சன் குவிக்கில் சீனிக்குப் பதில் உப்பைப் போட்டுவிட்டாரோ ? இல்லை அருகில் நின்ற சுபாங்கன் பயித்தம் பணியாரம் சாப்பிட்டுவிட்டு மயங்கிபோனாரோ? என்ற பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்தால் நம்ம கங்கோன் தன்னுடைய அக்மார்க் சிரிப்புடன் நின்றார். என்ன விடயம் என்றால் கீர்த்தி கங்கோனிடம் பாத்திரங்கள் கழுவ சோப் வாங்கிவரச் சொன்னால் கங்கோன் டெட்டோல் சோப் வாங்கி வந்திருக்கின்றார்.
இந்த சுவையான சம்பவத்துடன் சரியாக 2 மணிக்கு கீர்த்தியின் தலைமையுரையுடன் பதிவர் சந்திப்பு இனிதே ஆரம்பமானது. கீர்த்தி தனது உரையில் முதலாவது சந்திப்பில் நடந்த நிகழ்வுகளை தொட்டுவிட்டுச் சென்றார். அதனைத் தொடர்ந்து பதிவர் அறிமுகம் நடைபெற்றது, சில புதியமுகங்கள் அறிமுகமானார்கள்.
இதனைத் தொடர்ந்து பயனுறப் பதிவு எழுதுவது எப்படி என்ற பொருளில் மதுவர்மன் கலந்துரையாடலை ஆரம்பித்துவைத்தார். எவரையும் இப்படித் தான் எழுதவேண்டும் என எவரும் வற்புறுத்தமுடியாது, அவரவர் தங்கள் தங்கள் பாணியில் ஏனையவர்கள் விரும்பிப் படிக்கும் படி பதிவுகளை எழுதினால் சிறப்பானது எனவும், அத்துடன் கண்ணுக்கு உறுத்தாத கலரில் வலைகளின் டெம்ளேட்டுகள் தேவையென்றும் சிலாகிக்கப்பட்டது. கலந்துரையாடல் மொக்கைப் பதிவுகளை நோக்கிச் சென்றபோது கீர்த்தி தான் ஒரு மொக்கைப் பதிவு எழுத மிகவும் கஸ்டப்பட்டதாகவும் மொக்கைப் பதிவு எழுதுவது ஏனையவர் நினைப்பது போல் இலகுவானது அல்ல எனவும் கூறி மொக்கை மன்னன் புல்லட்டின் ரசிகை தான் என்ற உண்மையையும் போட்டு உடைத்தார். அதே நேரம் காத்திரமான பதிவுகளில் கொஞ்சமேனும் நகைச்சுவை இருந்தால் பதிவுகள் வாசிக்க சுவாரசியமாக இருக்கும் என டொக்டர் முருகானந்தனின் பதிவு ஒன்றை உதாரணம் காட்டி வந்தியத்தேவன் தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பெண்களும் பதிவுலகமும் என்ற தலைப்பில் உறுபசி வலையின் சொந்தக்காரர் நிலா தர்ஷாயணி பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மிகவும் அழகாகவும் சரளமாகவும் எடுத்துரைத்தார். ஆண் வலைப்பதிவர்கள் தங்களுக்குள் நட்பு பாராட்டுவது போல் பெண் பதிவர்களால் நேரடியாகவோ ஏனைய சமூக இணையத் தளங்களிலோ நட்பாக இருக்கமுடியவில்லை எனவும் தன் ஆதங்கத்தைக் கொட்டினார். அவருக்கு சார்பாகவும் எதிராகவும் பெரும்பாலான கருத்துகளை ஆண்களே பதில் அளித்துக்கொண்டிருக்கும் போது மேகலா என்ற பதிவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஆணாதிக்க கருத்துக்கள் சிலவற்றைச் சொன்னபின்னர் கலந்துரையாடல் பெண்ணியம் சார்பாக சென்றது. அவர் எந்தவொரு ஆண் வலைப்பதிவர்களும் தங்கள் மனைவியை பதிவு எழுதச் சொல்லிவிட்டு பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வார்களா? என்ற கேள்வியைக்கேட்டு சபையைக் கலகலப்பாக்கினார்.
அதனைத் தொடர்ந்து மது சகோதரர்களின் கைவண்ணத்தில் சுடப்பட்ட பருத்தித்துறை வடையும் கீர்த்தியின் சமையல் அனுபவத்தில் உருவாக்கப்பட்ட பயிற்றம் பணியாரமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. வடையின் சுவை பலரையும் கவர்ந்தது. நளபாகத்தில் பெண்களை விட ஆண்கள் சிறந்தவர்கள் என்பதற்க்கு சான்றாக அமைந்தது. குளிர்பானமாக மு.மயூரனின் கலவையில் உருவான சன்குவிக் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
சிற்றுண்டியைத் தொடர்ந்து கெளபோய் மது இலங்கைப் பதிவர் கூகுள் குழுமத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அதன் தொழில்நுட்பத்துடன் இலகுவாக விளக்கினார். இந்தக் கலந்துரையாடல் பெரிதாக நேரம் எடுக்கவில்லை. அத்துடன் மாதம் தோறும் ஏதாவது ஒரு பொருளில் ஒரு நாள் சில மணி நேரம் குழுமத்தில் விவாதிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
இறுதியாக பின்னூட்டங்கள் குறித்தான கலந்துரையாடலை மு.மயூரன் ஆரம்பித்து வைக்க கலந்துரையாடல் பின்னூட்டங்கள் போல மிகவும் சூடாகவே போனது. மு.மயூரன் தனக்கு பெயரில்லாமல் வரும் அனானிப் பின்னூட்டங்களை வரவேற்பதாகவும் இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்தார். அவரின் கருத்தை வழிமொழிந்த லோஷன் சில பின்னூட்டங்கள் தனிநபர் தாக்குதலாக இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் மற்றும் படி எவருக்கும் தங்கள் கருத்துகளைச் சொல்லும் உரிமை இருப்பதாகவும் கூறினார். வந்தியத்தேவன், சந்ரு போன்றவர்கள் தங்கள் அனுபவங்களைச் சொன்னார்கள். மதுவர்மன் சில பின்னூட்டங்கள் கும்மிக்கு வழி வகுப்பதாகவும் இதனைத் தவிர்த்தால் சில நல்ல பதிவுகள் காப்பாற்றப்படும் எனவும் தன் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டார்.
அதே நேரம் நிமல் பின்னூட்டங்களை இரண்டாக பிரித்தார். முதலாவது வாழ்த்துப் பின்னூட்டம் அதாவது ஒருவரின் பதிவைப் புகழ்ந்தல் குறிப்பாக கலக்கல், நல்ல பதிவு, சூப்பர் போன்ற ஒற்றை வரிப்பின்னூட்டங்கள், இப்படியான பின்னூட்டங்களை விரும்புவர்கள் அனானி அதர் ஓப்சன் பின்னூட்ட வசதியை நீக்கியே விடலாம். அடுத்ததாக பின்னூட்டங்களில் வரும் விமர்சனங்கள் இதற்க்கு அனானிப் பின்னூட்டம் அவசியம் என நிமல் தன் கருத்தைச் சொன்னார்.
நிமலைப் போலவே மன்னார் அமுதனும் பின்னூட்டங்களை 2 ஆக பிரித்தார். ஒன்று விமர்சனப் பின்னூட்டம் இன்னொன்று விசமப் பின்னூட்டம். விஷமப் பின்னூட்டங்களினால் தான் பலர் பாதிக்கப்படுகின்றார்கள் எனவும், இல்லையென்றால் பின்னூட்டங்களில் ஆரோக்கியமான விமர்சனம் விவாதம் நடக்கும் எனத் தன் கருத்தைத் தெரிவித்தவர். அத்துடன் கடந்த சில நாட்களாக ஒரு சஞ்சிகையில் வந்த கருத்தால் சில ஊடகவியளாலர்கள் காண்டாகிய சம்பவத்தைத் தொட்டு அதனை ஒரு சர்ச்சையாக்கிவிட்டார். மன்னார் அமுதனுக்கு ஹிசாமும் லோஷனும் பதில் அளித்தாலும் அந்த சர்ச்சை முற்றுப் பெறாமால் முடிந்துவிட்டது,
அடுத்து மதுவின் ஏற்பாட்டில் பதிவர்களுக்கிடையிலான போட்டி கலகலப்பாக நடைபெற்றது. என் அணியில் லோஷன், புல்லட், அசோக்பரன் போன்ற உடல்வாகு உள்ளவர்கள் இருந்தபடியால் நாம் உருவாக்குய வட்டத்தால் முழுமையாக எம்மைச் சுற்ற முடியவில்லை என்பதால் நாம் போட்டியில் இருந்து விலகி வெற்றி பெற்ற குழுவிற்க்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தோம். இந்த விளையாட்டுகளின் பொறிமுறைகளை மது தன் பதிவில் எழுதுவார்.
இப்படியே நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பாடசாலைக் காலத்தில் இருந்த அனுபவத்துடன் இரண்டாவது சந்திப்பு இனிதே நிறைவடைந்தது.
பட உதவி : சுபாங்கன், ஆதிரை
எழுதியது வந்தியத்தேவன் at 36 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அனானி, இலங்கை, பதிவர் சந்திப்பு, பின்னூட்டம்
உலக அழகி 2009 - கயானி
நேற்று தென்னாபிரிக்காவின் ஜோகனர்ஸ்பேர்க் நகரில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டிற்க்கான உலக அழகியாக கிப்ரால்டர் (Gibraltar) நாட்டைச் சேர்ந்த 23 வயதான கயானி அல்டோரினோ (Kaiane Aldorino) தெரிவு செய்யப்பட்டார். 
முதலாவது ரன்னர் அப்பாக மெக்சிகோவைச் சேர்ந்த பெர்லா பெர்ல்ட்ரனும் 2ஆவது ரன்னர் அப்பாக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டட்டும் கேஸ்வரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.





இந்திய அழகி பூஜா சோப்ராவுக்கு மிஸ் என்ற பட்டமே கிடைத்தது.
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்
