நயந்தாராவைக் கண்ட இடத்தில் அடிப்பேன், பிரபுதேவா மனைவி, என் சகோதரிக்கு பிரகாஷ்ராஜ் துரோகம் இழைத்துவிட்டார், நடிகை டிஸ்கோ சாந்தி. அண்மையில் இணையங்களிலும் பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வெளியான செய்திகள் இவை.
ஏன் சில பெண்கள் அல்லது ஆண்கள் திருமணமான ஆணை அல்லது பெண்ணை விரும்புகின்றார்கள். இப்படியான விடயத்தை ஆங்கிலத்தில் Mate Poaching ('தகாமுறைத் துணைகவரல்') என்கின்றார்கள். அதாவது இன்னொருவரின் துணையை விரும்புவது.
பெரும்பாலான ஜோடிகளை பொதுவாக "எப்படி நீங்கள் சந்தித்தீர்கள்" எனக் கேட்டால் அவர்கள் அதீத ஆவலினாலும் தங்கள் ஆசைகளைக் கிளறியதாலும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டோம் என்பார்கள். அவர்களது முதல் சந்திப்பு பெரும்பாலும் அதீத , வழக்கத்துக்கு மாறான, தற்செயலான, அதிகம் கவர்ச்சியூட்டும் சந்திப்பாகத் தான் இருந்ததாக கூறுகின்றார்கள். முன்பின் அறிந்திருதாவர்களின் வசீகரமும், மயக்கும் ஆற்றலும் அவர்கள் மேல் காதல் கொள்ளவைத்துவிடும்.
இதனை டொக்டர் டேவி ஷிமிட் (Dr. David Schmitt, a psychology professor and researcher at Bradley University in Peoria) 'தகாமுறைத் துணைகவரல்'(Mate Poaching ) எனக் கூறுகின்றார். அதாவது வசீகரத்தன்மையால் இன்னொருவரின் துணை மீது ஏற்படு ஈர்ப்பு.
அண்மையில் அவர் 53 நாடுகளில் இருந்து 16000 நபர்களிடம் எடுத்த தகவல்களின் படி 18% மான திருமணமான ஆண்களும் 11% மான திருமணமான பெண்களும் தங்கள் துணைகளை விட்டுவிட்டு இன்னொரு துணையைத் தேடுகின்றார்கள்.
உளவியல் ரீதியாக சில நபர்கள் தாங்கள் தனிமையாகவும் பாதுகாப்பற்றிருப்பதாகவும் உணர்வதால் வஞ்சகமாகவும் நேர்மையற்ற முறையிலும் இன்னொரு துணையைத் தேடுகின்றார்கள் எனவும் கருதலாம்.
எது எப்படியிருப்பினும் அவரின் ஆராய்ச்சி இன்னொரு துணையை தகாதமுறையில் கவருதல் அவர்களின் பிரத்தியேக, தனக்கு அப்பாற்பட்ட விடயங்களின் நாட்டமுள்ள, மனதிற்கு ஒவ்வாத, மனசாட்சியற்ற, நேர்மையற்ற" விடயமாகும் என உறுதியாகக் கூறுகின்றார். அவர்கள் தங்களுக்குள் திறந்தமனதுடனும் இலகுவாகவும் பாலியல் சம்பந்தமான விடயங்களை கலந்துரையாட முடிவதாகவும் கூறுகின்றார். இது இரு பாலினத்திற்க்கும் பொருந்தும்.
இந்த ஆராய்ச்சியில் மதிப்புகள் அல்லது கோட்பாடுகளின் வீழ்ச்சி, குறைபாடான கட்டுப்பாடுகள், குறைந்தளவு இரக்க உணர்ச்சிகள் மற்றும் தன்னிலைப் படுத்தாமை(self-centered) போன்றவற்றால் 'தகாமுறைத் துணைகவரல்' தோன்றுவது அவதானிக்கப்பட்டது.
சட்டத்துக்கு மாறாக இருக்கும் இந்த உறவுகளால் " உன் அயலவனையும் உன்னைப்போல் " நேசி என்ற கோட்பாடு அற்றுப்போகின்றது. சமூகத்தின் அவர்கள் மேலான பார்வையும் நேர்மையற்றதாகிவிடுகிறது.
சிலர் இதனை சரியென விவாதிக்கலாம் ஏனென்றால், ஒருவரின் துணை அறிமுகம் இல்லாதவராக அல்லது பழகிய அனுபவமற்றவராக இருப்பதும் இருவரிற்கிடையில் மனஒற்றுமை இல்லாதிருப்பதும் மற்றவரை இன்னொரு துணையைச் தேடச் செய்யும் நிலைக்கு மாற்றிவிடும். ஆனாலும் சமூக, மத நல் ஒழுக்கங்களினால் பெரும்பாலோர் இந்த நிலைக்குச் செல்லாமல் சகிப்புத் தன்மையுடன் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள். 'தகாமுறைத் துணைகவரல்' ஈடுபடுபவர்கள் இந்த ஒழுக்கங்கள், கோட்பாடுகளை மதிக்காமல் தங்கள் இஸ்டத்திற்க்கு இருக்கின்றார்கள்.
கண்ணுக்குத் தெரியாத கட்டுப்பாடுகள் உளவியல் ரீதியாக ஒரு செயற்களத்தில் இருந்தே செயற்படுகின்றது. அதாவது இந்தக் கட்டுப்பாடுகள் "உங்கள் உடல், எண்ணங்கள், உணர்ச்சிகள், செயற்பாடுகள்" போன்ற செயற்களங்களில் செயல்படுகிறது. இது உங்களை உங்கள் சமூகத்தில் இருந்து உங்களைப் புறக்கணிக்கவும் காரணமாகின்றது. யாரும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடமுடியாவிட்டாலும் சில பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும்.
அத்துடன் இன்னொரு துணையை நாடுகின்றவர்கள் தங்கள் பாதுகாப்பு, நிரந்தரத் தன்மை போன்ற காரணிகளிலும் கவனம் செலுத்தவேண்டும். இல்லையென்றால் உங்கள் புதிய துணையின் பொறுப்புகளும் எதிர்காலத் திட்டங்களும் நிச்சயமற்றுப் போய்விடும். 'தகாமுறைத் துணைகவரல்' என்பது நிலையற்றது.
நீங்கள் இன்னொருவரின் துணையின் மேல் டேட்டிங் (இதன் தமிழ் அர்த்தம் என்ன?), ஈடுபாடு, கூடிவாழ்தல்(cohabiting or living together) அல்லது திருமணம் போன்றவற்றில் அக்கறை இருந்தால் கீழ்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
1. இந்த அன்பு அல்லது காதல் கிடைத்தற்கரியதா எனப் பாருங்கள். சிலவேளைகளில் அவனோ/அவளோ ஆசைகாட்டினால் கூட ஒரு முறை சிந்தியுங்கள்.
2. அவருடைய தற்போதைய உறவுமுறை மனநிறைவற்ற அல்லது சீரற்றதாக இருக்கிறதா என தகுந்த காரணங்களுடன் ஆராயுங்கள்.
3. சந்தோசமற்ற துணைக்கு நீங்கள் அவரது கதைகளைக் கேட்டோ, பாராட்டியோ அல்லது துணைக்கு நின்றோ உதவி செய்யாதீர்கள்.
4. பாலியல் ரீதியான விடயங்களை அவருடன் கலந்தாலோசிக்காதீர்கள்.
5. நீங்கள் அவருக்கு துணையாக இருக்கவேண்டும் என நினைத்தால் , தனிமையான அல்லது துணையுடன் இருக்கும் ஒருவருடன் நேர்மையாகவும் , சரியான பாதையிலும் உங்கள் தொடர்புகளை வைத்திருங்கள்.
6. இந்த அனுபவமும் ஒரு பரவசமூட்டும் சிலிர்க்கச் செய்யும் குறுகியகால அனுபவமாக இருந்தாலும் இருவருக்கும் ஆபத்தானது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
'தகாமுறைத் துணைகவரல்' என்பது ஒழுக்ககேடான மற்றவர்களையும் பாதிக்கின்ற ஒரு விடயம் என்பதனைத் தெரிந்துகொண்டால் இல்லறங்கள் நல்லறங்களாக என்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
பின்குறிப்பு : இணையத்தில் நயன் பிரபுதேவா சர்ச்சைகள் பார்த்த ஒரு இடத்தில் இந்த சொல் புதிதாக இருந்தது என்ன விடயம் எனத் தேடியதில் பல இணையங்களில் இதனைப் பற்றிக் கிடைத்த குறிப்புகளை வைத்து எழுதியதே இது. மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவே இந்தப் பதிவு.
நன்றி : Mate Poaching என்ற ஆங்கிலப்பதத்திற்க்கு "தகாமுறைத் துணைகவரல்" என்ற தமிழ்ப் பதத்தை மொழிபெயர்த்துத் தந்த சஜிக்கு நன்றிகள்.
இந்தப் பதிவில் முதலில் இட்ட தலைப்பு ஆணாதிக்கவாதத் தலைப்பு எனப் பலர் கருதுவதால் தலைப்பை மாற்றிவிட்டேன்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
19 hours ago
35 கருத்துக் கூறியவர்கள்:
சிங்கம் வேளைக்கே பதிவிடேல எண்டேக்கயே யோசிச்சன்...
புலி மன்னிக்கவும், சிங்கம் பதுங்கிறது பாயுறதுக்குத் தான் எண்டு...
கலக்கிவிட்டீர்கள்...
ஆனால் சின்ன சந்தேகம்...
நயன்தாரா இரசிகர் மன்றத்தில் இருந்தீர்களே என்னவாயிற்று?
லோஷன் அண்ணா உட்பட ஏராளமான நயன்தாரா இரசிகர் மன்றத்தினர் தங்கள் தலைவியின் படத்தை முன்னால் போட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போகிறார்களே?
//'தகாமுறைத் துணைகவரல்' என்பது ஒழுக்ககேடான மற்றவர்களையும் பாதிக்கின்ற ஒரு விடயம் என்பதனைத் தெரிந்துகொண்டால் இல்லறங்கள் நல்லறங்களாக என்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். //
இவர்களாவது திருந்துவதாவது?
ஒரே நகைச்சுவை போங்கள் அண்ணா...
எல்லாம் பிரபலம் ஆவதற்காகத் தான்...
கட்டுப்பாடற்ற சுதந்திரமும்
அழிந்து வரும் கலாச்சார பராம்
பரியங்களும் இந்த நிலைக்
குரிய காரணங்களாக அமை
கின்றன
காலத்துக்கு தேவையான கருத்துக்கள் வந்தி.
ஆனால் நான் இன்னும் சின்னப்பிள்ளை இந்த விஷயங்கள் எல்லாம் பத்தி கதைக்க எனக்கு வயது போதாது.
அது என்ன 'மாற்றான் மனை கவரும் "பெண்கள்"' என்றொரு தலைப்பு..? நமது சமூகச் சூழலில், ஒழுக்க விதிகளை நிறுவுவதற்கும் பிறகு அதையே அயோக்கியத்தனமாக மீறுவதற்குமான உரிமையை ஏகபோகமாக இன்னமும் ஆண்கள் தானே வைத்திருக்கிறார்கள்...? ஒருபுறம் இவ்விதமான ஆண்சார்பான ஒழுக்கச் சுவர்களின் காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் ஊடகங்கள் மறுபுறம் இவ்வாறான சம்பவங்களுக்கு பெண்களே பொறுப்பு என்பதான "கிளுகிளுப்பூட்டும்" திரிபுபடுத்தப்பட்ட உண்மையை ஊதிப் பெருப்பித்துக் காசு சம்பாதித்துக் கொள்கின்றன...
தயவுசெய்து தலைப்பை மாற்றுங்கள்...
பிறன்மனை பாராமை பேராண்மைன்னு வள்ளுவர் சொன்ன வாசகமும் கூட இருக்கு !
செய்திகள் பரபரப்புக்குரியவைகளாக இருந்தாலும், அதன் பின்ணணியில் - பெற்ற பிள்ளைகளை பிரிதல் போன்ற - சோகங்கள் பெரும் சுமைகள்!
:(
//சட்டத்துக்கு மாறாக இருக்கும் இந்த உறவுகளால் " உன் அயலவனையும் உன்னைப்போல் " நேசி என்ற கோட்பாடு அற்றுப்போகின்றது.//
இந்தக் கோட்பாடுதான் ஒருவகையில் இந்த மாதிரியான விவகாரங்களுக்குக் காரணமோ என்னமோ... அதாவது அயலவன் அயலவளை நேசித்தல்... அயலவள் அயலவனை நேசித்தல்.. ;-)) சும்மா பகிடிக்குச் சொல்லுறன்... ;)
சஜிதரன்
திரைத் துறையன்றல்ல சகலதிலும் இக்கசடு உள்ளது. சிலப்பதிகாரம்; இராமாயணம்; ஆயிரம் கண் இந்திரன் என இலக்கியம்;இதிகாசம்;புராணமும் சொல்லுது; அன்றைய அரசர்களில் இருந்து இன்றைய
அமைச்சர்கள் மற்றும் அன்றாடம் காச்சிகளில் கூட உள்ளது. ஆனால் திரையுலகம் பளிச்செனத் தெரிகிறது.
அன்று ஜெமினி- சாவித்திரி - சரோஜாதேவி கூத்து நீங்கள் அறியாததல்ல.
அன்று முதல் இன்றுவரை திரையுலகுக்கு ஒளி பாச்சிப் பார்க்கிறோம்.அவ்வளவே!
ஆனாலும் நயன் தாரா இன்னும் பல்லாயிரம் பிரபு தேவாக்களைப் பிடிக்கலாம்; பிரபுதேவா மனைவி
சமீபத்தில் தன் மகனையும் இளந்த பெண்; ஆதரவு தரவேண்டிய கணவனை இழப்பது பற்றிச் சிந்திக்கலாம்.சிந்தித்து விலகவேண்டும்.
யாராயினும் நம் பிள்ளைகள், சகோதரி; சகோதரர் ,துணையை அடுத்தவர் கவரும் போது ஏற்றுக் கொள்ளமாட்டோம்.எதிர்ப்போம் .?
அப்படி நீங்களும் நடவுங்கள்
நல்லதொரு பதிவு வந்தி.
இதை ஆரம்பத்தில் வாசித்துவிட்டு எனது அலுவலக சகாக்களுடன் வாதித்துக்கொண்டிருந்தேன்.
அதன் சாராம்சம் இதுதான்.
ஒவ்வொருவருக்கும் தமது துணைபற்றி தனித்தனியான கற்பனைகள் இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு.
ஆனால் காலநடப்பில் தமக்கே தாம் விரும்பும் சில குணாதிசயங்களற்ற அல்லது குறைவான துணை கிடைக்க நேரிடுகிறது.
ஆனால் தங்களுடைய கற்பனையும் எதிர்பார்ப்பும் மனதின் மூளையில் எங்கோ உறங்கிக்கொண்டிருக்கும்.
தற்செயலாக தான் விரும்பும் குணாதிசயங்களுடைய வேறொரு நபரை சந்திக்குமிடத்து, புதைந்திருந்த கற்பனைகளுடன் மனம் அலைபாயலாம்.
////அண்மையில் அவர் 53 நாடுகளில் இருந்து 16000 நபர்களிடம் எடுத்த தகவல்களின் படி 18% மான திருமணமான ஆண்களும் 11% மான திருமணமான பெண்களும் தங்கள் துணைகளை விட்டுவிட்டு இன்னொரு துணையைத் தேடுகின்றார்கள்.
உளவியல் ரீதியாக சில நபர்கள் தாங்கள் தனிமையாகவும் பாதுகாப்பற்றிருப்பதாகவும் உணர்வதால் வஞ்சகமாகவும் நேர்மையற்ற முறையிலும் இன்னொரு துணையைத் தேடுகின்றார்கள் எனவும் கருதலாம்.////
நல்லதொரு பதிவு வந்தி…. சரியான புரிந்துணர்வு இன்மையும், மன ஒத்திசைவும் இல்லாத ஆணுக்கும்-பெண்ணுக்கும் இடையில் இவ்வாறான நடைமுறைகளுக்கு சாத்தியங்கள் அதிகம். ஆண் தவறு செய்கிறார் என்று சந்தேகம் கொண்டு அவரை பழிவாங்கும் நோக்கத்தில் பெண்ணும் மாற்று துணையை நாடுதலும் அவற்றில் அடக்கம். (இது இருபாலாருக்கும் பெருந்தும்) மேற்குலகில் அது அதிகளவில் இருக்கின்றபோதிலும், தெற்காசிய நாடுகளிலும் இவ்வாறான தகாத உறவுகள் (இந்த வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும், இங்கு பயன்படுத்த வேண்டியுள்ளது.) அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்கின்றன.
பிரபுதேவா தொடர்பை முறிக்காவிட்டால் நயன்தாராவுக்கு எதிராக போராட்டம்: பெண்கள் பாதுகாப்பு சங்கம்
பிரபுதேவா தொடர்பை முறிக்காவிட்டால் நயன்தாராவுக்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம் என்று ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவி கல்பனா கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது,
பிரபுதேவாவும் ரமலத்தும் குழந்தைகளுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டு நயன்தாரா கேடு செய்வது நல்லதல்ல. நயன்தாரா தவறு செய்கிறார்.
நயன்தாரா பெரிய நடிகை வேறு நல்ல வாழ்க்கையை அவர் அமைத்துக் கொள்ளலாம். ஒரு குடும்ப பெண் கண்ணீர் சிந்த காரணமாக இருக்ககூடாது.
ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நமது கலாச்சாரம். நாம் வெளிநாட்டில் வாழவில்லை. தமிழ்நாட்டில் வசிக்கிறோம். இங்குள்ள பண்பாட்டைத்தான் கடைபிடிக்க வேண்டும்.
நடிகர் நடிகைகளுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழவேண்டும். ஒரு நடிகரோ, நடிகையோ தவறு செய்தால் ரசிகர்களையும் அது பாதிக்கும். நடிகர், நடிகையை போல் நாமும் ஏன் வாழக்கூடாது என்று எண்ணத் தோன்றும்.
திரையுலகம் மீது ஏற்கனவே சில அவப்பெயர்கள் இருந்தன. அவை இப்போது மாறி நல்ல பெயர் வந்து கொண்டிருக்கிறது. நயன்தாரா செயல்களால் மீண்டும் அவதூறு வந்துவிடக்கூடாது.
நயன்தாரா உடனடியாக மனதை மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு முன் என்ன நடந்திருந்தாலும் இருக்கட்டும். இனிமேல் வேண்டாம். தவறை அவர் திருத்திக் கொள்ள வேண்டும்.
ரமலத் பிரச்சினை தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்களின் பிரச்சினையாக இப்போது மாறிவிட்டது. அவருக்கு பக்கத்துணையாக இருக்க எல்லா மகளிர் அமைப்புகளும் முடிவு செய்துவிட்டன.
எனவே பிரபுதேவாவுடன் தொடர்பு இல்லை என்று நயன்தாரா பகிரங்கமாக அறிவிப்பு. வெளியிட வேண்டும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று இனியும் நழுவக்கூடாது.
பிரபுதேவா தொடர்பை முறிக்காவிட்டால் நயன்தாராவுக்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம். அவர் நடித்த படங்களை திரையிட அனுமதிக்கமாட்டோம். தமிழ்நாடு முழுவதும் நயன்தாரா படங்கள் ஓடும் தியேட்டர்கள் முன்னால் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்றார்.
தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
http://subankan.blogspot.com/2009/09/blog-post_25.html
அதிகமானோர் தொடாத ஓர் தலைப்பும் பதிவும்!
ஆனால் இந்தச்சின்னப்பிள்ளை இதில் என்னத்த எழுதுவது என்பதில் தான் ஒரே குழப்பம்.
சமூகத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுகொண்டிருக்கும் இவ்விடயம் நிச்சயம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றுதான்... இதன் காரணமாக எத்தனை பிள்ளைகள் பாதிப்படைகிறார்கள் என்பதை ஏன் இந்த ஒழுக்கக்கேடானவர்கள் உணர்கிறார்கள் இல்லையோ?
உண்மையிலேயே விழிப்புணர்வூட்டும் பதிவுதான் வந்தி அண்ணா .. வாழ்த்துக்கள் !
//கனககோபி said...
சிங்கம் வேளைக்கே பதிவிடேல எண்டேக்கயே யோசிச்சன்...
புலி மன்னிக்கவும், சிங்கம் பதுங்கிறது பாயுறதுக்குத் தான் எண்டு...
கலக்கிவிட்டீர்கள்...//
நன்றிகள் இந்தப் பதிவு எழுத எனக்கு இரு நாட்கள் எடுத்தன காரணம் சில மொழிபெயர்ப்புகள் தலைக்குள்ளாலை போயிட்டுது.
//நயன்தாரா இரசிகர் மன்றத்தில் இருந்தீர்களே என்னவாயிற்று?//
நானா இல்லையே நான் என்றைக்கும் ஐஸ் அக்கா, அசின் அக்கா ரசிகர் மன்றம் தான்.
//லோஷன் அண்ணா உட்பட ஏராளமான நயன்தாரா இரசிகர் மன்றத்தினர் தங்கள் தலைவியின் படத்தை முன்னால் போட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போகிறார்களே? //
பரவாயில்லை எந்த எதிர்ப்பையும் சமாளிப்போம்.
//இவர்களாவது திருந்துவதாவது?
ஒரே நகைச்சுவை போங்கள் அண்ணா...
எல்லாம் பிரபலம் ஆவதற்காகத் தான்...//
கோபி நீங்கள் நயன் போன்ற பிரபலங்களை மட்டுமே பார்க்கின்றீர்கள் ஆனால் இவர்களைவிட சாதாரண பலரிடம் இந்த விடயம் நடக்கின்றது. பெரும்பாலான மெஹா சீரியல்கள் இதனைத் தானே காட்டுகின்றார்கள். ஆகவே பிரபலமாக ஒரு வழி என்பது தவறு ஆனால் இப்படித் தவறு செய்பவர்கள் தம் தம் ஊர்களில் அல்லது பகுதிகளில் பிரபலமாகிவிடுவார்கள்.
//Thevesh said...
கட்டுப்பாடற்ற சுதந்திரமும் அழிந்து வரும் கலாச்சார பராம்பரியங்களும் இந்த நிலைக்குரிய காரணங்களாக அமைகின்றன //
நிச்சயமாக கலாச்சாரங்களையும் எம் விழிமியங்களையும் நாங்கள் தொலைத்துக்கொண்டே இருக்கின்றோம்.
//ப்ரேமி said...
அது என்ன 'மாற்றான் மனை கவரும் "பெண்கள்"' என்றொரு தலைப்பு..? //
முதலில் பெண்களைப் பற்றி மட்டும் எழுத இருந்தபடியால் அப்படியொரு தலைப்பு.
//நமது சமூகச் சூழலில், ஒழுக்க விதிகளை நிறுவுவதற்கும் பிறகு அதையே அயோக்கியத்தனமாக மீறுவதற்குமான உரிமையை ஏகபோகமாக இன்னமும் ஆண்கள் தானே வைத்திருக்கிறார்கள்...? //
இதனை வன்மையாக எதிர்க்கின்றேன். இன்றைக்கும் மனைவிகளுக்கு அடங்கி அடிமையாக நடக்கும் கணவர்கள் பலர் இருக்கின்றார்கள். விதிகளை என்னவோ ஆண்கள் தான் நிறுவினாலும் பெரும்பாலான விதிகளை பெண்கள் மீறுகின்றார்கள். தண்ணி அடிக்கும், தம் அடிக்கும், பப் டிஸ்கோதே போகும் பெண்களின் எண்ணிக்கை நகரங்களில் அதிகரித்துவிட்டது. ஆகவே ஒழுக்க விதிகளை பெண்களும் மீறுகின்றார்கள்.
//ஒருபுறம் இவ்விதமான ஆண்சார்பான ஒழுக்கச் சுவர்களின் காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் ஊடகங்கள் மறுபுறம் இவ்வாறான சம்பவங்களுக்கு பெண்களே பொறுப்பு என்பதான "கிளுகிளுப்பூட்டும்" திரிபுபடுத்தப்பட்ட உண்மையை ஊதிப் பெருப்பித்துக் காசு சம்பாதித்துக் கொள்கின்றன... //
இதனை ஏற்றுக்கொள்கின்றேன். பெரும்பாலான ஊடகங்கள் இந்த தவறுகளைச் செய்கின்றன. சில மெஹா சீரியல்களில் மாற்றான் மனை கவர்வதை சரி எனக்கூட நிறுவுகின்றார்கள். கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு ஊடகங்களும் ஒருவகையில் காரணம்.
//தயவுசெய்து தலைப்பை மாற்றுங்கள்...//
மாற்றிவிட்டேன், நன்றிகள்.
//யோ வாய்ஸ் (யோகா) said...
காலத்துக்கு தேவையான கருத்துக்கள் வந்தி.//
நன்றிகள் யோகா.
//ஆனால் நான் இன்னும் சின்னப்பிள்ளை இந்த விஷயங்கள் எல்லாம் பத்தி கதைக்க எனக்கு வயது போதாது.//
சரி சரி நம்பிட்டோம். நீங்கள் தான் அழகான பெண்களைச் சைட் அடிக்கப் பிடிக்கும் என எழுதிய நபர் என்பது அனைவருக்கும் தெரியும்.
// ஆயில்யன் said...
பிறன்மனை பாராமை பேராண்மைன்னு வள்ளுவர் சொன்ன வாசகமும் கூட இருக்கு !//
நயந்தாரா போன்றவர்களுக்கு திருவள்ளுவரைத் தெரிந்திருக்காது. பெரும்பாலான பீட்டர் விடும் பெண்களுக்கு திருக்குறள், வள்ளுவர், காந்தி போன்றவர்களைத் தெரிந்திருக்காது.
//செய்திகள் பரபரப்புக்குரியவைகளாக இருந்தாலும், அதன் பின்ணணியில் - பெற்ற பிள்ளைகளை பிரிதல் போன்ற - சோகங்கள் பெரும் சுமைகள்!//
உண்மையாக இதனால் தான் பிள்ளைகள் பின்னாளில் குடிகாரனாகவோ, போதைப்பொருளுக்கு அடிமையாகவோ வர நேருகின்றது.
//Thava Sajitharan said...
இந்தக் கோட்பாடுதான் ஒருவகையில் இந்த மாதிரியான விவகாரங்களுக்குக் காரணமோ என்னமோ... அதாவது அயலவன் அயலவளை நேசித்தல்... அயலவள் அயலவனை நேசித்தல்.. ;-)) சும்மா பகிடிக்குச் சொல்லுறன்... ;) //
இருக்கலாம் யார் கண்டது. எதற்க்கும் உங்கள் அயலில் உள்ளவர்களைக் கவனமாக இருக்கச் சொல்கிறேன் (இதுவும் பகிடிக்குத் தான்)
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
திரைத் துறையன்றல்ல சகலதிலும் இக்கசடு உள்ளது. சிலப்பதிகாரம்; இராமாயணம்; ஆயிரம் கண் இந்திரன் என இலக்கியம்;இதிகாசம்;புராணமும் சொல்லுது; அன்றைய அரசர்களில் இருந்து இன்றைய
அமைச்சர்கள் மற்றும் அன்றாடம் காச்சிகளில் கூட உள்ளது. //
ஓம் உண்மைதான் சூர்ப்பனகையும் இராவணனும் சிறந்த உதாரணங்கள். வம்சத்தில் பிறந்தவர்கள் என்பதால் அரசர்களுக்கு ஏனைய பெண்களுடன் அவர்களுடன் இணையலாம் என விதி இருந்திருக்கும்.
///ஆனால் திரையுலகம் பளிச்செனத் தெரிகிறது.//
அதே தான் திரையுலகத்தின் கூத்துகள் ஊடகங்களினால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றது.
//யாராயினும் நம் பிள்ளைகள், சகோதரி; சகோதரர் ,துணையை அடுத்தவர் கவரும் போது ஏற்றுக் கொள்ளமாட்டோம்.எதிர்ப்போம் .?
அப்படி நீங்களும் நடவுங்கள்//
நல்ல விளக்கமும் கருத்துக்களும் நீண்ட காலத்தின் பின்னர் வருகை தந்ததற்க்கு நன்றிகள்.
//இறக்குவானை நிர்ஷன் said...
நல்லதொரு பதிவு வந்தி.//
நன்றி நிர்ஷன்
//இதை ஆரம்பத்தில் வாசித்துவிட்டு எனது அலுவலக சகாக்களுடன் வாதித்துக்கொண்டிருந்தேன்.//
ஆஹா இது கூட நடக்கிறதா?
//அதன் சாராம்சம் இதுதான்.
ஒவ்வொருவருக்கும் தமது துணைபற்றி தனித்தனியான கற்பனைகள் இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு.
ஆனால் காலநடப்பில் தமக்கே தாம் விரும்பும் சில குணாதிசயங்களற்ற அல்லது குறைவான துணை கிடைக்க நேரிடுகிறது.
ஆனால் தங்களுடைய கற்பனையும் எதிர்பார்ப்பும் மனதின் மூளையில் எங்கோ உறங்கிக்கொண்டிருக்கும்.
தற்செயலாக தான் விரும்பும் குணாதிசயங்களுடைய வேறொரு நபரை சந்திக்குமிடத்து, புதைந்திருந்த கற்பனைகளுடன் மனம் அலைபாயலாம்.//
இருக்கலாம் ஏற்றுக்கொள்கின்றேன். இது விவாதத்திற்க்குரிய விடயம்.
//மருதமூரான். said...
நல்லதொரு பதிவு வந்தி….//
நன்றி மருதமூரான்.
//மேற்குலகில் அது அதிகளவில் இருக்கின்றபோதிலும், தெற்காசிய நாடுகளிலும் இவ்வாறான தகாத உறவுகள் (இந்த வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும், இங்கு பயன்படுத்த வேண்டியுள்ளது.) அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்கின்றன.//
பெரும்பாலான ஊடகங்கள் நயந்தாரா பிரபுதேவா விடயத்தை காதல் என்கின்றன. இதுவே இன்னொரு சாமான்யனுக்கு ஏற்பட்டால் கள்ளக் காதல் என்கின்றார்கள். த்காத உறவுகள் என்பதை விட துணைகவரல் நல்லதொரு சொல்லாகப் படுகின்றது.
// ரமலத் said...
பிரபுதேவா தொடர்பை முறிக்காவிட்டால் நயன்தாராவுக்கு எதிராக போராட்டம்: பெண்கள் பாதுகாப்பு சங்கம்//
இந்த போராட்டத்தை நீங்கள் ஏன் ஏனைய பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சார்பாக போராடக்கூடாது. நயந்தாரா ஒரு பிரபல என்பதால் நீங்களும் பிரபலமாக முயற்சி செய்கின்றீர்களா?
//Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...
அதிகமானோர் தொடாத ஓர் தலைப்பும் பதிவும்!//
நன்றிகள் சிக்கலான விடயங்களை எழுதப் பயம் ஆனாலும் சும்மா முயற்சி செய்தேன்.
//சமூகத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுகொண்டிருக்கும் இவ்விடயம் நிச்சயம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றுதான்... இதன் காரணமாக எத்தனை பிள்ளைகள் பாதிப்படைகிறார்கள் என்பதை ஏன் இந்த ஒழுக்கக்கேடானவர்கள் உணர்கிறார்கள் இல்லையோ?//
நல்ல கேள்வி. அவர்களின் முன்னைய துணை சரியில்லாதது தான் காரணம் ஆனாலும் சிலர் குழந்தை குட்டிகள் பெற்ற பின்னர் ஏன் இதில் ஈடுபடுகின்றார்கள் என்பது பலரின் கேள்வி.
//உண்மையிலேயே விழிப்புணர்வூட்டும் பதிவுதான் வந்தி அண்ணா .. வாழ்த்துக்கள் ! //
மீண்டம் நன்றிகள்.
அச்சச்சோ... எங்கட அண்ணன் வந்திக்கு என்ன ஆச்சு.. பேய் அடிச்சிட்டுதா????? சும்மா பகடிக்கு அண்ணை. நல்ல பதிவு. கனக்க தேடல் எல்லாம் செய்திருக்கிறியள்... கலக்குங்கோ
\\18% மான திருமணமான ஆண்களும் 11% மான திருமணமான பெண்களும் தங்கள் துணைகளை விட்டுவிட்டு இன்னொரு துணையைத் தேடுகின்றார்கள். \\
இப்பிடி எழுதிப்போட்டு எப்பிடி அப்பிடி ஒரு தலைப்பு வைச்சனீங்கள் வந்தியண்ணா? இதான் நாய் வாலை நிமித்த முடியாத கதையா?
//இருக்கலாம் யார் கண்டது. எதற்க்கும் உங்கள் அயலில் உள்ளவர்களைக் கவனமாக இருக்கச் சொல்கிறேன் (இதுவும் பகிடிக்குத் தான்)//
எனது மனைவியைத் தவிர்த்துப் பார்த்தால் அயலில் வேறு யாரும் கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தெரிகிறார்கள் இல்லை என்பதுதான் என் நெடு நாளைய கவலை.... ;)(நீங்க ஆப்படிக்க நினைச்சாலும் நாங்க அகப்பட மாட்டோமுங்கோ ;)
நல்ல ஆராய்ச்சிப்பதிவு.. பிரயோசனமான விழிப்புணர்வுக்கருத்துக்கள் அடங்கிய பதிவு! அனேகமாக பலருக்கு பட்ட பின்தான் ஞானம் வருவது வழக்கம்.. ஏதாவது தகா முறைத்துணைகவரல் பண்ணிட்டீங்களோ,
//Kiruthikan Kumarasamy சொல்வது:
அச்சச்சோ... எங்கட அண்ணன் வந்திக்கு என்ன ஆச்சு.. பேய் அடிச்சிட்டுதா????? சும்மா பகடிக்கு அண்ணை. நல்ல பதிவு. கனக்க தேடல் எல்லாம் செய்திருக்கிறியள்... கலக்குங்கோ//
ஓமடா கிருத்தி மோகினி அடிச்சுப்போட்டுது. இப்படி ஏதாவது சுவாரசியமாக கிடைத்தால் தேடிப்படிப்பது என் வழக்கம் ஹிஹிஹி. அதனை இந்த முறை பதிவாக்கிவிட்டேன் அவ்வளவுதான்.
// சினேகிதி said...
இப்பிடி எழுதிப்போட்டு எப்பிடி அப்பிடி ஒரு தலைப்பு வைச்சனீங்கள் வந்தியண்ணா? இதான் நாய் வாலை நிமித்த முடியாத கதையா?//
இல்லை சினேகிதி முதலில் நான் பெண்கள் பற்றி மட்டும் தான் எழுத நினைத்தேன் பின்னர் ஆண்களையும் துணைக்கு இழுத்துவிட்டேன் ஆனாலும் ஏதோ நினைவில் தலைப்பை மாற்றவில்லை, பின்னர் அதனை மாற்றிவிட்டேன். நாய் வாலை நாயால் மட்டும் தான் நிமித்தமுடியும்.
// Thava Sajitharan said...
எனது மனைவியைத் தவிர்த்துப் பார்த்தால் அயலில் வேறு யாரும் கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தெரிகிறார்கள் இல்லை என்பதுதான் என் நெடு நாளைய கவலை.... ;)(நீங்க ஆப்படிக்க நினைச்சாலும் நாங்க அகப்பட மாட்டோமுங்கோ ;)//
சரி சரி நீங்கள் நல்லவர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் உங்கள் மச்சினன் கொஞ்சம் ஆபத்தானவர் என கதைக்கின்றார்கள் அவரைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
// புல்லட் said...
நல்ல ஆராய்ச்சிப்பதிவு.. பிரயோசனமான விழிப்புணர்வுக்கருத்துக்கள் அடங்கிய பதிவு! //
நன்றி புல்லட்.
//அனேகமாக பலருக்கு பட்ட பின்தான் ஞானம் வருவது வழக்கம்.. ஏதாவது தகா முறைத்துணைகவரல் பண்ணிட்டீங்களோ,//
அடபோடா நான் தகுந்த முறை துணைகவரவே கஸ்டப்படுகின்றேன் இதிலை தகா முறைத் துணைகவரலா? நல்ல பகிடிதான் உனக்கு.
பத்திரிக்கைல வந்திருக்கு போல! வாழ்த்துக்கள்!
//அடபோடா நான் தகுந்த முறை துணைகவரவே கஸ்டப்படுகின்றேன் இதிலை தகா முறைத் துணைகவரலா? நல்ல பகிடிதான் உனக்கு.//
:))
//நாமக்கல் சிபி சொல்வது:
பத்திரிக்கைல வந்திருக்கு போல! வாழ்த்துக்கள்!//
நன்றி நாமக்கலாரே.
// நாமக்கல் சிபி said...
//அடபோடா நான் தகுந்த முறை துணைகவரவே கஸ்டப்படுகின்றேன் இதிலை தகா முறைத் துணைகவரலா? நல்ல பகிடிதான் உனக்கு.//
:)) //
நன்றி மாநக்கலாரே.
இந்தியாவில் எயிட்ஸ்க்கு எதிராக படம் எடுப்பார்கள். அது ஒலிம்பியா தியட்டறில் ஓடும். ஆனால் அங்கு போற ஆக்கள் எல்லாரும் என்னதத்துக்குபோறது? இதுபோலத்தான் இதற்கெலலாம் ஆராச்சி செய்தா அத நல்ல விலைக்கு சஞ்சிகை்ககுவிக்கலாம். இத நிறையபேர் படிப்பீனம் பேப்பரல போடடா. அதுபோலத்தான் வலைப்பதிவுலயும். நீங்கள் உண்மையான சமூகஅக்கயோட இதபோட்டா நயன்தாராவின்ட கவர்ச்சிபடத்த போடமாட்டிங்கள். சீரறிந்த குடும்பத்தின் படநத்தைத்ான் போடுவீர்கள்...
Post a Comment