புவனேஸ்வரி அண்மைக் காலமாக தமிழக ஊடகங்களில் பிரபலமான பெயர். சின்னத்திரையில் பெரிய வேடங்களிலும், பெரிய திரையில் சிறிய வேடங்களிலும் நடித்து பிரபலமான நடிகை. சில நாட்களுக்கு முன்னர் விபச்சார வழக்கில் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர். விசாரணைகளில் சில பிரபல நடிகைகளின் பெயர்களை விபச்சாரம் செய்கின்ற ஏனையவர்கள் என இவர் காவல் துறையிடம் கூறியதாக நடிகைகளின் பெயர்களுடன் தினமலர் பத்திரிகை வெளியிட்டது.
புவனேஸ்வரியின் வாக்குமூலத்தை வெளியிட்ட தினமலரைக் கண்டித்து நடிக, நடிகைகள் நடத்திய எதிர்ப்புக் கூட்டத்தில் பெரும்பாலன நடிகர்கள் ஆற்றிய உரைகள் ஆபாசத்தின் உச்சத்தைத் தொட்டதுடன் மிகவும் கீழ்த்தரனமானவையாகவும் இருந்தன. இதனைத் தொடர்ந்து அவர்கள் முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்த முறைப்பாட்டை அடுத்து தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் தமிழக காவல்த்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் லெனின் கைதுக்கு பத்திரிகையாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடித்தினார்கள்.
புவனேஸ்வரி விடயத்தில் பெரும்பாலான ஊடகங்கள் தங்கள் நடுநிலமையைத் தவறவிட்டுவிட்டார்கள். தினமலரில் புவனேஸ்வரி கொடுத்த விபரங்கள் சரியோ பிழையோ. ஆனால், அதன் பின்னர் நடிக, நடிகைகள் பேசிய தரங்குறைந்த உரைகளைக் கூட இவர்கள் வெளியிடவில்லை.
சன், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிச் செய்திகளின் நம்பகத் தன்மை என்பது செத்து பல காலமாகிவிட்டது. உலகில் எத்தனையோ பிரச்சனைகள் இடம் பெற்றபோது சன்னின் தலைப்புச் செய்தி "காதலில் விழுந்தேன் வெற்றி" என்பதே. வழக்கமாக விபச்சார குற்றச்சாட்டில் சாமானியர்களை காவல்த்துறை கைது செய்தால் அதனை செய்தியாக்கி அந்தப் பெண்களை தொலைக்காட்சியில் காட்டும் சன், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிகள் புவனேஸ்வரி விவகாரத்தில் ஏனோ அடக்கிவாசித்தது, தங்களது சகபாடியான இன்னொரு ஊடகமான தினமலரையும் ஊடகவியளாளர்கள் அனைவரையும் நடிகர்கள் திட்டியபோதும் இவர்கள் சார்ந்த எந்த ஊடகமும் கண்டுகொள்ளவேயில்லை.
நடிகர்களைப் பகைத்தால் இவர்களின் பிழைப்புக்கு என்ன செய்வது? இதனால் வழக்கம்போல் ‘நினைத்தாலே இனிக்கும்’ வெற்றியும், மைனாரிட்டி தி.மு.கவைத் திட்டுவதும், தமக்குத் தாமே பாராட்டுத் தெரிவிப்பதும் மட்டும் தமிழக தொலைக்காட்சிகளில் அதிகம் செய்திகளாகின.
பல வருட பாரம்பரியம் மிக்க விகடனோ சில காலத்திற்கு முன்னர் ஜூனியர் விகடனில் “இவர் தான் உங்க ஹீரோ” என ராமராஜன் முதல் பரத் வரை அனைத்து நடிகர்களினதும் உல்லாசக் கதைகளை எழுதி வியாபாரம் செய்தவர்கள் தினமலருக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவில்லை. சினிமா நடிகர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. மொத்தத்தில் இந்த செய்திகளை அப்படியே இருட்டடிப்புச் செய்தார்கள். இவர்களின் விபச்சாரத்திற்கு மன்னிக்கவும், வியாபாரத்திற்கு இலங்கைச் செய்திகள் இருக்கவே இருக்கின்றது. பத்திக்கிச்சு என்ற பெயரில் நடிக நடிகைகளின் கிசுகிசுக்களையும் “ஒரு நடிகையின் கதை” என ஒரு நடிகையின் உண்மைக் கதையை எழுதிய குமுதமும் தன் பங்கிற்க்கு அடக்கியே வாசித்தது.
பல விடயங்களில் நம்பகத்தன்மையையும் நடுநிலைமையையும் கைவிட்ட பெரும்பாலான ஊடகங்கள் இந்த விடயத்திலும் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டன.
படங்களில் அரைகுறை ஆடைகளுடனும் இரட்டை அர்த்த வசனங்களுடனும் உலாவரும் நடிகர்கள் தினமலர் செய்திக்குப் பின்னர் கண்ணகிகளாகவும், சீதைகளாகவும் மாறியதுதான் மிகவும் நகைச்சுவையான விடயம். சில காலங்களுக்கு முன்னர் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கன்னடப் பிரசாத் பல நடிகைகள், நடிகர்கள் (ஆண் விபச்சாரர்கள்) பற்றிய விபரங்களை வெளியிட்டபோது ஆத்திரம் கொள்ளாத சூப்பர் ஸ்டார்களும், சுப்ரீம் ஸ்டார்களும், புரட்சித் தமிழர்களும் புவனேஸ்வரி கொடுத்த வாக்குமூலத்தால் கோபப்பட்டது புதுமைதான்.
சில காலங்களுக்கு முன்னர் திரையுலகம் சம்பந்தப்பட்ட சிலரை தமிழக அரசு கைது செய்தபோதும், அவர்களின் சொத்துக்களை குண்டர்கள் நாசமாக்கிய போதும் இவர்களின் ஒற்றுமை எங்கே போனது? பத்மஸ்ரீ விருது பெற்ற விவேக்கின் கண்ணியமற்ற பேச்சு அவருக்கு வழங்கப்பட்ட விருதுக்கு அவமானமே. பத்மசிறியை திரும்ப பெறலாம் என்றால் மத்திய அரசு அவரிடம் இருந்து அந்த விருதைத் திரும்ப பெறவேண்டும்.
இத்தனைக்கும், தன்னைப் பத்திரிகையாளர் எனவும் திரைப்படத்துறை சேர்ந்தவர் எனவும் சொல்லிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி திரைப்படத்துறையினருக்கே தன்னுடைய ஆதரவை அதிகம் கொடுக்கின்றார். நடிகர்களை சந்திக்க எடுக்கும் சிரத்தையை இவர் ஏனையவர்களைச் சந்திக்க எடுப்பதில்லை. இவரின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது இவர் தமிழக மக்களின் முதல்வரா? இல்லை தமிழக நடிகர்களின் முதல்வரா? என்ற சந்தேகம் பகுத்தறிவுடன் சிந்திப்பவர்களுக்கு வருகின்றது.
அதே நேரம் ஊடகங்களும் எத்தனையோ விவாதிக்க வேண்டிய சமூக கலாச்சார விடயங்கள் இருக்க அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்காமல் திரைப்பட நடிகர்களை வைத்து விற்பனையைப் பெருக்குவதற்காக அவர்களின் பேட்டிகள், செய்திகளுக்கு அதிகம் முன்னுரிமை கொடுக்கின்றது. சிலவேளைகளில் அத்துமீறி அவர்களின் அந்தரங்கங்களிலும் தன் கைவரிசையைக் காட்டிவிடுகின்றது. திரைப்பட நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் தனி நபர்கள் என்ற விடயத்தை ஏனோ இவர்கள் மறந்துபோகின்றார்கள்.
எது எப்படியோ புவனேஸ்வரி கிளப்பிய புயல் முதல்வரின் அதிரடி நடவடிக்கைகளாலும் ஊடகங்களின் இருட்டடிப்பினாலும் அடங்கிப்போயுள்ளது. இதே நேரம் சில அரசியல் ஆதாயங்களுக்காக புவனேஸ்வரி கைதும் அதனைத் தொடர்ந்து வந்த நிகழ்வுகளும் ஒரு சிறந்த கதாசிரியர் ஒருவரினால் கதை, வசனம் எழுதப்பட்டு இயக்கப்பட்டதாகவும் கூறுகின்றார்கள். எதிர்காலத்திலும் புவனேஸ்வரிகள் கைதுசெய்யப்படுவார்கள், விடுதலையுமாவார்கள். ஆனால், ஊடகங்கள் தங்கள் பொறுப்புணர்வையும், தொழில் தர்மத்தையும் விட்டுக்கொடுக்கலாமா.
டிஸ்கி: பிரபலமான செய்திகளை பதிவுகளாக்காமல் விட்டால் பதிவுலகச் சட்டத்தின் 525ஆம் பிரிவின் படி குற்றம் என்பதால் ஏதோ என்னால் முடிந்தளவு சுருக்கமாக எழுதியிருக்கின்றேன்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
20 hours ago
16 கருத்துக் கூறியவர்கள்:
புவனேஸ்வரி மேட்டரை நீங்களும் கொண்டு வந்துடீங்களா?....
ஷகீலா மேடமும் கூட்டத்தில கலந்துகிட்டு இருந்தாங்களே பார்த்தீங்களா??
ஒண்ணுமே புரியல உலகத்திலே......
ullen aiyya...
சரியான கண்ணோட்டம்.
விவேக் பேசும் போது கவனிச்சீங்களா.? த்ரிஷா குளிச்ச வீடியோ க்ளிப் உண்மைதான்னு ஒத்துக்கிட்டார்.! இவங்ய பொய் சொல்லாதேங்கிறாய்ங்களா இல்ல உண்மைய ஏண்டா சொன்னீங்க-ங்றாய்ங்களா..??!!!!! ஒண்ணுமே புரியலடா சாமி..!!!
தீபாவளிக்கு என்னுடைய ஆதவன் வெளிவருவதால் நான் பத்திரிகை நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். ஜக்குபாய் வெளியாகும் போது சரத்குமார் அவர்கள் மன்னிப்புக்கேட்பார்கள், எந்திரனின் போது ரஜனிகாந்த் மன்னிப்புக் கேட்பார்.
http://thatstamil.oneindia.in/movies/heroes/2009/10/12-surya-explanation-for-his-abusive-speech-at-nad.html
//யோ வாய்ஸ் (யோகா) said...
புவனேஸ்வரி மேட்டரை நீங்களும் கொண்டு வந்துடீங்களா?.... //
காற்றுள்ளபோதே பதிவு எழுதுவேண்டும். அதுதான் நானும் புவனேஸ்வரி மேட்டரை எழுதினேன்.
//ஷகீலா மேடமும் கூட்டத்தில கலந்துகிட்டு இருந்தாங்களே பார்த்தீங்களா??//
ஷகீலா முதல்வரையும் சந்தித்தார். தூள் படம் ஞாபகத்திற்க்கு வந்தால் நான் பொறுப்பல்ல.
//பிரபா said...
ஒண்ணுமே புரியல உலகத்திலே......//
ஹாஹா என்னமோ நடக்குது
//நையாண்டி நைனா said...
ullen aiyya...//
நன்றிகள் ஐயா
//புலவன் புலிகேசி said...
சரியான கண்ணோட்டம்.//
நன்றிகள் புலவரே.
//கார்கோட நாகன் said...
விவேக் பேசும் போது கவனிச்சீங்களா.? த்ரிஷா குளிச்ச வீடியோ க்ளிப் உண்மைதான்னு ஒத்துக்கிட்டார்.! இவங்ய பொய் சொல்லாதேங்கிறாய்ங்களா இல்ல உண்மைய ஏண்டா சொன்னீங்க-ங்றாய்ங்களா..??!!!!! ஒண்ணுமே புரியலடா சாமி..!!! //
ஹாஹா இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தால் இன்னும் உண்மைகள் வந்திருக்கும். விகடனில் இவங்கதான் உங்க ஹீரோ என எழுதும்போது ஏன் இவர்கள் கொந்தளிக்கவில்லை? சிலவேளைகளில் ஆண்கள் என்றால் தப்பு செய்யலாம் என்ற எண்ணமோ தெரியவில்லை.
// சூர்யா said...
தீபாவளிக்கு என்னுடைய ஆதவன் வெளிவருவதால் நான் பத்திரிகை நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். ஜக்குபாய் வெளியாகும் போது சரத்குமார் அவர்கள் மன்னிப்புக்கேட்பார்கள், எந்திரனின் போது ரஜனிகாந்த் மன்னிப்புக் கேட்பார். //
சூரியாவுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கின்றது. அடுத்த முதல்வர் சூரியா வாழ்க.
//படங்களில் அரைகுறை ஆடைகளுடனும் இரட்டை அர்த்த வசனங்களுடனும் உலாவரும் நடிகர்கள் தினமலர் செய்திக்குப் பின்னர் கண்ணகிகளாகவும் சீதைகளாகவும் மாறியதுதான் மிகவும் நகைச்சுவையான விடயம். //
இதைவிட இந்த விடயத்தை எவாலும் எப்படியும் விளங்கப்படுத்த முடியாது...
உண்மையிலேயே அற்புதமான வார்த்தைகள் வந்தியண்ணா...
நான் ஓய்வில் இருந்தபடியால் நிறையக் கூத்துகளை தவறவிட்டுவிட்டேன்...
பார்ப்போம்...
தமிழ்மணம் விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்.
கரெக்ட்டுங்க...தம்ழ்மண வாழ்த்துக்கள்..
Genial dispatch and this mail helped me alot in my college assignement. Thank you on your information.
Post a Comment