இந்த வாரம் ஏதோ விருதுகள் வாரம் போல் இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் தமிழன் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் விருது பெற்றார். பின்னர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழ்மணத்தின் சிறந்த பதிவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்ற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நான் வாக்களித்த பலருக்கு முதலாம் இடம் கிடைத்துள்ளது. சிலர் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார்கள்.
இந்தப்போட்டியில் நானும் என் இரண்டு ஆக்கங்களை அனுப்பியிருந்தேன். பெரும்பாலான என் ஆக்கங்கள் மொக்கையாகவே இருக்கும். அப்படியிருந்தும் கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்மணம் என்னை நட்சத்திரமாக்கி அழகுபார்த்த வேளையில் ஒரு சில நல்ல பதிவுகள் எழுதியிருக்கின்றேன் என நண்பர்கள் கூறினார்கள். என் ஆக்கங்கள் இரண்டும் முதல் 10 இடத்துக்குள் வந்தபடியால் என் தன்னம்பிக்கை இன்னும்கொஞ்சம் வளர்ந்துள்ளது. என்னுடன் போட்டியிட்டவர்கள் பெரியதலைகள் அதில் சிலர் பதிவுலகில் பழம் தின்று கொட்டைபோட்டவர்கள். ஆதலால் இந்தப்போட்டியில் நானும் இருந்தேன் என்பதே மகிழ்ச்சிதான். காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)என்ற பிரிவில் நான் எழுதிய தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரிவு: காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)
இன்னொரு பிரிவான பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பகுதியில் எனது நட்சத்திரவாரப் பதிவான "வல்லிபுர ஆழ்வாரும் வங்காளவிரிகுடாவும்" ஒன்பதாவது இடம் பிடித்துள்ளது.
பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
எனக்கு வாக்களித்த பெருமக்கள் அனைவருக்கும் நன்றிகள். இந்த நேரத்தில் என்னை வலையுலகிற்க்கு இழுத்துவந்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மீண்டும் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
மறுமொழி கருத்துக் கூறியவர்கள்:
ம்,....சும்மா கிறுக்கிற எங்களையும் பதிவரா இனங் கண்டு கொண்ட பதிவுலகப் பெரியோர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
Post a Comment