2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி 2

2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி1

முதலாம் பகுதியில் ரசித்த பதிவுகளின் தொடர்ச்சியே இந்தப் பதிவாகும். ஒரு நாளைக்கு பல நூறு பதிவுகளில் மனம் கவர்ந்த பதிவுகளை ஓரளவுக்கேனும் ஞாபகம் வைத்து அவற்றில் சிறந்தவையாக நான் கருதியவையை மட்டுமே இங்கே தந்துள்ளேன்.

நிர்ஷன்
ஊடகவியலாளர் சக கமேராக் கலைஞரான நிர்ஷனின் பதிவுகளில் ஒரு சமூக அக்கறை எப்போதும் இருக்கும். சில நாட்களாக தன்னுடைய வேலைப் பளுவின் காரணமாக எழுதுவதில்லை என நேரில் கண்டபோது கூறினார்.

இலங்கை ஊடகங்களில் செய்தித் தவறுகள்…!

நிலா
உறுபசி என்ற வலையில் காத்திரமான பல கவிதைகளை எழுதுபவர். இவரின் கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் என்னைப் போன்ற சிறியவர்களுக்கு மூஞ்சிப்புத்தகத்தில் விளக்கம் தருகின்றவர். சமீபகாலமாக ஏனோ எழுதுவதில்லை. எழுத்து மட்டுமல்ல பேச்சும் இவருக்கு சரளமாக வருகின்றது.

புத்தம்....

நர்சிம்
கோப்பரேட் கம்பர் என செல்லமாக அழைக்கப்படும் நர்சிமின் தமிழ் நடை அசத்தலாக இருக்கும். அவரின் பதிவுகள் பல இவரின் உரை நடைக்காவே அனைவராலும் வியக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராகுல் திராவிட்: நிராகரிப்பை நிராகரித்தவன்..

பரிசல்காரன்
கிருஷ்ணகுமார்(இந்தப் பெயர் உள்ளவர் கலக்கல் எழுத்தாளர்கள்)என்ற இயற்பெயரை உடைய பரிசல் இன்னொரு பல்சுவை கலக்கல் எழுத்தாளர். பரிசலின் சினிமா விமர்சனத்தைப் வாசித்துப் படம் பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

நடிகர் விஜய்க்கு...

பனையூரான்
இன்னுமொரு என்னுடைய பாடசாலை மாணவன். கவிதைகளுடன் தன்னுடைய சமூக அனுபவங்களையும் அழகாக எழுதுகின்ற இளைஞர். இலங்கையின் கற்பகதருவான பனையைப் பற்றி இவர் எழுதிய பதிவு பல கதைகளைச் சொல்கின்றது.

அழகான அந்தப் பனை மரம்

பால்குடி
உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்த பால்குடியின் பதிவுகளில் வடமராட்சி மண் மணக்கும். இவரின் கணிதப் புதிர்களுக்கு சிலவேளைகளில் தலையைப் பிய்த்தாலும் எப்படியோ விடை கண்டுபிடித்துவிடுவேன்.

நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறது.

கே.ரவிஷங்கர்
சினிமா, இசை, கதைகள் எனப் பல்சுவையாக எழுதும் ரவிசங்கரின் இசைப் பதிவுகள் பல எனக்குப் பிடித்தமானவைக்கு காரணம் இளையராஜா தான். பெரும்பாலான இசைப் பதிவுகளை அனுபவித்து எழுதும் ரவிஷங்கரின் எழுத்தை வாசிக்கும் போது அதே சுகம் கிடைக்கும்.

இளையராஜாவின் வயலின் ரங்கோலி

சினேகிதி
காத்திரமான பதிவுகளை எழுதும் சினேகிதி அண்மைக் காலமாக எழுதுவதைக் குறைத்துள்ளார். புலம்பெயர் மக்களின் பிரச்சனைகளுடன் சில மனோதத்துவ விடயங்களையும் சினேகிதி எழுதியுள்ளார்.

உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்

சர்வேசன்
அழிப்பவன் அல்ல அளப்பவன் எனச் சொல்லிக்கொண்டு பல கருத்துக் கணிப்புகளையும் சினிமா, இலக்கியம் என பல்சுவைகளிலும் எழுதும் சர்வேசனின் பொன்னியின் செல்வன் in a nut shell. பொன்னியின் செல்வன் ரசிகர்களினால் அதிகம் பாராட்டுப் பெற்றதுடன் சில விவாதங்களும் நடந்தன.

பொன்னியின் செல்வன் in a nut shell.

சதீஸ்
என்றும் ப்ரியமுடன் உங்கள் பிரியமானவனாக வலை எழுதும் ஒலிபரப்பாளரான சதீஸ் பெரும்பாலும் சினிமா, கிரிக்கெட் இடையிடையே ச்மூகம் சார்ந்த கருத்துக்களை எழுதுகின்றார். நயந்தாராவின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்த சன் டிவியைச் சாடி எழுதியது இந்தப் பதிவு

நயன்தாராவை சங்கடப்படுத்திய சன் டி.வி

சந்ரு
பெரும்பாலும் தன்னுடைய கருத்துக்களை எந்தவிதமான பயமுமின்றி எழுதும் சந்ரு. அரசியல், சமூகம் இடையிடையே சினிமா, கவிதை, நகைச்சுவை என பலசுவைகளில் எழுதுகின்றவர். அண்மைக்காலத்தில் சர்ச்சைகளும் இவருடன் கூட வருகின்றன. எப்போதும் சீரியசாக எழுதும் சந்ருவின் இந்த நகைச்சுவைப் பதிவு தான் ஏனோ என்னைப் பெரிதும் கவர்ந்தது.

காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...

சுபாங்கன்
ஐந்தறைப் பெட்டியில் ஆரம்பத்தில் தொழில்நுட்ப சக சமூக அக்கறைப் பதிவுகளாக எழுதிய சுபாங்கன் தற்போது பெரும்பாலும் நகைச்சுவைப் பதிவுகளும் எழுதுகின்றார். அத்துடன் சுபாங்கனின் அனுபவப் பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை. அந்த வகையில் இந்தப் பதிவில் சுபாங்கன் பெண்களைப் பற்றி நல்லதொரு ஆராய்ச்சியே செய்திருக்கின்றார்.

பஸ்சில் பயணிக்கும் நாகரீக நங்கையர்

சுபானு
ஊஞ்சலாடும் சுபானு தொழில்நுட்பம் கவிதை விஞ்ஞானக் கதை என பல்சுவையாக எழுதுபவர். அவரின் 3A எடுத்துப்பார் கவிதை யதார்த்ததிற்க்கு அருகில் இருக்கின்றது.

3A எடுத்துப்பார்

தர்ஷன்
அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் சமூகம் சார்ந்த பதிவுகளை எழுதுகின்றார் தர்ஷன். சில காலமாக ஒன்றிரண்டு பதிவுகளே எழுதிய தர்ஷன் அண்மைக் காலமாக நிறையவே நிறைவாக எழுதுகின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்யலாம்

தூயா
என்னுடைய அன்புக்குரிய பங்கு. புலத்தில் தமிழ் படித்து அழகாக எழுதும் பெண். தூயாவின் சமையல்கட்டில் பல இளைஞர்களுக்குப் பயனுள்ள சமையல் குறிப்புகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் சுவையான உணவுகளை உண்ணவைத்தவர். தன்னுடைய இன்னொரு வலையில் அரசியல், சமூகம் சில மொக்கைகள் என எழுதியவர் துரதிஷ்டவசமாக அண்மையில் அந்த வலையை வைரஸ் தாக்கிவிட்டது. அந்த வலையில் அவர் எழுதிய பேஸ்புக் பதிவு மிகவும் கவர்ந்தது, அதன் சுட்டியைத் தரமுடியாமல் இருப்பதால் சமையல் குறிப்பில் ஒரு சுவையான சமையல்.

வெண்டிக்காய் பால்கறி
வரோ
வான்மீகி என்ற பெயரில் எழுத ஆரம்பித்து இன்று வரோ என்ற பெயரில் தன்னுடைய பதிவுகளை எழுதுகின்றார். அரசியல், சினிமா, விளையாட்டு, சிறுகதைகள், ஒரு தொடர்கதை என தன்னுடைய பதிவுகளில் எழுதும் வரோ ஒரு ஊடகவியலாளரும் கூட.

குடாநாட்டு நடப்பு

உண்மைத்தமிழன்

எந்தவொரு விடயத்தையும் அழககாவும் சிறப்பாகவும் எழுதும் உண்மைத்தமிழன். அரசியல், சினிமா, பலசுவை என எழுதிக்குவிக்கும் இவரின் வலை அண்மையில் வைரசினால் பாதிக்கப்பட்டது. இவரின் இந்தப் பதிவில் ஒரு நிகழ்வை நேரடியாகப் பார்த்த அனுபவம் கிடைக்கும்.

கலைஞர் கருணாநிதிக்கு கலை உலகப் படைப்பாளி விருது - பாராட்டு விழா நிகழ்ச்சிகள்..!

யோகா
சமூகம், சினிமா, விளையாட்டு, நகைச்சுவை எனப் பல தடங்களில் பயணித்த யோகா சமீப காலமாக ஏனோ எழுதுவதைக் குறைத்துவிட்டார். ட்விட்டரில் கூட அவரைக் காண்பது அரிது. 2010ல் தன்னுடைய பழைய ஃபோர்முக்கு வருவார் என நினைக்கின்றேன்.

ஹர்பஜன் சிங் - சுய அறிக்கை

யுவகிருஷ்ணா
லக்கிலுக்காக அறியப்பட்டு இன்றைக்கு யுவகிருஷ்ணாவாக இருக்கும் நண்பர் லக்கியின் பதிவுகள் பலராலும் வியந்து பாராட்டப்படுபவை. ஒரு காலத்தில் தினமும் 3 அல்லது 4 பதிவுகளை இட்ட லக்கி இப்போது இடையிடையே எழுதினாலும் வீச்சு மட்டும் குறையவில்லை. அரசியல், சினிமா, கதை, பின்நவீனத்துவம் என பலதையும் கட்டி ஆளும் வல்லமை படைத்தவர். இவரது பதிவுகளில் காணப்படும் எள்ளல் சிறப்பாகும்.

வேட்டைக்காரன்

14 கருத்துக் கூறியவர்கள்:

Subankan சொல்வது:

ஆகா, என்னா ஒரு வில்லத்தனம்? அந்தப்பதிவு எழுதி எத்தினையோ மாதமாகியும் இன்னும் நாளைக்கு பத்துப் பேராவது அதைப்படிக்க வந்திட்டிருக்காங்க. நன்றி அண்ணா.

எல்லாமே நல்ல தெரிவுகள்!

பனையூரான் சொல்வது:

எழுதும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய பதிவு அது. நன்றி வந்தியத்தேவன்

தர்ஷன் சொல்வது:

ம்ம் அட என் பதிவையும் போட்டிருக்கிறீர்கள். இலங்கையின் மூத்த பதிவரின் அங்கீகாரம் நன்றி வந்தி அண்ணா
இப்ப டிசெம்பர் விடுமுறை என்பதால்தான் இந்த மாதம் நிறைய பதிவுகள் போட முடிந்தது. பார்ப்போம் அடுத்த வருடம் எப்படியோ?

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

harbajan singha nan vittalum neenga yarume viduradha illai, 2010la romba elutha irukken,


varusa kadaisi aanigalai pidingi vittu varugiren

சி தயாளன் சொல்வது:

அருமை...

Unknown சொல்வது:

நன்றி நண்பரே. லேட்டஸ்ட் பதிவு படிச்சீங்களா?

இளையராஜா-பாலுவை கேளடி கண்மணி

http://raviaditya.blogspot.com/2009/12/blog-post_28.html

KANA VARO சொல்வது:

//வரோ
வான்மீகி என்ற பெயரில் எழுத ஆரம்பித்து இன்று வரோ என்ற பெயரில் தன்னுடைய பதிவுகளை எழுதுகின்றார். அரசியல், சினிமா, விளையாட்டு, சிறுகதைகள், ஒரு தொடர்கதை என தன்னுடைய பதிவுகளில் எழுதும் வரோ ஒரு ஊடகவியலாளரும் கூட.//

பதிவில் என்னையும் இணைத்ததற்கு நன்றி . ஆரம்பம் முதல் 'வரோ' என்ற பெயரில் தான் எழுதுகின்றேன். என்னுடைய Blog TITLE முதலில் 'வான்மீகி' தற்பொழுது 'அகசியம்'.

Bavan சொல்வது:

கலக்கல் அண்ணா...:)

இப்பதான் நீங்க இங்கே போட்ட பதிவுகளெல்லாம் ஓரளவு பார்த்து முடித்தேன்...

பகிர்வுக்கு நன்றி..:)

வானதி சொல்வது:

இந்தப் பதிவு யூத்ஃபுல் விகடனின் குட் பிளாக்ஸ் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றது. வாழ்த்துக்கள் வந்தியத்தேவன்

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

வானதி

லோ. நிலா சொல்வது:

எண்ட பதிவையும் போட்டிருக்கிறிங்கள், ஆரம்பம் முதலே நீங்கள் தரும் ஊக்குவிப்புக்கு நன்றி வந்தியண்ணா.....

விரைவில்
புதிய பதிவுகள் வரும்...

முனைவர் இரா.குணசீலன் சொல்வது:

நல்ல வலைப்பதிவர்களை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்..

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொல்வது:

ஆம் அண்ணா அனைவரின் பதிவையும் பதிவர்கள் வாசிக்க வேண்டுமென்ற ஒரு நல்ல நோக்கத்தில் அமைந்த பதிவர்களின் பதிவுத் தொகுப்பு அருமை

வாழ்த்துக்கள்

Unknown சொல்வது:

அண்ணா....
அசத்தலான தொகுப்பு,...

இப்படியான தொகுப்புக்கள் நிச்சயமாக பெரும் உதவியானவை....

புதிதாக வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்திருப்பவர்களுக்கு இப்படியான பதிவுகள் நிச்சயம் பெரிய உதவியாக இருக்கும்.....


நீங்களே எழுதியதால் வந்தியத்தேவன் என்றொரு பதிவரின் பதிவுகள் மட்டும் தவறவிடப்பட்டிருக்கின்றன....

உண்மைத்தமிழன் சொல்வது:

வந்தி..

நான் இப்போதுதான் இது பற்றி அறிந்தேன்.

சுட்டி கொடுத்தமைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள்..!