ஹாட் அண்ட் சவர் சூப் 11-12-2009

யாழ்ப்பாணப் பயணம்

கடந்த சில நாட்களாக உறவினர்கள் சிலருக்காக யாழ்ப்பாணம் செல்வதற்கான பயணச் சீட்டுக்களைப் பெற கொழும்பு பிரதான பஸ் நிலையத்திற்குச் செல்லவேண்டி இருந்தது. தமிழன் என்றாலே வரிசையில் நிற்கவேண்டும் என்பதற்க்கிணங்க நீண்ட வரிசையில் அதிகாலையில் நின்றால் தான் அன்றைய இரவிற்க்கான பயணச் சீட்டுக் கிடைக்கும்.

கிட்டத்தட்ட 500க்கு மேற்பட்டவர்களுக்கு பயணச் சீட்டு வழங்க ஒருவர் மட்டுமே அந்த பஸ் நிலையத்தில் வேலைக்கமர்த்தப்பட்டிருக்கின்றார். 7 கருமபீடங்கள் இருந்தும் ஒன்றில் தான் யாழ் செல்வதற்கான பயணச் சீட்டு வழங்குகின்றார்கள். ஆகக்குறைந்தது ஒரு மூன்று அல்லது நாலு கருமபீடங்களில் சீட்டை வழங்கினார் மக்களுக்கு வசதியாக இருக்கும்.

ஆனாலும் நம்மவர்கள் இதிலும் தங்கள் கைவரிசையைக் காட்டிவிடுகின்றார்கள். உள்ளே பயணச்சீட்டுக் கொடுக்கும் நபர் தமக்குத் தெரிந்தவர் என்றால் பின்கதவு வழியாக பயணச்சீட்டைப் இலகுவாக பெற்றுக்கொள்கின்றார்கள். அத்துடன் அந்தக் கருமபீடத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் தெரியாததால் பலருக்கு மொழிப் பிரச்சனையால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்வார்களா?

தமிழன் என்ற வரைவிலக்கணத்துடன் மறக்காமல் வரிசையையும் இணைக்கவேண்டும்.

ஐயப்பனும் சிறுவர்களும்

தற்போது சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் அனுஷ்டிக்கும் காலம். வீதிகளில் கறுத்த உடைகளுடன் பல ஐயப்பன் பக்தர்களை காணக்கிடைக்கின்றது. பெரியவர்களுடன் சில சிறுவர் சிறுமிகளும் மாலை போட்டிருப்பது ஏனோ மனதை நெருடுகின்றது. காரணம் ஒரு மனிதனின் தனித்துச் செயல்ப்படும் வயது 18 வயதின் மேல் தான் ஆரம்பமாகின்றது எனச் சொல்கின்றார்கள். அப்படியிருக்கையில் சிறுவர்களை பெற்றோர்களின் உந்துதலின் பெயரில் மாலை போட அனுமதிக்கலாமா? சிந்திக்க தெரியாத வயதில் சபரிமலை விரதம் என்பது கடினமானது. ஆன்மிகவாதிகள் கோபம் கொள்ளாது தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

சிறுவர்களாக இருக்கும் பெளத்த துறவிகளைப் பார்க்கும் போதும் இதே எண்ணம் எனக்கு ஏற்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் போராளிகள் என பலதுக்கும் குரல் கொடுக்கும் அமைப்புகள் மதம் சம்பந்தப்பட்டதாலோ என்னவோ இதனைக் கண்டுகொள்வதில்லை.

இளையராஜா

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவை தன் இசைக்குள் வைத்திருந்த இசைஞானியைப் பற்றி இப்போ சில கற்பூரவாசனை தெரியாதவர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒருவரின் இசை என்ன மொழியில் இருந்தாலும் கேட்பவரின் மனதைத் தொட்டால் அது சிறந்த இசைதான். ராஜாவின் இசைக்கோலங்கள் பல எத்தனை தடவை கேட்டாலும் இன்னமும் மறக்கமுடியாது.

ஒரு படத்தினை வைத்து இசைஞானியை எடைபோடும் கோமளிகளை என்னவென்று சொல்வது? தமிழர்களுக்கு எழுதுகின்ற இவர்கள் தங்கள் பெருமைகளை இன்னொரு மொழி பேசும் இடத்தில் கேளுங்கள் சொல்வார் என பீத்துவதும் சிறுபிள்ளைத் தனமானது. ராஜாவின் இசை தென்னிந்திய மொழிகளில் பிரபலம் என்பது அந்தப் பிரபலத்துக்குத் தெரியவில்லையோ. அண்மையில் உயிர்மையில் அவரின் இசை பற்றிய கட்டுரையில் இசைஞானியைத் தவிர ஏனைய இசையமைப்ப்பாளர்களின் இசைகள் நன்றாக இருப்பதாகவும் ஆனால் பாடல்வரிகள் மட்டும் ஆபாசமாக இருப்பதாகவும் எழுதித் இசைஞானியின் மேல் தனக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை அப்பட்டமாக காட்டியிருந்தார்.

இசைஞானி, கலைஞானி மேல் இவர்காட்டும் காழ்ப்புணர்ச்சி அறிந்ததுதான் ஆனாலும் இவர் அடிக்கடி தன் காழ்ப்புணர்ச்சியை இவர்கள் மேல் வைக்காமல் தன் புணர்ச்சியை எழுதட்டும் எவரும் தட்டிக் கேட்கமாட்டார்கள்.

ராஜாவின் இசைக்கு எப்படி மக்கள் மயங்குகின்றார்கள் என்பதற்க்கு இந்தக் காணொளியைப் பாருங்கள். ஒவ்வொருவரினதும் மனநிலையை தெளிவாகப் பார்க்கலாம், இளம் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தின் உற்சாகம், நடிகர் பிரசன்னாவின் முகத்தில் காணப்படும் பரவசம், வினுச்சக்கரவர்த்தியின் ஆனந்தக் கண்ணீர் என பலரை ராஜாவின் இந்த கானம் பரவசப்படுத்தியிருக்கின்றது.நடிகைகள் படம்

என்னுடைய ஹாட் அண்ட் சவர் சூப்பில் ஒரு கவர்ச்சிக்காக நடிகைகளின் படம் போடுவது வழக்கம். இந்தப் படம் பலரையும் கவர்ந்திருக்கின்றது. அதே நேரம் சில நண்பர்கள் என்னிடம் இது தேவையா? எனவும் குறைப்பட்டார்கள். இப்படியான பல்சுவைகளை எழுதும் சிலர் வயது வந்தவர்களுக்கான ஜோக் என எழுதும் போது வெறுமனே படம் போடுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் எண்ணம் ஆனாலும் சில நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறிப்பாக சுபானுவின் கடந்த முறை சூப்பின் பின்னூட்டத்திற்காக இதனை நிறுத்த இருந்தேன்.

ஆனால் ஏனைய நண்பர்களின் பலரின் அன்பு மிரட்டலால் மீண்டும் சூப்பில் படம் போடுவது என முடிவுக்கு வந்துள்ளேன். சுபானு போன்ற நண்பர்கள் பொறுத்தருள்க.

22 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

நான் தான் முதலாவது...

Unknown சொல்வது:

தமிழர்கள் என்றால் வரிசைகள் என்பதோடு அந்த வரிசைகளுக்கு டிமிக்கி காட்டி முன்னுக்கு இருக்கிறவன ஏமாத்தி தான் கெதியாப் போறவன் எண்டதயும் சேத்து விடுங்கோ.

1 லீற்றர் மண்ணெண்ணைக்காக 2006களில் வரிசைக்கு நின்றதெல்லாம் ஞாபகம் வருது.
சிலத நினைச்சுப் பாக்க எரிச்சல் வரும்.
தங்கட சமூதாய அந்தஸ்த சனம் உதில தான் பாவிச்சு முன்னுக்கு போகும், அல்லது பின்னுக்கால வாங்கீரும்.


ஐயப்பனும் சபரிமலையும்?
உது பயங்கரக் கொடுமை.
அந்த அப்பாவிச் சிறுவர்களைப் பாக்கும் போது மனசில ஒரு சோகம் வாறதோட எங்கட சமூக அமைப்பைப் பற்றி கோபமும் வருமண்ணா.
எங்கட பக்கத்தில பிழை இருக்கும் போது நாங்கள் பிக்குகளை சுட்டிக் காட்டினால் 'நீ முதலில் உங்கட சமூகத்தத் திருத்து முதலில' எண்டு சொன்னால் நாங்கள் ஒண்டும் செய்ய முயடியாது.
அதுதான் நான் நான் மற்ற சமயங்களப் பற்றிக் கதைக்கப் போறதில்ல.
எங்கட ஊத்தைகள முதலில் கழுவினாத் தான் மற்றைய ஊத்தைகளைப் பற்றி நாங்கள் கதைக்கத் தகுதியுள்ளவர்கள் ஆவோம்.


இளையராஜா?
விடுங்கள் அண்ணா...
கமல் மீதான இவ்வாறான விமர்சனங்கள் பழகிவிட்ட மாதிரி உந்த சர்று புர்றுன்னு கத்துறவரின்ன விமர்சனங்களும் பழகீரும்.
என்னத்த சொன்னாலும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு பெயர் இளையராஜா.


படம் போட்டதற்கு நேற்று விடுத்த எச்சரிக்கை நடைமுறைப்படுத்தப்படும்.


சூப் நல்லா இருக்கு.

Unknown சொல்வது:

தமிழிஷ் வாக்குப்பட்டை எங்கே?

maruthamooran சொல்வது:

தமன்னா அன்ரியின்ர படம் போட்ட வந்தி வாழ்க.

Unknown சொல்வது:

//மருதமூரான். said...
தமன்னா அன்ரியின்ர படம் போட்ட வந்தி வாழ்க. //

அந்தாப் பெரிய பதிவில அந்தப் படத்தைப் பற்றி மட்டும் கருத்துக்கூறிய உங்களை எதிர்க்க மகளிரணியினர் தயாராகின்றனர்.

maruthamooran சொல்வது:

மகளிர் அணியின் எந்த தாக்குதல்களையும் சமாளிக்க ‘வந்தியர்’ உள்ளிட்ட பெரு முதலைகளுடன் ஆலோசனையில் இருக்கிறேன்.

Bavan சொல்வது:

///பின்கதவு வழியாக பயணச்சீட்டைப் இலகுவாக பெற்றுக்கொள்கின்றார்கள்.///

இது எங்குதான் இல்லை...
திருத்தமுடியாத விடயங்களில் இதுவும் ஒன்று..

///சிறுவர்களாக இருக்கும் பெளத்த துறவிகளைப் பார்க்கும் போதும் இதே எண்ணம் எனக்கு ஏற்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் போராளிகள் என பலதுக்கும் குரல் கொடுக்கும் அமைப்புகள் மதம் சம்பந்தப்பட்டதாலோ என்னவோ இதனைக் கண்டுகொள்வதில்லை.
///

மதம் சம்பந்தமாக கதைத்து ஏன் தேவையில்லாத பிரச்சினைகளஜல் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று அமைதியாக இருக்கின்றனவோ என்னவோ...

அப்படியில்லாமல் கதைத்திருந்தால் போலிச்சாமியார்கள் பிரச்சிரனக்கும் தீர்வு வந்திருக்குமே..
****

நல்லா இருக்கு..:)

Anonymous சொல்வது:

வரிசை என்பது தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட சாபம் அல்ல. ஒரு ஒழுக்கமுள்ள சமூகத்தின் நடத்தை. அதில் முதல் வந்தவுக்கே முன்னுரிமை.

ஆனால் தமிழன் என்றால் ஏமாற்று லஞ்சம் சுயநலம் என நிறைய இருக்கிறதே.. எங்கும் ஒரு நியாயமான விதியை உடைக்கும் முதல் ஆளாக தமிழன்தானே இருக்கிறான்?

Nimal சொல்வது:

யாழ்ப்பாண பஸ் மட்டுமல்ல காலி பஸ்சிற்கும் வரிசையில் 4 மணித்தியாலம் நின்று (வெள்ளிக்கிழமை) டிக்கற் எடுத்திருக்கிறேன்.

வரிசை என்பது பழகிவிட்டிருந்தாலும், வரிசையில் ஒழுங்கு தாண்டி எதையும் செய்வது எமக்கு அதைவிட பழகிவிட்டது.

மற்றப்படி வரிசையில் நின்று, பின்கதவால் டிக்கற் வாங்காதவரை வரிசையில் நிப்பதில் என்ன தவறு என்று எனக்கு விழங்கவில்லை. வரிசை பாய்ந்து எதையும் செய்யப் பழகியதால் வந்த மனநிலையோ தெரியாது.... :)

மேலும் நீங்கள் போடும் சில படங்கள் Not Safe For Office வகையானவை என்பதை தவிர படங்கள் போடுவது எந்த பிரச்சினையும் இல்லை. இங்கிருப்பதைவிட 'நல்ல' படங்கள் பத்திரிகைகளின் நடுப்பக்கத்திலேயே வருகிறதே... :P

புல்லட் சொல்வது:

நல்ல பதிவு அண்ணன். கியுல நிக்கிறதுக்கெல்லாம் இப்ப சந்தர்்பம் கிடைக்கிறதில்ல .. அதனாலதான் பட பெஸ்ட் சோக்களுக்கு போறது.. பழைய ஞாபகங்கள் வரும்..

நானும் கிட்டடில யாழ் போற ஐடியா .. புக் பண்ணி தருவியளே?

கிட்டடியில ஒராள் தன்னை தமன்னா என்று அழைத்ததற்கும் திடீரென்று எல்லாருடைய எதிர்ப்பையும் மீறி இங்கு தமன்னா இருப்பதற்கும் இரக்கும் தொடர்பை நான் சொல்லித்தான் எல்லோருக்கும் தெரிய வேண்டுமென்பதில்லை.. ;-)

தர்ஷன் சொல்வது:

வரிசையில் போவது நல்லதுதான் வந்தி,
அதை மீறுவதுதான் கூடாதது
அப்புறம் இளையராஜாவை விமர்சிப்பதால் உடனே சாருவை நிராகரித்து விடாதீர்கள் அவரது மொழி நடை சுவாரசியமானதொன்று
அப்புறம் சூப்பில் காரம் குறைந்தால் இங்கே வருவதை மறு பரிசீலனை செய்ய வேண்டி வரும். யார் சொன்னா என்னன்னா நீங்க தொடர்ந்து படம் போடுங்க

தர்ஷன் சொல்வது:

சிறு வயது பிக்குக்களைப் பற்றி நீங்கள் சொன்னது உண்மைதான். அதுவும் அந்த சிவுரை அணிந்து கொண்டு அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும். புத்தர் கூட எல்லாம் அனுபவித்து விட்டுத்தான் துறவறம் பூண்டார் ஆனால் இங்கே

அப்புறம் நம்ம சாமிகளை பற்றியும் நம்பிக்கை பற்றியும் பேசாதீர்கள் அடிக்க வருவார்கள் சகிப்புத் தன்மை குறைவுதானே

சிங்களத்தில் பிக்குகளின் மனநிலை தொடர்பான அருமையான படைப்புகள் நாவலாகவோ சினிமாவாகவோ வந்துள்ளன
அவை எதிர்ப்புகளை விட பாராட்டுகளையே அதிகமாய் பெற்றுள்ளன எனக்கு ஞாபகம் வருபவை சங்காரா, மே மகே சந்தய் போன்றவை

நாம் அப்படியெல்லாம் இல்லை வெறும் வாய்ச்சொல் வீரர்கள்

Anonymous சொல்வது:

//கிட்டடியில ஒராள் தன்னை தமன்னா என்று அழைத்ததற்கும் திடீரென்று எல்லாருடைய எதிர்ப்பையும் மீறி இங்கு தமன்னா இருப்பதற்கும் இரக்கும் தொடர்பை நான் சொல்லித்தான் எல்லோருக்கும் தெரிய வேண்டுமென்பதில்லை.. ;-)//

பரதேசி,,,, தமன்னாவின் கலர் என்டதுக்கும் தமன்னா போல என்டதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்டு தெரியாத பனாதைகள் எல்லாம் புல்லட் த கிரேட் என்டு சொல்லுதுகள். எனக்கு ஒன்டும் தமன்னா மாதிரி கிழிஞ்ச வாயோ சொத்தி மூக்கோ இல்லை... உன் தலையில் இடி விழ.. சும்மா இல்லை சீரியசாகத் தான் சொல்லுறன்.. ஹி ஹி...

ஒரே ஊர்க்காரரிடம் கலகமூட்டுவது நடவாது.. நீ பேசாமல் நடையக் கட்டு பன்டி...

Anonymous சொல்வது:
This comment has been removed by the author.
Jackiesekar சொல்வது:

ராஜா எப்பவுமே ராஜாதான்

KANA VARO சொல்வது:

தமன்னா கர்ப்பமாமே? கேள்விப்பட்டீரோ வாத்தியாரே?

Anonymous சொல்வது:
This comment has been removed by the author.
Subankan சொல்வது:

ஐயப்பன் மாலை போட்டிருக்கும் சிறுவர்களைப் பார்த்து எனக்குத் தோன்றியதும் இதுதான்.

// தமன்னா கர்ப்பமாமே? கேள்விப்பட்டீரோ வாத்தியாரே?//

தகவலுக்கு நன்றி.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

:)

KASBABY சொல்வது:

nallathaane irukku,summa padathai podunka....

வெற்றி-[க்]-கதிரவன் சொல்வது:

-:)

ILLUMINATI சொல்வது:

friend,i'm sort of new to the blogging world.do read my reviews and let me know of what you think.thank you.and vote it if you think it is any good.

http://www.tamilish.com/user/view/shaken/login/ramkvp

http://illuminati8.blogspot.com/2009/12/disclosure.html