2009ல் ரசித்த பதிவுகள் - பகுதி 1

2009ல் உலகம் எப்படி இருந்தது நாட்டு நடப்புகள் எப்படியிருந்தது என ஒரு தொகுப்பு இடலாம் என நினைத்தேன் ஆனாலும் சில விடயங்களை விட்டுவிட்டும் போக முடியாது. சில விடயங்களை வெளிப்படையாக சொல்லவும் முடியாது. காரணம் உலகமே கண்ணை மூடிக்கொண்டிருந்த ஆண்டு இந்த ஆண்டு ஆகவே நானும் வழக்கம் போல் கண்ணை மூடிவிட்டேன். சொந்தச் செலவில் சூனியத்தை வைக்க விரும்பவில்லை. அதனால் இந்த ஆண்டில் என்னை அதிகம் கவர்ந்த சில பதிவுகளை பதிவர்களுடன் தருகின்றேன்.

திரட்டிகளூடாகவும் நான் பிந்தொடர்பவர்களினதும் பதிவுகளில் பலவற்றை ரசித்து வாசித்திருந்தாலும் அவற்றில் மனதில் நிற்பவற்றின் சுட்டிகள் மட்டும் தருகின்றேன்.

அச்சுதன்
பங்குச்சந்தை பற்றி தினமும் பதிவு எழுதுகின்றவர். தன்னுடைய துறையின் மேல் இவர் வைத்திருக்கும் ஈடுபாடு பாராட்டுக்குரியது. பங்குகளின் வீழ்ச்சி வளர்ச்சி என பலரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சிறப்பாக எழுதுகின்றார்.

பங்கு வர்த்தகம் சூதாட்டமா?

அசோக்பரன்
அதிகமாக அரசியல் பதிவுகளை எழுதுகின்றவர், இவரின் மொழி ஆளுமை பலரால் சிலாகித்துப் பேசப்படுவது. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பற்றி ஒரு தொடர் எழுதுகின்றார்.

இலங்கையில் தமிழ் சினிமா இல்லாதது கவலைக்குரியது

ஆதிரை
காட்டிக் கொடுத்த 'விசா'ப்பிள்ளையார் என்ற இவரின் பதிவில் வெள்ளவத்தையில் பிரபலமான விசாப் பிள்ளையார் பற்றிய சிறிய குறிப்புகளை தனக்கே உரிய பாணியில் எழுதியிருந்தார். காத்திரமான பதிவுகளை எழுதும் இவர் இடையிடையே சீரியசான மொக்கைப் பதிவும் ரசிக்கும் படி எழுதுகின்றார்.

காட்டிக் கொடுத்த 'விசா'ப்பிள்ளையார்

ஆயில்யன்

"நண்பனுக்கும் சகோதரனுக்கும் இடைப்பட்ட ஒர் உறவுக்கு, பெயர் இருந்தால் அதை நான் கானா பிரபா என்றே அழைப்பேன்" என நட்புக்கு புது இலக்கணம் வகுத்த ஆயில்ஸின் அனுபவப்பகிர்வுகள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கும்.

பாலிடெக்னிக் - வரைந்தும் வரையாமலும்..!

பாலவாசகன்
ஆறாவது அறிவைப் பற்றி இவர் எழுதிய தொழில்நுட்பப் பதிவு, அடிக்கடி கவிதை சினிமா விமர்சனம் சமூகம் பற்றிய பார்வைகள் என பல விடயங்களை யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதும் மருத்துவபீட மாணவன் இவர்.

ஆறாவது புலன்…தகவல் தொழில் நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சி…!

பவன்
நன்றாக மொக்கை போடும் இவரின் போட்டோ கொமெண்ட்ஸ் பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை. கிரிக்கெட் வீரர்களின் படம் கிடைத்தால் போதும் சிங்கம் கொமெண்ட் அடித்தே அவர்களைக் கிண்டல் அடிக்கும்.

என்ன பேசி இருப்பாங்க ???

புல்லட்
அதிரடியாக நகைச்சுவைப் பதிவுகளை எழுதுபவர். இவரின் பதிவுகள் பலவற்றை வாசிக்கும் போதே வாய்விட்டுச் சிரிக்கவைக்கும் வல்லமை இவருக்கு கை வந்த கலை. அண்மையில் ஒரு அரசியல்வாதி பற்றி தன்னுடைய ஒரு பதிவில் எழுதி அந்த விடயத்தை நினைத்து நினைத்து சிரிக்கவைத்தார். ஆனாலும் பாமன் கடை அனுபத்தினால் பல இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார் என்றால் அது மிகையாகாது.

பாமன்கடை பயணிகளுக்கு எச்சரிக்கை. ..

கேபிள்சங்கர்
இவரின் சினிமா விமர்சனங்களினால் எத்தனையோ பேர் மொக்கைப் படங்களைப் பார்க்காமல் தங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தியிருக்கின்றார்கள். இவரின் கொத்துப் பரோட்டாவில் வரும் ஜோக்கும் குறும்படமும் கலக்கலாக இருக்கும்.

இசையெனும் ”ராஜ” வெள்ளம்

சேரன் கிரிஷ்
எண்ணிக்கையில் குறைந்தளவு பதிவுகள் எழுதினாலும் அவை அனைத்தும் காத்திரமாக எழுதும் சேரன் தன்னுடைய அனுபவங்களை மிகவும் சுவை பட எழுதுபவர். இவரின் கேலாங் பற்றிய பதிவு, வெள்ளவத்தைக் காதலர்கள் மற்றும் அண்மையில் யாழ் பயணத்தின் ஒரு அவலம் என்பன முக்கியமானவை.

வெள்ளவத்தை கடற்கரையும் அவசரப்பட்ட காதலர்களும்

டொன் லீ
சிங்கையில் பதுங்கு குழியில் இருக்கும் டொன்லீ இப்போது பதிவுலகை விட ட்விட்டரில் குடித்தனம் நடத்தவே அதிகம் விரும்புகின்றார். தன்னுடைய ஐரோப்பிய விஜயத்தை சுவாரசியமாக எழுதியிருக்கின்றார்.

ஐரோப்பிய திக்விஜயம் I

டயனா
அறிந்ததும் அனுபவமும் என தன்னுடைய பதிவுகளை இடைக்கிடையே எழுதும் டயனா ஒரு ஒலிபரப்பாளரும் கூட. தன்னுடைய ஒலிபரப்பு அனுபவங்களை விட சினிமா ஏனைய விடயங்களை இடையிடையே எழுதுகின்றார்.

Titanic சாதனையை தகர்க்கவரும் சினிமாவின் புது அவதாரம் - AVATAR

கீர்த்தி
சிந்தனைச் சிறகில் சிறகடிக்கும் இந்த கவிதாயணி அண்மையில் ஒரு மொக்கைக் கவிதைகூட எழுதிப் பரபரப்பானர். அடிக்கடி கவிதையும் இடையிடயே ஏனைய விடயங்களையும் எழுதுகின்றார்.

பாரதி கண்ட பெண்கள்

ஜாக்கி சேகர்
உலக சினிமாவில் பல நல்ல படங்களைப் பற்றி விமர்சிக்கும் ஜாக்கியின் பதிவுகளில் அவரது சாண்ட்வெஜ் அன்டு நான்வெஜுல் விஷுவல் டேஸ்ட்டில் தன் கமேரா ரசனையும் ஏனைய விடயங்களையும் அழகாகவே எழுதுவார். தன்னுடைய மனைவி வெளிநாடு சென்றதை இட்டு தன்னுடைய தனிமையையும் அவரது சில நாள் பிரிவையும் அழகாக எழுதிய இந்தப் பதிவு பலருக்கும் பிடித்தது.

என் இல்லாளின் முதல் வெளிநாட்டு பயணம்

கனககோபி
கங்கோன் என செல்லமாக அழைக்கப்படும் கோபி மொக்கைப் பதிவுகளை விட சில நல்ல மொழிபெயர்ப்புப் பதிவுகளை சமூக நலன் சார்ந்த பதிவுகளையும் எழுதியிருக்கின்றார், அண்மைக்காலமாக இவர் பதிவு எழுதுவதை விட டிவிட்டரில் குடியிருப்பதையே விரும்புகின்றார்.

2009 இல் வாழ்வதை அறிவது எப்படி...

கரவைக்குரல்
அமீரகத்தில் இருந்து சில காலம் எழுதிய கரவைக்குரல் என்கின்ற தினேஷ் தற்போது இங்கிலாந்தில் இருப்பதால் அதிகமாக எழுதுவதில்லை. இவரது எழுத்துக்களில் ஈழத்து மண்வாசனை அதிகம் மணக்கும்.

வல்லிபுரத்தில் கடல் தீர்த்தம்

கானாபிரபா
தன்னுடைய அனுபவங்களையும் ரசனையையும் அழகாக எழுதும் பிரபா, ஒரு சினிமா கலைக்களஞ்சியம் கூட சினிமா சம்பந்தமான எந்த சந்தேகங்களையும் உடனடியாக தீர்க்கும் பிரபா அண்ணை உலாத்துவதிலும் மன்னன். இப்போது தன்னுடைய காதல் கதையை மன்னிக்கவும் நண்பர்களின் காதல் கதையை அழகாக ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.

"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை"

கிருத்திகன்
கீத் என செல்லமாக அழைக்கப்படும் கிருத்திகனின் மெய் சொல்லப் போறேனில் அவரின் துணிச்சலான பல கருத்துகளும் கிரிக்கெட் பதிவுகளும் மிகவும் பிடித்தாலும் அவரின் பாடசாலை நாட்கள் பற்றிய இந்தப் பதிவுதான் என்னை மிகவும் கவர்ந்தது.

துள்ளித் திரிந்த காலம்

கெளபாய் மது
பேசாப் பொருள்களை அதிகம் பேசும் மது, சில நாட்களாக கொஞ்சமாகவே எழுதுகின்றார். இறுதியாக இவர் எழுதிய ஒரு நகைச்சுவைப் பதிவு ஒன்று பலராலும் பாராட்டப்பட்டது காரணம் நகைச்சுவையிலும் மது பாவித்த வசனங்கள். இவரின் பாலியல் வல்லுறவும் ஆண்களும் பலரால் படிக்கப்பட்ட பதிவு என் நண்பர் ஒருவர் இந்தப் பதிவின் ரசிகர்.

ஒரு பெண் - நான் - ஒரு காலியான இருக்கை

லோஷன்
நாடறிந்த ஒலி/ஒளிபரப்பாளர் பல்சுவை எழுத்தாலும் பலரைக் கவர்ந்தவர். ஆனாலும் அதிகமாக கிரிக்கெட் பற்றி எழுதி கிரிக்கெட் பதிவர் என்ற முத்திரையையும் குத்திக்கொண்டார். இவரின் கிரிக்கெட் பதிவகளை ஏனைய பதிவுகளில் இருக்கும் எள்ளல் பலராலும் பாராட்டப்படுகின்றது.

விஜய் நடிச்சா தாங்க மாட்டோம்?????

மருதமூரான்
காத்திரமான பதிவுகளை எழுதுபவர். அத்துடன் சிறப்பாக சினிமா விமர்சனங்களையும் நடுநிலையாக எழுதுகின்றவர். கிருத்திகன் போல் இவருடைய எழுத்துகளும் என்னை பல சமயங்களில் பிரமிக்கவைத்தன. காரணம் இருவருடைய வயதும் தான். சிறிய வயதில் விஸ்தீரமான சிந்தனை உடையவர்கள் இவர்கள் இருவரும்.

‘கமல்ஹாசன்’ என்கிற திரைத்துறை ஆளுமை.

டொக்டர் முருகானந்தன்
நாடறிந்த எழுத்தாளர், மருத்துவர். இவரது சினிமா விமர்சனங்களைப் வாசித்து பல படங்களைப் பார்த்து ரசித்தவன் நான். இவரது மருத்துவக் கட்டுரைகளில் இருக்கும் நகைச்சுவையுடன் கூடிய விடயங்கள் வாசகர்களை கவர்வதில் வியப்பில்லை.

மணமுறிவுகள் ஏன்? எந்தப் பொருத்தம் முக்கியமானது?

மு.ம‌யூரன்
நீண்ட நாட்களாக வலையுலகில் கலக்கிக்கொண்டிருக்கும் மயூரனின் பதிவுகள் பெரும்பாலும் தொழில்நுட்பம் சமூக சிந்தனை உடையவைகளே. அண்மையில் இவர் எழுதிய இணையக் கனிமை பலராலும் பாராட்டுப் பெற்றது.

Cloud Computing: மழை பெய்யுதா பிழை செய்யுதா?

மயூரேசன்
இலகு தமிழில் பெரும்பாலும் தொழில்நுட்ப பதிவுகள் எழுதுபவர். சிலவேளைகளில் சினிமா விமர்சனத்துடன் தன்னுடைய சில அனுபவங்களையும் பதிவாக இட்டிருக்கின்றார். இவரின் கூகுல் வேவ் பதிவினால் அலையடிப்பவர்களில் நானும் ஒருவன்.

Google Wave ஒரு அறிமுகம்

முரளிகண்ணன்
பலதரப்பட்ட விடயங்களை எழுதும் முரளிகண்ணணும் ஒரு சினிமாக் கலைக் களஞ்சியம். சினிமா சம்பந்தப்பட்ட பல விடயங்களை தன்னுடைய வலையில் அழகாக தருபவர்.

திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை - மனதிற்க்கு தோன்றிய சில காரணங்கள்.

நிமல்
கமேராக் கலைஞரான நிமல் பல்சுவையாக எழுதுபவர். அதிக வேலைகாரணமாக சில நாட்கள் ஓய்வெடுக்கபோகின்றேன் என பதிவே இட்டவர். ஆனாலும் பதிவர் சந்திப்புகளில் பலகோணங்களில் படம் எடுப்பவர்.

நேர்முகத் தேர்வு - சில குறிப்புக்கள்


பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பதிவுகளையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நண்பர்களின் ரசித்த பதிவுகள் வரும்.

50 கருத்துக் கூறியவர்கள்:

ஆயில்யன் சொல்வது:

என் பதிவுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

தொகுப்பு நல்லா இருக்கு -மிஸ் செய்த நல்ல பதிவுகளினை படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது!

ம்ம் நிறைய நேரம் தின்றிருக்கும் !

Bavan சொல்வது:

அண்ணா பதிவுகளைத்தொகுத்து இட்டமைக்கு நன்றி...:)

படிக்காமல் தவறவிட்ட பல பதிவுகளைப்படிக்க உதவியாக இருக்கிறது..:)

///அண்மைக்காலமாக இவர் பதிவு எழுதுவதை விட டிவிட்டரில் குடியிருப்பதையே விரும்புகின்றார்///

சிங்கம் இப்போ யாழ்ப்பாணத்தில் போட்டோ எடுத்துத்திரிவதாகத் தகவல்..
சீக்கிரமே பதிவை எதிர்பார்க்கலாம்..:D

சி தயாளன் சொல்வது:

நாமளும் இருக்கிறமா...ஆவ்..

நல்ல தொகுப்பு, தெரிந்தவர்கள் பலர், புதிய அறிமுகங்களும் இருக்கினம்

இப்ப நான் பிளாக்கர் இல்லை, மினி பிளாக்கர் (ரிவிற்றர்)...ஹிஹிஹி (

Atchuthan Srirangan சொல்வது:

//தன்னுடைய துறையின் மேல் இவர் வைத்திருக்கும் ஈடுபாடு பாராட்டுக்குரியது.//

நான் பங்குச்சந்தை நிபுணன் அல்ல. பங்குச்சந்தையை ஓரளவிற்கு படித்த ஒரு சாமானியன்.

வந்தியத்தேவன் உங்களுக்கு நன்றி

Unknown சொல்வது:

நல்ல பகிர்வு.நல்ல ரசனை.

Mathuvathanan Mounasamy / cowboymathu சொல்வது:

நன்றி வந்தி,

எழுத நிறைய உண்டு... நேரம் இனிவரும் காலங்களில் கிடைக்கும்போலத் தெரிகிறது.. எழுதுகின்றேன்..

balavasakan சொல்வது:

ஆகா..ஆகா..என்னுடைய பதிவிறகும் ஒரு இடமா நன்றி வந்தியண்ணே....

தர்ஷன் சொல்வது:

தவறவிட்ட பதிவுகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது நன்றி

என்.கே.அஷோக்பரன் சொல்வது:

நல்லதொரு தொகுப்பு.
என்னையும் இணைத்திருந்ததில் மகிழ்ச்சி!

உங்கள் பதிவுகளில் 2009ல் என்னைப் பொறுத்தவரையில் உச்சமாகக் கருதுவது - மாற்றான் மனை கவர்தல் - தகாமுறைத் துணைகவரல் - என்ற பதிவை. ஒரு பதிவு என்பதைத் தாண்டி நல்ல அலசல் என்று தான் சொல்ல வேண்டும். - அந்தப் பதிவுக்கு தமிழ்மண விருது கிடைத்தால் நன்று!

ARV Loshan சொல்வது:

//சில விடயங்களை வெளிப்படையாக சொல்லவும் முடியாது. காரணம் உலகமே கண்ணை மூடிக்கொண்டிருந்த ஆண்டு இந்த ஆண்டு ஆகவே நானும் வழக்கம் போல் கண்ணை மூடிவிட்டேன்.//
ஆகா.. தப்பிட்டீங்களே..

//சொந்தச் செலவில் சூனியத்தை வைக்க விரும்பவில்லை. //
நீங்களே இப்படி சொன்னா எப்பிடி? வேற யாரை நாங்க எங்கே போய்த் தேடுவோம் மாமு?

ம்ம்ம்.. நாளா பக்கமும் தேடித் தந்துள்ளீர்கள்..
உங்கள் வாசிப்பு வியக்க வைக்கிறது.. எப்பிடித் தான் நேரம் வைக்கிறதோ?

என்னையும் இணைத்திருந்ததில் மகிழ்ச்சி!நன்றி.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

good collection, keep it up.

i like all your selections

கானா பிரபா சொல்வது:

அட நானுமா ;) நன்றி

நீங்கள் சொன்னவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களின் பதிவுகளை ஏற்கனவே ரசித்திருக்கிறேன். விடுபட்டவைகளைப் படிக்க வாய்ப்புக்கும் நன்றி.

வித்தியாசமான தொகுப்பு, இதை தொடரவும் ஆண்டுக்கு ஒரு முறையாவது

Sanjai Gandhi சொல்வது:

சூப்பர் வந்தி. நீங்க சொன்னா நிச்சயம் நல்ல பதிவாகத்தான் இருக்கும். சில பதிவுகள் படிச்சதில்லை. புக் மார்க் செய்து கொண்டேன். நன்றி நண்பரே.

Subankan சொல்வது:

கலக்கல் தொகுப்பு அண்ணா, விரைவில் அடுத்த பகுதியையும் எதிர்பார்க்கிறேன்.

Unknown சொல்வது:

அடப் பாவி வந்தியண்ணா...
இத்தனை பதிவுகளை ஞாபகம் வச்சிருக்கிறதே பெரிய விஷயம் அய்யா..

நன்றிகள்

எழில் சொல்வது:

இருந்தும் முதல் பகுதியில் இடம்பிடிக்கும் அளவுக்கு "பிரபல பதிவர் வால் புடி புகழ் சந்ரு" வை கருதாமைக்கு தன் சமூகத்துக்காக ஏதாவது செய்யத்துடிக்கும் இன்னும் பலர் கண்டிக்கிறார்கள்.

Jackiesekar சொல்வது:
This comment has been removed by the author.
ஆதிரை சொல்வது:

விசாப் பிள்ளையார் மறந்தாலும் நீங்கள் விடப் போறதில்லை போலும்...

தொகுப்புக்கு நன்றி

Jackiesekar சொல்வது:

யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்று ஆர்வத்தோடு திறந்து போது... இதில் நானும் இருக்கின்றேன் என்ற போது சந்தோஷமாய் இருக்கின்றது..

எனது பதிவில்நான் ரசித்த பதிவை நீங்கள் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி..

நான் எழுதியதுதான் என்றாலும்... திரும்பவும் உங்கள் லிங்க் மூலம் போய் படித்த போது... நான்தான் அதை எழுதினேனா? என்று ஆச்சர்யபடும் அளவுக்கு இப்போது படிக்கும் போது இருக்கின்றது...

நன்றி வந்தியதேவன்...

அன்புடன்
ஜாக்கிசேகர்...

Jackiesekar சொல்வது:

ஓட்டு போட்டாச்சு நண்பா..

வந்தியத்தேவன் சொல்வது:

//ஆயில்யன் said...
என் பதிவுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! //
இதில் என்ன சந்தேகம் உங்கள் பதிவுகளை நான் விரும்பி வாசிப்பேன்.

//தொகுப்பு நல்லா இருக்கு -மிஸ் செய்த நல்ல பதிவுகளினை படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது!//

நன்றிகள் நானும் இதில் உள்ள பதிவுகளை மீண்டும் ஒருமுறை வாசித்தேன்.

//ம்ம் நிறைய நேரம் தின்றிருக்கும் //
ஆமாம் ஆனாலும் சுவாரசியமான பதிவுகள் என்பதால் நேரத்தைக் கணக்கில் எடுக்கவில்லை.

வந்தியத்தேவன் சொல்வது:

//Bavan said...
அண்ணா பதிவுகளைத்தொகுத்து இட்டமைக்கு நன்றி...:)//

நன்றிகள் பவன்,

//படிக்காமல் தவறவிட்ட பல பதிவுகளைப்படிக்க உதவியாக இருக்கிறது..:)//

அப்போ நானும் ஒரு திரட்டியோ ஹிஹிஹி.

//சிங்கம் இப்போ யாழ்ப்பாணத்தில் போட்டோ எடுத்துத்திரிவதாகத் தகவல்..
சீக்கிரமே பதிவை எதிர்பார்க்கலாம்..://
நானும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//’டொன்’ லீ said...
நாமளும் இருக்கிறமா...ஆவ்..//
ஓஹோ நீங்களும் ஆயிலிஸின் ஆளோ சந்தேகப் பேர்வழி.

//நல்ல தொகுப்பு, தெரிந்தவர்கள் பலர், புதிய அறிமுகங்களும் இருக்கினம்//

பல புதியவர்கள் மிகவும் நன்றாகவும் சிறப்பாகவும் எழுதுகின்றார்கள்.

//இப்ப நான் பிளாக்கர் இல்லை, மினி பிளாக்கர் (ரிவிற்றர்)...ஹிஹிஹி (//
அது தெரிந்த விடயம். ட்விட்டரில் கொடி கட்டிப் பறப்பவர்களில் நீங்களும் ஒருவர்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Atchu said...
நான் பங்குச்சந்தை நிபுணன் அல்ல. பங்குச்சந்தையை ஓரளவிற்கு படித்த ஒரு சாமானியன்.//
உங்கள் அவையடக்கத்திற்க்கு நன்றிகள் ஆனாலும் என்னைப் போன்ற சாமானியர்களும் விளங்கும் வகையில் எழுதுவது என்பது இலகுவான காரியமல்ல.

//வந்தியத்தேவன் உங்களுக்கு நன்றி//

நன்றிகள் அச்சு

வந்தியத்தேவன் சொல்வது:

//கே.ரவிஷங்கர் said...
நல்ல பகிர்வு.நல்ல ரசனை.//

நன்றிகள் ரவிஷங்கர். அண்மையில் உங்களின் பதிவு ஒன்றைக்கூட ஆவலாக படித்தேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

// மதுவதனன் மௌ. / cowboymathu said...
எழுத நிறைய உண்டு... நேரம் இனிவரும் காலங்களில் கிடைக்கும்போலத் தெரிகிறது.. எழுதுகின்றேன் //

நன்றிகள் மது, உங்களின் அந்த ரசிகன் யார் என்பது தெரியும் தானே!!!

malarvizhi சொல்வது:

நல்ல பதிவு. ம் .. ம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் எனது படைப்புகளுக்கும் இந்த அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என நினைக்கிறேன்.......

வந்தியத்தேவன் சொல்வது:

//Balavasakan said...
ஆகா..ஆகா..என்னுடைய பதிவிறகும் ஒரு இடமா நன்றி வந்தியண்ணே..//

சிறப்பாக எழுதுகின்ற படியால் நிச்சயம் உங்கள் பதிவிற்க்கு இடம் இருக்கின்றது. நேற்றைய கங்கோனுடனான சந்திப்புக்கூட கலக்கலாக இருந்தது. எங்கள் நல்லூரானையும் பதிவராக்கியவராயிற்றே நீங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//தர்ஷன் said...
தவறவிட்ட பதிவுகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது நன்றி//

வருகைக்கு நன்றிகள் தர்ஷன்.

தமிழன்-கறுப்பி... சொல்வது:

பகிர்வுக்கு நன்றி வந்தி.

வந்தியத்தேவன் சொல்வது:

//என்.கே.அஷோக்பரன் said...
நல்லதொரு தொகுப்பு.
என்னையும் இணைத்திருந்ததில் மகிழ்ச்சி!//

நன்றிகள் அஷோக் உங்களின் அரசியல் பதிவுகளில் இருக்கும் முதுர்ச்சியும் பாராட்டத்தக்கது.

//உங்கள் பதிவுகளில் 2009ல் என்னைப் பொறுத்தவரையில் உச்சமாகக் கருதுவது - மாற்றான் மனை கவர்தல் - தகாமுறைத் துணைகவரல் - என்ற பதிவை. ஒரு பதிவு என்பதைத் தாண்டி நல்ல அலசல் என்று தான் சொல்ல வேண்டும். - அந்தப் பதிவுக்கு தமிழ்மண விருது கிடைத்தால் நன்று!//

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் அசோக், அந்தப் பதிவு நான் அதிகம் நேரம் செல்வளித்து எழுதிய பதிவாகும். தமிழ்மண விருதுக்கு அனுப்பியுள்ளேன் கிடைப்பதும் கிடைக்காததும் ஓட்டுப்போடும் வாசகர்கள் கையில். அத்துடன் அந்தப் பதிவுடன் போட்டி போடும் ஏனைய பல பதிவுகள் அதனை விடச் சிறப்பாக இருப்பதாக நான் எண்ணுகின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//LOSHAN said...
ஆகா.. தப்பிட்டீங்களே.. //

நாங்கள் இப்போ கொஞ்சம் உசார், ஆதிரை வாங்கிய அடி நீங்கள் வாங்கிய அடிகளைப் பார்த்தபின்னரும் சொசெசூ வைப்போமா...

//நீங்களே இப்படி சொன்னா எப்பிடி? வேற யாரை நாங்க எங்கே போய்த் தேடுவோம் மாமு?//
2009ல் அரசியல் உலகம் என ஒரு பதிவை நீங்கள் எழுதப்போவவாத கங்காராமைப் பக்கம் கதை அடிபடுகின்றது உண்மையா?

//ம்ம்ம்.. நாளா பக்கமும் தேடித் தந்துள்ளீர்கள்..
உங்கள் வாசிப்பு வியக்க வைக்கிறது.. எப்பிடித் தான் நேரம் வைக்கிறதோ?//

சில பதிவுகள் வாசிக்கும் போதே நச் என மனதில் இடம் பெற்றுவிடும், அவற்றைத் தேடி எடுத்ததில் தான் கொஞ்சம் நேரம் போனது. வாசிப்பு என்பது எனக்கு என்றைக்கும் பிடித்த விடயம்.

//என்னையும் இணைத்திருந்ததில் மகிழ்ச்சி!நன்றி.//

உங்களின் பதிவுகளில் பல பதிவுகள் எனக்குப் பிடித்திருந்தாலும் ஒரு நண்பன் அதிகம் துன்பப்பட்ட பதிவு ஏனோ இன்னும் பிடித்திருந்தது. இடுக்கண் வருங்கால் நகுக.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வொய்ஸ் (யோகா) said...
good collection, keep it up.

i like all your selections//

நன்றிகள் யோகா எங்கே நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லை, அதிகமான வேலையோ?

வந்தியத்தேவன் சொல்வது:

//கானா பிரபா said...
அட நானுமா ;) நன்றி//
நீங்கள் இல்லாமலா? :‍)

//வித்தியாசமான தொகுப்பு, இதை தொடரவும் ஆண்டுக்கு ஒரு முறையாவது///
நன்றீகள் பிரபா முயற்சி செய்கின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

//SanjaiGandhi™ said...
சூப்பர் வந்தி. நீங்க சொன்னா நிச்சயம் நல்ல பதிவாகத்தான் இருக்கும். சில பதிவுகள் படிச்சதில்லை. புக் மார்க் செய்து கொண்டேன். நன்றி நண்பரே.//

நன்றிகள் சஞ்சே. நிச்சயமாக உங்கள் மனதைக் கவரும் சில பதிவுகள் இலங்கை சம்பந்தப்பட்டவை என்பதால் சிலவேளைகளில் சில விடயங்கள் புரியாமல் இருக்கும், உதாரணம் விசாப் பிள்ளையார் மற்றும் படி ரசனையாக எழுதப்பட்ட‌ பதிவுகள் தான் இவை.

வந்தியத்தேவன் சொல்வது:

//Subankan said...
கலக்கல் தொகுப்பு அண்ணா, விரைவில் அடுத்த பகுதியையும் எதிர்பார்க்கிறேன்.//

நன்றிகள் சுபாங்கன், அடுத்த பகுதி உள்குத்து எனக்கு விளங்குகின்றது.

வந்தியத்தேவன் சொல்வது:

// Kiruthikan Kumarasamy said...
அடப் பாவி வந்தியண்ணா...
இத்தனை பதிவுகளை ஞாபகம் வச்சிருக்கிறதே பெரிய விஷயம் அய்யா..//

ஏன்டா கீத் நீ மட்டும் இரும்புச் சங்கிலி அறுந்தாலும் அன்புச் சங்கிலி அறாது என ஐந்தாம் வகுப்பு விடயங்களை ஞாபகம் வைத்திருக்கும் போது நான் இந்த ஆண்டில் ரசித்த பதிவுகளை ஞாபகம் வைத்திருக்ககூடாதா?

அதற்காக பென்சீன் ரிங், அனுராதபுர ராச்சியம் பற்றி என்னைக் கேள்வி கேட்ககூடாது. நளவெண்பாவில் தமயந்தியும் அன்னமும் இப்போதும் ஞாபகம். நண்பன் புல்லட்டிற்க்கு செய்யனம்பு நாச்சியார் மான்மியம் என்றைக்கும் மறக்காதாம். ஹிஹிஹி.

வந்தியத்தேவன் சொல்வது:

//எழில் said...
இருந்தும் முதல் பகுதியில் இடம்பிடிக்கும் அளவுக்கு "பிரபல பதிவர் வால் புடி புகழ் சந்ரு" வை கருதாமைக்கு தன் சமூகத்துக்காக ஏதாவது செய்யத்துடிக்கும் இன்னும் பலர் கண்டிக்கிறார்கள்.//

ஏனையா இந்தக் கொலைவெறி சந்ரு பாவம் அவரை விட்டுவிடுங்கள். இன்னொருவரும் ஒரு தனிநபர் தாக்குதல் பின்னூட்டம் இட்டிருந்தார் என்ன கொடுமை இது.

வந்தியத்தேவன் சொல்வது:

//ஆதிரை said...
விசாப் பிள்ளையார் மறந்தாலும் நீங்கள் விடப் போறதில்லை போலும்...//

விரைவில் விசாப் பிள்ளையாரை நானும் சந்திக்கவேண்டும். ஆமாம் நீங்கள் அங்கே நீலக் குடைக்குள் நிற்பதாக அறிந்தேன் உண்மையா?

//தொகுப்புக்கு நன்றி//

நன்றிகள் ஆதிரை.

வந்தியத்தேவன் சொல்வது:

//jackiesekar said...
யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்று ஆர்வத்தோடு திறந்து போது... இதில் நானும் இருக்கின்றேன் என்ற போது சந்தோஷமாய் இருக்கின்றது..//

நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம். உங்களது பல பதிவுகளை வாசித்தாலும் சிலவற்றுக்கு மட்டும் தான் நான் பின்னூட்டம் இடுவது காரணம் நேரப் பிரச்சனைதான்.

//எனது பதிவில்நான் ரசித்த பதிவை நீங்கள் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி..//

அந்தப் பதிவை வாசித்தபோது இப்படியான கணவர்களும் இருக்கின்றார்கள் என்ற எண்ணம் ஏனோ எனக்கு வந்தது. ஏனென்றால் சீரியல்களிலும் சினிமாக்களிலும் மனைவி வெளியூர் சென்றால் கும்மியடிக்கின்ற கணவர்களைத் தான் பெரும்பாலும் காட்டுவார்கள். அதனை உடைத்து நல்ல கணவர்களும் நாட்டில் இருக்கின்றார்கள் என காட்டிய பதிவு அது.

//நான் எழுதியதுதான் என்றாலும்... திரும்பவும் உங்கள் லிங்க் மூலம் போய் படித்த போது... நான்தான் அதை எழுதினேனா? என்று ஆச்சர்யபடும் அளவுக்கு இப்போது படிக்கும் போது இருக்கின்றது...//

காரணம் அது எழுதும் போது நிச்சயம் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு இருப்பீர்கள், இப்போது வாசிக்கும் போது நிச்சயம் ஆச்சரியம் ஏற்படும்.

//நன்றி வந்தியதேவன்...//

நன்றிகள் நண்பா.

//ஓட்டு போட்டாச்சு நண்பா..//

நன்றிகள் நண்பா.

வந்தியத்தேவன் சொல்வது:

//malarvizhi said...
நல்ல பதிவு. ம் .. ம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் எனது படைப்புகளுக்கும் இந்த அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என நினைக்கிறேன்......//

நன்றிகள் அக்கா, நிச்சயம் உங்கள் பதிவுகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும், இன்னும் எழுதுங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//தமிழன்-கறுப்பி... said...
பகிர்வுக்கு நன்றி வந்தி.//

நன்றிகள் சகோதரா..

கோவி.கண்ணன் சொல்வது:

அசத்தல் !

maruthamooran சொல்வது:

தலைவா……. நன்றி.

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொல்வது:

அண்ணா, அருமையான தொகுப்பு

அனேகரது பதிவுகள் வாசிக்கக் கிடைத்தது.
என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள்
நன்றிகள்

cherankrish சொல்வது:

//மருதமூரான். சொல்வது:
தலைவா……. நன்றி

ditto :)

Unknown சொல்வது:

நானுமா.........................!?

நன்றி அண்ணா.....

கொஞ்சம் பிந்தி வாசிக்கிறேன் என்றாலும் தொகுப்பு அருமை (அந்தக் கனககோபியின்ர தெரிவத் தவிர)...

RJ Dyena சொல்வது:

http://wisdomblabla.blogspot.com/2010/02/blog-post.html

mikka nandri.. rasiththamaiku....

ம.தி.சுதா சொல்வது:

தங்கள் பார்வை மிகவும் நல்லாயிருக்கு... காரணம் நீங்கள் ஒரு பதிவராக இல்லாமல் ஒரு சிறந்த வாசகராக எல்லோரையும் பார்த்து எழுதியிருக்கிறீர்கள்...

ஷஹன்ஷா சொல்வது:

அண்ணா இன்றுதான் நான் உங்களை முதன்முதலில் சந்திக்கின்றேன்..ஏன் என்றால் நான் புதியவன்...

அழகான மீட்டல்கள்.....