சர்ச்சையில் புச்சானன்

சர்ச்சையில் சிக்குவதோ இல்லை மற்றவர்கள் மேல் வசை பாடுவதோ அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களுக்கும் அவுஸ்திரேலியாப் பத்திரிகைகளுக்கும் புதிசல்ல.அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஜோன் புச்சானன் சமீபத்தில் எழுதியுள்ள கிரிக்கெட்டின் எதிர்காலமும் டுவென்டி 20-யின் எழுச்சியும்("The Future of Cricket: The Rise of Twenty20") என்ற நூலில் பல முன்னணி வீரர்களை மிகவும் காட்டமாகச் சாடியுள்ளார். ஏற்கனவே ஐபிஎல்லில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது பல சர்ச்சைகள் உருவாகவும் அந்த அணி தொடரில் கடைசி இடத்தில் வரவும் வழி செய்தவர் இவரே.இவர் தனது புத்தகத்தில் முன்னாள் வீரர்களான கவாஸ்கர் உட்பட யுவராஜ் சிங், கங்குலி, ஹர்பஜன் சிங் போன்ற இந்திய வீரர்களையும், மார்க் ராம் பிரகாஷ், ஹெவின் பீட்டர்சன், சோயப் அக்தர் போன்ற ஏனைய வீரர்களையும் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவையும் விமர்சனம் செய்துள்ளார்.

விஜய் மல்லையாவை ஒரு சர்வாதிகாரியாகவும், கவாஸ்கர் ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எடுப்பவர் எனவும் எழுதியிருக்கின்ற‌ புச்சானன் யுவராஜ் சிங் கங்குலியாக முயற்சிக்கின்றார் ஆனால் அவருக்கு அந்தத் தகுதியில்லை என்கின்றார். அத்துடன் சச்சின் டெண்டுல்கருக்கு ருவெண்டி 20யில் விளையாட தகுதியில்லை என்றும் அவரால் அதிரடியாக ஆடமுடியாது என்று நட்சத்திரவீரர் சச்சின்மேலும் தன் கடின சொற்களை வீசியுள்ளார்.

இவரின் இந்தக் கருத்துக்களுக்கு ஹர்பஜன் சிங் தன் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். புச்சானன் தன் புத்தகத்தினை விற்க மலிவான விளம்பரம் தேடுகின்றார் புச்சானன் என ஹர்பஜன் தெரிவித்தார்.

இதுவரை ஏனைய வீரர்களோ அல்லது பிசிசிஐயோ இதற்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. புச்சானனின் கருத்து ஒரு தனிப்பட்ட மனிதரின் கருத்தாக இருந்தாலும் பிரபல நட்சத்திர வீரர்களை குறிவைத்துத் தாக்கும்போது அமைதி காப்பது புச்சானனின் கருத்துக்களை மறைமுகமாக ஒத்துக்கொள்வதுபோல் இருக்கின்றது.

2 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

வந்தி...
ஆஸ்திரேலியர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல... இந்திய வீரர்களின் சாதனைகள் இவர்களுக்குப் பிடிப்பதில்லை... சிலநாட்களுக்கு முன் இயன் சேப்பல் சச்சினைக் கடுப்பேத்தினார். இப்போது இவர். ஆனால் சச்சின் இருபது-இருபதுக்கு உகந்தவரல்ல என்ற இவரது கருத்து ஒத்துக்கொள்ளக்கூடியது எனினும், எத்தனை ஆஸ்திரேலிய வீரர்கள் இருபது இருபது ஆடத்தகுதியானவர்கள் என்பதையும் அவர் சிந்தித்திருக்க வேண்டும். புச்சானன் கங்கூலியைப் புகழ்ந்திருந்தாலும் கங்கூலி புச்சானனுக்கு கண்டனம் கூறியுள்ளார்.

ARV Loshan சொல்வது:

இவர் ஒரு கிரிக்கெட் கோமாளி..

அவுஸ்திரேலியா வீரர்கள் பல பேரே இவரை முன்பிருந்து விமர்சனம் செய்துள்ளார்கள்.
அதிலும் வோர்ன் இவரை என்று வர்நித்திருப்பதிலிருந்தே இவரது வண்டவாளம் விளங்கவில்லையா?

இவர் கேட்ட கேட்டுக்கு இங்கிலாந்து அணி இவரை ஆலோசகராக அழைத்திருக்காம்..