பழிதீர்த்தது இலங்கை

கடந்த மாதம் இங்கிலாந்தில் இடம் பெற்ற இருப‌துக்கு இருபது உலககிண்ணப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதற்க்கு இன்று காலியில் இடம்பெற்ற டெஸ்போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டி பழிதீர்த்துக்கொண்டது.

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் தொடரை இலகுவாக வென்று தன் கணக்கை புதியதலைவர் சங்ககார தொடங்கியுள்ளார்,

முரளிதரன், வாஸ் போன்றவர்கள் இல்லாததாலும் சில புதுமுகவீரர்களுடனும் களமிறங்கிய இலங்கை அணி முன்னைப்போல் இல்லாமல் முதல் இனிங்ஸில் துடுப்பாட்டத்தில் தடுமாறியது.ஆரம்பத் துடுப்பாட்டவீரர் மாலிந்த வர்ணபுர இரண்டு இனிங்சிலும் சொதப்பினார், அதேபோல் சல்மான் பட்டின் சோகமும் தொடர்கின்றது. இரண்டு அணியிலும் ஆரம்பத் துடுப்பாட்டவீரகளினால் பெரிதாக எதையும் சாதிக்கமுடியவில்லை. இலங்கை சார்பாக பரணவிதான முதல் இனிங்சில் அரைச்சதம் கடந்தார். தனது முதல் போட்டியில் விளையாடும் அஞ்சலோ மத்தியூஸ் 42 ஓட்டங்களை எடுத்தார். பரணவிதான இரண்டாவது இனிங்சிலும் சிறப்பாக விளையாடியிருந்தார். ஏனைய இலங்கை வீரர்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை.

பாகிஸ்தானின் பந்துவீச்சில் புதுமுக வீரர் இரண்டு இனிங்சிலும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மொத்தமாக 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இன்னொரு புதுமுகவீரரான சஜீட் அஜ்மல் இரண்டு இனிங்சிலும் மொத்தமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உமர் குல் அவ்வளவாக மிரட்டவில்லை.

பாகிஸ்தானின் துடுப்பாட்டம் முதல் இனிங்சில் அணிக்கு மீண்டும் திரும்பிய முகமட் யூசுப்பின் சதத்தினாலும் மிஸ்பா உல் ஹக்கின் அரைச்சதத்தினாலும் சிறப்பான நிலைக்கு அணியை இட்டுச் சென்றது. ஏனையவீரர்கள் சோபிக்கவில்லை.இலங்கைப் பந்துவீச்சைபொறுத்தவரை வேகங்களான நுவான் குலசேகர, திலான் துஷார இருவரும் முதல் இனிங்சில் அச்சுறுத்தினார்கள். ரங்கன ஹேரத்திற்க்கு ஒரு விக்கெட்டும் அறிமுகவீரர் அஞ்சலோ மத்தியூசுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது. மெண்டிஸ் மந்திரம் வேலை செய்யவில்லை. முரளிதரன் இல்லாத குறை பட்டவர்த்தனமாக தெரிந்தது. முரளி இல்லாமல் இலங்கை அணியால் வெல்லப்பட்ட நான்காவது டெஸ்ட் இதுவாகும். இரண்டாவது இனிங்சில் ரங்கன ஹேரத்தின் சுழலில் மிக இலகுவான இலக்கை பாகிஸ்தான் வீரர்களால் எட்டமுடியாமல் திணறினார்கள். இரண்டாவது இனிங்சில் 11.3 ஓவர்கள் பந்து வீசி வெறும் 15 ஓட்டங்கள் மாத்திரமே கொடுத்து சல்மான் பட் முகமட் யூசுப் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ரங்கன ஹேரத் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பாட்டார்.

3 கருத்துக் கூறியவர்கள்:

வானதி சொல்வது:

பாகிஸ்தான் வெல்லவேண்டிய மேட்சை துடுப்பாட்டவீரர்களின் அக்கறையற்ற ஆட்டத்தினால் தோற்றுவிட்டது. குமார் சங்ககாராவும் எம் எஸ் டோணி போல் அதிர்ஷ்டக்கார கேப்டன் தான்

ARV Loshan சொல்வது:

நல்ல, விரைவான பதிவு நண்பா.. நானும் விரிவான பதிவொன்று இட்டுவிட்டேன்..
சங்காவும் அதிர்ஷ்டக்காரர் என்றே இப்போதைக்கு சொல்லத் தோன்றினாலும், சங்கா ஒரு தந்திரமிக்க சிந்திக்கக்கூடிய தலைவர்..

இன்றைய களத்தடுப்பு வியூகத்திலேயே அதைக் காட்டி இருந்தார்.

Anonymous சொல்வது:

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்