உலகத் தமிழர்களின் கனவுக் கன்னி

நேற்று சன்னில் சிங்கப்பூரில் நடைபெற்ற‌ சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஒளிபரப்பினார்கள். விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள் அனைவருக்கும் விருதுகள் கொடுத்து மகிழ்ந்தார்கள்.விழாவின் உச்சக்கட்டமாக சென்ற வருடத்தின் மக்கள் மனம் கவர்ந்த கனவுக்கன்னியாக சினேகாவுக்கு விருது கொடுத்தார்கள். என்ன கொடுமை? அசின் , நயந்தாரா, திரிஷா, தமன்னா என பல அழகு தேவதைகள் இருக்கும் போது நடிக்கவந்து 10 வருடங்களுக்கு மேலாக நடித்து இப்போ ஓய்வு எடுக்கும் நிலையில் உள்ள‌ ஒரு நடிகைக்கு விருது கொடுத்தது சிரிப்பாக இருந்தது.விருது கொடுத்த நன்றிக்கடனுக்காக சினேகாவும் ராம்ஜியுடன் நல்ல கெமிஸ்ரியுடன் ஒரு நடனம் ஆடினார்.

பின் குறிப்பு : நிமிடத்திற்க்கு ஒரு தடவை சன் பிக்சர்ஸ் புகழ் சுனைனாவை காமெரா படம் பிடித்த மர்மம் என்னவோ?

8 கருத்துக் கூறியவர்கள்:

ஆ.ஞானசேகரன் சொல்வது:

மேலே உள்ள புகைப்படம் நல்லாயிருக்கு

vanathy சொல்வது:

சினேகாவின் பிரபலம் ஸ்பெஷல் தன்மை உள்ளது.எத்தனை புது நடிகைகள் வந்தாலும் சிநேகாவிற்கு என்று தனி அபிமானிகள் உள்ளார்கள்.
அவர் திரைப்படத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆகியும் இன்னும் அங்கு இருப்பதே நடிகை என்ற முறையில் ஒரு சாதனைதானே?

உண்மை ,அவர் நம்பர் ஒன் என்ற இடத்தை ஒருபோதும் பிடிக்கவில்லைத்தான் ,ஆரம்ப காலத்தில் அவர் மிக இளமையாக இருந்தபோது கவர்ச்சி கொஞ்சம் கூடுதலாகக் காட்டி இருந்தால் ஒருவேளை நம்பர் ஒன் இடத்தைப் பெற்று இருக்கலாம்
நயன்தாரா,நமீதா போன்றோரின் அபிமானிகள் பெரும்பாலும் ஆண்கள் .திரிஷாவின் அபிமானிகள் பெரும்பாலும் இளவயதினர்.ஆனால் சிநேகாவிற்கு எல்லாவயதிலும் படித்தவர் பாமரர் என்று பல தரப்பிலும் ஆண்கள் பெண்கள் என்று அபிமானிகள் உள்ளனர்.
அசின் இப்போது தமிழில் நடிப்பதில்லை ,புதுப்பெண் தமன்னாவின் காட்டில் இப்போது மழை பெய்தாலும் அவருக்கென்று பெருமளவில் ரசிகர் கூட்டம் இப்போதைக்கு இல்லை.
சினேகாவைக் கனவுக் கன்னி என்று கூறுவதை விட உலகத்தமிழருக்கு பிடித்த நடிகை என்று கூறலாம்
--வானதி

உண்மைத்தமிழன் சொல்வது:

வந்தியத்தேவன்..

உங்க நிலைமையும் இப்படித்தான் ஆகணுமா..?

வந்தியத்தேவன் சொல்வது:

// ஆ.ஞானசேகரன் said...
மேலே உள்ள புகைப்படம் நல்லாயிருக்கு//

நன்றிகள் ஆ.ஞானசேகரன்

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வந்தியத்தேவன்..

உங்க நிலைமையும் இப்படித்தான் ஆகணுமா..?//
என்ன செய்வது உண்மைத் தமிழரே எங்கட நிலை இதுதான்.

வந்தியத்தேவன் சொல்வது:

வானதி அவர்களுக்கு உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். நீங்கள் கூறியதுபோல் சினேகா ஒரு நல்ல நடிகைதான் அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் பாண்டி போன்ற படங்களில் தன்னுடய நிலையை விட்டுவிட்டு ஆபாசத்திற்க்கு போனது சினேகா ரசிகர்களால் பொறுக்கமுடியவில்லை. சினேகா என்றால் நம்ம குடும்பத்துப்பெண் போல இருப்பார் என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள். சில காலமாக சினேகா அந்த நினைப்புக்கு சாவு மணி அடிக்கிறார். நயந்தாரா நமீதா போன்றவர்களுடன் போட்டி போடவேண்டும் என்றால் ஆபாசம் தான் ஒரே ஒரு வழி என சினேகா எண்ணியிருப்பது தவறு.

Anonymous சொல்வது:

சினேகாவின் புதிய காதலன் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்.

கிடுகுவேலி சொல்வது:

அந்த விருது வழங்கும் நிகழ்வுக்கு சென்றேன். ஒன்றிரண்டு விருதை தவிர எல்லாமே ப்ரீயா, சோலி இல்லாமல் இருந்த நடிகர்,நடிகைகளை அழைத்து கொடுக்கப்பட்ட விருதுகள். நீங்கள் பார்த்தனீர்கள்தானே..! அட இந்த விருதுக்கு இவர் பொருத்தமா என்று ஒரு கணம் தோன்றியிருக்குமே. எனக்கு அப்படி பலமுறை தோன்றியதையா...! என்ன செய்வது.

வந்தியத்தேவன் சொல்வது:

கதியால் எப்படித்தான் அவ்வளவு மணி நேரம் அந்த மொக்கை நிகழ்ச்சியை பார்த்தீர்களோ உங்கள் பொறுமைக்கு பாராட்டுகள்.