ஞாநி, கமல், சுஹாசினி, ஷக்தி சிதம்பரம்.

அண்மையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடத்திய திரைக்கதை பயிலரங்கம் பற்றி விகடன், குமுதம் புகழ் ஞாநி "ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே, திரைக்கதை, எழுத்து பயிற்சி முகாம் நடத்திய தமிழ் சினிமா நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த வார குட்டு" என்று குமுதம் வார இதழில் எழுதியுள்ளார்.முதலில் ஞாநி ஒரு விடயத்தை விளங்கியிருக்கவேண்டும் அங்கே நடந்த திரைக்கதை பயிலரங்கத்தில் தமிழர்கள் மட்டும் பங்குபற்றவில்லை. ஏனைய மாநிலங்களிலிருந்தும் பலர் பங்குபற்றினார்கள். அத்துடன் பலமொழி இயக்குனர்களும் பங்குபற்றினார்கள். பன்மொழி உள்ள இடத்தில் தமிழில் பயிலரங்கம் நடத்துவது எப்படிச் சாத்தியம்?இதே ஞாநி எத்தனை தடவைகள் விஜய் தொலைக்காட்சி நீயா? நானா? நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆங்கிலத்திலேயே பேசினார் அங்கே இருந்தவர்கள் பலரும் ஆங்கிலத்தில் பேசினார்கள் குறிப்பாக நீயா? நானாவில் கலந்துகொள்ளும் இளம் பெண்கள் ஆங்கிலத்தில் பேசுவதுதான் தங்கள் அந்தஸ்தை கூட்டும் என நினைக்கின்றார்கள். அப்போது அந்நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத்துக்கோ? இல்லை ஏனையவர்களுக்கோ ஏன் குட்டவில்லை?

தனக்கு ஒரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயம் என நடப்பதில் ஞாநிக்கு நிகர் இவர்தான். பிரபலங்களை வைத்து பிரபலமாக நினைக்கும் தந்திரம் ஞாநிக்கு நன்றாகவே வரும்.

இந்தப் பயிலரங்கத்தில் கமல் இன்னொரு விடயத்தையும் உரத்துச் சொல்லியிருக்கின்றார். "தேசிய சினிமா என்பது இந்தி சினிமா கிடையாது. இந்தியும் ஒரு மாநில மொழிதான். ஒரு கால கட்டத்தில் இந்தி, தேசிய மொழி ஆவதை எதிர்த்தோம். ஏனென்றால், இந்தி தெரிந்தால் மட்டுமே மத்திய அரசில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டதால் இந்தியை எதிர்த்தோம் என்றார்."

பெரும்பாலான வேற்றுநாட்டு மக்கள் இந்திய சினிமா என்றால் ஹிந்தி சினிமா என நினைக்கின்றார்கள். இலங்கையில் கூட இந்திய சினிமா பெஸ்டிவல்களில் இந்தி சினிமாவுக்குத்தான் முன்னுரிமை. தமிழோ ஏனைய தென்னக மொழிகளோ அல்லது வங்கமொழியில் வெளிவந்த நல்ல படங்களை இவர்கள் காண்பிப்பது குறைவு.

கமலின் இந்தக் கருத்துக்கு என்னவிதமான எதிர்வினைகள் வருகின்றது என பொறுத்திருந்ததுதான் பார்க்கவேண்டும்.

ராஜாதிராஜா படத்தை கிழித்து தொங்கவிட்டதன் மூலம் சுஹாசினியும் சில நாட்களாக பலரின் பார்வைக்கு உட்பட்டிருக்கின்றார். ஒரு தரம் குறைந்த படத்தை தரம் குறைவு என சொல்வதில் என்ன தப்பு. உதாரணமாக பாய்ஸ் படத்திற்க்கு ஆனந்தவிகடன் குப்பை என ஒரு வரியில் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.ஷக்தி சிதம்பரம் வலையுலகில் பல பதிவர்கள் இந்தப்படத்தை தேறாது என விமர்சித்ததை ஷக்தி சிதம்பரம் படிக்கவில்லைப்போலும். சுஹாசினி சொன்னதுபோல் 20 வருடங்களுக்கு முன்னர் வரவேண்டிய படம் அத்துடன் ராகவா லோரன்ஸ் அப்பட்டமாக படத் தலைப்பில் மட்டுமல்ல நடிப்பிலும் சூப்பர் ஸ்டாரை கொப்பிபண்ணியிருக்கின்றார்.

ராஜாதி ராஜா என்றால் அது ரஜனிகாந்தின் சூப்பர் ஹிட் படம் தான் நினைவுக்கு வரும், அந்தப்படத்தின் தலைப்பை இன்னொரு மஹா குப்பைப்படத்திற்க்கு ஏன் கொடுத்தார்களோ தெரியாது. இதேபோல் இளையதளபதியும் புரட்சித் தலைவரின் வேட்டைக்காரன் மீனவ நண்பன் என பழைய பட தலைப்புகளை வைத்து மக்களைச் சோதிக்கபோகின்றார். ராஜாதி ராஜா தலைப்பை மாற்றச் சொல்லி ரஜனி ரசிகர்கள் வேண்டுகோள் கொடுத்திருக்கவேண்டும் ஏனோ செய்யவில்லை.

சம்பந்தப்பட்ட இணைப்புகள்

முரளிகண்ணன்


ஜாக்கிசேகர்

8 கருத்துக் கூறியவர்கள்:

முரளிகண்ணன் சொல்வது:

இந்த திரைக்கதை பயிற்சிப்பட்டறை பலரால் தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைவரும் பங்கு கொண்டு ஒட்டு மொத்த தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே அப்ஜெக்டிவ். மேலும் திரைக்கதை எழுதும் உத்திகள், அதற்கு எடுத்துக் காட்டாக கூறப்படும் திரைப்படங்கள் எல்லாம் பல மொழிகளைச் சேர்ந்தவை.

ஆங்கிலத்தில் படத்தைப் பற்றி ஒரு அப்ஸ்ட்ராக்ட் எழுதத் தெரிந்தால் போதும் என்பதே தகுதியாக வைக்கப்பட்டிருந்தது.

1500 விண்ணப்பங்கள் அதில் வடிகட்டி 250 பேர் தேர்வு செய்யப்பட்ட்னர்.

ஐந்து நாள் தங்கும் வசதி, காலை மாலை டீ, மதிய உணவு அனைத்தும் மிகத் தரமாக வழங்கப்பட்டன.

மெட்டீரியல்ஸ்யும் (டி சர்ட், பேக், நோட்ஸ், ப்ரிண்டட் மெட்டீரியல்) கட்டணமான 2500க்கும் அதிகமாகவே திருப்பித் தரப்பட்டது.


ஏன் தமிழில் இல்லை?

என்பதே கேள்வி.

பலமொழி வல்லுநர்கள் வகுப்பெடுத்தார்கள்.
இண்டராக்டிவ் செசன் நடை பெற்றது.

ஆங்கிலம் அங்கே அத்தியாவசியமாக இருந்தது.


இது ஐஐடி ஆதரவில் நடைபெற்றது. அது தேசிய நிறுவனம். அதில் குறிப்பிட்ட மாநில மக்களுக்கு மட்டும் என்று
சொல்வது சரியல்ல.

மேலும் தமிழர்களும் 30 பேர் அளவில் கலந்து கொண்டார்கள்
இது (லாப நோக்கு அல்ல) என்பதை தெரிவிக்கவே.


இதற்க்குமுன் அவ்வை சண்முகி பட தயாரிப்பின் போது, வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களைக் கொண்டு ஒரு பயிற்சிப்பட்டறை தமிழ் கலைஞர்களுக்காக கமல் நடத்தினார்.

மேலும் ஆளவந்தான் பட சமயத்திலும்
ஸ்டண்ட் கலைஞர்களுக்கு வகுப்பு நடத்தப் பட்டது.

மேலும் முழுக்க முழுக்க தமிழிலும் நடத்த பின்னாட்களில் வாய்ப்பு இருக்கிறது

Jackiesekar சொல்வது:

வந்தியதேவன் ஞ்நி பொத்தாம் பொதவாக குட்டு வைத்து இருக்கின்றார். அதே போல் கமல் ஒன்றும் தமிழர் சொத்து மட்டும் அல்ல. கமல் இன்னும் எளிமையாக சென்னையில் ஏதாவது ஒரு கல்யான மண்டபத்தில் வைத்து தமிழில் நடத்தலாம் என்பதே. அவர் எடுத்த இந்த முயற்ச்சியும் வரவேற்க்க தக்கது,.

தமிழன்-கறுப்பி... சொல்வது:

சுஹாசினி இந்தப்படத்துக்கு இப்படி சொன்னாங்க ஆனா குசேலன் படத்துக்கு என்ன சொன்னாங்க-ஒரு தகவலுக்காகதான்

நீயா நானா இளம்பெண்கள்-பாவம் விஜய் விரி..

ஞாநி? :(

கமல்? :)

வந்தியத்தேவன் சொல்வது:

தங்கள் நீண்ட விளக்கத்திற்க்கு நன்றிகள் முரளிகண்ணன்.

தங்கள் மேலான கருத்துக்கு நன்றி ஜாக்கி அண்ணாச்சி

//தமிழன்-கறுப்பி... said...
சுஹாசினி இந்தப்படத்துக்கு இப்படி சொன்னாங்க ஆனா குசேலன் படத்துக்கு என்ன சொன்னாங்க-ஒரு தகவலுக்காகதான்//

மன்னிக்கவும் நான் இன்னமும் குசேலன் பார்க்கவில்லை. அத்துடன் சுஹாசினி இதற்க்கு என்ன சொன்னார் என்பதும் தெரியாது. அவர் ரஜனிகாந்த் தனக்கு செய்த உதவியை மறந்திருக்கமாட்டார் என நினைக்கின்றேன். மணிரத்தனத்தை சுஹாசினிக்கு திருமணம் செய்துவைத்தது ரஜனிகாந்த அவர்களதான்.

Muruganandan M.K. சொல்வது:

சுஹாசினியின் விமர்சனத்தை நானும் பார்த்தேன். ராஜாதிராஜா படம் பாரக்கவில்லை. துணிந்து தெளிவாகச் சொல்லியதாகவே பட்டது.

புருனோ Bruno சொல்வது:

நிகழ்ச்சி ஐ.ஐ.டியால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அங்கு கமல் கலந்து கொண்டார் அவ்வளவு தான்

இதற்கும் கமல் தனது வீட்டில், அலுவலகத்தில், அவராகவே நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

சொந்த சீருந்தை ஓட்டுவது என்றால் எப்படி வேண்டுமென்றாலும் ஓட்டலாம்

அரசு பேரூந்தில் ஓட்டுனராக பணிபுரிந்தால் குறிப்பிட்ட நிறுத்தங்களில் தான் நிறுத்த வேண்டும்

அவ்வளவுதான்

மனோஷியா (manoshiya,K.) சொல்வது:

hi.. supper...
all are my favrt

Anonymous சொல்வது:

Even for Baba, Sun TV critic said that only intelligent ppl cud understand the movie. Dont ppl always biased towards Rajini. Even Lena Tamilvanan (who talks lot abt being frank) BLINDLY praise Rajini. They all scared of the stupid fans who would create scene if you say anything against Rajini.

Sorry to say that. Paditha muttalkal athigam irukkum nadu = Tamil Nadu. Thats why you have idiotic fans there