விஜய் விருதுகள் - அபத்தமான சில தெரிவுகள்

விரைவில் வெகுகோலாகலமாக விஜய் அவார்ட்ஸ் நடைபெறவிருக்கின்றது. இதற்கான முன்னோட்டங்கள் சில நாட்களாக விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகின்றது.



பல துறைகளில் கொடுக்கப்படும் இந்த விருதுகளில் மக்களால் தெர்ந்தேடுக்க 5 பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை சிறந்த நடிகர், நடிகை, படம், பாடல் மற்றும் இயக்குனர்.

2008க்கான விருதுப்பட்டியலில் ஒரு சில முன்மொழியப்பட்டவர்கள் (Nominees) மிகவும் அபத்தமான தெரிவுகளாக இருக்கின்றது. சிலவேளைகளில் இவர்களின் ரசிகர்களை வைத்து விஜய் தொலைக்காட்சி விளம்பரம் தேடும் முயற்சியோ தெரியவில்லை.

சிறந்த நடிகர்கள் :
கமலஹாசன் ‍- தசாவதாரம்
சூரியா - வாரணம் ஆயிரம்
விஜய் - குருவி
அஜித் - ஏகன்
ஜெய் - சுப்பிரமணியபுரம்



இந்தப்பட்டியலில் கமலும் சூரியாவும் ஏன் ஜெய்கூட ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தெரிவுகள். விஜயும் அஜித்தும் எப்படி இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். காரணம் குருவியும் ஏகனும் இவர்கள் இருவரது ரசிகர்களாலும் மறக்கப்படவேண்டிய திரைப்படங்கள். ஆக விஜய் தொலைக்காட்சி அஜித் விஜயை வைத்து வியாபாரம் செய்கின்றது. அத்துடன் இவை மக்கள் தெரிவென்பதால் பெரும்பாலான இவர்கள் ரசிகர்கள் ஓட்டு இவர்களுக்கு கிடைத்து சிறந்த நடிகர் விஜய் படம் குருவி என விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,

பூ படத்தில் நடித்த ஸ்ரீகாந்தையோ அல்லது பிரிவோம் சந்திப்போம் சேரனையோ இன்னொரு தெரிவாக சேர்த்திருக்கலாம்.

அடுத்து நடிகைகள் தேர்வு அவ்வளவு பிரச்சனை இல்லை.
பார்வதி - பூ.
சுவாதி - சுப்பிரமணியபுரம்
அசின் - தசாவதாரம்
ஜெனிலியா - சந்தோஷ் சுப்பிரமணியம்
திரிஷா - அபியும் நானும்



அடுத்தது உச்சக்கட்ட காமெடியாக இவர்கள் கொடுத்திருக்கும் சிறந்த திரைப்படங்களுக்கான பட்டியல்
தசாவதாரம்
வாரணம் ஆயிரம்
சுப்பிரமணியபுரம்
ஏகன்
குருவி

ஏனோ தெரியவில்லை குசேலனை இவர்கள் தங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை. மீண்டும் அஜித் விஜய் ரசிகர்களைத் திருப்திப்படுத்த இந்தப் பட்டியல்.

சிறந்த இயக்குனர்கள் பட்டியல்
கே எஸ் ரவிகுமார் தசாவதாரம்
சசி பூ
சசிகுமார் சுப்பிரமணியபுரம்
மிஷ்கின் அஞ்சாதே
தரணி குருவி

இந்தப்பட்டியலில் மீண்டும் குருவி இணைக்கப்பட்டிருக்கின்றது. குருவி படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு என்பதால் அவருக்கு விருதுகொடுக்க விஜய் தொலைக்காட்சி விரும்புகின்றதா?

சிறந்த பாடல்களாக வாரணம் ஆயிரத்தில் இருந்து மூன்று பாடல்களும் தசாவதாரத்தில் இருந்து ஒருபாடலும் இன்னொரு பாடல் சக்கரைக்கட்டியில் வந்த டாக்சி டாக்சி பாடலாகவும் முன்மொழிந்திருக்கின்றார்கள்.

பெரும்பாலான விருதுகள் கொடுக்கும் அமைப்பைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றன. அவை மாநில விருதாக இருந்தால் என்ன? தேசிய விருதாக இருந்தால் என்ன? இல்லையென்றால் ஹிரித்திக் ரோஷன் எல்லாம் தேசிய விருதுக்கு முன்மொழியப்படுவாரா?

கடந்த இரண்டு முறையும் விஜய் விருதுகள் பெரும்பாலும் நடுநிலமையுடன் மக்களின் தீர்ப்பாகவே இருந்தன ஆனால் இம்முறை இவர்கள் சில விருதுகளுக்கு உரியவர்களை மக்களுக்குத் திணித்திருக்கின்றார்கள் என்றே கூறவேண்டும்.

அதேவேளை நடுவர்களின் விருதுகள் என சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், படம் போன்றவைக்கு இன்னொரு விருதும் காத்திருக்கின்றது. சிலவேளைகளில் மக்களின் தீர்ப்பாக குருவி சிறந்தபடமாகவும் நடுவர்களின் தீர்ப்பாக சுப்பிரமணியபுரம் சிறந்தபடமாகவும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் உண்டு.

எது எவ்வாறாயினும் இந்த முறை விஜய் தொலைக்காட்சி விருதுப்பட்டியல் அபத்தமானது என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதே நேரம் விருது வழங்கும் விழாவில் என்ன என்ன ஆச்சரியங்கள் காத்துக்கிடக்கின்றனவோ, பொறுமையாக விளம்பரங்கள் இடையே பார்ப்போம்.

6 கருத்துக் கூறியவர்கள்:

SUREஷ்(பழனியிலிருந்து) சொல்வது:

கேவலப் படுத்தறத்துன்னு முடிவு பண்ணிட்டா இப்படித்தான் சபையக் கூட்டி டிபாசிட் கழட்டி விட்டுடுவாங்க..,பாஸ்

SUREஷ்(பழனியிலிருந்து) சொல்வது:

உங்களுக்கு எதிர் ஓட்டு, நெகடிவ் ஓட்டு நிறைய விழுந்திருக்கு சொன்னாலும் சொல்வாங்க..,

பூங்குழலி சொல்வது:

எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஏதோ ஒரு விருதை கொடுத்து வைப்பார்கள் ...இது சும்மா ஒரு விளம்பர யுக்தி என்றே நினைக்கிறேன்

வந்தியத்தேவன் சொல்வது:

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
கேவலப் படுத்தறத்துன்னு முடிவு பண்ணிட்டா இப்படித்தான் சபையக் கூட்டி டிபாசிட் கழட்டி விட்டுடுவாங்க..,//

ஆமாம் சுரேஷ் ஏற்கனவே இவர்கள் ரியாலிட்டி ஷோக்களில் இப்படித்தான் பலரை அவமானப்படுத்தினார்கள்.

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
உங்களுக்கு எதிர் ஓட்டு, நெகடிவ் ஓட்டு நிறைய விழுந்திருக்கு சொன்னாலும் சொல்வாங்க.//

ஓட்டு விடயத்தில் இவர்களை நம்பவேமுடியாது எந்தவொரு ஷோவிலும் இவர்கள் முதலாம் இடம் எடுத்தவருக்கு இவ்வளவு ஓட்டு கிடைத்தது என அறிவிப்பதேயில்லை. ஓட்டு எண்ணிக்கை தெரியாமல் வெற்றி பெற்ற வேட்பாளார்கள் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே,

வந்தியத்தேவன் சொல்வது:

//பூங்குழலி said...
எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஏதோ ஒரு விருதை கொடுத்து வைப்பார்கள் ...இது சும்மா ஒரு விளம்பர யுக்தி என்றே நினைக்கிறேன்//

நிச்சயமாக விளம்பர யுக்திதான். ஒருமுறை தமிழக அரசின் மாநில விருதுகளில் கமல் ரஜனியைத் திருப்திப்படுத்தியதுபோல் விஜய் டிவியும் விஜய் அஜித்தைத் திருப்திப்படுத்த முயல்கின்றது

Anonymous சொல்வது:

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்