1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அம்மா அப்பா வைத்த இயற்பெயரான ஜோசப் விஜயை விட எனக்கு நானே ரசிகர்கள் சார்பில் வைத்த இளையதளபதி பிடிக்கும், புதிய பெயரான டாக்டர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் வருங்காலத்தில் கிடைக்கும் முதல்வர் பெயரைக் கேட்கவே காது குளிருது.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
வில்லு ப்ரிவியூ ஷோவில்
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
புதிய பட கான்ராக்ட்டில் கையெழுத்துப்பிடிக்கும், ஆட்டோகிராப்பில் பிடிக்காது.
4.பிடித்த மதிய உணவு என்ன?
தயிர் சாதமும் வடு மாங்காவும்
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
கூட நடிக்கும் நடிகைகளுடன் மட்டும்
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிப்பதை விட எனக்கு சோப்பு போடவே பிடிக்கும்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
குஷி படத்திலிருந்து இடுப்பைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: அது (ங்ணா பஞ்ச் டயலாக்ணோ)
பிடிக்காத விஷயம் : பத்திரிகையாளர் சந்திப்பு
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எத்தனை கிசுகிசு வந்தாலும் பொறுமையாக இருப்பது
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
வேண்டாம்ணா சொன்னால் பிரபுதேவா வருந்துவார்
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
பச்சை மஞ்சள் நீலம் என மல்ரிகலர்
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
இணையத்தில் வெளியான வேட்டைக்காரன் பாடல்கள்
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நம்ம ரேஞ்சுக்கு பேனாவாக ஆக முடியாது
14.பிடித்த மணம்?
ஜாஸ்மின்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அஜித். பிடித்த விடயம் எனக்கு போட்டியாக மொக்கை போடுவது, அவர் நன்னாப் பேஸ்வார்
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
வடிவேல். விஜயகாந்திற்க்கு எதிராக அவர் செய்த தேர்தல் பிரச்சாரப் பதிவுகள்.
17. பிடித்த விளையாட்டு?
கில்லி தாண்டு
18.கண்ணாடி அணிபவரா?
சிலவேளைகளில் கண்ணாடி அணிந்தால் அறிவாளிபோல் லுக் வருமாம்.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
சகல தெலுங்குப் படங்களும்
20.கடைசியாகப் பார்த்த படம்?
எம்ஜீஆரின் வேட்டைக்காரன்
21.பிடித்த பருவ காலம் எது?
ஸ்விட்சர்லாந்தின் குளிர்காலம்
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
எம் எஸ் உதயமூர்த்தியின் தோல்விகளைக் கண்டு துவழாதே
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
மனைவி பார்க்கும் வரை மாற்றுவதேயில்லை
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ?
ஜிங்க் சக்
பிடிக்காத சத்தம்?
சைலண்ட்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இன்னும் நிலவிற்ககுத் தான் போகவில்லை
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இதென்ன சின்னப்பிள்ளைத் தனமான கேள்வி, தனித் திறமை இருப்பதால் தானே நடிக்கிறேன்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ரீமேக் படங்கள் தோற்பது
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
போக்கிரி
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஈசிஆர் ரோட்டிலுள்ள பப்புகள்
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
பிரதம மந்திரியாக
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
அதைத்தான் தினமும் செய்திட்டு இருக்கேனே ஜூவியில் கூட எழுதிட்டாங்கள்
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
வாழ்க்கை ஒரு வட்டம்
டிஸ்கி : ஏற்கனவே கலைஞர், ஜெயலலிதா என அரசியல்வாதிகளைச் சிலர் கலாய்த்துவிட்டார்கள். எனக்கு அரசியல்வாதிகளைக் கலாய்க்க ஆசைதான் ஆனால் இங்கே ஆட்டோவிற்க்கு பதில் வெள்ளைவான் வரும் அதனால் ஜஸ்ட் ஜாலியாக நம்ம இளையதளபதியைக் கலாய்த்திருக்கிறேன். சிலகேள்விகளுக்கு என்னைவிட நல்ல பதில் இருந்தால் பின்னூட்டமிடுங்கள்.
Box Office Report - Aug 14th
-
நேற்று கூலி, வார்2 ஆகிய ரெண்டு படங்கள் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே
வெளியாகி வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கும் தலைவன் தலைவி, 𝘀𝘂 𝗳𝗿𝗼𝗺 𝗮𝗼,
ஆகிய படங...
11 hours ago
12 கருத்துக் கூறியவர்கள்:
//4.பிடித்த மதிய உணவு என்ன?
தயிர் சாதமும் வடு மாங்காவும்//
அதுதான் காரசாரமா சமைச்சுத் தருவேன்னு பாடிட்டாங்கல்ல..
அப்புறம் என்னங்ண்ணா..,
:)))))))
;) கலக்கல்
என்னங்க இது தலைவரை பத்தி நான் எழுதி அதிக ஹிட்டு வாங்களாமுன்னு நினைச்சா நீங்க முந்திகினிங்களே.
பரவாயில்லை இருந்தாலும் வாழ்த்துகள்.
நான் பெருந்தலைவர் விஜயகாந்தை கவனிச்சுக்கிறேன்.
இந்த விசயம் கார்க்கிக்கு தெரியுமா!
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
அதுதான் காரசாரமா சமைச்சுத் தருவேன்னு பாடிட்டாங்கல்ல..
அப்புறம் என்னங்ண்ணா..//
சுரேஷ் அவர்பாடினாலும் வடுமாங்காயை இன்னும் மறக்கவில்லையாமுங்கோ,
பதி, கானா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
//என் பக்கம் said...
என்னங்க இது தலைவரை பத்தி நான் எழுதி அதிக ஹிட்டு வாங்களாமுன்னு நினைச்சா நீங்க முந்திகினிங்களே.
பரவாயில்லை இருந்தாலும் வாழ்த்துகள்.
நான் பெருந்தலைவர் விஜயகாந்தை கவனிச்சுக்கிறேன்//
பரவாயில்லை நண்பரே நீங்களும் வித்தியாசமான பதில்கள் போட்டு இளையதளபதியை அசத்துங்கள்.
விஜயகாந்த் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன்.
//வால்பையன் said...
இந்த விசயம் கார்க்கிக்கு தெரியுமா!//
இல்லை அண்ணே ஏன் கார்க்கி அகில உலக இளையதளபதி மன்றத் தலைவரா?
Superb....ur answers.....No..no... Vijay answers.
Keep it up.
Just visit to my page also.
www.safrasvfm.blogspot.com
//////யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
வேண்டாம்ணா சொன்னால் பிரபுதேவா வருந்துவார்...
Sema Nakkal...nalla irunthathu..avar kooda ivlo correct ah solli irukka maataarungannnnnnaaaaa....
பின்னி பெடலடுதுட்டீங்க... கலக்குங்க பாஸ்....
லோசனுடன் ஒரு shopping அனுபவம்
மரணக் கடி கடித்துள்ளீர்கள் :-)
Post a Comment