ராஜா, ரகுமான்,ஆஸ்கார்


இன்றைக்கு உலகத் திரைப்படவரலாற்றில் ஒரு மகத்தான நாள். ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. எதிர்பார்க்கப்பட்டதுபோல் இசைப்புயல் ஏஆர் ரஹுமான் தன் இரண்டு விருதுகளையும் பெற்று தமிழர்களுக்கு கெளரவம் கொடுத்துள்ளார். இன்னொரு தமிழச்சியான மாதங்கி அருள் பிரகாசமும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டர்களில் ஒருவர். ஏனோ விருதுகிடைக்கவில்லை.

1992ல் ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமான ரகுமானைப் பற்றி பலர் பல இடங்களி எழுதியிருப்பதால் அதனைத் தொடாமல் இன்னொரு விடயத்தை ஆராயலாம் என நினைக்கின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரகுமானுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது பலர் புருவத்தை உயர்த்தினார்கள், காரணம் மெல்லிசை மன்னர், இசைஞானி என்ற இரண்டு இசை மேதைகளை விட்டுவிட்டு தற்போது வந்த இளைஞனுக்கு விருதா? என்ற கேள்வி அவர்களின் புருவ உயர்த்தலில் தொக்கி நின்றது.

இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும் ரகுமான் அவர்கள் நிச்சயம் அந்த விருதுக்கு தகுதிவாய்ந்தவர் இதனை எவரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் மூத்தோர்கள் இருக்க இளையவருக்கு கொடுத்த காரணம் என்ன? இதற்க்கு வைரமுத்துவின் உள்குத்து அரசியல் தான் காரணம் என்கிறார்கள் பலர்.

இந்த பதிவில் நான் இசைஞானியையோ அல்லது இசைப்புயலையோ இல்லை மெல்லிசை மன்னரையோ ஒப்பிடவரவில்லை. அவர் அவர் தங்கள் இசையில் உச்சம் தொட்டவர்கள்.

ஆனாலும் சிம்பொனி இசை, திருவாசகத்துக்கு இன்னொரு வடிவம், கெளவ் டூ நேம் இட் என ஆல்பம் என் சாதனை படைத்த பண்ணைபுரத் தமிழனை ஏன் இதுவரை இந்திய அரசு கெளரவிக்கவில்லை?

இன்னொரு சாராரின் வாதம் இசைஞானி இசையில் உச்சத்தை அடைந்தாலும் ரகுமான் அளவுக்கு அடக்கம் இல்லாதவர் கர்வம் பிடித்தவர். இதனைப் பல சந்தர்ப்பங்களில் பலராலும் அவதானிக்ககூடியதாக இருந்தது. அண்மையில் கூட இசைப்புயலுக்கு கோல்டன் குலோப் விருது கிடைத்த போது இசைஞானி அவரைப் பாராட்டவில்லை என சில இணையத்தளங்களில் சிண்டு முடிந்தார்கள்.

அத்துடன் கோல்டன் குலோப் விருது கிடைத்த ரகுமானுக்கு தமிழக அரசின் சார்பில் எந்தப் பாராட்டு விழாவோ அல்லது கோடம்பாக்கத்தின் பாராட்டுவிழாவோ இதுவரை எடுக்கப்படவில்லை. ஆஸ்கார் வாங்கியபின்னர் சேர்த்து எடுக்கலாம் என்ற எண்ணமோ தெரியாது.

இளையராஜாவுக்கும் எம் எஸ் விஸ்வநாதனுக்கும் ஏன் உரிய கெளரவம் கொடுக்கப்படவில்லை என்பதனை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

குட்டிக்குட்டி விழாக்களில் எல்லாம் தமிழ்மொழியில் பேச அகெளரவம் என நினைக்கும் நடிகர் நடிகைகள் மத்தியில் ஆஸ்கார் என்ற உயரிய விழாவில் தமிழிலும் ஒருவார்த்தை பேசி தலை நிமிர வைத்த தமிழன் அல்லா ரக்கா ரகுமானுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

டிஸ்கி : இந்த நேரத்தில் ஏன் இந்தப் பதிவு எனக்கேட்பவர்கள் குசும்பனின் பதிவை ஒரு முறை சென்று பார்க்கவும்.

11 கருத்துக் கூறியவர்கள்:

புருனோ Bruno சொல்வது:

//ஆனாலும் சிம்பொனி இசை,//

எனென்றால் அவர் சிம்பொனி இசை அமைக்கவே இல்லை

அமைத்ததாக ஊரை ஏமாற்றினார்.

இது தான் உண்மை

அமைத்திருந்தால் அந்த இசைக்குறிப்புகளை வெளியிடட்டூம்

http://tinyurl.com/polimaestroraja

கர்வம் என்பது கலைஞர்களுக்கு இருக்க வேண்டியது தான்

ஆனால் செய்யாத சாதனையை செய்ததாக கூறி 6 கோடி தமிழர்களை ஏமாற்றிய மோசடி வேலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

http://tinyurl.com/polimaestroraja

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றி டாக்டர் புருனோ உங்களைப் போன்றவர்களிடம் இருந்துதான் நிறைய கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்.

பாபு சொல்வது:

"As a lyricist, who has been associated with Rahman for the past two decades, I say that it is a prize for his sincerity, dedication towards work and simplicity," Vairamuthu said.

He also recalled a recent incident when he called up Rahman to congratulate him for his 'Golden Globe' win.

"I asked him what time I can come and greet him. He didn't say anything and kept the phone. In the next ten minutes he was at my home. That is Rahman," Vairamuthu said.

manjoorraja சொல்வது:

ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது அனைத்து இந்தியர்களும், தமிழர்களும் பெருமைப்படவேண்டிய விசயம்.

இளையராஜாவுக்கும், விஸ்வநாதனுக்கும் பத்மஸ்ரீ விருதுகள் கூட கிடைக்காததற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் இதெல்லாம் சகஜம்.

மிகச்சிறந்த நடிகர் நாகேஷுக்கு என்ன கிடைத்தது?

ரஹ்மானின் புகழ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பரவியிருப்பதும் அதனாலேயே அவருக்கு இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதும் மறுக்கமுடியாதது. அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் என்பது மட்டுமல்ல, படமும் மிக சிறந்தப்படமாக அமைந்துவிட்டதும் ஒரு காரணமாகும்.

Anonymous சொல்வது:

புருனோவுக்கு இளையராஜாவின் மேல் என்ன காண்டோ இப்படி அநியாயமாக பழி சுமத்துக்கின்றார்.

Anonymous சொல்வது:

இதெல்லாம் ரொம்ப ஓவர் புருனோ

SurveySan சொல்வது:

//மிகச்சிறந்த நடிகர் நாகேஷுக்கு என்ன கிடைத்தது?//

good question. நாகேஷுக்கு, எம்.எஸ்.விக்கெல்லாம் கிட்டாத பத்மஸ்ரீ ஒரு 'சாதா' விருது.
given, probably for political reasons.

ஆனா,
எம்.எஸ்.வி எம்.எஸ்.விதான்
ராஜா ராஜாதான்
ஏ.ஆர் ஏ.ஆர்தான்.

மூவரும் பெருந்தகைகள்.

புருனோ Bruno சொல்வது:

//புருனோவுக்கு இளையராஜாவின் மேல் என்ன காண்டோ இப்படி அநியாயமாக பழி சுமத்துக்கின்றார்.//

காண்டு இருப்பது உண்மைதான்

அதற்கு காரணம் அவர் சிம்பொனி இசையமைத்ததாக என்னை ஏமாற்றியதால் !!


//இதெல்லாம் ரொம்ப ஓவர் புருனோ//

இது ஓவரா குறைவா என்று http://tinyurl.com/polimaestroraja பார்த்து கூறுங்கள்

நான் கேட்பது மிகவும் எளிதான கேள்விதான்

Anonymous சொல்வது:

புருனோ? john scott web page அவரிடம் போய் கேள் உனக்கு உண்மை புரியும்; பெய் தகவல் வேண்டாம்.

Anonymous சொல்வது:

Biography
Discography
Filmography
JOS Records
Audio Clips
FAQ
About This Site






Q & A Dear John
John Scott's Column
As time permits, John Scott will answer your questions and have the answer posted here. This question comes from Anbu Ramasamy:

Mr. Scott,

I think you are one of the best composers around & my mission now is to go out and get all your CDs. Please keep composing & keep releasing your music.

The question I have is somewhat involving you and another person. I was thrilled when I heard that you were going to conduct the symphony for Mr. Ilayaraja from India when he was commissioned to write a symphony. Mr. Ilayaraja is my favorite Indian composer & I couldn't believe my ears when I came to know another one of my favorite composers (you!) was going to conduct it. There was a huge celebration for him in India with all the top personality & you honoring Mr. Ilayaraja. This was shown in the tele & I was ecstatic to see you on stage. As you were being garlanded on stage, I also happened have your CD 'John Scott's Favorites' gracing my glass cupboard with you in front. I so excitingly pointed out to my family members 'there that's him' & they really couldn't believe as well.

But till now, this symphony has not been released & there hasn't any news about it. I hope you can enlighten about its release & the work of Mr. Ilayaraja.

Anbu(Singapore)

Dear Anbu (Singapore),

Thank you for your very kind comments. I am a very lucky person because I spend my life doing what I like, which is composing music.

It was very interesting to hear that you witnessed the Ilayaraja honoring ceremony on TV. I was flown from London to Madras specially for it. It was an incredible experience and I shall never forget it. Ilayaraja and I became very close friends and I have tried to encourage him to get his symphony released. I believe he was hurt by a critics review, and this is the reason it has not been released. I had the privilege of conducting the recording sessions with the Royal Philharmonic Orchestra, in London, and we all believe it deserves to be released. The trouble is that critics are capable of destroying sensitive artists and have done it throughout the history of music. The more one knows a piece of music the more one loves it, and the stupid critics are incapable of judging anything they have never heard before. They have seldom been right. There is a wonderful book by Nicolas Slonimsky entitled LEXICON OF MUSICAL INVECTIVE. It is a history of musical criticism since Beethoven's time. It shows how the critics have crucified every great composer without exception! I will contact Illayaraja and tell him about your kind remarks and that he owes it to us all to make his symphony available.

I send you my best wishes,



Previous Questions












--------------------------------------------------------------------------------
Last Updated: 12/12/2006 15:08:18
© Copyright 1997-2006 Randy Levy

கிருஷ்ணா சொல்வது:

கர்வம் இல்லையேல் கலைஞன் இல்லை! கர்வந்தான்.. ஒரு கலைஞனை சிறந்தவன் ஆக்குகின்றது. அது ரகுமானுக்கும் இருக்கிறது. கர்வம் வேறு.. அடக்கம் வேறு..

இளையராஜா ஒரு இசை மேதை. ஆஸ்கார் விருது அவருக்கு வழங்கப்படாதது.. பத்மஸ்ரீ கிடைக்காததெல்லாம்.. அந்த விருதுக்களுக்கு அவமானமே தவிர.. அவருக்கில்லை!

புருணோ.. குற்றம் சொல்வது எளிது.. சாதிப்பது அரிது. முடிந்தால் சாதியுங்கள்...!